Wednesday, March 3, 2010

கண்பார்வையும் இல்லை, கால்களும் ஊனம்: தாயின் ஆசையை நிறைவேற்றி வரும் மகன்

Front page news and headlines today

ராமேஸ்வரம் : கண்பார்வை இல்லாத, கால் களும் ஊனமான தாயின் ஆசையை நிறைவேற்ற, அவரது மகன் டிரைசைக்கிளில் இந்தியாவில் உள்ள புண்ணிய ஸ்தலங் களுக்கு யாத்திரையாக அழைத்துச் சென்றப்படி, நேற்று ராமேஸ் வரம் வந்தார்.


பீகார் மாநிலம் சேக்பூரா மாவட்டம், தோய்கெட் கிரா மத்தைச் சேர்ந்தவர் ராம்பிரவேஷ் (50). இவரது தாய் சுமித்ராதேவி (86) பிறவியிலேயே கண் பார்வையற்று, இரண்டு கால் களும் ஊனமாகி, எங்கும் செல்ல முடியாத நிலையில், ராமேஸ் வரம் யாத்திரை செல்ல வேண்டும், என மகனிடம் தெரிவித்துள்ளார். விவசாயியான ராம்பிரவேஷ் அதிக பணம் செலவழிக்க முடியாததால், தாயின் ஆசையை நிறைவேற்றும் வகையில், பழைய டிரைசைக்கிள் ஒன்றில் கூண்டு அமைத்து, அதில் தாயை அமர வைத்து யாத்திரையாக ராமேஸ்வரம் வந்துள்ளார். கடந்த 2009 நவ.,7ல் சொந்த ஊரிலிருந்து புறப்பட்ட இவர் கள், அயோத்தி, காசி, பிருந்தாவன், மதுரா, ஹரித்துவார், ரிஷிகேஷ், பத்ரிநாத், ஜெகநாத்பூரி, திருப்பதி போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று விட்டு, நேற்று ராமேஸ்வரம் வந்தனர். இங்குள்ள பஜ்ரங்தாஸ் பாபா மடத்தில் தங்கி , அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரி சனம் செய்தனர். பின், கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றனர்.


கோவில்களுக்குள் தூக்கிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்து, தாயின் ஆசையை நிறைவேற்றி வரும் ராம் பிரவேஷ் கூறியதாவது: ராமேஸ்வரம் யாத்திரை செல்ல வேண்டும் என, அம்மா பல ஆண்டுகளாக கூறியதால், அவரது ஆசையை நிறைவேற்ற டிரைசைக்கிளில் அழைத்து வந் தேன். வழியில், பொதுமக்கள் தரும் உணவை சாப்பிட்டு யாத்திரையை தொடர்ந்தோம். பலர் பொருளாதார உதவியும் செய்தனர். கன்னியாகுமரி சென்று, அங்கிருந்து துவாரகா வழியாக பீகார் செல்கிறோம். அதிக தூரம் டிரைசைக்கிளில் பயணம் செய்வது கஷ்டமான காரியமாக இருந்தாலும், தாயின் ஆசையை நிறைவேற்றினோம் என்ற திருப்தி உள்ளது. இவ்வாறு ராம் பிரவேஷ் கூறினார்.

Tuesday, March 2, 2010

LP‹R NÂefZÛU p¦ SÖyz¥ 8.8 ¡ePŸ A[° ”– A‡Ÿop H¼TyP‰ A¥XYÖ?

CRÁ LÖWQUÖL ”–›¥ SÖ¸Á ÚSW• 1.26 ÛUeÚWÖ ÙNLy A[°eh hÛ\VXÖ• GÁ¿ SÖNÖ «tOÖÂL· i½ C£ef\ÖŸL·.

p¦ SÖy| ”L•T• LÖWQUÖL H¼TyP A‡ŸopVÖ¥ ”–›Á Aor 8 ÙNÁz—yPŸ A¥X‰ 3 AjhX†‰eh «Xf C£eLXÖ• GÁ¿•, CRÁ LÖWQUÖL ”–›¥ J£ SÖ¸Á ÚSW• 1.26 ÛUeÚWÖ ÙNLy YÛW hÛ\V YÖš“ E·[‰ GÁ¿• SÖNÖ «tOÖÂL· ÙR¡«†R]Ÿ.

