-
Wednesday, September 17, 2014
முன்னோர் வழங்கிய மூலிகை: கருவேல்
சூரனை அழித்த முருகனின் வேலுக்கு பிறகு தமிழர்கள் அதிகம் அறிந்திருப்பது (ACACIA ARABICA) கருவேல்தான். கரிய நிறத்துடன் பெருத்த மரமாய் தமிழகத்தின் ஏரிக்கரைகள், வேலிகள் ஆகியவற்றில் தானாகவே வளரும். சிறகு இலைகள் இரட்டையாக அமைந்திருக்கும். மஞ்சள் நிறத்தில் உருண்டை வடிவ கதிர் பூக்களும், கரிய நிறத்துடன் உள்ள மரத்தில் வெள்ளை நிறத்தில் வேல் போன்ற கூரிய முட்களையும் வெள்ளை நிற பட்டையான காய்களையும் கொண்டது.
மரப்பட்டை, வேர்பட்டை, இலைக்கொழுந்துகள், மரப்பிசின் ஆகியவை மருத்துவ பயன் கொண்டவை ஆகும். பிசின் சளியை அகற்றி தாதுக்களின் எரிச்சலை தணிக்கும். அளவாக பயன்படுத்தினால் காமத்தை பெருக்கும். இதன் பட்டை, சதை மற்றும் நரம்புகளை சுருங்க செய்யும். ஆலும்வேலும் பல்லுக்குறுதி என்பதற்கு ஏற்ப நமது பற்களை காப்பதில் ஈடற்ற ஆற்றல் உடையது, கருவேல். இன்றும் கிராமங்களில் வேலங்குச்சியை கொண்டு பல் துலக்குவதை நாம் பார்க்கலாம். கருவேலன் பற்களில் ஏற்படும் பல்வேறு நோய்களை போக்கி அவைகளை கல்லுக்கு ஒப்பாக அசையாமல் இருக்க செய்யும் ஆற்றல் பெற்றது.
பட்டை, வாதுமை கொட்டை சமஅளவு எடுத்து நெருப்பு அடுப்பில் மண் சட்டியை வைத்து கருக்கி பொடி செய்து அதை துணியில் சலித்து வைத்துக்கொண்டு பல் துலக்கி வர பல்லீறுகளில் உள்ள புண், அழுகல், பல்லாட்டம் முதலியவை தீரும். பட்டை, வாதுமை கொட்டை சமஅளவு எடுத்து நெருப்பு அடுப்பில் மண் சட்டியை வைத்து கருக்கி பொடி செய்து அதை துணியில் சலித்து வைத்துக்கொண்டு பல் துலக்கி வர பல்லீறுகளில் உள்ள புண், அழுகல், பல்லாட்டம் முதலியவை தீரும். பட்டையை கசாயம் செய்து வாய்கொப்பளிக்க பல்லாட்டம், வாய்புண், ரசவேக்காடு மற்றும் வாய்ப்புண் நீங்கும். இதைத்தான்,
பல்லுக் கருத்த பலநோய
யகற்றி யதைக்
கல்லுக் நேராகக் கட்டுமே- மல்லுக்கு
நண்மின்வனை காளெனப்
போய் நாளும் வியாதிகளைச்
சண்மயில் வன்னாயு தம்’’
என்கின்றார் தேரையர். தாங்க முடியாத வேதனையுடன் அவதிக்குள்ளான மூலநோய் உள்ளவர்கள் கருவேலன் இலையை மென்மையாக அரைத்து இரவுதோறும் ஆசன வாயில் கட்டிவர மூலம் சுருங்கி விழும். ஆறாத புண்கள் மீது இலையை அரைத்து கட்டிவர புண்கள் விரைந்து ஆறும். ஏதாவது விஷ பூச்சிகள், பாம்புகள் கடித்து விட்டால் உடனடியாக மருத்துவம் செய்ய முடியாத இடத்தில் இதன் இலையை அரைத்து தயிரில் கலந்து கொடுத்து விட்டால் நஞ்சு உடலில் கலக்காமல் காப்பாற்றி விடலாம். பிறகு மருத்துவம் செய்து கொள்ளலாம்.
