Thursday, February 4, 2010

இந்தியாவின் இரண்டு முகங்கள்

உலகில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நாடும் இந்தியா தான்.​ அதிக ஏழைகள் வாழும் நாடும் இந்தியா தான்.​ தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் வசிக்கும் நாடும் இந்தியா தான்.​ தகவல்தொழில்நுட்பத்தையே முற்றிலும் தெரியாத மக்கள் வசிக்கும் நாடும் இந்தியா தான்.

எந்த ஒரு துறையை எடுத்தாலும் இதுபோல இரண்டு இந்தியாவை நாம் காண முடியும்.​ உலகிலேயே இந்தியாவில் தான் அதிகப் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் துணை அமைப்பான யுனெஸ்கோ.

அனைவருக்கும் கல்வித் திட்டம் தொடர்பான உலகளாவிய கண்காணிப்பு அறிக்கையை ​ யுனெஸ்கோ அமைப்பு அண்மையில் வெளியிட்டது.​ அந்த அறிக்கையில்,​​ உலகம் முழுவதும் 75.9 கோடி மக்கள் ​(18 வயதுக்கு மேற்பட்டோர்)​ படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.​ அறிக்கையின்படி ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாகவும்,​​ 18 வயதுக்கு மேற்பட்ட மாணவப் பருவத்தினரில் 7.1 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமலும் உள்ளனர்.​ அத்துடன் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடுபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் படிப்பறிவில்லாத மக்களில் பாதிபேர் இந்தியா,​​ பாகிஸ்தான்,​​ வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.​ இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால்,​​ இந்த நூற்றாண்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ ​

குறிப்பாக இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் படிப்பறிவில்லாதோர் இருக்கின்றனர் என்ற கசப்பான உண்மையை யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது.​ ​ மக்களிடையே படிப்பறிவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் வேதனை தரும் விதத்தில்,​​ ஆமை வேகத்தில் இந்த நாடுகளில் நடப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.​ இது அதைவிட கொடுமையான விஷயம்.​ ​ ​

சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வி அறிவில் இந்தியா முன்னேறினாலும்,​​ இதுவரை அபரிமிதமான வளர்ச்சியை எட்டவில்லை.​ இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 65 சதவீதம் தான்.​ கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தாலும்,​​ அதற்கேற்ப மக்களிடம் கல்வி அறிவு அதிகரிக்கவில்லை என்பதைத் தான் யுனெஸ்கோவின் அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.

இந்தியாவில் 50 சதவீத குழந்தைகள் தான் இடைநிலைக் கல்வியில் ​(1 முதல் 8-ம் வகுப்பு வரை)​ சேர்கின்றனர்.​ இதை 75 சதவீதமாக மாற்ற 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.​ சுதந்திரத்துக்குப்பின் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

1950-ம் ஆண்டில் 20 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன.​ இப்போது பல்கலைக்கழங்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.​ அதேபோல,​​ கல்லூரிகளின் எண்ணிக்கை 500-ல் இருந்து 22 ஆயிரமாகவும்,​​ ஆசிரியர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து 5.75 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.​ உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 1.25 கோடியாக உயர்ந்துள்ளது.​ இருப்பினும் பட்டப்படிப்புக்குப்பின் உயர்கல்விக்கு வருவோரின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் பேர் தான் உயர்கல்வி பெற்றுள்ளனர்.​ இது உலக சராசரியைவிட ​(23) மிகக் குறைவு.​ வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெற்றவர்கள் 40 முதல் 80 சதவீதமாக உள்ளனர்.​ வளரும் நாடுகளில் இந்த விகிதம் 35 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.​ 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதை 15 சதவீதமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு,​​ எழுத்தறிவு சதவீதமும்,​​ உயர்கல்வி பெறுவோரின் சதவீதமும் உயரவில்லை.​ கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.​ ​

விண்வெளி ஆய்வில் உலகில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளில் 30 சதவீதம் பேர் இந்தியர்கள்.​ உலகின் முன்னணி நாடுகளில் பணியாற்றும் தகவல்தொழில்நுட்ப வல்லுநர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் தான் என்பதை எண்ணும்போது புல்லரிக்கிறது.