திசை திருப்பும் முயற்சிகள்!

ஒருபுறம் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று தெரிவிப்பதும், இன்னொருபுறம் எந்தவிதக் காரணமுமின்றி எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதும் பாகிஸ்தானுக்கு வழக்கமாகிவிட்டது. நேற்று, காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியிலுள்ள 5 பாதுகாப்புச் சாவடிகளின் மீது ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதோடு, இயந்திரத் துப்பாக்கி மூலம் இந்தியச் சாவடிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் சரமாரியாகச் சுட்டிருக்கிறது.

இப்படி பாகிஸ்தான் அத்துமீறல் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆறு ஆண்டுகளில் குறைந்தது 11 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இருப்பதுடன், கடந்த ஓராண்டில் மட்டும் குறைந்தது 485 தடவைகள் பாகிஸ்தான் ராணுவத்தின் மறைமுக உதவியுடன் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றிருக்கிறார்கள். ஒருபுறம் சமாதானப் பேச்சுவார்த்தை என்று இஸ்லாமாபாதிலுள்ள ஆட்சியாளர்கள் பேசுவதும், எல்லைப் பகுதியில் ராணுவம் அத்துமீறுவதும் மட்டுமல்ல, அதை நாம் வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது என்பதுதான் வேதனை.பத்து நாள்களுக்கு முன்னால், சீனா சென்றிருந்தார் பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் ஷா மகமூத் குரேஷி.

இந்திய வெளிவிவகாரத் துறைச் செயலர் நிருபமா ராவின் கருத்தான எல்லை கடந்த தீவிரவாதம் பற்றி மட்டுமே சர்ச்சை என்பதை நிராகரித்த அவர், காஷ்மீர் உள்ளிட்ட எல்லா பிரச்னைகளையும் பற்றிப் பேசினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அர்த்தம் இருக்கும் என்று கூறியபோதே, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளால் பயன் இருக்காது என்பது தெரிந்துவிட்டது.போதாக்குறைக்கு, அவர் இன்னொரு புதிய சர்ச்சைக்கும் சீன மண்ணிலிருந்து பிள்ளையார் சுழி போட்டார்.

இந்திய-பாகிஸ்தான் உறவைச் சீர்படுத்த சீனாவின் உதவியை நாடுவது என்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகளைத் தீர்க்க சீனா சமரச முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதும்தான் அவரது விபரீத யோசனை.இப்படி ஒரு யோசனையை முன்வைக்கும்போது, அதை இந்தியா நிராகரிக்கும் என்பதும், உடனே, சீனாவுக்குப் பதிலாக அமெரிக்காவின் சமரசத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்கிற மாற்று யோசனையை முன்வைப்பதும்தான் பாகிஸ்தானின் திட்டம்.அமெரிக்கா சமரச முயற்சியில் ஈடுபடட்டும் என்று பாகிஸ்தான் கருத்தை முன்வைத்தால் அதை மன்மோகன் சிங் அரசால் நிராகரிக்க முடியாது என்பது குரேஷிக்குத் தெரியாதா என்ன? நல்லவேளை இந்திய-பாகிஸ்தான் பிரச்னையில் மூன்றாவது நாடு எதுவும் தலையிடுவதோ, சமரசத்தில் ஈடுபடுவதோ எங்களுக்கு ஏற்புடையதல்ல என்று தெளிவுபடுத்தி வெளிவிவகார அமைச்சகம், பாகிஸ்தானின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருப்பதுபோல, சீனாவும் அமெரிக்காவும் இந்திய-பாகிஸ்தான் பிரச்னையில் தங்கள் மூக்கை நுழைக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன என்பது புதிய தகவலல்ல.

