skip to main
|
skip to sidebar
தமிழனுக்கு ஒரு தகவல்
என் உயிர் தமிழுக்கு!!! உடல் மண்ணுக்கு !!! என்ன தவம் செய்தேன் தமிழனாய் பிறப்பதற்கு !!!!
Monday, January 11, 2010
தலையங்கம்: கறை விரும்பாத வெள்ளைக் கார்கள்
எஸ்.ஐ., படுகொலை கிராமத்தினர் கொந்தளிப்பு
ஒரு கொலைச் சம்பவம் சரியாகக் கையாளப்படாதபோது, அதைக் காண நேர்ந்திராதவர்களையும் காயப்படுத்தி, மனதை ரணமாக்கி, பீதிக்குள்ளாக்கிவிடும் என்பதற்கு ஓர் உதாரணம், அண்மையில் நெல்லைச் சீமையில் ஆழ்வார்குறிச்சி அருகே காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்!
இறந்தவர் காவல்துறை உதவி ஆய்வாளர் என்பதோ அல்லது ஆள்மாறாட்டத்தால் நடந்த கொலை என்பதோ இதில் முக்கியமில்லை. ஒரு மனிதர், ஒரு வன்முறைக்கும்பலால் வலதுகால் வெட்டித் துண்டிக்கப்பட்டு, ரத்தம் சொட்டச்சொட்ட சாலையில் விழுந்து துடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். விடியோ கேமராக்கள் வலம் வருகின்றன. தமிழக அரசின் இரண்டு அமைச்சர்கள் தங்களது ஆள், படை, வாகனங்களுடன் நிற்கிறார்கள். ஆனாலும் சாலையில் விழுந்துகிடக்கும் மனிதருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
அவருக்குத் தண்ணீர் கொடுக்கச் செல்லும் நபர், அங்கே தலையை உயர்த்தி ஏதோ பேச வரும் உதவி ஆய்வாளரின் கைக்குள் சிக்காமல் விலகி ஓடுகிறார்- ஏதோ மனிதவெடிகுண்டைக் கண்டதைப்போல! எதற்காக இந்தக் கொலை? அவர் சொல்ல வரும் விஷயம் என்ன? அத்தனை பேர் அருகிருந்தும் அவரது கடைசி வார்த்தையை, அவர் பிரக்ஞையுடன் இருக்கும்போதே கேட்கத் துணியும் நபர்கள் யாருமே இல்லை. (சிறகுகள் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஜடாயுவைக் கண்டு இவர்களைப் போலவே இராமன், இலக்குமணன் ஒதுங்கி நின்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்? சீதையைக் கடத்திச் சென்ற ராவணன் பற்றித் தெரியாமலே போயிருக்கும்!)
அமைச்சருடன் இருந்த சில அரசியல்வாதிகளைத் தவிர, பலரும் காவல்துறையில் பணிபுரிபவர்கள். அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் பயிற்சிகள் நிச்சயமாக அளிக்கப்பட்டிருக்கும். அவர்கள் ஏன் வெற்றிவேலை உடனடியாக ஒரு காரில் கொண்டு செல்லவில்லை? வலது கால் துண்டான நிலையில், ரத்தப் போக்குடன் துடித்துக் கொண்டிருந்த அவரை, அங்கிருந்த ஏதேனும் ஒரு காரில் கொண்டு செல்லவும், எதிர்ப்படும் 108 ஆம்புலன்ஸýக்கு அவரை மாற்றி, முதலுதவியை முறைப்படி அளிக்கவும் செய்திருந்தால் வெற்றிவேல் பிழைத்திருக்கக்கூடும். அமைச்சர் அல்லது அவருடன் வந்த கார்களைப் பயன்படுத்த பலத்த யோசனை ஏன்? கார் ரத்தக் கறை பட்டுவிடுமே என்ற அச்சம்தானே! அல்லது, காரிலேயே அவர் இறந்துவிட்டால் அந்தக் காரின் புனிதம் கெட்டுவிடுமே என்ற எண்ணமா? எதற்காகக் கடைசிவரை காத்திருந்து, 108 வாகனம் வராது என்று தெரிந்தபிறகு அவரை ஒரு காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்!.
