-
Thursday, September 9, 2010
இதயநலம் காக்கும் உடற்பயிற்சிகள்
உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்றால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி என்பது இருக்கும். உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம்காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால், இதய நோயானிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்திருக்காது.
பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் பாதுகாப்பு அரண்களாக உடற்பயிற்சிகள் அமைகின்றன. இதய நோய்களால் பாதிக்கப்படாமல் தப்பிப்பதற்கும் உடற்பயிற்சிகள் எத்தகைய நன்மைகளை அளிக்கின்றன என்பதை இந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
இதயம் வலுவான தசைகளால் ஆன விசை அமைப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். இதயம் நன்கு செயல்பட வேண்டும் என்றால், தமனிகளின் மூலமாக ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ரத்தம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் தசைகள் வலுவாக இருந்து இதயத்தை நன்றாக இயங்க வைக்க முடியும். இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க ஒருவரின் வயது உடல் அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப உடற்பயிற்சிறைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்யலாம் என்பதைப் பார்க்கும் முன்பு உடலுக்கு எந்த வகையில் அவை உதவுகின்றன என்பதைப் பார்த்தவிடலாம்.
உடற்பயிற்சியின் பயன்கள்.
இதயத்தில் இருந்து ரத்தம், ரத்தக் குழாய்களின் மூலமாக நமது உடலில் உள்ள உறுப்புகளுக்குப் போய்ச் சேர்கிறது. எதிர்பாராத காரணங்களால் அதாவது, ரத்தக் குழாய்களில் தடை இருந்தாலோ அல்லது அவை பாதிக்கப்பட்டிருந்தாலோ ரத்தம் சரிவர உறுப்புகளுக்குப் போய்ச் சேராது. இந்த இக்கட்டான நிலையை ஈடுகட்டும் வகையில் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்க மாற்று ரத்தக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரத்தக் குழாய்களை இணை ரத்தக்குழாய்கள் (Collateral Circulation) என்று சொல்வார்கள்.
அதெல்லாம் சரிதான். உடற்பயிற்சிக்கும் இந்த இணை ரத்தக் குழாய்களுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இருக்கிறது.
இந்த இணை ரத்தக் குழாய்கள் இதயம் உருவாகும்போதே உருவாகிவிடுகின்றன. ஆனால் முக்கியமான வேலைகளை முதன்மை ரத்தக் குழாய்களே முழுநேரமும் செய்துவிடுவதால் இணை ரத்தக் குழாய்கள் செயலற்றுத்தான் காணப்படும். அவசர காலத்தில் தானே நமது சேவை தேவை என்ற அலட்சியத்தில் இவை அளவில் சுருங்கியும், வளைந்தும், நெளிந்தும் காணப்படும். அந்த நிலையில் திடீரென முதன்மை ரத்தக் குழாய்கள் செயலற்றுப் போகும்போது இவை விழிப்படைந்து வேலை செய்ய சற்று நேரம் பிடிக்கும்.
ஆனால் இளமைப் பருவத்தில் இருந்து நாம் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம், இந்தத இணை ரத்தக் குழாய்களை நன்கு இயக்கி அவற்றை எப்போதுமே தயார் நிலையில் வைத்திருக்கலாம். அதன் மூலமாக திடீரென இதயத்தின் முதன்மை ரத்தக் குழாய்கள் அடைபடும்போது, இந்த இணை ரத்தக்குழாய்கள் விரைவாகச் செயல்பட்டு, மாரடைப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளால் மரண ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
நீங்கள் தொடர்ச்சியாகத் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்பையும் பெருமளவு குறைத்துவிடலாம். மாரடைப்புக்கு அடிப்படை காரணம் இதயத் தமனிகள் முழுமையாக அடைபட்டு இதயத்தசைகள் சுருங்கி, இதயம் இயங்கத் தேவையான உயிர்வளி சத்துகள் போன்றவை கிடைக்காததுதான். அன்றாட உடற்பயிற்சிகள், இதயத் தசைகளின் சுருங்கும் ஆற்றலை அதிகமாக்குகின்றன. அதோடு உடற்பயிற்சி செய்யும் போது அதிக அழுத்தத்துடன் ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்கிறது.
இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை அதிக அழுத்தத்துடன் வரும் ரத்தமானது ஓரளவுக்கு அகற்றுகிறது. இதன் மூலமாக மாரடைப்புக்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது. அன்றாட உடற்பயிற்சியின் மூலமாக இதயத் தமனி நோய்களையும், மாரடைப்பையும் கணிசமான அளவு தடுக்க முடியும்.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சரிவர இயங்க வேண்டும் என்றால் தேவையான உயிர்வளி, சத்துகள் போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும். ரத்தத்தின் மூலமாகவே இவை செல்களைப் போய்ச் சேருகின்றன. அன்றாடம் குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகமாக்குவதோடு, உடலில் உள்ள பல்வேறு ரத்தக் குழார்களை விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடவும் துணைபுரிகின்றன.
இதயத்துக்கு ஏற்ற உடற்பயிற்சிகள்
உடலின் உயிர்வளித் தேவையைப் பெருக்கும் உடற்பயிற்சிகளை உயிர் வளி பெருக்கும் உடற்பயிற்சிகள் (Aerobic Exercivev) என்று சொல்வதுண்டு.
இத்தகைய உடற்பயிற்சிகளின் மூலமாக உடலில் உள்ள உறுப்புகளுக்குத் தேவையான உயிர்வளியைப் பன்மடங்காக பெருக்க முடியும். இதனால் இதயமானது தனக்குத் தேவையான ரத்தத்தையும், சத்துகளையும் பெற முடியும்.
பொதுவாக இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (Jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் உங்கள் வயது, உல் அமைப்பு, ஓய்வு நேரம், உடல் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.
நடைப்பயிற்சி
நடைப்பயிற்சியில் Trekking, Leiú§re Walking, Race Walking, Power Malking என பலவகைகள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு எந்த வகைப் பயிற்சி ஒத்துவருகிறதோ அதைத் தொடர்ச்சியாகச் செய்து வர வேண்டும்.
மற்ற வகையான உடற்கயிற்சிகளுடன் ஒப்பிடும்போது நடைபயிற்சி மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்தப் பயிற்சியை எந்த இடத்திலும் மிகவும் எளிமையாக மேற்கொள்ள முடியும். இப்பயிற்சியை மேற்கொள்ள ஒரு ஜோடி காலணிகள் இருந்தால் போதும்.
