Friday, February 12, 2010

வாழ்வதற்க்கு சிறந்த நகரமாக வேன்கூவர் தேர்வு

சிட்னி : வாழ்வதற்கு சிறந்த நகரமாக கனடா நாட்டின் வான்கூவர் நகரம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 10 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் முதலிடத்தை வேன்கூவர் பெற்றுள்ளது. மருத்துவ வசதி , கலாச்சாரம் , சுற்றுச்சூழல், கல்வி , கட்டுமான என பல்வேறு வசதிகளை அடிப்படையாக கொண்டு வேன்கூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பிரமிப்பூட்டும் இந்திய கலாசாரம்!

கோவை,​ பிப்.11: இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் கலாசாரம் பிரமிப்பை ஏற்படுத்துவதாக ரோட்டரி சங்கத்தின் இளைஞர் பறிமாற்ற நிகழ்ச்சி மூலம் கோவைக்கு வந்துள்ள வெளிநாட்டவர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

÷அமெரிக்கா, ​ தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ரோட்டரி சங்கங்கள் செயல்படுகின்றன. அந்தச் சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்திய கலாசாரத்தை அறிந்து கொள்வதற்காக கோவைக்கு வந்துள்ளனர். அவர்கள் கோவை நிருபர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி பங்கேற்றனர்.

÷இந் நிகழ்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச ரோட்டரி ஜிஎஸ்ஈ குழுவை சேர்ந்த சோனியா ஆசாத் பேசியது:

அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் கலாசாரம் முற்றிலும் வேறுபட்டது. இங்கு குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான இணைப்பு அதிகமாகக் காணப்படுகிறது. மேலும்,​ இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சீதோஷ்ண நிலை நிலவுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

வர்த்தக ஆலோசகர் அட்டிப் முகமது:​ அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய இளைஞர்கள் அனைவரும் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றனர். உலக அறிஞர்களுக்கு சவால் விடும் வகையில் அவர்களது செயல்பாடு அமைந்துள்ளது. பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரம் விரைவாக சீரடைந்து வருகிறது என்றார். இந்நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் கலந்து கொண்டனர்.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகாரம்

கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.

இதையடுத்து, 2020 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டின் டுவென்டி 20 ஆட்டங்கள் சேர்க்கப்படுகின்றன.

வான்கோவரில் இன்று நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

இத்தகவலை அதன் செய்தித்தொடர்பு பிரிவுக்கான இயக்குநர் மார்க் ஆதம்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை நிர்வாகி ஹரூண் லோர்கத் வரவேற்றுள்ளார். இந்த முடிவு மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Thursday, February 11, 2010

சர்க்கரை விலை உயர்வு மக்களைப் பெரிதாக பாதித்ததா இல்லையா?

சர்க்கரை சாப்பிடாததால் இறந்தவர் யாருமில்லை-​ விலை உயர்வு பற்றி நாடே கொதித்துக் கொண்டிருக்கையில்,​​ எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்த்ததுபோல இத்தகைய கருத்தை தெரிவித்திருக்கிறது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கை முழக்க இதழ் "ராஷ்டிரவாதி'.

விலை உயர்வுக்கு சரத் பவார் மட்டுமே காரணமல்ல என்பதை விளக்குவதற்காக இப்பத்திரிகையில் வெளியான கட்டுரையில் சர்க்கரை சாப்பிடாததால் இறந்தவர் யாருமில்லை என்று சொல்லியிருப்பதும் "இதுக்குப் போயி அலட்டிக்கலாமா!' என்கிற தொனியில் அந்தக் கட்டுரை அமைந்திருப்பதும்தான் அனைவரையும் கோபப்படச் செய்துள்ளது.

ஒரு குடும்பத்தினர் பெட்ரோல்,​​ உணவுப்பொருள்,​​ ஆடம்பரப்பொருள் ஆகிய பலவற்றுக்காகச் செலவிடும் பணத்தை ஒப்பிடும்போது சர்க்கரை விலை உயர்வினால் அக் குடும்பத்தின் மாதச் செலவில் ரூ.60 முதல் 90 வரை அதிகரிப்பது ஒரு பெரிய சுமை அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளதை,​​ மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது,​​ உண்மை போலவே தோற்றம் தரும்.

இன்னும் ஒரு படி மேலேபோய்,​​ "சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நோய்கள் ஏற்படுகின்றன' என்று சொல்லும்போதும்,​​ "உப்பும் சர்க்கரையும் வெள்ளை விஷம்' என்று மருத்துவ உண்மைகள் பேசும்போதும்,​​ சர்க்கரை விலை உயர்ந்தால் நாட்டின் சுகாதாரம் பெருகும் என்றும் மக்களை நினைக்க வைத்துவிடவும் செய்வார்கள்.​ ஆனால் இவையெல்லாம் சரியான வாதமா என்று பார்த்தால்,​​ இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

சாதாரண தரம் கொண்ட சர்க்கரையின் விலை கடந்த ஓராண்டில் ஒரு கிலோ ரூ.22லிருந்து ரூ.42 வரை உயர்ந்துள்ளது என்றால்,​​ இதன் அடுத்தடுத்த தாக்கம் இனிப்பு பொருள்களில் மட்டுமன்றி,​​ சாதாரண தேநீர் கடையில் காபி,​​ டீ விலை உயர்வுக்கும் காரணமாக இருக்கிறது என்பதும்,​​ இது ஒவ்வொரு மனிதனுக்கும் நாள்தோறும் கூடுதல் செலவினத்தை ஏற்படுத்துகிறது என்பதும் அமைச்சருக்கோ,​​ அல்லது அவருடைய கொள்கை முழக்கப் பத்திரிகைக்கோ தெரியாதது அல்ல.​ ஆனாலும்,​​ அவர் எதையாவது சொல்லி தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.​ ​

மகாராஷ்டிர மாநிலத்தில் பொது விநியோகத்துக்காக கையிருப்பில் வைக்கப்பட்டிருந்த 72,684 டன் சர்க்கரையை ரூ.123 கோடி லாபத்துக்கு தனியார் சர்க்கரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்தது ஏன்?​ என்று ஒரு சங்கடமான கேள்வியை ஆங்கில நாளிதழ்,​​ முதலமைச்சர்கள் கூட்டத்துக்கு முந்தைய நாள் வெளியிட்டதால்,​​ இதையெல்லாம் சமாளிக்கும் விதத்தில் இந்தக் கட்டுரையை "ராஷ்டிரவாதி' வெளியிட்டுள்ளது.

