-
Wednesday, July 28, 2010
கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக பதில் அளிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்தினார்கள். முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்ததில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது. இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும். அதுதான் முட்டையாக மாறி இருக்கிறது. வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று அடித்துக்கூறுகின்றனர் அந்த விஞ்ஞானிகள்!
Tuesday, July 27, 2010
2050ல் பனிக் கட்டியே இருக்காது; ரஷ்ய ஆராய்ச்சியாளர் தகவல்
மாஸ்கோ: "வரும் 2050ம் ஆண்டில் ஆர்க்டிக் துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் இருக்காது' என, ரஷ்ய வானிலை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். ரஷ்ய வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் ப்ரொலொவ், இது குறித்து கூறியதாவது: வட துருவமான ஆர்க்டிக் பகுதியில் ஒரு கோடியே 10 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பனிக்கட்டி இருந்தது. தற்போது ஒரு கோடியே 80 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பனிக்கட்டியின் அளவு குறைந்துள்ளது. வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து, விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் அளவு கூடியதால், வெப்பம் அதிகரித்து பனிப் பாறைகள் உருகி விட்டன. இதே நிலை நீடித்தால், இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகளில் கோடை காலத்தில் இப்பகுதியில் பனிப்பாறைகளே இல்லாத நிலை ஏற்படும்.
ஆர்க்டிக் துருவப் பகுதியை கண்காணிப்பதற்காகவே 10 ஆயிரம் கோடி ரூபாயில் விண்வெளித் திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளோம். இதன் ஒரு கட்டமாக ஆர்க்டிக் பகுதியில் சேரும் ஹைட்ரோ கார்பன் அளவை கணக்கிடுவது உள்பட பல்வேறு விஷயங்களை ஆராய செயற்கைக் கோள்களை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரஷ்யா, அமெரிக்கா, கனடா, நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளுடன் விவாதித்து வருகிறோம். இவ்வாறு அலெக்சாண்டர் ப்ரொலொவ் கூறினார்.
Monday, July 26, 2010
1.68 கோடி டன் தானியம் ஆண்டுதோறும் வீணாகிறது
புதுடெல்லி : போதுமான சேமிப்பு வசதி இல்லாத காரணத்தால், ஆண்டுக்கு 1.68 கோடி டன் உணவுப் பொருள் வீணாவதாக இந்திய உணவு கழகம் (எப்சிஐ) தெரிவித்துள்ளது.
இந்திய உணவு கழகம், நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் உணவு தானிய வகைகளை சேமித்து வைப்பதுடன் தேவையான பகுதிகளுக்கு விநியோகம் செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. இதற்காக உள்ள சேமிப்பு கிடங்குகளில் 2.5 கோடி டன் உணவு தானியங்களை சேமிக்க முடியும். ஆனால் இப்போதைய இருப்பு 7.5 கோடி டன்களாக உள்ளது.
போதுமான கிடங்கு வசதியின்மையால் உணவுப் பொருட்களை முறையாக பாதுகாக்க முடியாத சூழல் உள்ளது. திறந்தவெளிகளில் மூட்டைகளை அடுக்கி வைப்பதால் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து ஆண்டுக்கு 1.68 கோடி டன் அழுகி அல்லது வீணாகி விடுவதாக எப்சிஐ தெரிவித்துள்ளது.
ÔÔஉணவுப் பொருட்களை சேமிக்க போதுமான வசதி இல்லை என்பது உண்மைதான். இதனால் சில இடங்களில் வீணாகிறது. சேமிப்புக் கிடங்கு வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்ÕÕ என மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
Sunday, July 25, 2010
முதல் இந்திய உலவி!
கடைசியாக அது வந்தேவிட்டது. நமக்கென ஒரு பிரெüசர் வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த இந்திய இணையப் பயனர்களின் ஆசை நிறைவேறிவிட்டது. "மேட் இன் இந்தியா' என்ற அடைமொழியுடன், இந்தியர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "எபிக்' என்கிற இணைய உலவி இப்போது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதை உருவாக்கியிருப்பது பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம்.
எத்தனையோ பிரெüசர்கள் அவ்வப்போது வருகின்றன, போகின்றன; இதுவும் பத்தோடு பதினொன்றாகக் காணாமல் போய்விடும் என்று எண்ணியவர்கள் இப்போது கொஞ்சம் திகைத்து நிற்கிறார்கள். வெளியான முதல் வாரத்திலேயே இந்தியர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோசில்லா பயர்ஃபாக்ஸ் போன்ற முன்னணி பிரெüசர்களைக் கடந்து, இந்தியர்களைக் கவர்வதற்கு இந்தப் புதிய வரவில் நிறையச் சங்கதிகள் இருக்கின்றன.