அமெரிக்காவையும், வல்லரசு நாடுகளையும் பொறுத்தவரை, அவர்களது குறிக்கோள் காஷ்மீர் மட்டுமே. காஷ்மீரைத் தனி நாடாக்கித் தங்களது கைப்பாவையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் பிரிட்டிஷார் தொடங்கி அமெரிக்கா வரையிலான மேலை நாடுகளின் லட்சியம்.ஆசியாவின் வயிற்றுப் பகுதி என்று கருதப்படும் காஷ்மீரில் ராணுவத் தளத்தை ஒரு நாடு நிறுவி விட்டால், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு ஆசியா, ரஷியா, சீனா, இந்தியா என்று காஷ்மீரைச் சுற்றியுள்ள அத்தனை நாடுகளையும் தனது கண்காணிப்பில் வைத்துக் கொள்ளலாம் என்பதுதான் காஷ்மீர் கனவுக்கு அடிப்படைக் காரணம்.

எப்போதோ முடித்திருக்க வேண்டிய காஷ்மீர் பிரச்னை முடியாமல் தொடர்வதற்குக் காரணமே, வல்லரசு நாடுகள், இந்தியாவிடம் காஷ்மீர் போய் விடாமல் பார்த்துக் கொள்வதால்தான்.கடந்த வாரம் இந்திய-பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலர்களின் பேச்சுவார்த்தை புதுதில்லியில் நடந்தது. பேச்சுவார்த்தையில் எந்தவிதத் தீர்மானமும், முடிவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. சந்திக்காமலோ, விவாதிக்காமலோ இருந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்பதும், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாதில் இந்த மாதம் நடக்க இருக்கிறது என்பதும் வரவேற்கப்பட வேண்டிய முன்னேற்றம்.இதற்கிடையில், ""இந்தியா பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லாவிட்டால், என்ன விலை கொடுத்தாலும் சரி பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடங்க வேண்டும்'' என்று அறைகூவல் விடுத்திருப்பது யார் தெரியுமா? மும்பைத் தாக்குதல் சம்பந்தப்பட்ட ஜமாத்-உத்-தவா தலைவர் ஹஃபீஸ் முகம்மது சைய்யீத்.இன்னொருபக்கம், எந்த நிபந்தனையும் இல்லாமல் இந்தியா பேச்சுவார்த்தைக்கு வருவதாக இருந்தால் மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இந்தியாவே முடிவு செய்து கொள்ளட்டும்'' என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கிறது பாகிஸ்தான் வெளிவிவகாரத் துறை.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை எதுவும் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்கிற நிலைமை. ராணுவம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை; அரசாங்கமும் சரி, ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆட்சியாளர்கள் மட்டுமென்ன? ஒன்று, மதவாதிகளின் கட்டுப்பாட்டிலோ, இல்லையென்றால் அன்னிய சக்திகளின் ஆதரவிலோ பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.எல்லை கடந்த தீவிரவாதம் பற்றியும், அதைக் கட்டுப்படுத்துவது பற்றியும் இந்தியா பேச்சுவார்த்தையில் கேள்வி எழுப்பினால் அதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ சக்தி இல்லாத நிலையில் இருக்கும் பாகிஸ்தான் அரசு என்னதான் செய்யும்? அதற்கு பாகிஸ்தான் கையாளும் யுக்திதான் பிரச்னையைத் திசைதிருப்பும் முயற்சிகள்.