உலகிலேயே பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிக அளவு கரும்பு சாகுபடி நடைபெறுகிறது.​ 570 சர்க்கரை ஆலைகளில் 35 கோடி டன் கரும்பு பிழியப்படுகிறது.​ ஆனால் இந்தியாவில் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.13.50க்கும்,​​ வெளிச்சந்தையில் சர்க்கரையின் தரத்துக்கேற்ப ரூ.35 முதல் ரூ.60 வரைக்கும் கிடைக்கிறது.​ ​ சர்க்கரை விலை உயர்வு மக்களை பாதிக்காதது உண்மையாக இருக்குமென்றால்,​​ ஏன் இந்த இரு விதமான விலை நிர்ணயம்?

மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியின்போது,​​ ரேஷன் கடைக்கும் வெளிச்சந்தைக்கும் வேற்றுமை இல்லாத அளவுக்கு சர்க்கரை விலை ஒரே விதமாக அமைந்திருந்தது.​ ஆனால்,​​ அதன் பிறகு அத்தகைய சமநிலை ஏற்படவே இல்லை.​ பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும் அது சாத்தியமாகவே இல்லை.

சர்க்கரை விலை உயர்வு மக்களைப் பெரிதாக பாதித்ததா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்,​​ இந்த விலை உயர்வால் சர்க்கரை ஆலைகளுக்கு கொள்ளை லாபம் கிடைத்ததா இல்லையா?​ சர்க்கரை விலை உயர்வு மிகக் குறைவு என்ற வாதம் உண்மையாக இருக்குமானால்,​​ இந்த கொள்ளை லாப சர்க்கரை ஆலைகள் சர்க்கரையை விலை உயர்த்தாமல் மக்களுக்கு வழங்கி சேவை செய்திருக்கலாமே!​ சர்க்கரை ஆலைகளின் நண்பர் என்று கருதப்படும் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார்,​​ தானே இவர்களிடம் பேசி,​​ மக்கள் நலனுக்காக இந்தச் சின்ன விலை உயர்வை தடுத்திருக்கலாமே!​ ஏன் செய்யவில்லை?

சர்க்கரை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை சில மாதங்களுக்கு முன்பு சரத் பவார் அறிவித்திருந்தார்.​ இதன்படி டிசம்பர் 2010 வரை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் சுங்கவரி இல்லாமல் சர்க்கரையை இறக்குமதி செய்துகொள்ளலாம்.​ இந்த அளவுக்கு சர்க்கரை ஆலைகள் மேல் அன்பு காட்டும் பவார்,​​ ஏழை விவசாயிகள் மீது அன்பு பாராட்டவில்லை என்பது அனைவரும் அறிந்தது.​ இப்போது சர்க்கரை நுகர்வோர் எவரைப் பற்றியுமே அவர் கவலைப்படவில்லை என்பதுதான் அவர் ஆளுமையின் புதிய வெளிப்பாடு.

இந்தியா முழுவதிலும் 4.5 கோடி விவசாயிகள் கரும்பு பயிரிடுகிறார்கள்.​ அவர்கள் சாகுபடி செய்து கொண்டுவந்து தரும் கரும்புக்கு உரிய,​​ நியாயமான விலையை கொடுத்தாலே அவர்கள் விலைஉயர்வை ஓரளவு சமாளிப்பார்கள்.​ ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,​​ ஆலைகளுக்கு சாதகமாக சட்டத் திருத்த மசோதா கொண்டுவரும் மத்திய வேளாண்மைத் துறை,​​ சர்க்கரை விலை உயர்வால் பாதிப்பில்லை என்பதை மட்டுமே நியாயப்படுத்த முயல்கிறது.

மாநில அரசுகளின் ஆதரவு விலையை ஆலைகள் அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என்ற சட்டப் பிரிவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதால்,​​ அதை மட்டுமே நீக்கினார்கள்.​ ஆனால்,​​ எரிசாராய விற்பனையில் விவசாயிக்கு கணிசமான பங்கு பற்றியும் கண்டுகொள்ளவில்லை.​ ஆலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வேறு சலுகைகளும் அப்படியே அந்த திருத்தப்பட்ட சட்ட மசோதாவில் தொடரவே செய்தன.​ ​

விலைஉயர்வு தாங்கவில்லை என்று துடிக்கிறபோது சர்க்கரை விலையால் யாருக்கும் பாதிப்பில்லை என்று சொல்வது அவர்களது மனநிலையை அம்பலமாக்குகிறது.​ ​ "....பசி தீரும்' என்றால் "உயிர் போகும்' எனச் சொல்லும் செல்வர்கள் நீதி நன்றோ' என்று பாடிய பாவேந்தர் பாரதிதாசனை நினைவுகூர வைத்துவிட்டார்கள்.

Tuesday, February 9, 2010

வளரும் நாடுகளின் எதிர்கால வேளாண்மை

உலகில் உண்மையான வேளாண்மை இந்தியா,​​ ஆப்பிரிக்கா,​​ இதர ஆசிய நாடுகளில் மட்டுமே நிகழ்கிறது.​ வடக்கு நாடுகளில் உண்மையான வேளாண்மை அழிந்துவிட்டது.​ அங்கு நிகழ்வது தொழில்மய வேளாண்மை.

