Friday, December 11, 2009

Goundamani Senthil Comedy Videos

Tuesday, December 8, 2009

இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துவதால் மலையூர் மக்கள் விளைபொருட்களுக்கு மவுசு

மதுரை மதுரை அருகே எல்.மலையூர் மக்கள் விவசாயத்தில் இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால், இங்கு விளையும் விளை பொருட்களுக்கு சந்தையில் அதிக மவுசு உள்ளது. மதுரை அருகே எல்.லிங்கவாடி ஊராட்சிக்கு உட்பட்டது எல்.மலையூர் கிராமம். இங்கு 450 குடும்பத்தினர் வசிக்கின்றனர். நத்தம் தொகுதிக்கு உட்பட்ட மலையூரில் அவரவர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்வதால் கூலிக்கு ஆட்களை நியமிப்பது கிடையாது. இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால் மண்ணின் மனம், குணம் மாறாமல் உள்ளது. மலையூரில் கடலை, சாமை, கேப்பை, கொள்ளு மற்றும் நெல் போன்ற தானியங்களும், சாமந்தி, கோழிக்கொண்டை போன்ற பூ வகைகளும் விவசாய சாகுபடியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கை உரத்தில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்கள் அதிக சுவை யுடன் இருப்பதால் மலையூர் விளை பொருட்களுக்கு நத்தம், பாலமேலு, அலங்காநல்லூர், மதுரை சந்தைகளில் மவுசு அதிகம். இதற்காக விளை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பதில்லை. நியாயமான விலைக்கு விற்கின்றனர்

Latest Yahoo Tamil News

Monday, December 7, 2009

பச்சைப் பாசி'யில் பவர்புல் பேட்டரிகள் : சுவீடன் விஞ்ஞானிகள் சூப்பர் கண்டுபிடிப்பு

மின்சாரத்தை சேமித்து வைத்து, தேவைப்படும் போது அதை பயன்படுத்திக் கொள்ளும் வசதியை பேட்டரிகள் தருகின்றன. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாலிமர், லித்தியம் பேட்டரிகளுக்கு பதிலாக "அல்கே' (பச்சை பாசி) மூலம் பேட்டரிகள் தயாரிக்கும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தண்ணீரில் வளரக்கூடிய, முடி போன்ற இழைகளாலான இந்த பாசிகள், பார்ப்பதற்கு அருவருப்பாகவும், நாற்றம் கொண்டதாகவும் இருக்கும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள பேட்டரிகள் அளவில் பெரியதாகவும், எடை அதிகம் கொண்டதாகவும் உள்ளன. மேலும், இந்த பேட்டரிகளின் பயன்பாடு குறிப்பிட்ட கால அளவிற்குள் தான் உள்ளன. அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதனால், இவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பாதிக்காத, மெல்லிய, எடை குறைவான, உலோகம் இல்லாத, வளையக்கூடிய, விலை குறைந்த, எளிதாக பயன்படுத்தும் வகையிலான பேட்டரிகளை தயாரிக்கும் முயற்சியில், விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இம்முயற்சியில் விஞ்ஞானிகள் தற்போது வெற்றியும் பெற்றுள்ளனர். சாதாரணமான "கிளடோபோரா' என்ற பச்சை பாசியை கொண்டு பேட்டரி தயாரிக்கும் ஆராய்ச்சி பலன் அளித்துள்ளது.காகிதத்தை விட 100 மடங்கு செலுலோஸ் அதிகம் கொண்டதாக இந்த தாவரம் உள்ளது. மின்சாரத்தை சேமிக்கவும், வெளியேற்றவும் தேவையான ஆற்றல், பாசிக்கு உள்ளது.
"சுற்றுச்சூழல் பாதிக்காத, விலை, எடை குறைந்த, பெரிய அளவில் மின் சேமிப்பு முறையை பாசியை கொண்டு தயாரிக்க முடியும்' என, சுவீடனை சேர்ந்த உப்சாலா பல்கலைக்கழக நானோ தொழில்நுட்ப வல்லுனர் மரியா ஸ்ரோமி கூறியுள்ளார். தற்போதுள்ள பாலிமர் பேட்டரிகளை ஒப்பிடும் போது, பாசியை கொண்டு தயாரிக்கும் பேட்டரி 40 முதல் 50 நானோ மீட்டர் அளவு சிறியதாக இருக்கும். காகிதத்திற்குள் வைக்கப்படும் பச்சை பாசியின் தடிப்பு 20 முதல் 30 நானோ மீட்டர் அளவு மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிமர் பேட்டரிகளை விட 50 முதல் 200 சதவீதம் அதிகமாக இந்த புதிய பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும். சாதாரண பேட்டரிகளில் ஒரு மணி நேரத்தில் ரீசார்ஜ் செய்யும் மின்சாரத்தை புதிய பேட்டரிகள் 11 வினாடி முதல் 8 நிமிடங்களுக்குள் ரீசார்ஜ் செய்து விடும். ரீசார்ஜ் பேட்டரிகளை பயன்படுத்துபவர்களுக்கு புதிய பேட்டரிகள் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பாலிமர் பேட்டரிகளில் 60 முறை ரீசார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் செய்யும் போது 50 சதவீதம் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், புதிய பேட்டரிகளில் 100 முறை சார்ஜ் செய்தாலும், 6 சதவீத இழப்பே ஏற்படும்.
:-நன்றி தினமலர்