முதலாவதாக எபிக் பிரெüசர், உலகளாவிய பொதுச் சந்தைக்கான மென்பொருள் அல்ல. அது இலவசமானது; இந்தியர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. அதனால், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருடனோ மோசில்லா பயர்ஃபாக்ஸýடனோ போட்டியிடவேண்டிய அவசியம் இதற்கு இல்லை. இந்த ஒன்றே இந்தியர்களைப் பற்றி இழுப்பதற்குப் போதுமானது. இரண்டாவதாக, இது மோசில்லா பயர்ஃபாக்ஸ் பிரெüசரின் நீட்சிதான். அதனால், கூடுதல் வசதிகள் இருக்கும் என்பது அடிப்படையான விஷயம்.
இணையத்தில் நுழைவோரைச் சிரமப்படுத்தும் முதல் பிரச்னை வைரஸ், மால்வேர், ஸ்பேம்வேர் போன்ற நச்சு நிரல்கள்தான். நச்சு நிரல்களைக் கண்டறிந்து அழிக்கும் திறமையான ஆன்டி-வைரஸ் மென்பொருள் இல்லாவிட்டால் கணினியில் உள்ள முக்கியக் கோப்புகளை இந்த நச்சு நிரல்கள் தாக்கி அழிக்கும். சில நேரம் நமது ரகசியத் தகவல்களைத் திருடி, இணையத் திருடர்களுக்கு உதவி செய்யும்.
இந்தப் பிரச்னைக்கு எபிக் தீர்வு கண்டிருக்கிறது. எபிக்குடன் இணைத்துத் தரப்பட்டிருக்கும் இùஸட் நோட்32 என்கிற ஆன்டிவைரஸ் தொகுப்பு, நச்சு நிரல்களைக் தேடிக் களைகிறது.
இந்த வசதியைத் தரும் உலகின் முதல் பிரெüசர் என்கிற பெருமையும் எபிக்குக்கு கிடைத்திருக்கிறது. இணையத்தில் இருந்து வரும் நச்சு நிரல்கள் மட்டுமல்லாமல், நமது கணினியில் ஏற்கெனவே இருக்கும் நச்சு நிரல்களையும் இந்த ஆன்டி-வைரஸ் மென்பொருள் கொண்டு அழிக்க முடிகிறது.
இதுவரை எந்த பிரெüசரிலும் இல்லாத அளவுக்கு 1500-க்கும் அதிகமான "சைட் பார் அப்ளிகேஷன்ஸ்' எனப்படும் ஒருங்கிணைந்த பயன்பாடுகள் எபிக்கில் இருக்கின்றன. பின்னணி வண்ணங்கள், புகைப்படங்கள் என எல்லாவற்றையும் ஒற்றை க்ளிக்கில் மாற்றும் வசதி இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களில் மேய்ந்தபடியே மற்ற பணிகளைச் செய்வதற்கும், கணினியில் உள்ள கோப்புகளைக் கையாள்வதற்கும் முடிகிறது.
இதேபோல, ஜிமெயில், யாஹு மெயில் போன்ற சேவைகளின் மின்னஞ்சல்களையும் இந்தப் பயன்பாடுகள் மூலமாகவே படிக்கலாம். இவைதவிர, உடனடி கிரிக்கெட் ஸ்கோர், தொலைக்காட்சி சேனல்கள், இசை, விளையாட்டு, வேலைவாய்ப்பு,விடியோ போன்றவற்றுக்கான பயன்பாடுகளும் எபிக்கில் இருக்கின்றன.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளில் தட்டச்சு செய்வதற்கான வசதி மிக எளிமையான முறையில் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு. தனி மென்பொருளை நிறுவுவது அல்லது பிற இணையதளங்களில் சென்று தட்டச்சு செய்து எடுத்து வருவது போன்ற தொல்லைகளுக்கு இது நல்ல தீர்வு.