எளிமையான உடற்பயிற்சியாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் நன்மைகள் பல. அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடலின் எடையைக் குறைக்க துணை புரிவதோடு தெளிவாகச் சிந்திக்கவும் உதவுகிறது. மேலும் இதயத் தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
நடைப்பயிற்சியில் ஏற்படும் முழுப்பயனைப் பெற வேண்டும் என்றால், தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அன்றாடம் நடக்கும் தூரத்தைப் படிப்படியாக உடலின் ஆற்றலுக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும். நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது நடக்கும் இதயத் துடிப்பின் அளவானது நிமிடத்துக்கு 100&க்கு மேல் இருக்க வேண்டும்.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் 10,000 காலடிகள் (Sˆepv) நடக்க வேண்டும் என இதய மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால் நாம் அதிகபட்சம் 3,000 காலடிகளுக்கு மேல் நடப்பதில்லை. பத்தடிகூட நடக்காமல் இருப்பதைவிட 3,000 காலடிகள் நடப்பது நல்லதுதானே.
நடைப்பயிற்சியின் அவசியத்தை இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லியும் சிலர், நடப்பதற்கு எனக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கவே இல்லை என புலம்புவார்கள். அவர்களுக்கு சில அறிவுரைகள்...
நீங்கள் டி.வி.பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்றால் டி.வி. சேனல்களை மாற்ற ரிமோட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எழுந்து சென்று நேரிடையாக மாற்றலாம்.
காய்கறி மார்க்கெட்டுக்கும், பலசரக்குக் கடைக்கும் செல்ல இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக நடந்து சென்று பொருட்களை வாங்கலாம்.
உங்கள் அலுவலகம், மூன்றாவது அல்லது நான்காவது மாடியில் இருந்தால் லிஃப்ட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மாடிப்படிகளில் ஏறிச் செல்லலாம்.
நீங்கள் அலுவலகத்துக்கு பஸ்ஸில் செல்பவராக இருந்தால் அலுவலகத்தில் இருந்து பஸ்ஸில் வீட்டுக்குத் திரும்பி வரும்போது இரண்டு ஸ்டாப்புக்கு முன்னால் இறங்கி நடந்து வாருங்கள்.
நீங்கள் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் பழக்கம் உடையவர் என்றால் கோயிலில் பிரகாரங்களை நன்கு சுற்றி வாருங்கள்.
மெல்லோட்டம்
மெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். இதை ஆங்கிலத்தில் ஜாக்கிங் (Jogging) என்பார்கள். உடலுக்கு ஏற்ற சீரிய உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இந்தப்பயிற்சியும் மாரடைப்பைத் தடுக்க உதவியாக இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மருத்துவர்கள் தங்களை மாரடைப்பில் இருந்து காத்துக்கொள்ள தினமும் மெல்லோட்டத்தை மேற்கொள்கிறார்கள்.
மெல்லோட்டத்தின் பயன்கள்
இதயமானது சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவானது சாதாரண நிலையைவிட மெல்லோட்டத்தின்போது அதிகமாகிறது.
இதய ரத்தக் குழாய்களையும், ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புகளையும் வலுவாக்குகிறது.
ரத்தக் குழாய்களின் உள்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கிறது.
ரத்தமிகு அழுத்த நிலையைக் குறைக்கத் துணைபுரிகிறது.
இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவானது அதிகமாவதால், இதயத் தமனிகளில் ரத்தம் உறைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது.
ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரை கிளிசரைடையும் குறைக்க உதவுவதால், மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.
மெல்லோட்டத்துக்கான விதிமுறைகள்
விதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.
நம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.
மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலால் (Convˆipaˆion) உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.
மெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.
சைக்கிள் பயிற்சி
இதயத்துக்கு உகந்த, உயிர்வளியைப் பெருக்கும் உடற்பயிற்சிகளில் சிறந்தது சைக்கிள் பயிற்சி. இது, குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த எளிமையான உடற்பயிற்சியாகும்.
அமெரிக்காவில், பால் டட்லி ஒயிட் என்ற மருத்துவர் சைக்கிள் பயிற்சியில் ஒரு மிகப்பெரிய புரட்சியைச் செய்திருக்கிறார். உடல் நலத்துக்கான சைக்கிள் பயிற்சி (Cycling for Healˆh) என்ற நல இயக்கத்தைத் தொடங்கியதோடு அல்லாமல், இந்த இயக்கத்தின் விளைவாக, அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான தேசியப் பூங்காக்களில் கார்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவும் இவர் காரணமாக இருந்தார்.
அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான தேசியப் பூங்காக்களில் அங்கு வரும் மக்கள் பயன்படுத்துவதற்காக சைக்கிள்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்கள் தங்களுடைய உடல் நலத்தைப் பேணுவதற்காகப் பல மணிநேரம் இயற்கையான சூழலில், திறந்த வெளியில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வது வழக்கமாகும்.
பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் சைக்கிள் பயிற்சியைப் பல வகையான நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். உடல் பருமன், ரத்தமிகு அழுத்த நோய், குடல் இறக்கம், மூட்டுச்சிதைவு நோய், வாதக் காய்ச்சல் நோய், முதுகுத் தண்டுவடம் நழுவுதல், கால் பெரு நரம்பு அழற்சி போன்ற நோய்களைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சையில், சைக்கிள் பயிற்சியையும் ஒரு முக்கியமான அம்சமாக வைத்திருக்கிறார்கள்.
மேலை நாடுகளில் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் சைக்கிள் பயிற்சியை ஒருவகையான மருத்துவமுறையாகக் கையாள்கிறார்கள். சிலவகையான நோயாளிகளுக்கு அவர்கள் தங்கள் உடல் நலத்தை மீண்டும் பெற சைக்கிள் பயிற்சியைப் பரிந்துரைக்கிறார்கள். மேலும் நீண்டநாள்களாகப் படுக்கையில் இருக்கும் நோயாளிகளின் வலுவிழந்த தசைகள் மீண்டும் உயிர்பெற, சைக்கிள் பயிற்சியை அளிக்கின்றனர்.
ஹாலந்து நாட்டில் உள்ள பள்ளிகளில் சைக்கிள் பயிற்சியை விளையாட்டுக் கல்வியில் ஒரு பாடமாக வைத்துள்ளனர். தினமும் பள்ளி நேரத்தில் மாணவ& மாணவிகள் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இத்தகைய முயற்சியின் காரணமாக நடல் நலக்குறைவால் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ& மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகச் சொல்கின்றனர்.
அன்றாடம் சிலமணி நேரம் மேற்கொள்ளும் சைக்கிள் பயிற்சியானது, இதயத் தசைகளை நன்கு வலுவாக்குவதோடு அல்லாமல், இதயத் தசைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவைப் பன்மடங்கு அதிகமாக்குகிறது என்கிறார் பால் டட்லி ஒயிட்.