காஷ்மீர் பிரச்னையைக் கிளப்பினால், பயங்கரவாதத்தைத் தடுப்பது பற்றிய பேச்சு திசை திரும்பிவிடும். இல்லையென்றால், பேச்சுவார்த்தை முறிந்து விடும். அப்படியும் விடாப்பிடியாக இந்தியா, சுய கௌரவத்தை இழந்தாலும் பரவாயில்லை என்று பேச்சுவார்த்தைக்குத் தயாரானால், ராணுவம் எல்லையில் அத்துமீறல்களை நடத்திப் பேச்சுவார்த்தையை முடக்க முற்படும்.ஒரு நிலையான, பலமான ஜனநாயக ரீதியிலான நல்லரசு பாகிஸ்தானில் அமையாதவரை, பேச்சுவார்த்தைகளால் பயன் இருக்குமா என்பது சந்தேகம்தான். பக்கத்து வீட்டுக்காரர் மோசமானவராக இருந்தால், வீட்டை மாற்றிக் கொண்டு போய்விடலாம். அண்டை நாடு மோசமாக இருந்தால்...? சகிப்பதைத் தவிர வழி வேறொன்றும் இல்லை!

Monday, March 1, 2010

நிலவில் ஐஸ் கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா


நாசா: நிலவில் தண்ணீர் இருக்கிறது என கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான்- 1 ஆள் இல்லா விண்கலம் கண்டு பிடித்து கொடுத்தது. இது போல் தற்போது இந்த சந்திரயான் மூலம் நிலவில் ஐஸ் கட்டிகள் இருப்பதும் கண்டு பிடித்து கொடுத்துள்ளது. இத்தகவலை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் இந்தியாவின் ஆராய்ச்சிக்கு மேலும் ஒரு சிறப்பை தந்திருக்கிறது.

கடந்த 2008 ம் ஆண்டில் அக்டோபர் மாதம் இந்தியாவில் இஸ்ரோ மூலம் தயாரித்து உருவாக்கப்பட்ட சந்திரயான் - 1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இடையில் அது செயல் இழந்து விட்டதாக கூறப்பட்டாலும். ஏறக்குறைய 90 சத பணிகளை அது முடித்து விட்டது என விஞ்ஞானிகள் கூறினர்.

உலக அளவில் இந்தியாவுக்கு 6 வது இடம் : உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய விண்வெளி ஆகியன மட்டுமே ஆள் இல்லா விணகலத்தை அனுப்பி வந்தது. இந்த வரிசையில் இந்தியா 6 வது நாடு என்ற பெருமையை படைத்தது. நிலவில் உள்ள மூலப்பொருள், தண்ணீர் மற்றும் அங்கு வாழும் தன்மை குறித்து ஆய்வு நடத்த சந்திரயான் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தின் மூலம் மூன் மினரலாஜி மேப்பர் என்ற கருவி மூலம் நிலவின் தெற்கு போலில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது 40 ஆண்டுகால சந்தேகத்திற்கு முடிவாக அமைந்தது. இதனை நாசாவும் ஒத்துக்கொண்டது.

15 கி.மீட்டர் வரையிலான குறுக்கு விட்டம் கொண்ட குழிகள் : தற்போது இந்த சந்திரயானில் நாசா உதவியுடன் பொருத்தப்பட்டிருந்த எஸ்.ஏ.ஆர்., என்ற ரேடார் கருவி மூலம் இங்கு நிலவின் வடக்கு போலில் ஐஸ்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள 40 குழிகளில் ஐஸ் கட்டிகள் உறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக்குழிகள் 2 கி.மீட்டர் முதல் 15 கி.மீட்டர் வரையிலான குறுக்கு விட்டம் கொண்ட குழிகளாக உள்ளது. இதில் இருந்து 600 மில்லியன் மெட்ரிக் டன் தண்ணீர் கிடைக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. சந்திரயான் மூலம் நிலவில் ஐஸ் கட்டிகளும் இருக்கிறது என்பது உலகிற்கு பெரும் வரப்பிரசாதமான தகவல். இந்த விஷயத்திற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. அப்போ நிலவுக்கு போய் வசிக்க துவங்கிடலாமா ?

இடம்பெயரும் துயரம்

இடமாறுதல் ஆணை பெற்று வேறு ஊருக்குச் செல்லும் அரசு ஊழியர்களுக்கும், பெரிய தனியார் நிறுவனங்களில் பல ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் கிடைப்பதால் இடம் பெயர்வோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னைகள் புதிய இடம், புதிய மனிதர்கள், கலாசாரம், மொழி சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால், என்ன தொழில் செய்வோம் என்பதே தெரியாமல், தங்கள் உடலுழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, மூட்டை முடிச்சுகளுடனும் குழந்தைகளுடனும் வெளியேறும் சாதாரண ஏழைகளின் நிலைமை எண்ணிப் பார்க்க முடியாத துயரமாகத்தான் இருக்கிறது.