​ இருபது ஆண்டுகளுக்கு முன்பு மரவளர்ப்புடன் எரிசக்தியை மிச்சப்படுத்தும் விவசாயத்தை இணைத்துப் "பர்மாகல்ச்சர்' ​(ல்ங்ழ்ம்ஹஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்)​​ என்ற ஒரு வேளாண் பண்பாட்டை உருவாக்கிய பில்மோலிசன் செய்த முன்னெச்சரிக்கை இன்று உண்மையாகிவிட்டது.​ அவர் செய்த முன்னெச்சரிக்கை இதுதான்.

""இன்னும் இருபது ஆண்டுகளில் அமெரிக்காவின் உதவித் திட்டங்களின் ஏமாற்று வேலைகள் வெட்ட வெளிச்சமாகும்.​ இயற்கை விவசாயத்தின் மீது உண்மையான கவனம் திரும்பும்.​ தொழில்மய விவசாயம் மெல்ல மெல்ல அழிந்துவிடும்.​ பெருகிவரும் சாகுபடிச் செலவைச் சமாளிக்க முடியாது.

​ தொழில்மய விவசாயத்தில் இடுபொருள் செலவு பெட்ரோல்,​​ டீசல் போன்ற மீண்டும் புதுப்பிக்க முடியாத புதைவு எரிசக்தித் தேவையின் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது.​ அதாவது என்.பி.கே.​ என்று சொல்லப்படும் ரசாயன உரங்கள்,​​ ​ அழிந்துவரும் புதைவு எரிசக்திகளை வைத்து உற்பத்தியாவதால் பெட்ரோல் விலை உயர்ந்தால் உரவிலையும் உயர்ந்து பட்ஜெட்டின் பெரும்பகுதிச் செலவை உரமானியத்துக்கு மட்டுமே வழங்க வேண்டிவரும்.

​ இப்படிப்பட்ட உரம்,​​ விதைகள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் பிடிப்பில் உள்ளன.​ எவ்வளவு விரைவில் வளரும் நாடுகளின் விவசாயம் பன்னாட்டு முதலாளிகளிலிருந்து மீட்கப்படுகிறதோ அவ்வளவு விரைவாக வளரும் நாடுகள் நலம் பெறும்.​ வாழ்வியலை மையமிட்ட வேளாண்மையே என்றும் நிலைத்திருக்கும்.​ ஏனெனில் அது தற்சார்புள்ளது.​ அதில் பெட்ரோலிய எரிசக்தி வீணாவது இல்லை.......''

​ ​ அவரின் இந்த முன்னெச்சரிக்கை வாசகங்கள் இன்று உண்மையாகிவிட்டது.

​ ​ காலநிலைத் தடுமாற்றத்தால் விவசாயம் தடுமாறுகிறது என்று கூறினாலும் சரி;​ தொழில்மய விவசாயத்தினால் காலநிலைத் தடுமாற்றம் ஏற்படுகிறது என்று கூறினாலும் சரி;​ காலநிலைத் தடுமாற்றம் அல்லது தட்பவெப்பத் தடுமாற்றம் பசுமையகக் கெட்ட வாயுக்களால் உருவாகிறது என்பதை அனைவரும் அறிவோம்.

​ தொழில் நகரங்கள்,​​ கார்,​​ லாரி போன்ற போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றால் 70 சதம் கெட்ட வாயுக்கள் உருவாகின்றன.​ தொழில்மய விவசாயத்தின் பங்கு 30 சதம் என்பது ஒரு குறைவான மதிப்பீடுதான்.​ ஏனெனில் ரசாயன உர உற்பத்தி,​​ ரசாயன உரங்களின் போக்குவரத்து எல்லாம் தொழில்துறையின் கெட்ட வாயு வெளியீட்டுக்கான காரணமாகக் கணக்கிடப்பட்டுள்ளன.

​ யூரியா,​​ என்.பி.கே.​ காம்ப்ளக்ஸ் போன்றவை மண்ணில் இடப்பட்டு வெளியேறும் நைட்ரஸ் ஆக்சைடு என்ற கெட்ட வாயு,​​ நவீன கால்நடை -​ பால் பண்ணைகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் என்ற கெட்ட வாயு ஆகிய இரண்டும் ஓசோன் படலத்தைத் துளைப்பதில் கார்பன் டை ஆக்சைடைவிட வலிமை வாய்ந்ததாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

​ இவ்வாறு தட்பவெப்பத் தடுமாற்றத்தை உருவாக்கும் தொழில்மய விவசாயத்தால் உலகளாவிய நிலையில் கோடிக்கணக்கான விவசாயிகளும்,​​ தட்பவெப்பத் தடுமாற்றத்திற்குட்பட்ட நிலங்களில் வசிக்கும் 37 கோடி கிராமிய ஏழைகளும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா.​ அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன.

தட்பவெப்பத் தடுமாற்றம் ஏற்படுத்தும் கனமழை,​​ கூடுதல் வெப்பம்,​​ கூடுதலான குளிர்,​​ கூடுதல் வறட்சி,​​ புயல்,​​ வெள்ளம் எல்லாம் நமது விவசாய பட்டப் பழமொழிகளை மாற்றிவிடும்.​ ஆடிப்பட்டம் தேடி விதைத்தால் ஆவணி,​​ புரட்டாசி மாதங்களில் பருவம் பொய்த்து சித்திரை வெய்யில் தாக்கும்.​ சித்திரை மாதம் மழை பெய்யலாம்.​ ​ குளிர் அடிக்கலாம்.​ ஆடிப்பட்டம் பொய்த்தால் தைப்பட்டம்.​ உத்தராயணத்தில் வெய்யில் இல்லாமல் மழை பெய்து தைப்பட்டம் தம்பட்டமாகும்.​ உலகில் 80 சத விவசாயம் மானாவாரிதான்.​ இப்படிப்பட்ட சூழ்நிலையில் மானாவாரி விவசாயமே மூச்சடைத்துப் போகும் ஆபத்து உள்ளது.