நீச்சல் பயிற்சி
நீச்சல் பயிற்சயாலும் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.
நீச்சல், முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சியாகும்.
உடல் ஊனமுற்றவர்களுக்குக்கூட இது மிகச்சிறந்த உடற்பயிற்சி.
உடலை வலுவாக்கவும், கிடைத்த வலுவைப் பாதுகாத்துக்கொள்ளவும் உதவுகிறது.
நீச்சல் பயிற்சி, உடலில் உள்ள பலவகையான உள் உறுப்புகளுக்கும் நரம்பு அமைப்புகளுக்கும் வலுவை அளிக்கிறது.
குறைந்த காலத்தில் உடலில் உள்ள பலவகையான தசைகளுக்கு நல்ல வலுவை அளிக்கிறது.
உடலின் தேவையற்ற, அதிகமான எடையைக் குறைக்க துணை புரிகிறது.
நீச்சல் பயிற்சியின்போது நீர் உடலுக்கு இயற்கையின் தடுப்பாற்றலை அளிக்கிறது.
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் தேவையற்ற கலோரிகளை எரிக்க முடியும்.
நீச்சலானது உள்ளத்துக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாத மனப்பக்குவத்தையும், எந்தச் செயலையும் நிதானத்துடன் செய்யும் மனப்பக்குவத்தையும் அளிக்கிறது.
நீச்சல் பயிற்சியின் சிறப்புகள்
நீச்சல், கவலையை மறக்க மிகச்சிறந்த மருந்தாகும். ஏனென்றால், நீந்தும்போது கவனம் முழுவதும் நீச்சலில் ஒரு முகப்படுவதால், மனிதன் தன்னுடைய கவலையை மறக்க நீச்சல் துணைபுரிகிறது.
நீச்சல், முதுகெலும்புப் பகுதியில் உள்ள தசைகளை வலுப்பெறச் செய்வதோடு, முதுகெலும்பு அமைப்புகளை வலுப்படுத்த துணைபுரிகிறது.
கடல் நீரிலும், ஆற்று நீரிலும் இயற்கையாகப் பொதிந்திருக்கும் அயனிகள, உடலுக்கு நன்மை அளிப்பதாக மருத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர்.
நீச்சல், உடலில் உள்ள மேற்புறத் தசைகளுக்கு மட்டுமின்றி உடலின் கிழ்ப்புறப் பகுதியில் உள்ள தசைகளுக்கும் ஒரே சமயத்தில் நல்ல பயிற்சியைத் தரக்கூடியது.
இதயத் தசைகள் நன்கு வலுப்பெற நீச்சல் உதவி செய்கிறது.
இதயம் குறித்த அபூர்வ தகவல்கள்
பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தைவிட அதிகமாக (அதிக தடவை) துடிக்கும்.
ஒவ்வொருவரின் இதயமும் சுமார் 1 பவுண்ட் (300 கிராம்) எடையுடையதாக இருக்கும்.
இதயத் துடிப்பு, ரத்தத்தை 30 அடி தூரத்திற்கு செலுத்துமளவிற்கு அழுத்தம் கொடுக்கும்.
முதன் முதலில் திறந்த இதய அறுவை சிகிச்சை 1893 ஆம் ஆண்டு டாக்டர் டேனியல் ஹால் வில்லியம்ஸ் என்ற மருத்துவ அறிஞரால் செய்யப்பட்டது.
‘நீண்ட மோதிர விரல்’ கொண்ட ஆண்களுக்கு மாரடைப்பு எளிதாக ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
‘ஆலீவ்’ எண்ணெய், ரத்த கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்து மென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை. இதற்கு இவர்கள் சிவப்பு ஒயின், கடல் மீன்கள், ஆலீவ் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துவதுதான் காரணமென கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரின் சராசரி வாழ்விலும் இதயம் சுமார் 1 மில்லியன் பேரல் ரத்தத்தை உடலெங்கும் செலுத்துகிறது.
1967 ஆம் ஆண்டு உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்பிரிக்காவில் செய்யப்பட்டது.
பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு காலை 8 முதல் 9 மணி நேரத்தில் ஏற்படுகிறது.
காதலுக்கும் இதயத்திற்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. அது மூளை & ஞாபகம் & நினைவு & மனம் தொடர்புடையது. பெரும்பாலான மாரடைப்பு திங்கட்கிழமைதான் ஏற்படுகிறது. சராசரியாக ஒரு நுண்ணிய
ரத்தநாளத்தின் நீளம் 1 மி.மீ. அளவாகும்.
நமது உடலிலுள்ள அனைத்து நுண்ணிய ரத்தநாளங்களின் மொத்த அளவு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தை விட பெரியதாகும்.
ஆண்களைவிட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்.
உலக முழுவதும் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 1.5 கோடியாகும்.
வளர்ந்த நாடுகளில் இறப்பிற்கு 50% இதயக் கோளாறுகளே காரணமாக இருக்கின்றன. வளரும் நாடுகளில் இது 15 சதவீதமாக உள்ளது.
Wednesday, September 8, 2010
தமிழ் இனி தலைநிமிரும்!
ஒரு மிகப்பெரிய சரித்திர நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ஆனால், நாம் அதன் முக்கியத்துவத்தையும், இதனால் தமிழுக்கு ஏற்படவிருக்கும் வளர்ச்சியையும் உணராமல் இருக்கிறோம். தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு என்பது என்ன சாதாரண விஷயமா?
முன் எப்போதும் இல்லாத பேரழிவைத் தமிழ்மொழி சமீபகாலமாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வேறு எந்த மொழியினரும் காட்டாத பிறமொழி மோகத்தைத் தமிழன் ஆங்கிலத்திடம் காட்ட முற்பட்டிருக்கும் காலகட்டம் இது. தமிழில் படிப்பது இருக்கட்டும், தமிழில் பேசுவதேகூட கௌரவத்துக்கு இழுக்கு என்று இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து வேரூன்றிவிட்டிருக்கும் அவலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வீட்டிலும்கூட ஆங்கிலம் பேசினால்தான் பெருமை என்று கருதிப் புளகாங்கிதப்படும் நிலைமை. இப்படி ஒரு சூழலில், தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் அவசரச் சட்டம், இருட்டுக் குகையில் வெளியில் செல்ல வழி தெரியாமல் திணறுபவனுக்கு எங்கோ ஒரு ஒளிக்கீற்று திடீரெனத் தெரியவந்தாற்போன்ற பேருவகையை, நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவிலுள்ள வேறு எந்த மாநிலத்தவரும் மொழியினரும், ஆங்கிலம், இந்தி என்று எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும், தங்களுக்குள் தங்கள் வீட்டில், நண்பர்களுடன் பேசும்போது தாய்மொழியில் மட்டுமே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழன் மட்டும்தான் தமிழ் தெரியாது என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் ஒரு இனத்தவனாகக் காணப்படுகிறான். பலர் தங்கள் குழந்தைகள் தமிழ் தெரியாமல் வளர்வது தவறில்லை என்று கூடக் கருதுகிறார்கள்.