அதேநேரத்தில் உலகிலேயே படிப்பறிவு இல்லாத மக்கள் அதிகம் வசிக்கும் நாடு இந்தியா என்ற தகவலைக் கேட்கும்போது வெட்கித்தலைகுனிய வேண்டியுள்ளது.​ ​ வளர்ந்த,​​ வளமான,​​ படிப்பறிவு மிகுந்த ஒளிரும் இந்தியா ஒரு புறம்.​ ஏழ்மையான,​​ படிப்பறிவு இல்லாத இருண்ட இந்தியா மறுபுறம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.​ ​

இந்த மாற்றத்துக்கு உண்மையான காரணம் என்ன?​ இந்தியாவில் அதிகரித்து வரும் ஊழல்,​​ குறைவான கல்வி விழிப்புணர்வு ஆகியவை தான் முக்கிய காரணம்.​ எனவே,​​ ஊழலை ஒழிக்க வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதிகள்,​​ மாணவர்கள் சபதம் ஏற்பது அவசியம்.

2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் தகவல்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகரத்துக்கும்,​​ கிராமத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும்.​ கிராமங்களில் தரமான கல்வி,​​ மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.​ தேசப்பிதா காந்தி கண்ட கனவுப்படி,​​ கிராம ராஜ்ஜியம் அமைத்தால் இந்தியாவின் எழுத்தறிவு சதவீதம் அபரிமிதமான வளர்ச்சி அடையும்.

எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்தினால் தான் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்.​ அப்போது "இருண்ட இந்தியா' என்ற நிலை மாறி பிரகாசமாக ஒளிரும் ஒரே இந்தியாவாக மாற்ற முடியும்.​ இருண்ட இந்தியாவிலிருந்து ஒளிரும் இந்தியாவுக்குச் செல்ல எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்த வேண்டும்.​ ஒளிரும் ஒரே இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு இந்தியனும் சபதம் ஏற்க வேண்டும்

Wednesday, February 3, 2010

நெருக்கடியில் "குட்டி ஜப்பான்'"

இந்தியாவின் "குட்டி ஜப்பான்' என்றழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் பனியன் உற்பத்தித் தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

பனியன் உற்பத்தி என்பது நிட்டிங், சாயம், சலவை, கேலண்டரிங், கட்டிங், ஸ்டிச்சிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, அயர்னிங், பேக்கிங் என பலதரப்பட்ட நிலையை அடைந்துதான் முழுமை அடைகிறது.

சாய, சலவை ஆலைகளில் இருந்து வெளியேறும் முதற்கட்ட சுத்திகரிப்பு செய்த கழிவுநீர், ஒரத்துப்பாளையம் அணையைச் சென்றடைகிறது.

சாய, சலவைக் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து, "அனைத்து சாய, சலவைத் தொழிற்சாலைகளும் மூன்று மாதக் காலத்துக்குள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இசைவாணை பெற்று கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும்.

ஒரத்துப்பாளையம் அணையைச் சுத்தம் செய்ய மாசு கட்டுப்பாடு வாரியம் மூலமாகத் தமிழகப் பொதுப்பணித்துறை மதிப்பீடு செய்துள்ள ரூ.12.5 கோடியை திருப்பூர் சாய, சலவை உரிமையாளர்களிடம் வசூல் செய்ய வேண்டும்' என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, 1998 முதல் 420 சாய, சலவை ஆலைகள் தனித்தனியாகவும், 281 சாய, சலவை ஆலைகள் 8 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாகவும் சுமார் ரூ.30 கோடி செலவில் முதற்கட்ட சுத்திகரிப்பு முறையைச் செயல்படுத்தி வருகின்றன.

இந்த முதற்கட்ட சுத்திகரிப்பு முறையில் நிறம், வாடை நீக்கப்படுகிறது. பிஓடி (பயாலாஜிகல் ஆக்ஸிஜன் டிமாண்ட்), சிஓடி (கெமிகல் ஆக்ஸிஜன் டிமாண்ட்) அளவுகள் சரி செய்யப்படுகின்றன. இதற்காக, சாய, சலவை ஆலை உரிமையாளர்கள் மாதந்தோறும் ரூ.3 கோடி செலவிடுகின்றனர்.