​ ​ வளரும் நாடுகளில் ஆண்டுக்கு ஆண்டு ரசாயன உரங்களின் தேவை உயர்ந்து வருகிறது.​ ரசாயன உரங்கள் பெட்ரோல்,​​ டீசல் போன்ற மீண்டும் புதுப்பிக்க முடியாத புதைவு எரிசக்தியைப் பயன்படுத்தி உற்பத்தியாவதால் எரிசக்தி நெருக்கடியைத் தோற்றுவிக்கும்.​ அத்தோடு ரசாயன உரப்பயன்பாடு இயற்கை வழி விவசாயத்தைவிட மூன்று மடங்கு கெட்ட வாயுக்களை உருவாக்கித் தட்பவெப்பத் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

​ 2030-ஐ நாம் நெருங்கும்போது ரசாயன உர உற்பத்தியை 37 சதம் உயர்த்தும் திட்டம் உள்ளதால் கெட்ட வாயுக்களின் உற்பத்தியும் உயர்ந்து,​​ எரிசக்திச் செலவும் உயர்ந்து நமது கண்களை நாமே குத்திக் கொண்டு குருடர்களாக வாழப் போகிறோம்.​ கெட்ட வாயுக்களின் உற்பத்தியாளரான உர நிறுவனங்களும்,​​ விதை நிறுவன பகாசூரர்களும் மூன்றாம் உலக நாடுகளின் விவசாயக் கொள்கையை வகுத்து வருகிறார்கள்.​ அவர்கள் அறிந்ததெல்லாம் உயிர்ச்சூழலுக்கு உலைவைக்கும் ஒரே ரகப் பயிர்ப்பண்பாடு -​ அதாவது மோனோகல்ச்சர்.

​ உலகிற்குப் பாதுகாப்பான விவசாயம் பர்மாகல்ச்சரிலும்,​​ பல்லுயிர்கல்ச்சர் என்று சொல்லப்படும் பயோடைவர்ஸ் விவசாயத்திலும் உள்ளதை அவர்கள் அறிவார்கள் என்றாலும் விதை நிறுவன -​ உர நிறுவன பகாசூரர்களுக்கு அவற்றால் சுயலாபம் சிறிதும் இல்லை.

உலகத்தில் இயற்கை விவசாயத்தைப் பரப்புவதில் எல்லா நாடுகளிலும் கிளை அமைப்புகளைக் கொண்டது ரோடேல் நிறுவனம்.​ இந்நிறுவனம் தத்துவரீதியாக ஒரு மாற்றுத்திட்டத்தை முன்மொழிந்து எவ்வாறு எதிர்கால இடர்களை -​ தட்பவெப்பத் தடுமாற்றத்துக்குரிய சவாலைச் சந்திப்பது என்பதற்கான சில டிப்ஸ் வழங்கியுள்ளது.

இந்த அரிய யோசனைகளை கடைப்பிடித்தால் நாமும் நமது சந்ததிகளும் பிழைக்கவும் நாடு செழிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

கரியமில வாயுவைப் பிடித்து வைத்துப் பிராணவாயுவாக மாற்றும் உயிர் மண்ணை -​ அதாவது பல்லுயிரிகளைக் கொண்ட மண்ணை உருவாக்க வேண்டும்.​ ​

மண்ணானது நைட்ரஜனைப் பிடித்து வைத்துக் கொண்டு அதேசமயம் நைட்ரிக் ஆக்சைடாக வெளியேற்றாமல் இருக்க பயறுவகைப் பயிர்களான உளுந்து,​​ தட்டைப் பயறு,​​ பாசிப்பயறு,​​ துவரை,​​ அகத்தி,​​ வேர்க்கடலை,​​ வெந்தயம்,​​ தக்காளி,​​ அவரை,​​ மொச்சை போன்றவற்றை பயிரிட வேண்டும்.​ இவற்றை ஆங்கிலத்தில் லெகுமினஸ் பயிர்கள் என்பார்கள்.

​ இவ்வகைப் பயிர்களைக் கலப்பாகவோ,​​ பயிர்ச்சுழற்சி முறையிலோ பயிரிடும் பாரம்பர்ய மரபை மீட்டுயிர்த்தால் யூரியா செலவைக் குறைக்கலாம்.

​ யூரியாவைப் பயன்படுத்தும்போது பயிர் ஏற்காதவை,​​ நைட்ரேட்டாக மாறிக் குடிநீரை விஷமாக்கும் அல்லது நைட்ரிக் ஆவியாகமாறி பிராணனை வாங்கும்.​ அதாவது ஓசோனைக் கிழிக்கும்.

​ ​ மூன்றாவதாக பெரன்னியல் பயிர்களைச் சாகுபடி செய்வது.​ பெரன்னியல் என்றால் அதிக வயதுள்ள பயிர்கள்.​ இதனால் கார்பன் மண்ணுக்குள் இருந்து வெளியேறாமல் இருக்கும்.நான்காவதாக,​​ பசுமை அல்லது உயிர் மூடாக்கு.​ அதாவது ஒரு அறுவடைக்குப் பின் முன்கூட்டியே விதைத்துப் பசுமையாக்கி அடுத்த விதைப்பு வரை நிலத்தைத் தரிசாகப் போடாமல் இருத்தல்.​ பொதுவாக நிலத்தைப் பசுமை மாறாமல் வைத்திருக்க வேண்டும்.​ இதனால் மண்ணில் உள்ள நைட்ரஜனானது,​​ நைட்ரஜன் ஆக்சைடு என்ற கெட்ட வாயுவாக வெளியேறாது.