இதற்கு முன்பே தலையங்கத்தில் நாம் குறிப்பிட்டிருக்கும் விஷயம்தான் என்றாலும் அதை மீண்டும் கூறுவதில் தவறில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தங்கள் குழந்தைகளுக்கு, அதுவரை தங்கள் தாய் தகப்பன் பெயரைச் சூட்டி மகிழ்ந்தது போய், நல்ல தமிழில் பெயர்களைச் சூட்டவேண்டும் என்கிற தமிழ் உணர்வு மேலெழுந்தது. தமிழ்ச்செல்வன், கயல்விழி, தென்னவன், நெடுஞ்செழியன் என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள் படித்து வளர்ந்து திருமணம் செய்து கொண்டபோது, எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தங்களது குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள், எந்தவித அர்த்தமும் இல்லாத சினிமா நடிக, நடிகைகளின் பெயரும், ரமேஷ், சுரேஷ், ராஜேஷ் போன்ற வடமொழிப் பெயர்களும். இப்போது அதுவும்போய் சன்னி, புன்னி என்று அர்த்தமில்லாமல் பெயர் சூட்டும் அவலநிலை ஏற்பட்டு விட்டிருக்கிறது.
தமிழகத்தில் மட்டும்தான், தாய்மொழியில் படிக்காமல் தமிழே தெரியாமல் ஒரு குழந்தை படித்து முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்கிற நிலைமை தொடர்கிறது. தற்போதைய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் செய்த ஒரு மகத்தான முடிவு, தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவித்தது. அத்துடன் நின்றுவிடாமல் இப்போது அரசு வேலைவாய்ப்பிலும் தமிழ்ப் பாடமொழியில் படித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்குவது என்று பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டம், தமிழன்னைக்குச் செய்திருக்கும் அளப்பரிய திருத்தொண்டு.
நமக்குத் தெரிந்து தொல்காப்பியர் காலத்திலிருந்தோ, அதற்கு முன்போ கூட வடமொழி இருந்திருக்கிறது. வடமொழியால் சங்க இலக்கியங்கள் தடைபடவில்லை. தமிழின் வளர்ச்சியை வடமொழி தடுக்கவில்லை. சொல்லப் போனால், தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கே தந்தை மொழியாக இருந்திருக்கக்கூடும் என்பதற்குப் பல சான்றுகளை முன்வைக்க முடியும். வடமொழிக்குப் பிறகு ஒன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமியப் படையெடுப்பைத் தொடர்ந்து உருது தமிழகத்துக்கு வந்தது. உருது தமிழுக்கு வளம் சேர்த்ததே அன்றி, தமிழ் வளர்ச்சியைத் தடை செய்துவிடவில்லை. அதேபோல, விஜயநகர சாம்ராஜ்யப் படையெடுப்பால் வந்த தெலுங்கும், மராட்டியப் படையெடுப்பால் வந்த மராட்டியும் தமிழின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கவில்லை. இந்த மொழிகளால் எல்லாம் தமிழை வழக்கொழிந்து போக வைக்க முடியவில்லை.
ஆனால் ஆங்கிலேயர்கள் நுழைந்து வெறும் நானூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. நாம் தமிழைத் தமிழனிடம் தேடவேண்டிய அவலநிலை அரங்கேறி விட்டிருக்கிறது. இதற்குக் காரணம், வடமொழியோ, உருதோ, தெலுங்கோ, மராட்டியோ ஆட்சி மொழிகளாக இங்கே கோலோச்சவில்லை. ஆங்கிலேயர்கள் வந்தவுடன், ஆங்கிலம் படித்தவர்களுக்குத்தான் அரசு வேலைவாய்ப்பு என்று ஆகிவிட்டபோது, தமிழ் தமிழனின் மனதிலிருந்து தடம்புரளத் தொடங்கிவிட்டது. மொழிப்பற்றை அவனது வயிற்றுப் பசி விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், அமைந்த மாநிலங்களில் மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆங்கிலமும், இந்தியும் தொடர்பு மொழிகளாக உயர்மட்ட அளவிலும், மாநில மொழிகள் அன்றாட அலுவல் மொழியாகவும், மாநில மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்றும் அரசு முடிவெடுத்திருந்தால், இந்த அளவுக்கு ஆங்கில மோகம் வளர்ந்திருக்காது. தமிழும் இத்தகைய பின்னடைவைச் சந்தித்திருக்காது.
தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவித்தபடி, இப்போது முதல்வர் கருணாநிதி சொன்னதைச் செய்து காட்டிவிட்டார். ஏன் 20 விழுக்காடு மட்டும் ஒதுக்கீடு? தமிழ் மொழியைப் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை என்று சட்டம் இயற்றக்கூடாதா என்று சிலர் விதண்டாவாதம் பேசக்கூடும். அப்படிச் செய்திருந்தால், ஆந்திரத்தில் ஏற்பட்டதுபோல, பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை சென்று, சட்டம் ரத்தாகி இருக்கும். "முதலில் 20 விழுக்காடு ஒதுக்கீடு சட்டமாகட்டும், பிறகு படிப்படியாக உயர்த்திக் கொள்ளலாம்' என்கிற முதல்வரின் சாதுர்யமான முடிவு அவரது நீண்ட அரசியல் அனுபவத்தையும், நிர்வாகத் திறமையையும் வெளிச்சம் போடுகிறது.
ராஜாஜியின் சாதனை என்று நினைவுகூற மதுவிலக்கு; காமராஜின் சாதனை என்று சரித்திரம் பதிவு செய்வது இலவசக் கல்வித் திட்டம்; அண்ணாவின் பங்களிப்பு என்பது தமிழ்நாடு என்கிற பெயர்மாற்றம்; எம்.ஜி.ஆரை நினைவில் நிறுத்துவது சத்துணவு. முதல்வர் கருணாநிதியைப் பற்றி வருங்காலம் பதிவு செய்யப் போவது, தமிழ் வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தவர் என்பதாகத்தான் இருக்கும்.
அதற்காக, தமிழகம் இந்தச் சட்டத்தைக் கரவொலி எழுப்பி வரவேற்க வேண்டும். இப்படி ஒரு சட்டத்தைப் பிறப்பித்து தமிழுக்கு மறுவாழ்வளித்த தமிழக முதல்வருக்கு ஒவ்வொரு தமிழனும் தலைவணங்கி நன்றி செலுத்தவேண்டும்!
