Monday, March 21, 2011

தி.மு.க, தேர்தல் அறிக்கை (2011):


என்னென்ன கிடைக்கும்?



*தாய்மார்கள் அனைவருக்கும் இலவச கிரைண்டர் வழங்கப்படும். அதனை விரும்பாதவர்களுக்கு மிக்சி


 * ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மானிய விலையில் மளிகைப் பொருட்கள்.

* கிராமங்களில் உழவர் சந்தை போல், நகரங்களில் காய்கறிகளை விற்க நுகர்வோர் சந்தை

 *வயது முதிந்தவர்களுக்கு வீட்டுக்கு சென்று மாதம்தோறும் மருத்துவ சிகிச்சை.

 * அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று செட் சீருடை

* அரசு கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு, "லேப்டாப்'

*அனைத்து மாவட்டங்களிலும் பல்கலை, பொறியியல் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள்

 *பொங்கல் பண்டிகையின்போது, கிராமங்களில் அரசு செலவில் விளையாட்டுப் போட்டிகள்

 *கோவை, மதுரையில் மெட்ரோ ரயில்

 *சென்னையிலிருந்து கோவை, மதுரை இடையே, "புல்லட்' ரயில்

 *முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை 750 ரூபாயாக அதிகரிப்பு

*60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க பாஸ்

 *2006-09ம் ஆண்டு வரை மாணவர்கள் பெற்ற கல்விக்கடனுக்கான வட்டியை அரசே ஏற்கும்.

 * மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நான்கு லட்ச ரூபாய் கடன். அதில் இரண்டு லட்ச ரூபாய் மானியம்

 *கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம்.

*மீனவர்களுக்கு நிதி தர புதிய காப்பீட்டுத் திட்டம்

 * குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு பணியில் முன்னுரிமை

 * கலைஞர் வீட்டு வசதி திட்ட மானியம் ஒரு லட்ச ரூபாயாக உயர்வு

*"ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ அரிசி இலவசம்

 *கர்ப்பிணிகளுக்கான உதவித்தொகை பத்தாயிரம் ரூபாயாக உயர்வு