முல்லை பெரியாறு சர்வே பணிகள் நிறுத்தி வைப்பு

Top world news stories and headlines detail

தொடுபுழா : முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு நடத்தி வந்த சர்வே பணிகளை வனத்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், பெரியாறு ஆற்றின் மீது முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைக்கட்டு பழமை வாய்ந்தது என்றும், அதன் உறுதித் தன்மை குறைந்து விட்டது என்றும், அணைக்கட்டு உடைந்தால் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கானோர் உயிரிழக்க நேரிடும் என்றும் மாநில அரசு கருதியது.இந்நிலையில், தமிழகத்திற்கு மேலும் நீர் கிடைக்க வசதியாக, அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்கவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காமல், அங்கு புதிய அணை கட்ட மாநில அரசு முடிவெடுத்தது. இதற்காக, அப்பகுதியில் பத்து கி.மீ.,சுற்றளவுக்கு நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.அதில், மாநில அரசுக்குச் சொந்தமான பகுதியில் ஏழு கி.மீ., நிலப்பகுதி யில் சர்வே பணிகள் முடிவடைந்து விட்டன. புதிய அணைக்காக அங்கு மத்திய அரசுக்குச் சொந்தமான பெரியார் டைகர் வனப்பகுதியில், 3 கி.மீ., சுற்றளவுக்கு 2.5 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.

அதற்கான சர்வே பணிகளுக்கு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதை அடுத்து, அக்டோபர் மாதம் 19ம் தேதி அங்கு சர்வே பணிகள் துவங்கின. சர்வே பணிகளை மூன்று மாதத்திற்குள் முடித்து விட, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஹேமச்சந்திரன் தெரிவித்தார்.சர்வே பணிகள் அங்குள்ள வனத்துறையினரின் ஆதரவோடு துவங்கியது. இரு மாதங்களை எட்டும் நிலையில், பெரியார் டைகர் வனப்பகுதியில் சர்வே பணிகளை நிறுத்தி வைக்க, அங்குள்ள வனத்துறை துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


இதை அடுத்து, வனத்துறையினர் அங்கு சர்வே நடத்த அனுமதி மறுத்து பணிகளை நிறுத்தி விட்டனர்.தொடர்ந்து, மாநில நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் ராதாமணி இந்நிலையில் அங்கு சர்வே பணிகளை தொடர இயலாது என, மாநில அரசுக்கு தெரிவித்துள்ளார். இதனால், அங்கு பணிகள் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.அரசுத் துறைகளில் இரு துறைகளுக்கு இடையே நடக்கும் பனிப்போர் காரணமாக, சர்வே பணிகள் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட வெட்கக்கேட்டை களையும் வகையில், அதற்கான பரிகாரங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது
.

மறைமுக இம்சைகளால் மாரடைப்பு வரும் அபாயம்!!!

சிங்கப்பூர் : "பணியிடங்களில் வரும் மறைமுக இம்சைகளால் அதிக கோபம் கொள்வோருக்கு மாரடைப்பு வரும் அபாயம் இருப்பதாக' ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் பல்கலையின் சார்பில் "ஸ்ட்ரெஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' என்ற அமைப்பு, இரண்டாயிரத்து 755 பணியாளர்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது.
இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: இவர்களில், பெரும்பாலோனோர் 1992 லிருந்து 2003 வரையிலான காலகட்டத்தில் மாரடைப்பால் பாதிக்கப்படவில்லை. ஆனால், 47 பேர் மாரடைப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடிப்படையான காரணம், பணியிடங்களில் மேலதிகாரிகள் அல்லது உடன் பணியாற்றுவோரால் ஏளனமாகக் கருதப்படுவது அல்லது தரக்குறைவாக நடத்தப்படுவது தான். இதன் காரணமாக இவர்கள் மனதில் அளவுக்கு மிஞ்சிய கோபம் வந்துள்ளது. அதை மாற்றும் வழி தெரியாததால் அது மாரடைப்புக்கு வழிவகுத்துவிட்டது.
பணியிடங்களில் வரும் பிரச்னைகளை நேரடியாக சந்திப்பது மிக நல்லது. அதை விடுத்து அந்தப் பிரச்னைகளை மனதில் வைத்துக் கொண்டே பணியாற்றுவதாலும் மாரடைப்பு வருவதற்கு இரண்டிலிருந்து ஐந்து மடங்கு வாய்ப்பு உள்ளது. பணியிடங்களில் பிரச்னை என்று வரும்போது, யாராயிருந்தாலும் வெளிப்படையாகப் பேசுதல், நேரடியாகப் போராடுதல், குறிப்பிட்ட நபரிடம் சரியான வழியில் அணுகுதல் போன்றவற்றின் மூலம் மாரடைப்பு ஏற்படுவதைக் குறைக்க முடியும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.