இந்த ஒரு சட்டத்தின் விளைவாகத் தமிழ் மீண்டும் தலைநிமிரும்!
முன் எப்போதும் இல்லாத பேரழிவைத் தமிழ்மொழி சமீபகாலமாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வேறு எந்த மொழியினரும் காட்டாத பிறமொழி மோகத்தைத் தமிழன் ஆங்கிலத்திடம் காட்ட முற்பட்டிருக்கும் காலகட்டம் இது. தமிழில் படிப்பது இருக்கட்டும், தமிழில் பேசுவதேகூட கௌரவத்துக்கு இழுக்கு என்று இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து வேரூன்றிவிட்டிருக்கும் அவலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வீட்டிலும்கூட ஆங்கிலம் பேசினால்தான் பெருமை என்று கருதிப் புளகாங்கிதப்படும் நிலைமை. இப்படி ஒரு சூழலில், தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் அவசரச் சட்டம், இருட்டுக் குகையில் வெளியில் செல்ல வழி தெரியாமல் திணறுபவனுக்கு எங்கோ ஒரு ஒளிக்கீற்று திடீரெனத் தெரியவந்தாற்போன்ற பேருவகையை, நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவிலுள்ள வேறு எந்த மாநிலத்தவரும் மொழியினரும், ஆங்கிலம், இந்தி என்று எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும், தங்களுக்குள் தங்கள் வீட்டில், நண்பர்களுடன் பேசும்போது தாய்மொழியில் மட்டுமே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழன் மட்டும்தான் தமிழ் தெரியாது என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் ஒரு இனத்தவனாகக் காணப்படுகிறான். பலர் தங்கள் குழந்தைகள் தமிழ் தெரியாமல் வளர்வது தவறில்லை என்று கூடக் கருதுகிறார்கள்.
இதற்கு முன்பே தலையங்கத்தில் நாம் குறிப்பிட்டிருக்கும் விஷயம்தான் என்றாலும் அதை மீண்டும் கூறுவதில் தவறில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தங்கள் குழந்தைகளுக்கு, அதுவரை தங்கள் தாய் தகப்பன் பெயரைச் சூட்டி மகிழ்ந்தது போய், நல்ல தமிழில் பெயர்களைச் சூட்டவேண்டும் என்கிற தமிழ் உணர்வு மேலெழுந்தது. தமிழ்ச்செல்வன், கயல்விழி, தென்னவன், நெடுஞ்செழியன் என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள் படித்து வளர்ந்து திருமணம் செய்து கொண்டபோது, எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தங்களது குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள், எந்தவித அர்த்தமும் இல்லாத சினிமா நடிக, நடிகைகளின் பெயரும், ரமேஷ், சுரேஷ், ராஜேஷ் போன்ற வடமொழிப் பெயர்களும். இப்போது அதுவும்போய் சன்னி, புன்னி என்று அர்த்தமில்லாமல் பெயர் சூட்டும் அவலநிலை ஏற்பட்டு விட்டிருக்கிறது.
தமிழகத்தில் மட்டும்தான், தாய்மொழியில் படிக்காமல் தமிழே தெரியாமல் ஒரு குழந்தை படித்து முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்கிற நிலைமை தொடர்கிறது. தற்போதைய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் செய்த ஒரு மகத்தான முடிவு, தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவித்தது. அத்துடன் நின்றுவிடாமல் இப்போது அரசு வேலைவாய்ப்பிலும் தமிழ்ப் பாடமொழியில் படித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்குவது என்று பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டம், தமிழன்னைக்குச் செய்திருக்கும் அளப்பரிய திருத்தொண்டு.
நமக்குத் தெரிந்து தொல்காப்பியர் காலத்திலிருந்தோ, அதற்கு முன்போ கூட வடமொழி இருந்திருக்கிறது. வடமொழியால் சங்க இலக்கியங்கள் தடைபடவில்லை. தமிழின் வளர்ச்சியை வடமொழி தடுக்கவில்லை. சொல்லப் போனால், தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கே தந்தை மொழியாக இருந்திருக்கக்கூடும் என்பதற்குப் பல சான்றுகளை முன்வைக்க முடியும். வடமொழிக்குப் பிறகு ஒன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமியப் படையெடுப்பைத் தொடர்ந்து உருது தமிழகத்துக்கு வந்தது. உருது தமிழுக்கு வளம் சேர்த்ததே அன்றி, தமிழ் வளர்ச்சியைத் தடை செய்துவிடவில்லை. அதேபோல, விஜயநகர சாம்ராஜ்யப் படையெடுப்பால் வந்த தெலுங்கும், மராட்டியப் படையெடுப்பால் வந்த மராட்டியும் தமிழின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கவில்லை. இந்த மொழிகளால் எல்லாம் தமிழை வழக்கொழிந்து போக வைக்க முடியவில்லை.
ஆனால் ஆங்கிலேயர்கள் நுழைந்து வெறும் நானூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. நாம் தமிழைத் தமிழனிடம் தேடவேண்டிய அவலநிலை அரங்கேறி விட்டிருக்கிறது. இதற்குக் காரணம், வடமொழியோ, உருதோ, தெலுங்கோ, மராட்டியோ ஆட்சி மொழிகளாக இங்கே கோலோச்சவில்லை. ஆங்கிலேயர்கள் வந்தவுடன், ஆங்கிலம் படித்தவர்களுக்குத்தான் அரசு வேலைவாய்ப்பு என்று ஆகிவிட்டபோது, தமிழ் தமிழனின் மனதிலிருந்து தடம்புரளத் தொடங்கிவிட்டது. மொழிப்பற்றை அவனது வயிற்றுப் பசி விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், அமைந்த மாநிலங்களில் மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆங்கிலமும், இந்தியும் தொடர்பு மொழிகளாக உயர்மட்ட அளவிலும், மாநில மொழிகள் அன்றாட அலுவல் மொழியாகவும், மாநில மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்றும் அரசு முடிவெடுத்திருந்தால், இந்த அளவுக்கு ஆங்கில மோகம் வளர்ந்திருக்காது. தமிழும் இத்தகைய பின்னடைவைச் சந்தித்திருக்காது.
தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவித்தபடி, இப்போது முதல்வர் கருணாநிதி சொன்னதைச் செய்து காட்டிவிட்டார். ஏன் 20 விழுக்காடு மட்டும் ஒதுக்கீடு? தமிழ் மொழியைப் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை என்று சட்டம் இயற்றக்கூடாதா என்று சிலர் விதண்டாவாதம் பேசக்கூடும். அப்படிச் செய்திருந்தால், ஆந்திரத்தில் ஏற்பட்டதுபோல, பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை சென்று, சட்டம் ரத்தாகி இருக்கும். "முதலில் 20 விழுக்காடு ஒதுக்கீடு சட்டமாகட்டும், பிறகு படிப்படியாக உயர்த்திக் கொள்ளலாம்' என்கிற முதல்வரின் சாதுர்யமான முடிவு அவரது நீண்ட அரசியல் அனுபவத்தையும், நிர்வாகத் திறமையையும் வெளிச்சம் போடுகிறது.
ராஜாஜியின் சாதனை என்று நினைவுகூற மதுவிலக்கு; காமராஜின் சாதனை என்று சரித்திரம் பதிவு செய்வது இலவசக் கல்வித் திட்டம்; அண்ணாவின் பங்களிப்பு என்பது தமிழ்நாடு என்கிற பெயர்மாற்றம்; எம்.ஜி.ஆரை நினைவில் நிறுத்துவது சத்துணவு. முதல்வர் கருணாநிதியைப் பற்றி வருங்காலம் பதிவு செய்யப் போவது, தமிழ் வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தவர் என்பதாகத்தான் இருக்கும்.
அதற்காக, தமிழகம் இந்தச் சட்டத்தைக் கரவொலி எழுப்பி வரவேற்க வேண்டும். இப்படி ஒரு சட்டத்தைப் பிறப்பித்து தமிழுக்கு மறுவாழ்வளித்த தமிழக முதல்வருக்கு ஒவ்வொரு தமிழனும் தலைவணங்கி நன்றி செலுத்தவேண்டும்!
இந்த ஒரு சட்டத்தின் விளைவாகத் தமிழ் மீண்டும் தலைநிமிரும்!
எங்கே செல்கிறோம் நாம்?
அறிவியல் வளர்ந்து நாகரிக மோகம் இந்த உலகை ஆட்கொண்டுவிட்டது. அறிவியல் புரட்சியில் நகரங்கள் மட்டுமன்றி கிராமங்களும் சேர்ந்து அடையாளம் இழக்கத் தொடங்கியிருக்கின்றன.
பணத்தைத் தேடி ஓடும் இந்த ஓட்டத்தின் இடையே ஆன்மிகம், விளையாட்டு, வாசிப்பு என நாம் புறந்தள்ளிச் செல்லும் விஷயங்கள் ஏராளம்.
இந்தியாவே கிராமங்களில்தான் வாழ்கிறது என்பது இப்போது வெறும்பேச்சாகி வருகிறது. நகரங்கள், கிராமங்கள் இடையே பொருளாதார ரீதியில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் ஒருபுறம் இருந்தாலும், கிராமங்கள் தங்கள் முகத்தை இழக்கத் தொடங்கியிருக்கின்றன என்பதுதான் உண்மை.
கான்கிரீட் காடுகளான நகரங்களை நோக்கிச் செல்லும் கிராமத்து மக்களைப்போல, கிராமத்து மண்ணும் நகரங்களைப்போல மாறி நரகமாகி வருகிறது.
கிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. வயல்வெளி, திண்ணை வீடுகள், மரத்தடி, கோயில், குளம் இவற்றுடன் மண் மணக்கும் விளையாட்டுகள். ஐவகை நிலங்களுக்கும் ஒவ்வொரு வித விளையாட்டு பிரசித்தம். நம் தலைமுறை வரை இந்த கிராமத்து விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்துள்ளோம். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் கிராமப்புற விளையாட்டுகள் படிப்படியாக மறைந்து வருவது அதிர்ச்சிக்குரிய ஒரு விஷயம்.
கபடி - தமிழக கிராமங்களுக்கே உரிய அடையாளம். ஒரு காலத்தில் ஊருக்கு ஊர் கேட்ட ""சடுகுடு சடுகுடு'' சப்தங்களை இப்போது கேட்க முடியவில்லை. திருவிழா காலங்களில் சில கிராமங்களில் மட்டுமே இப்போது கபடி விளையாடப்படுகிறது. காற்றைக் கிழித்து சுற்றும் சிலம்பம் சிறந்த தற்காப்புக் கலை. அந்தச் சிலம்பமும் காணாமலே போய்விட்டது.
உறியடி விளையாட்டு, பெண்கள் விளையாடும் பாண்டியாட்டம், பல்லாங்குழி போன்றவை பற்றி இக்கால சிறுவர், சிறுமிகளுக்குத் தெரிவதே இல்லை. கோலிக்குண்டு, பம்பரம் சுற்றுதல் போன்ற விளையாட்டுகளுக்கும் அதே(ô) கதி. கண்ணாமூச்சி விளையாட்டு - பெயருக்கேற்ப எங்கேயோ போய் ஒளிந்துகொண்டுவிட்டது. "ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்' என்ற குரல் மட்டும் நினைவலைகளில் தேங்கிக் கிடக்கிறது.
"மாலை முழுவதும் விளையாட்டு' என சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கினார் பாரதி. பாரதியின் விருப்பப்படி, வீதிகளில் சிறுவர் கூட்டம் சேர்ந்து ஆடும் ஆட்டங்களில் மகிழ்ச்சியும் தாண்டவமாடும்.
இவை வெறும் விளையாட்டாக இல்லாமல், சிறுவர்களின் மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளித் தந்தன. ஆனால், இப்போது அறிவியல் வளர்ந்து குழந்தைகளின் குழந்தைத்தனத்தை முடக்கிப் போட்டுள்ளது. கலாசார அழிவுகள் நம் கண்முன் நடப்பதைப் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் கிராமப்புற விளையாட்டுகளும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.
இந்த நவீன யுகத்திலும் விளையாட்டுகள் உண்டு. ஆனால், அத்தனை விளையாட்டுகளையும் சிறுவர்கள் கணினியிலேயே விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் துப்பாக்கி, கார் துரத்தல் என வன்முறை விளையாட்டுகள். இத்தகைய விளையாட்டுகள் மூலம் உடல் மட்டுமன்றி, மூளையும் களைப்படைந்து சிந்தனை வறட்சி ஏற்படுகிறது. குழந்தைகள் படிப்பிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. போனால் போகட்டும் என்று வீதிக்கு வீதி கிரிக்கெட் சிறுவர்களை மட்டும் காணலாம்.