இளம் வேர் 20 கிராம் எடுத்து நன்கு நசுக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டு 160 மிலியாக சுண்ட காய்ச்சி வடிகட்டி அதில் 25 மிலி வீதம் காலை மாலை குடித்துவர ரத்த கழிச்சல் தீரும். 15 கிராம் பட்டையை பொடிசெய்து 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி 50 முதல் 100 மிலி வரை காலை மாலை வெறும் வயிற்றில் குடித்துவர மதுமேகம், வெளி மூலம், கருப்பை பிதுக்கம், வெள்ளை வெட்டை தீரும். சில இளைஞர்களுக்கு விந்து நீர்த்து தண்ணீராக போகும். இதனால் குழந்தை பேறும், இல்லறமும் பாதிக்கும். இவர்கள் கருவேலன் பிசினை இரவில் ஊறவைத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து உண்டால் நீர்த்துபோன விந்து இறுகும்.
சில பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகும் அல்லது மாதவிடாய் வரும் நாட்களிலும் வெள்ளை படும். தாங்க முடியாத வலி மற்றும் உடல் பலவீனத்தையும் ஏற்படுத்தும். உயிரை எடுக்கக்கூடிய அளவில் உள்ள இந்த நோய் கண்ட பெண்கள், காலையில் 5 கிராம் அளவில் எடுத்து வர தொடர்ந்து பிசினை உண்டு வர எரிச்சலோடு வருகின்ற வெள்ளையை நிறுத்தும். ஆண்கள் உண்டுவர அழகும் உடலில் வன்மையும் உண்டாகும். இதை,
கருவேலின் வேர்க்குக்
கடுப்பிரத்தம் மாந்தம்
பருவாதம் ஊறுகரப் பானும்-பெருகு
பெரும்பேதி யும்போகும் பேசவிளிக்கும்
கரும்பே! இதனை கருது.
நீர்த்தொழுகும் விந்து
நிலைக்கப் புரியுமெரி
பூத்தொழுகும் வெள்ளை
தனைப் போக்குமிம்- மாத்திரமோ?
பேசுகரு வேலம் பிசின்
தேக தரு ரஞ் செய்யும் பெரியோராற் -
என்கின்றது தேரையர் குணவாகடம். கருவேலன் குச்சி அல்லது பட்டை பொடியை கொண்டு பல் துலக்கினால், காலம் முழுவதும் பல் பிரச்னை இல்லாமல் வாழ முடியும். விளம்பரங்களை கண்டு மயங்கி விடாமல் நமது முன்னோர்கள் வழங்கிய கருவேலை பயன்படுத்தி பல்லை காப்பதன் மூலம், உடல் நலத்தையும் காப்போம்.
Wednesday, March 14, 2012
ரயில்வே பட்ஜெட் 2012: முக்கிய அம்சங்கள்
- ஏசி முதல் வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 30 பைசா உயர்வு
- சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2013-ல் முடிவடையும்
- ஏசி, முதல் வகுப்பு கட்டணமும் உயர்வு
- கிலோமீட்டருக்கு 2 முதல் 30 பைசா வரை கட்டணம் உயர்வு
- 300 கி.மீக்கு மேல் கட்டணம் ரூ. 12 வரை உயர்வு
- 10 ஆண்டுகளுக்குப் பின் ரயில் கட்டணம் முதன்முறையாக உயர்வு
- 2ம் வகுப்பு ரயில் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்வு
- மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகள்
- ரயில்வே விளையாட்டுவீரர்களுக்கு ரயில் கேல் ரத்னா விருது
- 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
- 75 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 21 பயணிகள் ரயில்கள் அறிமுகம்
- ரயில்வே துறை செலவுகளை 10% குறைக்க திட்டம்
- இதுவரை எந்த உருப்படியான அறிவிப்பும் ரயில்வே பட்ஜெட்டில் இல்லை