இந்த நிலையில், கழிவுநீரால் ஒரத்துப்பாளையம் அணையைச் சுற்றி விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் 2003}ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், "அனைத்து சாய, சலவை ஆலைகளும் சவ்வூடு பரவல் முறையில் கழிவுநீரைச் சுத்தம் செய்து பூஜ்ய நிலைய கழிவுநீர் வெளியேற்றம் (ஜீரோ டிஸ்சார்ஜ்) என்ற நிலையை நடைமுறைப்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டது.

இதன்படி 524 சாய, சலவை ஆலைகள் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருந்த 8 பொது சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்தவும், புதிதாக 12 பொது சுத்திகரிப்பு நிலையங்களை ஏற்படுத்தவும் முடிவு செய்தன. இதற்காக, வங்கிகளில் ரூ.590.10 கோடி கடன், சாயப்பட்டறைகளின் பங்கு ரூ.210.32 கோடி என மொத்தம் ரூ.800.42 கோடி செலவிடப்பட்டது.

பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் சாய, சலவை ஆலைகள் இதுவரை ரூ.100 கோடியை வட்டியாகச் செலுத்தியிருக்கின்றன.

மீதமுள்ள 152 சாய, சலவை ஆலைகள் தனித்தனியாகச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து ரூ.200 கோடி செலவு செய்து ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை நடைமுறைப்படுத்தி வருகின்றன. சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க முடியாத 45 ஆலைகள் மூடப்பட்டன.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, முதற்கட்ட சுத்திகரிப்புக்குப் பிறகு வெளியேறும் கழிவுநீரைக் குறைப்பதற்காக வாரம் இரு நாள்கள் (சனி, ஞாயிறு) சாய, சலவை ஆலைகளை இயக்குவதில்லை.

உயர் நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் மோகன் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையின்படி பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் தாமதம் செய்யும் ஆலைகள், அவற்றை அமைக்கும் காலம் வரை வெளியேற்றுகின்ற கழிவுநீருக்குக் கடந்த 2007 முதல் அபராதம் கட்ட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதவிர, ஒரத்துப்பாளையம் அணையைச் சுத்தம் செய்வதற்காக ஆலை உரிமையாளர்கள் கொடுக்க வேண்டிய தொகை மற்றும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அத் தொகை பெறப்பட்டது.

வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டியோடு அசல் தவணைத் தொகையை மாதந்தோறும் கட்ட வேண்டிய சூழ்நிலையில் அபராதத் தொகையைத் தொடர்ந்து செலுத்த இயலாததால் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆனால், விவசாய நிவாரணம், நொய்யல் மாசுக்கான அபராதம் என ரூ.62.2 கோடியை 2009 டிசம்பர் 31}ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், 2010 ஜனவரி 5}ம் தேதிக்குள் அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களிலும் ஆர்.ஓ.பிளான்ட் அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், ஆலை உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். கடந்த 2007 அக்டோபர் முதல் ஏற்பட்ட அன்னியச் செலாவணி மாற்று விகிதம் அமெரிக்க டாலருக்குப் பாதமாக அமைந்ததாலும், உலகப் பொருளாதாரப் பின்னடைவால் ஏற்பட்ட மந்த நிலை, மின்தட்டுப்பாடு ஆகியவற்றால் திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இக் குறைகளைப் போக்க, சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குவதற்கு எவ்வித நிபந்தனையும் இன்றி தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் உடனடியாக இசைவாணை வழங்க வேண்டும். சுத்திகரிப்புப் பணிகளைச் செய்ய அதிக அளவில் மின்சாரம் தேவை என்பதால் இலவச மின்சாரம் வழங்க வழிவகை செய்யலாம்.

சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய அரசின் 60 சதமும், மாநில அரசின் 15 சதமும் மானியம் தாமதமின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்காக வாங்கிய கடன் மற்றும் வட்டித் தொகையை தள்ளுபடி செய்ய ஆவன செய்யலாம்.