இக் காலக் கல்வி முறை, தொலைக்காட்சி, கணினி போன்றவை சிறுவர்களை முடக்கிப் போட்டுள்ளன. ஓடி ஆடி விளையாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம், ஒற்றுமை உணர்வு இந்தத் தலைமுறை குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. விளையாட வாய்ப்புக் கிடைத்தாலும், பள்ளி நேரம் போக, மற்ற நேரங்களில் தனிப் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ், இந்தி வகுப்பு, யோகாசனம் என அட்டவணை போட்டு குழந்தைகளை அனுப்பிவிடுகிறோம்.
ஒவ்வொரு தலைமுறையிலும் சுத்தமான காற்று, நீர்நிலைகள், மரங்கள் என ஒவ்வொன்றாக இழந்துகொண்டே வருகிறோம். பழங்காலத் தமிழகம் விளையாடி மகிழ்ந்த விளையாட்டுகளையும் இப்போது இழக்கத் தொடங்கியிருக்கிறோம். இது சாதாரண இழப்பு அல்ல. கலாசார, பண்பாட்டுச் சிதைவாக எண்ணி கவலைகொள்ளத்தக்கது.
ஏற்கெனவே, மனிதர்களின் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக அழியும் பறவையினங்கள், அரியவகை மரங்கள் அழிவு, சிறுதொழில்கள் அழிவு, நதிகள் அழிவு என அழிந்துகொண்டிருக்கும் பட்டியல் நீள்கிறது.
பழையன கழிதல் - இயல்புதான். ஆனால், நம்மை, நம் பண்பாட்டை மறக்கச் செய்யும் எந்தவொரு வளர்ச்சியும் வெறுப்பை ஏற்படுத்துகிறது. எங்கே செல்கிறோம் நாம்?
Monday, September 6, 2010
ஜிமெயிலின் புதிய அறிமுகம்-பூமராங்
நீங்கள் முக்கிய வேலை நிமித்தமாக நாளையோ அல்லது மறுநாளோ அல்லது வருகின்ற ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளோ பிசியாகி விடுவீர்கள், உங்களால் அந்த நாளில் இணையத்தில் பணிபுரிய இயலாது என வைத்துக் கொள்வோம். அந்த குறிப்பிட்ட நாளில் ஒரு நண்பருக்கு இமெயிலில் வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்ப வேண்டும், அல்லது அலுவலக நிமித்தமாக ஒரு முக்கிய மின்னஞ்சலை அந்த குறிப்பிட்ட நாளில் அனுப்ப வேண்டும்.இதோ நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்ய வந்து விட்டது பூமராங் பீட்டா! பயர்பாக்ஸ் மற்றும் கூகிள் குரோம் பிரவுசர்களுக்கான நீட்சி! இது பீட்டா நிலையில் இருப்பதால் இன்வைட் கோட் மூலமாகவே இதனை தரவிறக்க முடியும். இந்த தளத்தில் இன்வைட் கோட் கேட்கும் பொழுது ஹெச்டிஜி (இதுபோல் ஏதாவது)என்ற கோட் ஐ கொடுத்து தரவிறக்கி கொள்ளுங்கள். இது குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களுக்காக தனித்தனியாக தரப்பட்டுள்ளதால், உங்களிடமுள்ள பிரவுசருக்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இந்த நீட்சியை பதிந்து கொண்ட பிறகு ஒரு முறை பிரவுசரை மூடி பின் திறக்கவேண்டும். இனி உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து புதிய மின்னஞ்சலை உருவாக்கும் பொழுது, மேலே புதிதாக ஒரு பட்டன் வசதி சென்ட் லேட்டர் (பூமராங்) வந்திருப்பதை கவனிக்கலாம். இதிலுள்ள வசதிகளை பயன்படுத்தி, உருவாக்கும் மின்னஞ்சலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப முடியும். அதுவரை அந்த மின்னஞ்சல் உங்கள் ஜிமெயில் சர்வரில் இருக்கும். அதே போல ரிசீவ் செய்வதற்கும் (மீண்டும் இன்பாக்ஸில் வரும்) ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலை திறக்கும் பொழுது வலது மேல் புறம் வரும் பூமராங் பட்டனை க்ளிக் செய்து ண்ஞிடஞுஞீதடூஞு செய்து கொள்ளலாம்.
கோடியில் இருவர்
ஈரோடு அருகே உள்ள மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து, "ஏனுங்க... மரம் நடுவாரே...' என்று கேட்க ஆரம்பிக்கும் போதே, "அட... நாகராஜன் அண்ணனை கேக்குறீங்களா... அந்த வழியாப் போங்க...' என்று பெருமிதத்தோடு வழி காட்டுகின்றனர். தன்னுடைய வீட்டிலேயே, கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டி ருக்கிறார், 56 வயதான நாகராஜன். மிகச் சாதா ரணமான ஓட்டு வீடு. இவர், தன் 17வது வயதிலிருந்து, கடந்த 39 வருடங்களாக, விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை, நான் கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி, ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி, இன்று வரை வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல, இரண்டல்ல... பத்தாயிரத்திற்கும் அதிக மான மரங்கள்.
"ஆரம்பத்தில் என் செயல்களைக் கண்டு, பைத்தியக்காரன் என்று ஊரே சொன்னது...' எனச் சொல்லி சிரித்தார். பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில், மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள், "கீச்கீச்'சென கத்துகிறது என்று சொல்லும் போது, அவரது முகம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
தினமும் காலையிலும், மாலையிலும், மரம் நடுவதையும், அதைப் பராமரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த சவால்கள் பல...
சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகள் வெட்டிய சோகமும், சாலைப் பணி, மின்சார பணி என அவ்வப்போது பல சில்லறை காரணங் களைச் சொல்லி, மரங் களை சர்வ சாதாரணமாக வெட்டி வீசுகின்றனர் எனக் கூறும் போது, அவருடைய மனதில் உணரும் வலி, அப்படியே முகத்தில் வந்து படிகிறது.
குறிப்பாக, மரத்தின் கிளையை, ஒருநாள் சரக்குக்கும், பரோட்டா விற்கும் விறகாக மாற்றும் அற்ப மனிதர்களும் இருக் கின்றனர் என அறியும் போது, நமக்கே மனம் வெம்புகிறது. ஒவ்வொரு மரத்தை யும், தன் குழந்தையாகவே பாவிக்கிறார். ஆல், அரசு, புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என, எட்டு திசையிலும் வகை வகை யாய் வளர்த்தெடுக்கிறார். கடும் கோடையிலும் கூட, மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி தண்ணீர் பெற்று, செடிகளை காப்பாற்றி யிருக்கிறார். காஞ்சிக்கோவில் அருகில் இருக்கும் ஒரு மலைக்கோவிலைச் சுற்றி, விதவிதமான மரக்கன்றுகள் நடவு செய்து, அந்த மலைமேல் இருக்கும் பாறைகளுக் கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரை எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி, அதைக் காப்பாற்றி, இன்று அந்த மலையைச் சுற்றி அற்புதமாக மரங்களை வளர்த்து, அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஆச்சரியமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக் கிறது, இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று!