​ ​ வளரும் நாடுகளின் எதிர்கால வேளாண்மையைப் பற்றி ஆராய்ந்துவரும் வேளாண் விஞ்ஞானி லைம் லை சிங் இன்றைய வேளாண்மை வெளிப்படுத்தும் பசுமையகக் கெட்ட வாயுக்களை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் திறன் இயற்கை வேளாண்மைக்கு மட்டுமே உண்டு என்கிறார்.​ அவர் விடுத்துள்ள ஒரு செய்திமடலில்,​​ இன்றைய விவசாயம்,​​ ஓசோனைத் தின்னும் ஒட்டுமொத்த கெட்ட வாயுக்களில் பத்துமுதல் பன்னிரண்டு சதத்தை மேலே செலுத்துகிறதாம்.​ அவற்றில் இ02​ என்ற கரியமில வாயு​ இஏ4​ என்ற மீத்​தேன் வாயு ச2ர்​ என்ற நைட்​ரிக் வாயு அடங்​கும்.​

​ கால்நடை வளர்ப்போர் சாணியைச் சேர்த்துக் குவித்து,​​ திறந்த வெளியில் கொட்டுவதால் மீத்தேன் வாயுவும்,​​ ரசாயன உரங்களை மண்ணில் கொட்டுவதால் நைட்ரிக் வாயுவும் கெட்ட வாயுக்களாக மாறுகின்றன.​ பசுமைப் பொருள்களான பயோமாசை எரிப்பதாலும் கார்பன்டை ஆக்சைடு கெட்ட வாயுவாகிறது.

தட்பவெப்பத் தடுமாற்ற விளைவைக் கருத்தில் கொள்ளாமல் நாம் செய்யும் விவசாயம் நமக்கே ஆபத்தைத் தேடித்தரும்.​ தட்ப வெப்பத் தடுமாற்றத்துக்கு ஏற்ப விவசாயத்தைத் தடுமாறாமல் இட்டுச் செல்வது இயற்கை விவசாயமே.

​ ஒரு நிலத்தில் ஒரேவகைப் பயிரைச் சாகுபடி செய்யாமல் பலரகப் பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும்.

​ ஒவ்வொரு வகையிலும் பலரகங்கள் உண்டு.​ கத்தரிக்காய் என்று எடுத்துக் கொண்டால் பி.டி.​ கத்தரிக்காயை மட்டுமே சாகுபடி செய்தால் குலநாசம் ஏற்படும்.​ மாறாக 50 சென்டு நிலத்தில் கத்தரிக்காய் பயிர் செய்ய விரும்பினால்,​​ 10 சென்டு பச்சைக் கத்தரிக்காய்,​​ 10 சென்டு வெள்ளைக் கத்தரிக்காய்,​​ 10 சென்டு ஊதா கத்தரி 10 சென்டு எண்ணெய்க் கத்தரிக்காய்,​​ 10 சென்டு முள்ளுக் கத்தரிக்காய் என்று பிரித்து நடுவதே பயோடைவர்ஸ் விவசாயம்.

​ இடையிடையே குச்சிப் பந்தலிட்டு புடல்,​​ பீர்க்கை என்று நிறைய இடைவெளிவிட்டு சாகுபடி செய்யலாம்.​ ஒரு பக்கம் திரும்பினால் சோளம்,​​ ஒரு பக்கம் திரும்பினால் நெல்,​​ ஒருபக்கம் திரும்பினால் வாழை,​​ ஒரு பக்கம் தீவனப்புல்,​​ தட்டைப் பயறு என்று பல வகைகளிலும் பல ரகங்களைக் கலந்து பயிரிட வேண்டும்.​ ​

​ இவ்வாறு செய்யும்போது தட்பவெப்பத் தடுமாற்றத்தைத் தாங்கக்கூடிய வகைகளையும் ரகங்களையும் அறிவது எளிதாகும்.​ ஒரு ரகத்தில் ஏற்படும் நஷ்டத்தை வேறு ரகம் தரும் லாபத்தைக் கொண்டு சமாளிக்கலாம்.

உண்ணும் பயிர்களில் மட்டுமல்ல;​ கால்நடை வளர்ப்பிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.​ தட்பவெப்பத் தடுமாற்றத்தால் நோய்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆடு மாடுகள்,​​ கடல் மட்டம் உயர்வு,​​ தாழ்வு,​​ வெப்பம் போன்ற கடல் சூழலுக்கு ஏற்ப வாழக்கூடிய மீன்வகை இனப்பெருக்கம் என்று மீன்,​​ கால்நடைகளிலும் பல்லுயிர்ப் பெருக்கம் விரும்பப்படுகிறது.

​ தட்பவெப்பத் தடுமாற்றத்தால்,​​ வளரும் நாடுகளில் வாழும் சிறு,​​ குறு விவசாயிகள் மற்றும் மீனவர்கள்,​​ ஆதிவாசிகள் அதிக அளவில் உணவு இல்லாமல் மடிவர் என்று ஐ.நா.​ மதிப்பீடு கூறுகிறது.

​ தட்பவெப்பத் தடுமாற்றத்தால் அதிகம் தடுமாறக்கூடிய நிலப் பகுதிகளில் வாழும் சுமார் 40 கோடி மக்கள் பல்லுயிர்ப் பெருக்கரீதியான விவசாயம்,​​ மீன் வளர்ப்பு,​​ கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் தங்கள் வாழ்வை வளப்படுத்த வாய்ப்புள்ளதாக பல்லுயிர்ப் பெருக்க -​ உயிர்ச்சுழல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Thanks
Dinamani

Sunday, February 7, 2010

மாறுமா மக்களின் மனோபாவம்...!

100 கோடியைத் தாண்டிய மக்கள்தொகை,உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு,​​ கணினி,​​ விண்வெளித் துறையில் வல்லரசுகளோடு போட்டிபோடும் வளர்ச்சி,​​ 50 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் ஏராளமான மனிதவளம்,​​ மதம்,​​ மொழிகளால் பிளவுபட்டிருந்தாலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒன்றுபட்டிருக்கும் தேசம் என ​ இந்தியா பற்றிய கண்ணோட்டம் இப்போது மாறியிருக்கலாம்.