சுமார் 6 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை அளித்து வரும் சாய, சலவைத் தொழில் நலிவடைந்து வருவதால் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகி வருகிறது. பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும் என 2007}ல் அரசு உத்தரவு அளித்த பிறகுதான் சாய, சலவை ஆலை உரிமையாளர்கள் பணிகளைத் தொடர்ந்தனர்.

ஆனால், இப்போது, வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டி செலுத்த முடியாத நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது அரசின் பாராமுகத்தையே வெளிப்படுத்துகிறது என்கின்றனர் ஆலை உரிமையாளர்கள்.

தமிழகத்தில் பல்வேறு இலவசத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அரசு, ஆண்டுதோறும் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு அன்னிய செலவாணியை ஈட்டித் தரும் பனியன் உற்பத்தித் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஏற்றுமதி அதிகரிப்பதுடன், தொழில் வளம் பெருகும் வாய்ப்பு உள்ளது.

Thanks Dinamani

Tuesday, February 2, 2010

இசைத்துறையின் உயரிய கெளரவம்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 கிராமி விருதுகள்


இசைத்துறையில் உலக அளவில் மிக உயரியதாகக் கருதப்படும் "கிராமி' விருதுகளில் இரண்டைப் பெற்று இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.​ "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக அவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

​ இசைத்துறையில் அரிய சாதனைகளைச் செய்தவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள நேஷனல் அகாதெமி ஆப் ரெக்கார்டிங் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ்' அமைப்பு,​​ 1958}ம் ஆண்டு முதல் "கிராமபோன்' விருதுகளை வழங்கி வருகிறது.​ இந்தப் பெயர் நாளடைவில் மருவி "கிராமி' எனப் பெயர் உருமாற்றம் பெற்றது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் திங்கள்கிழமை அதிகாலை 52}வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திரைப்பட இசைப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருந்த "ஸ்லம்டாக் மில்லியனர்' படம்,​​ இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.​ இதில் சிறந்த பின்னணி இசை,​​ சிறந்த பாடல் என இரண்டு பிரிவுகளிலும் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு கிராமி விருதுகளை வென்று சாதனை படைத்தார்.

முதல் தமிழர்:​​ கிராமி விருதுகளை வென்ற முதல் தமிழர் மற்றும் நான்காவது இந்தியர் என்ற பெருமையைப் பெறுகிறார் 44 வயதான ஏ.ஆர்.ரஹ்மான்.​ இதற்கு முன்பு சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் மூன்று முறையும் ​(1967,​ 1972,​ 2001),​ தபேலா இசைக் கலைஞர் ஜாகீர் ஹுசைன் ​(1992,​ 2009) இரண்டு முறையும் வீணை இசைக் கலைஞர் விஸ்வ மோகன் பட் ஒரு முறையும் ​(1994) கிராமி விருதுகளை வென்றுள்ளனர்.

​ "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக கடந்த ஆண்டு இரண்டு ஆஸ்கர்,​​ கோல்டன் குளோப்,​​ பாஃப்டா உள்ளிட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்


Monday, February 1, 2010

த​மி​ழன் என்று பெருமை பேசு​வ​தைத் தவிர,​​ தமிழ்ப்​பண்​பாடு காக்​கப்​ப​டு​கி​றதா?​

தேர்​தல் ஆணை​யத்​தின் விழா​வில் கலந்​து​கொள்ள அஇ​அ​தி​முக பொதுச் செய​லா​ளர் ஜெயல​லிதா கலந்​து​கொள்​ளச் சென்​ற​தும்,​​ அகில இந்​திய காங்​கி​ரஸ் தலை​வர் சோனியா காந்​தி​யைச் சந்​தித்​த​தும் தமிழ்​நாட்​டில் வாதங்​கள் அரு​மை​அ​ரு​மை​யாக வெளி​யா​கின்​றன.​

த​மிழ்​நாடு காங்​கி​ரஸ் தலை​வர்​கள் பத​றிப்​போய் உடன் அறிக்கை விடு​கின்​ற​னர்.​ ஆமாம்,​​ அது இயல்​பான மரி​யா​தைச் சந்​திப்பு,​​ வேறொன்​றும் இல்லை,​​ கூட்​டணி திமு​க​வோ​டு​தான் தொடர்​கி​றது என்று.​