சத்தியமங்கலத்திலிருந்து பங்களா புதூர் அருகில், தூக்கநாயக்கன் பாளையம் வரும் வழியில் இருக்கிறது ஏழூர். ஏழூரிலிருந்து வடக்குத் திசையில் திரும்பி ஒரு மைல் கடந்தால் வருகிறது வேட்டுவன்புதூர். முதலில் வரவேற் கிறது மிகச்சிறிய ஒரு கடை. வெளியூர் ஆட்கள் என்று தெரிந்ததுமே, தானாகவே கேட்கின்றனர், "அய்யாச்சாமி அண்ணனை தேடி வந்தீர்களா?' என்று. "மரம் வளர்க்கிறாரே...' என்று இழுக்க, "அட... அய்யாச்சாமி அண்ணன்தான்... இந்தா, அப்பிடி போங்க... அந்த ஓட்டு வீடுதான்!' ஏழூர் சென்று அவரைச் சந்திக்கிறோம் என்ற தகவலைச் சொன்னபோதே, காஞ்சிக்கோவில் நாகராஜனும் நம்முடன் கிளம்பி விட்டார். கொளுத்தும் வெயிலில் அந்த வீட்டை அடைந்தோம். ஏழடி அகலத்தில், பதினைந்தடி நீளத்தில் ஒரு ஓட்டு வீடு. குனிந்து உள்ளே எட்டிப் பார்த்தோம். இரண்டு கயிற்று கட்டில்களில், இளைத்த உடம்போடு ஒரு தம்பதி... சத்தம் கேட்டு எழுந்து, "வாங்க...' என்று வரவேற்றனார். எலும்பும் தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் அய்யாச்சாமி, 74 வயதை தாண்டி விட்டார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை, மரங்களின் மேல் கொண்டிருந்த காதல், அய்யாச்சாமிக்கும் தொத்திக் கொண்டதாம். விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில், வேப்ப மர விதைகளை ஊன்றி, நீரூற்றி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது, ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள்.
சமூக விரோதிகள் திட்டம் தீட்டி கொள்ளை யடித்தது போக, இன்று மிஞ்சியிருப்பது 3,000 மரங்கள் தான். சிறு செடி முதல், முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும்போது, உடலும், மனதும் சிலிர்க்கிறது. இவர், கடும் கோடையிலும், வீட்டிலிருந்த தண்ணீரை எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார் என்பது சுவாரசியமான தகவல். "ஊட்டுல தண்ணியில்லைனா, சண்டை போடு வாங்க; இல்லன்னா கஞ்சி ஊத்த மாட்டாங்க. ஆனா, செடி செத்துப் போச்சுன்னா என்ன பண்றதுங்க...' என்ற போது, அருகில் எலும்பும், தோலுமாய் நின்ற அவரது மனைவி, வெட்கத்தில் சிரித்தார். இந்த தள்ளாத வயதிலும், அய்யாச்சாமி வீட்டில், பத்து, பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கிறது. பேசி, நெகிழ்ந்து, மனம் கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும்போது, "அந்த பள்ளத் தோரம் போனீங்கன்னா, மரங்களைப் பார்க்க லாம்...' என்று சொன்னார். கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம், பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க, வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் விஜயகுமார், நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டினார். எல்லாம் முடிந்து கிளம்பும் போது, வேட்டுவன்புதூரில் முதலில் நாம் பார்த்த அந்த சிறிய மளிகை கடையில், பெரியவர் அய்யாச்சாமி நமக்காக காத்திருந்தார். விடைபெற்றுக் கிளம்பும்போது, ஒரு குளிர்பான பாக்கெட்டை கட்டாயப்படுத்தி கையில் திணித்தார். வாகனத்தை இயக்கியபடி, அந்த பாக்கெட்டை வாயில் கடித்து உறிஞ்சினேன். இதுவரை அறியாத ஒரு சுவையை அதில் உணர்ந்தேன்.
இந்த மாமனிதர்களின் தியாகங்களை நினைத்து, மனதிற்குள் அலையடிக்கிறது. யாரோ சிலரின் தியாகங்களால் தானே இந்த உலகம் இயங்குகிறது. யாரோ போட்ட பாதையில் தானே நாம் எளிதாய் பயணிக்கிறோம். பறவையின் எச்சத்தில் விழுந்த மரம் வெளியிடும் ஆக்சிஜனைத் தானே சுவாசிக்கிறோம். ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை நினைக்கும் போது அவமானமாக இருந்தது. ஒரு மரம், தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கும் சுத்தமான காற்றின் மதிப்பு ஒரு கோடி ரூபாயாம். வறுமையின் பிடிக்குள் இன்னும் சிக்கித் தவிக்கும் இந்த மனிதர்கள் இந்த பூமிக்கு அர்ப்பணித்தது பல்லாயிரம் கோடிகள் என்றால் மிகையாகாது. விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்கவில்லை என்றால், அந்த விருதுக்குத் தான் கேவலமே ஒழிய, இந்த மாமனிதர் களுக்கில்லை. ஏனெனில், இவர்கள் எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை. இந்த மனிதர்களை, வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க, ஊக்கப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவானது. அவர்களின் அனுமதியோடு, எப்பாடுபட்டேயாயினும் அவர் களின் தியாகம் குறித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்து, வரும் காலத்திற்கு பதிவு செய்துவிட்டுப் போக வேண்டும். அடுத்து அவர்களைப் பற்றிய செய்திகளை, இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம் படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று, அவர்களின் மனதில் நிரப்ப வேண்டும். எல்லாம் ஒரு சிறு புள்ளியில் தானே ஆரம்பித் திருக்கும். இதோ ஒரு சிறுபுள்ளியில், பசுமைக் கான ஒரு பயணம் ஆரம்பமாகிறது. நாமும் சேர்ந்து தொடரச் செய்வோம்!
விநாயகர் சதுர்த்தி! - எப்படி வந்தது யானை முகம் ?
விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான்.
கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, "பிள்ளையார்' என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். "என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா?' எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.
யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.
விநாயகருக்கு, "சுமுகர்' என்ற பெயருண்டு. "சு' என்றால் மேலான அல்லது "ஆனந்தமான' என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.
விநாயகர் சதுர்த்தி நன்னாளில், "ஓம் கணேசாய நம' என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்.
Subscribe to:
Posts (Atom)