​ ஆனால்,​​ எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிடுவதைப்போல உள்ளது,​​ சுற்றுப்புறச் ​ சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில் மக்களிடம் உள்ள அலட்சியப் போக்கு.

​ ​ நமது கலாசாரம் தொன்மையானது,​​ ஒழுக்கமானது எனப் பெருமைப்பட்டுக் கொண்டாலும்,​​ குறிப்பாக சுகாதார மேம்பாட்டில் வளர்ந்த நாடுகளை விட,​​ வெகுவாகப் பின்தங்கி உள்ளோம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

​ இப்போது,​​ தொலைக்காட்சிகளில் தமிழில் மொழிமாற்றம் செய்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது ஒரு சேனல்.​ அதில்,​​ ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருந்தாலும்,​​ அதன் கருத்தாக்கம்..​ வர்ணனை..​ வருத்தமளிப்பதாக இருந்தது.​ ​

​ ​ அந்நிகழ்ச்சியில்,​​ புகழ்பெற்ற தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ராவைச் சுற்றி கேமராவோடு வலம் வருகிறார் வர்ணனையாளரான வெளிநாட்டு இளைஞர்.​ அந்நகர் பற்றியும்,​​ வீதிகளில் மலஜலம் கழிக்கும் குழந்தைகள்,​​ சாலையோர உணவகங்கள்,​​ அருகில் குவிந்திருக்கும் குப்பைகள்,​​ வீதிகளில் திரியும் கால்நடைகள்,​​ பிச்சைக்காரர்கள்,​​ கழைக் கூத்தாடிகள்,​​ குடிசைப்பகுதிகள் என ஒவ்வோர் இடமாக கேமராவை நுட்பமாகச் சுழற்றி,​​ தமக்கே உரிய பாணியில் கிண்டலடித்துக் கொண்டே செல்கிறார் அந்த இளைஞர்.​ கடைசியில் "ஒரே நாற்றம்.​ குடலைப் புரட்டுது;​ ஏண்டா இங்க வந்தோம்னு ஆச்சு' என அலுத்துக் கொள்வதோடு நிகழ்ச்சி முடிவடைகிறது.

​ ​ அந்நிகழ்ச்சி,எவ்வித பாதிப்பையோ,​​ மாற்றத்தையோ இங்கு ஏற்படுத்திவிடப் ​ போவதில்லை.​ ஆனால்,​​ உலகம் முழுவதும் வெவ்வேறு மொழிகளில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது,​​ அதைப் பார்க்கும் மேலைநாட்டவர்களிடம்,​​ இந்தியா பற்றி எதிர்மறையான கண்ணோட்டம் உருவாவதைத் தவிர்க்க முடியாது.

​ ​ அண்மையில்,​​ நாளிதழ்களில் "நகராட்சிப் பணியாளர்கள் நூதனப் போராட்டம்' என்ற செய்தி வெளியானது.​ அதில்,​​ அரசு மருத்துவமனையின் முன்புறம் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருந்தது.​ இந்நிலையில்,​​ மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவக் கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் கொட்டாமல்,​​ கண்ட இடங்களில் கொட்டி வந்துள்ளனர்.​ எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காததால்,​​ பொறுமையிழந்த துப்புரவு ஊழியர்கள்,​​ திடீரென குப்பைகள் அனைத்தையும் வாரி,​​ மருத்துவமனை நுழைவாயிலில் கொட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​ ​ அது,​​ மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்து பேச்சுவார்த்தை நடத்தி,​​ குப்பைப் பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

​ ​ நகரில் கொட்டப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக,​​ மாநகராட்சி சார்பில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

​ ​ மக்கும் குப்பைகள்,​​ மக்காத குப்பைகள் என பிரித்துப் போடுவதற்காக வீடுகள்தோறும் வெவ்வேறு நிறங்களில் ​(பச்சை,​​ சிவப்பு)​ பிளாஸ்டிக் பக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.​ இப்போது,​​ அத்திட்டம் தோல்வியடைந்து விட்டதாக மாநகராட்சி அதிகாரிகளே ​ ஒப்புக்கொள்கின்றனர்.

​ வாங்கியே பழக்கப்பட்டுவிட்ட மக்களுக்கு,​​ இலவசமாகக் கிடைத்த புத்தம் புதிய ​ பக்கெட்டுகளில் குப்பைகளைக் கொட்ட மனம் வருமா..?​ ​

​ பெரும்பாலானோர்,​​ அவற்றை வேறு பயன்பாட்டுக்கு வைத்துக் கொண்டு,​​ வழக்கம்போல,​​ வீதியில் குப்பைகளைக் கொட்டி, பணிச் சுமையை அதிகப்படுத்துவதாக துப்புரவுப் பணியாளர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

​ ​ லாரிகளில் சரியாக தார்ப்பாயால் மூடாமல்,​​ வீதியெங்கும் குப்பைகளைச் சிதற விட்டுச் செல்வது,​​ பல நாள்களாக அள்ளப்படாமல் தொட்டிகளில் நிரம்பி நாற்றமடிக்கும் குப்பைகள் என துப்புரவுப் பணியாளர்கள் மீதும் பொதுமக்களிடமிருந்து ​ பல்வேறு புகார்கள்.​ ​

​ மாநாடு,​​ விழாக்கள்,​​ பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் குப்பைகள்,​​ உணவுக் கழிவுகளை அமர்ந்த இடங்களிலேயே போட்டுவிட்டுச் செல்லும் பொதுமக்கள்,​​ பஸ் நிலையம்,​​ வழிபாட்டுத் தலங்களின் சுவரில்கூட,​​ கூச்சமின்றி இயற்கை உபாதையைத் தணித்துவிட்டுச் செல்லும் பாதசாரிகள்,​​ வெள்ளம் வரும்போது தவிர,​​ மற்ற காலங்களில் நகரில் மிகப் பெரிய குப்பைக் கிடங்காகவும்,​​ திறந்தவெளிக் கழிப்பிடமாகவும் ஆகிவிட்ட ஆறுகள்,​​ சாயக் கழிவுகளால் விஷமாகிப்போன நதிகள் என,​​ சுகாதாரக்கேடு தீராத நோயாக நீடித்து,​​ மக்களுக்குப் பல்வேறு நோய்களைப் பரப்பி வருகிறது.​ ​ ​