வள்​ளு​வ​ருக்​குக் கோட்​டம் கட்​டிய முதல்​வரை வாழ்த்​து​கி​றோம்.​ கும​ரி​யில் சிலை வைத்த முதல்​வரை வணங்​கு​கி​றோம்.​ ஆனால்,​​ அவர் வழி​யில் நாம் நடக்​கி​றோமா?​

வ​டக்கே சோனியா காந்​தி​யும்,​​ அத்​வா​னி​யும் சந்​தித்​துக் கொள்​வார்​கள்.​ உடனே காங்​கி​ரஸ் தலை​வர்​களோ,​​ பார​திய ஜனதா தலை​வர்​களோ கூட்​ட​ணி​யில்லை என்று அறிக்கை விட்​டுக் கொள்ள மாட்​டார்​கள்.​

த​னி​யாக நின்​றால் டெபா​சிட் வாங்​கச் சக்​தி​யற்ற தமிழ்​நாடு காங்​கி​ரஸ் தலை​வர்​க​ளின் பயம் அபா​ரம்.​

ஜெ​யல​லிதா எங்​கே​யும் சொல்​ல​வில்லை.​ அவர் தெளி​வா​கச் சொல்​லு​கி​றார்.​ மரி​யாதை கருதி இரு​வ​ரும் வணங்​கி​ய​தா​கத் தில்​லித் தலை​வர்​க​ளும் சொல்​லி​விட்​டார்​கள்.​ இவர்​கள் ஏன் பத​று​கி​றார்​கள்?​

நா​டா​ளு​மன்​றத்​தில் பார​திய ஜன​தா​வைக் கடு​மை​யாக விம​ர்​சிக்​கின்ற ​ லாலுவை,​​ பார​திய ஜனதா தலை​வர்​கள் யாரும் பகை​யெ​னக் கரு​து​வ​தில்லை.​ எங்கு சந்​தித்​தா​லும் புன்​ன​கை​யோடு தான் பழ​கு​கி​றார்​கள்.​ அவ​ரும் அப்​ப​டித்​தான்.​

பா​ர​திய ஜன​தா​வைக் கொள்கை அள​வில் கடு​மை​யாக எதிர்க்​கின்ற பொது​வு​டை​மைக் கட்​சி​யி​ன​ரும் பார​திய ஜன​தா​வி​ன​ரும் பகைமை பாராட்​டிக் கொள்​வ​தில்லை.​

பொது நிகழ்​வு​க​ளில்,​​ விருந்​து​க​ளில் மிக​மிக மகிழ்ச்​சி​யோடு கலந்​து​கொள்​கின்​ற​னர்.​

நா​டா​ளு​மன்​றக் கட்​ட​டத்​தைத் தீவி​ர​வா​தி​கள் தாக்​கி​ய​போது அன்​றைய பிர​த​மர் வாஜ்​பாய்க்கு உடன் தொலை​பே​சி​யில் தொடர்பு கொண்டு பேசி​ய​வர் சோனியா காந்​தி​தான்.​ வட​நாட்​டில் அர​சி​யல்,​​ மேடை​யோடு முடிந்​து​வி​டும்.​ ​

கல்​தோன்றி மண் தோன்​றாக் காலத்தே முன்​தோன்றி மூத்த குடி​யான நமது தமிழ்​நாட்​டில் தான் பகைமை,​​ பகைமை,​​ பகைமை.​

1967 தேர்த​லில் வெற்​றி​பெற்​ற​வு​டன் அண்ணா ஒரு புதிய மர​பைத் தோற்​று​வித்​தார்.​ ஆமாம் ...​ காம​ரா​ஜரை வீட்​டில் சென்று சந்​தித்​தார்.​ பக்​த​வத்​ச​லத்​தைச் சென்று சந்​தித்​தார்.​ அவ​ரின் ஆழ்ந்​த​கன்ற கல்வி,​​ அவ​ருக்கு அந்​தச் சிறந்த பண்​பைத் தந்​தி​ருந்​தது.​