2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களின்படி, 102 கோடி மக்கள்தொகையில் 30 கோடி பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் 24 கோடி பேர் (84.2 சதவீதம்) மாநிலத்துக்குள்ளாகவே மாவட்டத்தைவிட்டு வெளியேறியும் அல்லது மாவட்டங்களுக்கு உள்ளேயும் இடம் பெயர்ந்துள்ளனர். சுமார் 4.5 கோடி பேர் (13.8 சதவீதம்) வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

1981-ம் ஆண்டு 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்களின் எண்ணிக்கை 12-ஆக இருந்தது. 1991-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்த எண்ணிக்கை 23 நகரங்களாக மாறியது. 2001-ம் ஆண்டு 35 நகரங்களாக உயர்ந்தது. ஆனால் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 10 லட்சத்துக்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இவ்வாறு பிழைப்பைத் தேடி வெளியேறும் சாதாரண ஏழைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாழ்க்கையின் நெருக்கடி, குடும்ப வறுமை, பொய்த்துப்போன விவசாயம், உள்ளூரில் வேலை கிடைக்காத நிலை என்று பல்வேறு காரணங்களும் கடந்த பத்து ஆண்டுகளில் கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. சமூகவியல் ஆய்வாளர்கள் கருத்தின்படி, இந்த எண்ணிக்கை ஏறக்குறைய இரு மடங்காக உயர்ந்திருக்கும். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இதுபற்றிய உண்மைகள் அப்பட்டமாகத் தெரியவரும்.

பெருந்தொழில்களும் நெடுஞ்சாலைகளும் கிராமங்களைக் கிழித்துப்போடும்போது, இவர்கள் வாழ்க்கையையும் சேர்த்தே கிழித்துவிடுகிறது. விவசாய நிலங்களுக்காக இவர்களுக்குத் தரப்படும் இழப்பீடுகள் ஓராண்டுக்குமேல் கையில் இருப்பதில்லை. உடலுழைப்பைத்தவிர வேறு தொழில் தெரியாத நிலைமையும், குடிப்பழக்கமும், படிப்பறிவின்மையும் இவர்களின் பணத்தைக் கரைத்துவிடுகிறது. விவசாய நிலவுடைமைக்காரரும் வயலில் வேலை செய்யும் விவசாயக்கூலியும் - இரு குடும்பங்களுமே வெளியேறும் கட்டாயத்துக்கு ஆளாகின்றன. பென்னாகரம் தொகுதியில் 25 ஆயிரம் வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது, அரசியல் கட்சிகளால் பிரச்னையாக்கப்பட்டது. மீண்டும் 13 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன. இதன் உண்மைத் தன்மையை அறிய விரும்பும் சமூகவியல் மாணவர்களும், தன்னார்வ அமைப்புகளும் இத்தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் யார்யார் என்பதையும், மீண்டும் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் யார்யார் என்பதையும் வீடுதேடிச் சென்று ஆய்வு நடத்தினால் துயரம் தோய்ந்த பல்வேறு உண்மைகள் வெளிப்படும். இவர்களில் 90 சதவீதம்பேர் பிழைப்பைத் தேடி வெளியேறியவர்களாக இருப்பார்கள்.
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாயத்துக்கு வழியில்லாமல், தொழிற்சாலைகளிலும் வேலைவாய்ப்பு அருகிவரும் நிலையில் கூலித் தொழில் செய்து வாழ்க்கையை நடத்த கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும், சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கும் இடம்பெயரும். தமிழர்கள் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கிறது. ஆனால் இவர்கள் படும் இன்னல்கள்- உள்ளூரிலும் வெளியூரிலும்- ஏராளம்.