÷அமைச்சர்கள்,​​ உயர் அதிகாரிகள் வருகையின்போது மட்டும் அரசு மருத்துவமனைகள்,​​ சாலைகள் வெள்ளையடிக்கப்பட்டு பளிச்சென இருப்பதும்,​​ மற்ற நேரங்களில் சுகாதாரக் கேட்டின் உறைவிடமாக அவை திகழ்வதும்,​​ "நம்மை யார் கேட்கப் போகிறார்கள்..?' என்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் அசிரத்தையான மனோபாவம்தான்.

​ இந்தியாவில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் சுகாதார மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது.​ ஆனால்,​​ மலைபோலக் குவியும் குப்பைகளால்,​​ மெட்ரோ நகரங்கள்கூட அழுக்கடைந்து காணப்படுவதாக,​​ மத்திய அமைச்சர் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்குத்தான் நிலைமை நீடிக்கிறது.

​ ​ கடுமையான சட்டங்களால்,​​ மக்களின் மனோபாவத்தை ஒரேநாளில் மாற்றிவிட முடியாது.​ "மூவாயிரம் அடி பயணமும்,​​ முதல் அடியில் தொடங்குகிறது' என்பதற்கேற்ப அரசு,​​ தூய்மைப் பணியை புதிய ஓர் இயக்கமாகத் தொடங்கி,​​ பல்வேறு ​ அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு முனைப்புடன் செயல்பட்டால்,​​ முழு சுகாதாரம் என்பது எட்டாக்கனியாகி விடாது..

'சைபர்' போர்...!

அவசர உலகில் இணையதள பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது.​ வீட்டுக்கு பொருள்கள் வாங்குவதில் இருந்து,​​ பங்கு வர்த்தகம் வரை அனைத்தும் இணையதளத்தின் உதவியோடுதான் நடைபெறுகின்றன.

தகவல் தொடர்புக்கும்,​​ அறிவுசார் தேடலுக்கும்தான் இணையதளம் என்றிருந்த காலம் மறைந்து,​​ மக்களின் அத்தியாவசிய,​​ அவசியத் தேவைகளில் ஒன்றாக மாறி வருகிறது.​ மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பிரிக்க முடியாத அளவுக்கு இணையதளம் இணைந்துள்ளது.

இணையதளங்களின் தேவையும்,​​ சேவையும் பெருகிவரும் நிலையில்,​​ அதில் நடைபெறும் குற்றச்செயல்களும் வேகமாகவே அதிகரிக்கின்றன.​ முன்பு குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு மட்டுமே இக் குற்றங்கள்,​​ இப்போது சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன.

​ இணையதளம்,​​ செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களில் நடைபெறும் இக் குற்றங்கள் 'சைபர் குற்றங்கள்' என்றே அழைக்கப்படுகிறது.

இணையதளம்,​​ இ.​ மெயிலில் நடைபெறும் குற்றங்களை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாத உலக நாடுகள்,​​ இப்போது இணையதளங்களில் நடைபெறும் குற்றங்கள் ஒரு நாட்டையே உலுக்கும் அளவுக்கு இருப்பதால்,​​ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளை ஆலோசித்து வருகின்றன.

ஆனால்,​​ இப் பிரச்னையில் உலக நாடுகளிடம் தேவையான ஒத்துழைப்பை ஒவ்வொரு நாடும் வழங்க மறுப்பதால்,​​ சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.​ இதன்விளைவாக இப்போது 5 நிமிஷத்துக்கு ஓர் இணையதளம் சிதைக்கப்படுவதாக உலக அளவில் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ஒரு நாட்டின் இணையதளத்தைச் சிதைப்பது,​​ அதில் இருக்கும் தகவல்களை உருக்குலைப்பது,​​ தகவல்களை மாற்றி எழுதுவது,​​ தவறான தகவல்களை அளிப்பது,​​ தகவல்களைத் திருடுவது என இணையங்களில் நடைபெறும் குற்றங்களின் பட்டியல் நீளுகிறது.​ இவை தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்த நாடுகளில்தான் அதிகம் நடைபெறுகின்றன.​ இதுவே 'சைபர் போர்' எனவும் அழைக்கப்படுகிறது.

உலக அளவில் அதிகமாகச் சிதைக்கப்படும் இணையதளங்களில்,​​ இந்திய இணையதளங்கள் கணிசமான இடத்தைப் பிடித்துள்ளன.​ இந்திய எல்லையில் சீன ராணுவம் செய்யும் விஷமத்தனங்களைவிட,​​ அந்த நாட்டினர் இந்திய அரசு இணையதளங்களில் செய்யும் விஷமத்தனங்கள் அதிகம்.​ சீனாவைப் போன்று,​​ பாகிஸ்தானும் இந்திய இணையதளங்களில் விஷமத்தனம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.

இவர்களின் பிடியில் இந்திய அரசின் இணையதளங்கள் மட்டுமன்றி,​​ அரசியல் தலைவர்கள்,​​ மதத் தலைவர்கள் ஆகியோரின் இணையதளங்களும் சிக்குகின்றன.​ ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த 3 ஆண்டுகளில் 9,052 இந்திய இணையதளங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.​ 2006}ல் 1,216 இணையதளங்கள் சிதைக்கப்பட்டதே அப்போது பெரிய அளவாகப் பார்க்கப்பட்டது.​ ஆனால் அதன்பின்னர்,​​ இணையதளங்கள் அதைவிட அதிகமான அளவில் சிதைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த 6 மாதங்களில் 3,286 இணையதளங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.​ 1998}ம் ஆண்டு போக்ரானில் அணுகுண்டுச் சோதனையின்போது,​​ அதை 'ஜீ' செய்தி சேனல்,​​ 'இந்தியா டுடே' ஆகியவை செய்தி வெளியிட்டன.​ அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களால் இவ்விரு இணையதளங்களும் சிதைக்கப்பட்டன.​ இந்திய இணையத்தளங்கள் சிதைக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.