ஆ​னால்,​​ இன்று பண்​பாட்​டில் ​ நாம் மிக​மி​கக் குறு​கிப்​போ​னோம்.​ அதில் ஜெயல​லி​தா​வின் இயக்​கத்​தைச் சேர்ந்​த​வர்​கள்,​​ மாற்று இயக்​கத்​த​வர்​க​ளின் வீட்​டுத் திரு​ம​ணத்​துக்​குக் கூடப் போக அஞ்​சு​கின்​ற​னர்,​​ அம்​மா​வுக்​குப் பிடிக்​காது என்று.​

மு​தல்​வரோ அவ​ரை​யல்ல,​​ அரசை

விம​ர்சித்​த​வு​டன் யாரை​யும் கடு​மை​யாக விம​ர்​சித்​து​வி​டு​வார்.​ ​ ​ ​

இந்​தி​யப் பொது​வு​டை​மைக் கட்​சி​யைச் சேர்ந்த தா.​ பாண்​டி​யன் அரசை

விம​ர்​சித்​தார்.​ உடன் அவ​ரோடு நிறுத்​தா​மல்,​​ வெள்ளை அர​சாங்​கத்​தால் கைது செய்​யப்​பட்டு,​​ கைக​ளி​லும் கால்​க​ளி​லும் சங்கி​லி​யால் கட்​டப்​பட்டு தெருத்​தெ​ரு​வாக ஜீவா​னந்​தம் அழைத்​துச் செல்​லப்​பட்ட கொடு​மை​யைக் கண்​ட​தால் விடு​த​லைப் போராட்​டத்​தில் ஈடு​பட்ட தமிழ்​நாட்​டின் பொது​வு​டை​மைக் கட்​சி​யைச் சேர்ந்த மறைந்த பால​தண்​டா​யு​தத்​தைக் கொச்​சை​யாக விமர்​சித்​தார்.​

ஒரு பெண் சம்​பந்​தப்​பட்​ட​தால்​தான் பால​தண்​டா​யு​தம் கொலை வழக்கு என்​றார்.​

நா​கர்​கோ​வில் இடைத் தேர்​தல் பிர​சா​ரத்​தில் பெரி​ய​வர் சின்ன அண்​ணா​மலை பேசிக் கொண்​டி​ருக்​கி​றார்.​ ராஜாஜி என்​று​தான் சின்ன அண்​ணா​மலை வாய் திறந்​தார்.​ மேடை​யில் இருந்த காம​ரா​ஜர்,​​ சின்ன அண்​ணா​ம​லை​யின் சட்​டை​யைப் பிடித்து இழுத்து,​​ ""அவர் யார்?​ நீ எப்​படி அவ​ரைப் பற்​றிப் பேச​லாம்?​'' என்று தடுத்​தார்.​

ஆ​னால்,​​ காம​ரா​ஜர் தமிழ்​நாட்​டின் மேடை​க​ளில் விம​ர்​சிக்​கப்​பட்​டார்.​ காம​ரா​ஜர் என்ன மெத்​தப் படித்​த​வரா என்​பார்​கள்.​ காம​ரா​ஜர் ஒரு முறை,​​ ""ஏப்பா நான் எங்​கே​யா​வது படிச்​சி​ருக்​கி​றேன்னு சொன்​னனா?​'' என்று கேட்​டார்.

அண்ணா உடல் நல​மற்​றி​ருந்​த​போது மருத்​து​வ​ம​னைக்கு ஓடோ​டிப்​போய் அவ​ருக்கு நோய் என்ன என்று உட​ன​டி​யா​கக் கண்​டு​பி​டிக்க வைத்​த​வர் காம​ரா​ஜர்.​

ரா​ஜாஜி,​​ மருத்​து​வ​ம​னை​யில் இருந்​த​போ​தும் காம​ரா​ஜர்​தான் ஓடிப்​போய் பார்த்​தார்.​ ​

ரா​ஜாஜி மறைந்​த​போது மயா​னம் வரை தனது சக்​கர நாற்​கா​லி​யில் வந்து அவ​ருக்கு இறுதி மரி​யா​தை​யைக் கண்​ணீ​ரோடு செலுத்​தி​ய​வர் பெரி​யார்.​