உள்ளூரில் இவர்களது குடும்ப அட்டை ரத்து செய்யப்படுவதும், நம்பிக்கையுடன் உறவினர்களுடன் விட்டுச்செல்லப்பட்ட சிறு குழந்தைகள் வீணாகிப் போவதும், இவர்களது சிறு உடைமைகளும் காணாமல்போவதுமான சிக்கல்கள் ஒருபுறம். பிழைப்பைத் தேடிச் சென்ற இடத்தில் தங்க இடம் இல்லாமல் சாலையோரத்தில் ஆதரவற்று வாழ்க்கை நடத்துவதும், பெண் குழந்தைகளும் இளம் பெண்களும் கடத்தப்படுவதும் அல்லது வறுமையால் அவர்கள் வாழ்க்கை சீரழிவதும் ஒருபுறம். இவர்கள் சென்ற இடத்தில், நிரந்தர முகவரி இல்லாமல் வாழ்வதாலேயே இவர்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுவதே இல்லை- கொலை போன்ற தவிர்க்க முடியாத நிகழ்வுகளைத் தவிர, சாதாரண விபத்தில் கை, கால்களை இழந்தாலும், கட்டட வேலையின்போது விபத்தில் இறந்தாலும், குறைந்த அளவு இழப்பீடு கொடுத்து, எந்தக் குற்றப் பதிவும் வழக்கும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இத்தனை இன்னல்கள் இருந்தாலும் இவர்கள் இடம்பெயரக் காரணம் வறுமை, வேலையின்மை.

கிராம மக்கள் சாரிசாரியாக நகரங்களை நோக்கிச் செல்வது மிகப்பெரிய அபாயத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தப் போகிறது. இதனை அறியாத அரசும், அரசியல்வாதிகளும், நாமும் முழுமையாக அறிந்துகொள்ளாமல் இருப்பது அதைக் காட்டிலும் பெருந்துயரம்.

இந்த மக்களை மீண்டும் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கே திரும்பி வந்து வாழ்வதற்கான விவசாயத் தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பது மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வாக அமையும். நிதிநிலை அறிக்கையில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ. 42,000 கோடி ஒதுக்கினாலும், இவற்றில் மிகச் சிறிய தொகை மட்டுமே விவசாயிகளை அடைகிறது என்பதால், இதை நம்பி யாரும் கிராமங்களுக்குத் திரும்பப் போவதில்லை. இவர்களுக்காகத் தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டும். இவர்கள் இடம்பெயர்வதைப் பதிவு செய்யவும், இவர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணவும், இவர்களை மீண்டும் அவர்களது மண்ணிலேயே வேரூன்றவும் செய்வதற்கான சிறப்புத் திட்டங்களும் நிதி ஒதுக்கீடும் அவசியம். இதற்கென தனி அமைச்சரை நியமித்தாலும் நல்லதுதான்.

Sunday, February 28, 2010

பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம்

சான்டியாகோ : பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரையை விட, இசை மூலம் அளிக்கும் மருத்துவம் அதிக முன்னேற்றத்தை அளிக்கும் என்று ஒரு நரம்பியல் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த காட்ப்ரைட் சாலக் என்ற நரம்பியல் பேராசிரியர், தன்னிடம் வந்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு தான் அளித்த இசை மருத்துவம் குறித்து ஒரு வீடியோ எடுத்துள்ளார். அதில், அந்த நோயாளியிடம், பிறந்தநாள் வாழ்த்துப் பாடும் பாடலான "ஹேப்பி பர்த்டே டூ யூ' என்ற பாடலை வாசிக்கச் சொன்னார். அந்த நோயாளியின் இடது மூளை பாதிக்கப்பட்டு அதனால் வலது பக்கம் செயலிழந்து போனது. நோயாளியால் அந்த வார்த்தைகளை அட்சர சுத்தமாகச் சொல்ல இயலவில்லை. உடனே பேராசிரியர் அந்தப் பாடலைப் பாடும்படி கேட்கிறார். நோயாளி அந்தப் பாடலைப் பாட முயற்சி செய்து கிட்டத்தட்ட தெளிவாகவே அதைப் பாடி விடுகிறார். இது எப்படி சாத்தியம்?