இந்தியாவிலிருந்து வெளியாகும் செய்தி இணையத் தளங்களின் முக்கியச் செய்திகளை திரட்டித் தரும் வசதியும் எபிக்கில் இருக்கிறது. இப்போதைக்கு மிகச் சாதாரணமான இணையத் திரட்டிகள் போன்ற இந்த வசதி, வருங்காலத்தில் இது கூகுள் நியூஸ் போன்று மிகப் பிரபலமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிராந்திய மொழி வசதிகளில் உள்ள சில பிழைகளைச் சரி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தினால், அனைவராலும் விரும்பப்படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.
மைக்ரோசாஃப்டின் எம்எஸ் வேர்டு, ஓபன் ஆபிஸ் ரைட் போல எளிய வடிவிலான வேர்ட் பிராசசர் எனப்படும் சொற் செயலியும் எபிக் இணைத்துத் தருவது மிகச் சிறப்பு. தட்டச்சு செய்வது, பிற இணையத் தளங்களில் இருந்து பிரதி எடுப்பது போன்ற பணிகளைச் செய்வதற்கு இது உதவும். மற்ற முன்னணி இணைய உலவிகளில் இல்லாத வசதி இது.
"பேக்கப்' எனப்படும் கோப்புகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி நிச்சயமாக அனைவருக்கும் பயன்படும். மைக்ரோசாஃப்டின் ஸ்கைடிரைவ் போல ஜிமெயில் வழியாக இந்த வசதியை எபிக் வழங்குகிறது. ஜிமெயிலை கிட்டத்தட்ட ஒரு எஃப்.டி.பி. போல பயன்படுத்த முடிகிறது.
இத்தனை வசதிகளையும் கொண்டிருப்பதால் எபிக் இயங்கும் வேகம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. உண்மையில், மற்ற இணைய உலவிகளை விட கூடுதல் வேகத்துடன் இயங்குவதாகவே மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இப்போதைய கணிப்புப்படி, இதுவரை வெளிவந்திருக்கும் மோசில்லா பயர்ஃபாக்ஸ் நீட்சிப் பதிப்புகளில் எபிக் பிரெüசர்தான் சிறந்தது என பெரும்பாலானோர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், பிராந்திய மென்பொருள் சந்தையில் புதிய எழுச்சியை ஏற்படுத்தப் போகிறது என்பதே எபிக்கின் உண்மையான வெற்றி.
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல்
வாஷிங்டன் : "பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள "தெர்மோஸ்பியர்' அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது'என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 600 கி.மீ,. உயரம் கொண்ட பகுதி தெர்மோஸ்பியர் அடுக்கு என்றழைக்கப்படுகிறது.வளிமண்டலம் முடிந்து விண்வெளி ஆரம்பிக்கும் பகுதியில் தெர்மோஸ்பியர் அடுக்கு அமைந்துள்ளது.சூரியனிலிருந்து வரும் சுற்றுச்சூழலுக்கு தீங்கான கதிர்களை வடிகட்டி அனுப்புவதில் தெர்மோஸ்பியர் அடுக்கு பெரும்பங்கு வகிக்கிறது.சமீப காலமாக வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பு மற்றும் புறஊதாக்கதிர்களின் பாதிப்பால் தெர்மோஸ்பியர் அடுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.இதனால் பூமியின் தட்ப வெப்ப நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடல்சார் ஆய்வுக்கழக விஞ்ஞானி ஜான் எம்மர்ட் வெளியிட்ட ஆய்வறிக்கை:பூமியின் வளிமண்டலத்தில் கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திடீரென கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எங்களது ஆய்வில் வளி மண்டல அழுத்தம் திடீரென முப்பது சதவீத அளவிற்கு குறைந்துள்ளது.தெர்மோஸ்பியர் அடுக்கு சூரியனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பகுதியாகும்.பூமியின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் தெர்மோஸ்பியர் அடுக்கில் பரவி விரிவடைகிறது.இதை தெர்மோஸ்பியர் அடுக்கு, பூமிக்கு வராமல் தடுக்கிறது. சூரியனிலிருந்து வரும் வெப்பத்தின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடந்த 2007 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை தெர்மோஸ்பியர் அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்து வளிமண்டலத்தை தாண்டி தெர்மோஸ்பியர் அடுக்கு வரை பரவி விட்டது.
எனவே தெர்மோஸ்பியர் அடுக்கில் கார்பன் டை ஆக்சைடு குளிரூட்டியாக செயல்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த பாதிப்பிற்கு கார்பன் டை ஆக்சைடு வாயு மட்டும் காரணம் என கூற இயலாது.பிற காரணிகளும் தெர்மோஸ்பியர் அடுக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.இவ்வாறு ஜான் எம்மர்ட் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)