- சோனியா குடும்பத்தின் ரே பரேலி தொகுதியில் ரயில் பெட்டி தொழிற்சாலை
- 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரயில்வே துறை ரூ 3.5 லட்சம் முதலீடு செய்ய திட்டம்
- விபத்து சதவீதம் 0.77ல் இருந்து 0.55% ஆகக் குறைந்துள்ளது
- லாலு பெயரை குறிப்பிடாத ரயில்வே அமைச்சர். லாலு கட்சி எம்பிக்கள் கோஷம்
- வரும் நிதியாண்டில் 20,000 வேகன்கள் தயாரிக்கப்படும்
- டபுள் டக்கர் ரயில்வே கன்டெய்னர்கள் தயாரிக்க திட்டம்
- சுய அதிகாரம் கொண்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவர்
- ரயில்வே ஆராய்ச்சி, மேம்பாட்டு கவுன்சில் அமைக்க பரிந்துரை
- உருப்படியான அறிவிப்புகள் இல்லை என எதிர்க் கட்சி எம்பிக்கள் கோஷம்
- ரயில்களின் சராசரி வேகத்தை 160 கி.மீயாக உயர்த்த திட்டம்
- 5 ஆண்டுகளில் அனைத்து ரயில்வே கிராசிங்களும் நீக்கம். அனைத்திலும் மேம்பாலங்கள் அமைக்கப்படும்
- ரயில்வே துறைக்கு அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 14 லட்சம் கோடி தேவை
- 2012-13ம் ஆண்டில் ரயில்வேதுறைக்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 60,000 கோடி
- அணு விஞ்ஞானி அனில் ககோட்கர் தலைமையில் ரயில்வே பாதுகாப்புக்கு குழு
- 487 திட்டங்களுக்கு உடனடி நிதி தேவை
- புதிய சிக்னல்கள் அமைக்க, சிக்னல்களை மேம்படுத்த ரூ. 39,111 கோடி
- புதிய ரயில்களை அறிமுகப்படுத்த புதிய டிராக்குகள் தேவை
- 19,000 கி.மீ நீள தண்டவாளங்களை நவீனமாக்க திட்டம்
- ரயில்வே துறைக்கு மத்திய அரசு ரூ. 25,000 கோடி ஒதுக்கீடு. நிதி தேவையோ ரூ.45,000 கோடி
- கேரளா உள்பட 4 இடங்களில் புதிய ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை
- சென்னை ராயபுரம் ரயில் நிலையம் புதிய முனையமாக்கப்படும்
- அனைத்து ரயில் நிலையங்களும் விமான நிலையங்களைப் போல மேம்படுத்தப்படும்
- ரயில் நிலையங்களை மேம்படுத்த புதிதாக ரயில்வே நிலைய மேம்பாட்டுக் கழகம் அமைப்பு
- நாடு முழுவதும் 11,250 ரயில்வே பாலங்கள் மேம்படுத்தப்படும்
- 19,000 கிலோமீட்டர் ரயில் பாதைகள் சீரமைக்கபப்டும்
- அனைத்து சிக்னல்களும் நவீனமயமாக்கப்படும்
- பயணிகள் பாதுகாப்புக்கு புதிய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்
- 40% ரயில் விபத்துகள் ஆளில்லா ரயில்வே கேட்களில் தான் நடக்கின்றன
- ரயில் பாதுகாப்புக்கே முன்னுரிமை தரப்படும்
- 12வது திட்ட காலத்தில் ரயில்வே மேம்பாட்டுக்கு ரூ. 7.35 லட்சம் கோடி ஒதுக்கீடு
- நவீனமயாக்கல் குறித்து ஆராய சாம் பித்ரோடா தலைமையில் குழு
- ரயில்வே பாதுகாப்புக்கு ரூ. 16,842 கோடியில் திட்டம்
- ரயில்வேயை நவீனமயமாக்க அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் கோடி தேவை
- வட கிழக்கு மாநிலங்கள், காஷ்மீரை இணைக்க புதிய திட்டங்கள்
- பட்ஜெட்டில் கவிதைகளை பாடி நேரத்தை கடத்தும் அமைச்சர் திரிவேதி
Subscribe to:
Posts (Atom)