இந்திய இணையதளங்களை முதலில் அதிகமாக பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் சிதைத்தனர்.​ இப்போது அவர்களையும் விஞ்சி சீனர்கள் சிதைத்து வருகின்றனர்.​ அதோடு மட்டுமன்றி பாகிஸ்தானியர்கள் செய்யும் விஷமப் பிரசாரங்களைவிட,​​ சீனர்கள் இந்தியாவைப் பற்றி அதிக விஷமப் பிரசாரங்களை இணையதளங்கள் மூலம் செய்கின்றனர்.

இதன் காரணமாக செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 692 இணையதளங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.​ இவற்றில் 511 இணையங்கள் அரசுடையதாகும்.​ இந்த இணையதளங்களில் பெரும்பாலனவை சீனர்களாலே சிதைக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் கூறுகின்றன.

சங்கேத வார்த்தைகளைத் திருடியும்,​​ இணையதளங்களில் சர்வர்களைச் செயலிழக்க செய்தும் இத் தாக்குதலை அவர்கள் நடத்தியுள்ளனர்.​ இத் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் இணையதளமும் சிக்கியதாகக் கூறப்படுகிறது.​ இதுபோன்ற செயல்கள் மும்பைத் தாக்குதலுக்கு பின்னர் அதிக அளவில் இருப்பதாகக் ​ கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்தியப் பாதுகாப்பு ஆலோசக அலுவலகத்தில் உள்ள கணினிகளில் தகவல்களைத் திருடுவதற்கு சீனாவில் இருந்து இ.மெயில் வந்திருப்பது கண்டறியப்பட்டு ​ அழிக்கப்பட்டது.​ இந்த இ.​ மெயிலைத் திறந்திருந்தால்,​​ கணினிகளில் இருந்த தகவல்கள் திருடப்பட்டு அழிக்கப்பட்டிருக்கும் எனப் பாதுகாப்பு அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவுக்கு எதிராக ஒரு பனிப்போராகவே சீனாவும்,​​ பாகிஸ்தானும் சைபர் போரை நடத்தி வருகின்றன.​ எல்லைக்கு வெளியில் இருக்கும் ஆபத்தைப்போல,​​ இதுவும் நாட்டில் நிலவும் அமைதியைக் குலைக்கும் ஓர் ஆபத்துதான்.​ இத்தகைய அச்சுறுத்தலை செய்யும் சீனா,​​ பாகிஸ்தானைக் கட்டுப்படுத்த வேண்டும்.​ இச் செயலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாதபட்சத்தில்,​​ நாட்டில் கணினி மூலம் இயங்கும் அனைத்துத் துறைகளையும் எங்கேயோ ஓர் இடத்தில் இருந்துகொண்டு கட்டுப்படுத்த முடியும்.​ அந்தக் கணினிகளில் உள்ள அனைத்துத் தகவல்களைத் திருடவும் முடியும் என ​ தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

வளர்ந்த நாடுகள் இப்படிப்பட்ட பிரச்னைகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.​ இதற்காக அந்த நாடுகள் தங்களது இணையதளங்களைக் காப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.​ அந்த நடவடிக்கைகளை நாமும் விரைவாக எடுக்க வேண்டும்.​ இல்லையெனில் சீனாவிடம் இமயமலை சாரல் பகுதியை இழந்தது போன்று,​​ இணையதளங்களை இழக்க நேரிடும்.​

மக்களால் கைவிடப்பட்ட நகரை 115 கோடிக்கு தனிநபருக்கு அரசாங்கம் விற்றது

UeL[Ö¥ ÛL«PTyP SLÛW ¤.15 ÚLÖzeh R ST£eh AWNÖjL• «¼\‰

WÑVÖ«¥ L•ïÂÍ| Byp SP‹RÚTÖ‰, AÚRÖ| CÛQ‹‰ C£‹R SÖ| Xy«VÖ. AÚTÖ‰ A‹R SÖyz¥ ÍeWPÖ GÁ\ SL¡¥ WÖPÖŸ ŒÛXV• C£‹R‰. C‹R SL¡¥ 5 B›W• ÚTŸ Yp†R]Ÿ. L•ïÂÍ| Byp L«²‹‰, WÑVÖ TX SÖ|L[ÖL pR¿P ÚTÖ‰, Xy«VÖ°• R SÖPÖ]‰. AÚTÖ‰ A‹R SÖyz¥ C£‹R WÑV WÖ„Y ®WŸLº• ÙY¸ÚV½ «yP]Ÿ.

CÛR†ÙRÖPŸ‹‰ A‹R SL¡¥ hzÚV½ C£‹R 5 B›W• ÚT£• A‹R SLÛW ÛL«y| «y| ÙY¸ÚV½ «yP]Ÿ. CR]Ö¥ A‹R SLW• B· AWYU¼\RÖf «yP‰.

110 HeLŸ ŒX†‡¥ AÛU‹R C‹R SLÛW Xy«VÖ SÖ|, R STŸLºeh HX• «P ˜ÁY‹R‰. CÛR WÑVŸ J£YŸ 15 ÚLÖz ¤TÖšeh «ÛXeh YÖjf]ÖŸ. AYŸ ÙTVŸ AÙXeÚNÙ^ªÍÚLÖÚ^. AYŸ GÁ] ÙNšVÚTÖf\ÖŸ GÁT‰ ÙR¡V«¥ÛX.