அமெரிக்க அறிவியல் முன்னேற்றக் கழகத்தில் உரை நிகழ்த்திய பேராசிரியர் கூறுகையில்,"பொதுவாக இடதுபக்க மூளை தான் பேச்சுத்திறனை நிர்வகிப்பது. நான் அளிக்கும் இந்த இசை மருத்துவத்தால் அந்த இடதுபக்க மூளையில் சில மாற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு பின்பு நோய் குணமாக வாய்ப்பு இருக்கிறது' என்று தெரிவித்தார். இந்த சிகிச்சைக்காக அவர் தனியாக ஒரு கிளினிக் நடத்தி வருகிறார். "இதற்காக ஒரு நல்ல பாடகர்தான் வேண்டும் என்பதில்லை. ஆனாலும் இந்த சிகிச்சைக்கு நீண்ட காலம் தேவை. அதே நேரம் செலவும் கொஞ்சம் அதிகம்தான்' என்கிறார் பேராசிரியர்.

ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள்

லண்டன் : "ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகளாக உள்ளனர்' என்று லண்டனில் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்ட பந்தயத்தில் தெரியவந்துள்ளது. பிரிட்டன், லண்டனை சேர்ந்த ஒரு அறிவுப்பூர்வ பந்தய அமைப்பு, ஆண், பெண் இரு பாலரில் யார் புத்திசாலிகள், அறிவுக்கூர்மையானவர்கள் என்பதை அறிய வித்தியாசமான பந்தயம் ஒன்றை ஆன்-லைனில் நடத்தியது. பந்தய முடிவில் ஆண்களுக்கு கசப்பான செய்தியே கிடைத்தது. ஆண்களைவிட பெண்கள் தான் புத்திசாலிகள் என்று முடிவு வெளியாயின.

லண்டனை சேர்ந்த இந்த அமைப்பு ஆன்-லைனில் இந்த பந்தயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், டச்சு, பின்லாந்து, நார்வே, சுவீடன், டானிஸ் ஆகிய ஒன்பது மொழிகளில் இந்த போட்டித் தேர்வை நடத்தியது. இயற்கை, அறிவியல், வரலாறு, புவியியல், கலை, இலக்கியம், விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சம், மக்கள், முக்கிய இடங்கள் இவை சம்பந்தமாக விஞ்ஞானபூர்வமற்ற முறையில் பொழுதுபோக்கான கேள்விகளை தயாரித்தது. மொத்தம் ஒன்றரை லட்சம் கேள்விகளை தயார் செய்திருந்தது. ஆன்-லைன் மூலம் பதிலளிக்க ஒவ்வொரு கேள்விக்கும் தலா 20 வினாடிகள் ஒதுக்கியது.

பதிலளித்த ஆண்கள், பெண் இரு பாலரும் மாறி மாறி கூடுதலாகவும் குறைச்சலாகவும் பதிலளித்தனர். முடிவில் ஆண்களைவிட பெண்கள் தான் அதிக கேள்விகளுக்கு பதிலளித்திருந்தனர். பெண்கள் 40,88,139 கேள்விகளுக்கும், ஆண்கள் 40,77,596 கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்திருந்தனர். பெண்கள் பொழுதுபோக்கு பிரிவில் 57 சதவீத கேள்விகளும், இயற்கை மற்றும் அறிவியல் பிரிவில் 55 சதவீத கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்திருந்தனர். மக்கள், முக்கிய இடங்கள் பிரிவில் 42 சதவீத கேள்விகளே சரியான பதிலை அளித்திருந்தனர். ஆண்கள் இயற்கை, பொழுது போக்கு, அறிவியல், விளையாட்டு போன்ற துறையில் சிறப்பாக பதிலளித்திருந்தனர்