"ஆம்புலன்ஸில் எல்லா வசதிகளும் இருக்கும் என்று நினைத்தோம். இதுபோன்று காயமடைந்தவர்களைக் கையாண்டு பழக்கமில்லை' என்று பொது சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சொல்வது அவரது அமைச்சர் பதவிக்கும், பொறுப்பு வகிக்கும் துறைக்குமே பெருத்த அவமானம். இத்தகைய ஒரு பதிலை, சாதாரண மனிதர்கள் சொல்லலாம். ஆனால் ஓர் அமைச்சர் சொல்லலாமா? 108-க்குப் போன் செய்வது ஏதுமறியா பாமரனின் வேலை. ஒரு பொறுப்புமிக்க அமைச்சர் கட்டளையிட்டால், செயல்பட ஆள், படை, வாகனம் எல்லாமும் உடன் நிற்கிறது. ஆனால் அமைச்சர்களும் வேடிக்கை பார்ப்பதென்றால்..
காமராஜ் முதல்வர் பதவியில் இல்லாத வேளையில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டுக்கு வெளியே ஒரு காங்கிரஸ் தொண்டர், ஆளும் கட்சியினருடனான மோதலில் காயமடைந்து ரத்தம் சொட்டச்சொட்ட மேடைக்கு அழைத்துவரப்பட்டபோது, "அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல் இங்கே ஏன் அழைத்து வருகிறீர்கள்' என்று காமராஜ், அவர்களைக் கடுமையாகத் திட்டி, விரட்டி அடித்தார். அவரது கோபத்துக்குக் காரணம் மேடை ரத்தக்கறை ஆகிவிடுமே என்ற அருவருப்பு அல்ல. மாநாட்டு மேடையில் இரத்தத்தைக் காட்டி தொண்டர்களை சூடுபடுத்துவதைத்தான் அவர் அருவருப்பாகக் கருதினார்.
ஆனால், சாலையில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் ஒருவரை இரு அமைச்சர்களில் யாரேனும் ஒருவர் தங்கள் காரில் ஏற்றிச் சென்றிருந்தால், அவர்களது வெள்ளைக் கார்களில் படிந்திருக்கக்கூடிய ரத்தக் கறை ஆட்சியையும் அவர்கள் சார்ந்த கட்சியையும்கூட பெருமைப் படுத்தியிருக்கும். ஆனால் அமைச்சர்கள் அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர்களும் 108-க்குப் போன் செய்வார்கள் என்றால் அவர்களுக்கு அமைச்சர் பதவிக்கான தலைமைப்பண்பு இல்லை என்பதைத் தவிர, சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது.
இந்தச் சம்பவம் முழுவதும் வடஇந்திய தனியார் டி.வி. சானல்களில் ஒளிப்பரப்பாகின. தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவான தனியார் டி.வி. சானல்கள் இதைத் தணிக்கை செய்து ஒளிபரப்பின என்றாலும், எதிர்க்கட்சியின் தொலைக்காட்சியில் இதே கோரக் காட்சிகள் ஒளிபரப்பாகின. அமைச்சர்களின் செயலை அம்பலப்படுத்துவதற்காக இதைச் செய்திருக்கிறார்கள் என்றாலும், இதைக் காண நேர்ந்த பொதுமக்கள், சிறார்கள் மனதில் எத்தகைய பதற்றத்தை, பீதியை இந்தக் காட்சிகள் ஏற்படுத்தின என்பதை விவரிக்க இயலாது. ஓர் உயிரின் துடிப்பு, பலரையும் துடிதுடிக்க வைத்தது.