எங்கே இந்​தப் பண்​பா​டு​கள் இன்று?​

சட்​டப்​பே​ர​வை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் ஒரு பெண் வந்து உரை நிகழ்த்​து​கி​றார்.​ அமைச்​சர்​கள் பண்​பாடு காக்​க​லாமே?​ சட்​ட​பே​ர​வைத் தலை​வர் அவ​ரது வணக்​கத்தை ஏற்​றுக் கொள்​ள​வில்லை என்று குற்​றம்​சாட்​டு​வது போலப் பேர​வைத் தலை​வர் நடந்​து​கொள்​ள​லாமா?​

அ​வர் தவ​றா​கப் பேசு​கி​றார் என்​றால்,​​ அதை மறுப்​ப​தில் தனி நபர் தாக்​கு​தல்​கள் இல்​லா​மல் இருக்​க​லாமே?​ ​

சோ​னியா காந்தி நாடா​ளு​மன்​றத்​தில் உரை நிகழ்த்​து​வார்.​ எதிர்ப்​புக் குரல்​கள் எழும்.​ இழி​வான பேச்​சு​கள் எழாது.​

லா​லு​வின் பேச்​சில் கடு​மை​யான கிண்​டல்​கள் இருக்​கும்.​ பார​திய ஜன​தா​வி​னரே சிரித்து ரசிப்​பார்​களே தவிர கடு​மை​யான அசிங்​க​மான தாக்​கு​தல்​கள் இருக்​காது.​

வ​டக்கு,​​ பண்​பாட்​டில் வாழ்​கி​றது.​ உல​குக்கே பண்​பாட்​டைக் கற்​றுத் தந்த தமி​ழர்​கள் பண்​பாட்​டில் தேய்ந்து போனது ஏன்?​

அ​ரசு குறித்​துப் பேசி​னாலே தனி நபர் விம​ர்ச​னம் சரியா?​ காம​ரா​ஜர் ஒரு முறை நெல்​லை​யில் காங்​கி​ரஸ் தொண்​டர்​கள் மத்​தி​யிலே பேசு​கி​ற​போது சொன்​னார்,​​ அன்று ​ முதல்​வ​ராக இருந்த கரு​ணா​நிதி,​​ ""காம​ரா​ஜர் ஏன் என்​னைக் கேள்வி ​ கேட்​டுக் கொண்​டே​யி​ருக்​கி​றார்'' என்று கேட்​ட​தற்​குக் காம​ரா​ஜர் சிரித்​துக் கொண்டே சொன்​னார்.​ "" என்ன செய்ய,​​ எனக்கு நீங்​கள்​தானே முதல்​வர்.​ நானும் உங்க குடை நிழ​லில் தானே இருக்​கி​றேன்​னார்''.​

த​மி​ழன் என்று பெருமை பேசு​வ​தைத் தவிர,​​ தமிழ்ப்​பண்​பாடு காக்​கப்​ப​டு​கி​றதா?​ யாருமே தங்​கள் அரசை விம​ர்​சிக்​கக்​கூ​டாது என்​ப​தும்,​​ யாருமே தனது அர​சி​யலை விம​ர்​சிக்​கக்​கூ​டாது என்​கிற எதிர்க்​கட்​சித் தலை​வ​ரும்,​​ யார் என்ன வேண்​டு​மா​னா​லும் செய்து கொள்​ளுங்​கள் எங்​க​ளைக் கூட்​ட​ணியி​லி​ருந்து கழற்​றி​வி​டா​தீர்​கள் என்று கத​றும் தேசிய இயக்​க​மும் உள்ள மாநிலத்தில்,

""தமி​ழ​னென்று சொல்​லடா

தலை நிமிர்ந்து நில்​லடா'' என்ற

வரி​கள் ஊராட்சி மன்​றப் பல​கை​கள் தோறும் மின்​னு​கின்​றன.​ அர​சி​யல் பண்​பாட்​டில்​இன்றோ வடக்கு வாழ்​கி​றது;​ தெற்கு தேய்​கி​றது.​