அந்த அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் எத்தனை தவறோ அதே அளவுக்குத் தவறான செய்கை- தனியார் டி.வி. சானல்கள் இதை ஒளிபரப்பி அதன்மூலம் பரபரப்பை ஏற்படுத்த முற்பட்டது!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
என்னை பற்றி
செந்தில்குமார்
நானும் சந்தோஷமா இருக்கனும், மத்தவங்களும் சந்தோஷமா இருக்கவைக்க முயற்சி செய்யணும் !!
View my complete profile
NDTV 24/7
Tamil FMs
Tamil Flash FM
Suriyan FM
தமிழ் செய்தித்தாள்கள்
Dinamani - News, Latest, Tamilnadu, Local, Districts, Cinema, Sports
-
Daily Thanthi Home Page
-
தேடுக.......
My English News Web Blogs
World News
Rail Budget 2012
13 years ago
Blog Archive
►
2014
(1)
►
09/14 - 09/21
(1)
►
2012
(3)
►
03/11 - 03/18
(1)
►
01/15 - 01/22
(1)
►
01/08 - 01/15
(1)
►
2011
(44)
►
12/11 - 12/18
(2)
►
11/27 - 12/04
(1)
►
11/06 - 11/13
(1)
►
09/11 - 09/18
(1)
►
08/28 - 09/04
(2)
►
08/21 - 08/28
(1)
►
08/07 - 08/14
(1)
►
07/10 - 07/17
(1)
►
07/03 - 07/10
(2)
►
06/12 - 06/19
(1)
►
05/29 - 06/05
(1)
►
05/22 - 05/29
(2)
►
05/15 - 05/22
(3)
►
04/24 - 05/01
(3)
►
04/17 - 04/24
(1)
►
04/03 - 04/10
(2)
►
03/20 - 03/27
(1)
►
03/13 - 03/20
(4)
►
03/06 - 03/13
(2)
►
02/27 - 03/06
(3)
►
02/20 - 02/27
(2)
►
02/13 - 02/20
(3)
►
01/30 - 02/06
(1)
►
01/09 - 01/16
(1)
►
01/02 - 01/09
(2)
▼
2010
(145)
►
12/26 - 01/02
(1)
►
12/12 - 12/19
(2)
►
11/28 - 12/05
(5)
►
11/14 - 11/21
(2)
►
11/07 - 11/14
(1)
►
10/17 - 10/24
(1)
►
10/10 - 10/17
(1)
►
10/03 - 10/10
(1)
►
09/26 - 10/03
(2)
►
09/19 - 09/26
(2)
►
09/12 - 09/19
(6)
►
09/05 - 09/12
(7)
►
08/29 - 09/05
(1)
►
08/22 - 08/29
(1)
►
08/08 - 08/15
(3)
►
08/01 - 08/08
(5)
►
07/25 - 08/01
(5)
►
07/18 - 07/25
(5)
►
07/11 - 07/18
(7)
►
07/04 - 07/11
(3)
►
06/27 - 07/04
(3)
►
06/20 - 06/27
(11)
►
06/13 - 06/20
(4)
►
06/06 - 06/13
(2)
►
05/16 - 05/23
(2)
►
05/09 - 05/16
(2)
►
05/02 - 05/09
(2)
►
04/18 - 04/25
(1)
►
04/11 - 04/18
(2)
►
03/28 - 04/04
(1)
►
03/21 - 03/28
(2)
►
03/14 - 03/21
(3)
►
03/07 - 03/14
(6)
►
02/28 - 03/07
(7)
►
02/21 - 02/28
(8)
►
02/14 - 02/21
(10)
►
02/07 - 02/14
(8)
►
01/31 - 02/07
(4)
►
01/24 - 01/31
(3)
►
01/17 - 01/24
(2)
▼
01/10 - 01/17
(1)
தலையங்கம்: கறை விரும்பாத வெள்ளைக் கார்கள்
►
2009
(21)
►
12/06 - 12/13
(6)
►
11/22 - 11/29
(1)
►
11/15 - 11/22
(3)
►
11/08 - 11/15
(11)