Sunday, March 6, 2011

முதல் உதவி-தலை கிறுகிறுத்தல்


இதயத்தின் மத்தியில் வலி, அழுத்தம், பிசைவதைப் போன்ற உணர்வு.
மேற்புற வயிற்றில் நீடித்த வலி.
நெஞ்சிலிருந்து பரவி, தோள்பட்டை, கழுத்து, தாடை, பற்கள், கைகள் என்று பரவும் வலி.
குறைந்த சுவாசம்.
மயக்கம், தலை கிறுகிறுத்தல்.
கொட்டும் வியர்வை

என்ன செய்யலாம்?
அவசர சிகிச்சை பிரிவை நாடவும்
மயக்கமடைந்தால் சிறிசிஸி-ஐத் தொடங்கவும். அதை மருத்துவரிடம் தெளிவுப்படுத்திவிட வேண்டும்.

மிருகங்களால் ஏற்படும் உபாதைகள்
வீட்டுப் பிராணிகளால் அதிகம் ஏற்படும் உபாதை இது. பூனையை விட நாய் அதிகம் கடிக்கும். ஆனால், பூனைக் கடியும் உடனடியாக

கவனிக்கப்பட வேண்டியதே. தடுப்பூசி போடப்படாத வீட்டுப் பிராணிகளாளும், பழக்கப்படாத பிராணிகள் கடிப்பதாலும் வெறிநாய்க்கடி

மிருகங்களால் இந்நோய் அதிகம் பரவும். முயல், அணில் போன்றவை ஆபத்தற்றவை.

என்ன செய்யலாம்?
சிறிய காயம்: தோலை அதிகம் துளைக்காத மெலிதான கடி என்றால் பயப்பட வேண்டாம். காயத்தை சுத்தமாக சோப், தண்ணீர் கொண்டு

கழுவலாம். கிருமிநாசினி போடலாம். கட்டு கட்டலாம்.

பெரிய காயம்- தோலைத் துளைத்த கடியாக இருந்தால், ரத்தப் பெருகினால், சுத்தமான துணி கொண்டு ரத்தத்தை கட்டுப்படுத்தி, உடனடி

மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
பரவும் நோய்: வீக்கம், சிவப்பாதல், அதிக வலி இருந்தால் உடனடி மருத்துவ உதவி பெற வேண்டும்.
வெறிநாய்க்கடி இருக்குமா என்ற சந்தேகம் இருந்தால், அல்லது கடித்த பிராணியைப் பற்றி தெரியாமல் இருந்தால், மருத்துவ உதவி பெற

வேண்டும்.
பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஜிமீtணீஸீus sலீஷீt  பெற்றுக் கொள்வது நல்லது.

மனிதக்கடி
சில சமயங்களில், விலங்குகளை விட மனிதர்கள் கடிப்பதால் ஏற்படும் பாதிப்பு தீவிரமடைந்து விடுகிறது. காரணம், மனிதர்களின் வாயில் உள்ள

பாக்டீரியாக்கள், சண்டை போடும்போது கடித்து விட்டால், அது மனிதக்கடி

என்ன செய்யலாம்?
ரத்தக் கசிவு இருந்தால் அழுத்தி, கட்டுப்படுத்தவும்
கிருமி நாசினி உபயோகிக்கவும்.
கட்டு கட்டலாம்.
அவசர மருத்துவ உதவி.

பூச்சிக்கடி, கொட்டு
பூச்சிக்கடி, கொட்டு மூலம் தோலில்  விஷத் தன்மை பரவும். எரிச்சல், அலர்ஜி ஏற்படும். பல சமயங்களில் இவை பெரிய பாதிப்பை

ஏற்படுத்துவதில்லை. சில சமயம், காய்ச்சல், மூட்டு வலி ஏற்படலாம். சிலருக்கு மட்டுமே தீவிர பாதிப்புகள் (Anaphylaxi) ஏற்படலாம்.

அறிகுறிகள்: வீக்கம், அதிர்ச்சி, சுவாதிப்பதில் தடை.

தொல்லை தருபவை என்று பார்த்தால் தேனீ, குளவி, நெருப்பு எறும்பு போன்றவை. சிலந்தி, மூட்டைப் பூச்சி, கொசு போன்றகைகளால் பாதிப்பு

அதிகமில்லை.
மெல்லிய பாதிப்புகளுக்கு
கொட்டு வாங்காமல் இருக்க, பாதுகாப்பான பகுதிக்குச் செல்லவும்.
கிரெடிட் கார்டு போன்ற தட்டையான பொருளால், கொடுக்கை சீவி விடவும். பிறகு, கடி வாயை சோப், தண்ணீர் போட்டு கழுவிவிடவும்.

கொடுக்கை பிடுங்கி எடுக்க முயற்சிக்க வேண்டாம் விஷம் பரவும்.
வீக்கமும் வலியும் அதிகரிக்காமல் இருக்க ஐஸ் துண்டால் ஒத்தடம் கொடுக்கலாம்.

தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம்
கடுமையான விளைவுகளுக்கு -
கீழ்க்கண்ட விளைவுகள் இருந்தால், உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவை தொடர்பு கொள்ளவும்.

சுவாசிப்பதில் சிரமம்
உதடு, தொண்டை வீக்கம், மயக்கம், கிறுகிறுப்பு, குழப்பம், அதிகப்படியான இதயத் துடிப்பு, எரிச்சல், குமட்டல், வாந்தி
பாதிக்கப்பட்டவருடன் இருக்கும்பட்சத்தில் கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம் -
அலர்ஜிக்கா ஏதாவது மருந்தை கையில் வைத்திருக்கிறாரா என்று பார்க்கவும்.
படுக்க வைக்கவும், கால்களை தலையை விட உயர்த்தி வைக்கவும்.
இறுக்கமான உடைகளைத் தளர்த்தவும், போர்வையால் அவரைப் போர்த்தவும், குடிக்க எதுவும் தர வேண்டாம்.
வாயில் ரத்தக்கசிவு இருந்தால் அல்லது அவர் வாந்தி எடுத்தால், பக்கவட்டாக அவரைப் படுக்க வைக்கவும். மூச்சுத் திணறாமல் இருக்கும்.
சுவாசம், இருமல் சீராக இல்லை என்றால், சிறிசிஸி-ஐத் தொடங்கவும்.

வெளிநாட்டு மோகம் போயே போச்சு...நாடு திரும்பும் இந்தியர்கள்!


 

அதென்ன இந்திய அமெரிக்கர், அமெரிக்க இந்தியர்? இரண்டு வகை இந்தியர்கள் உள்ளனர் அங்கே. ஒன்று, அமெரிக்காவில் பல தலைமுறையாகவே வாழ்ந்து வருவோரின் வாரிசுகள்; அவர்கள் முகத்தில், தோற்றத்தில் வேண்டுமானால் இந்திய களை கட்டும்; ஆனால், அவர்கள் முழுக்க முழுக்க அமெரிக்கர்கள். பல தலைமுறைகளுக்கு முன்பே செட்டில் ஆனவர்கள். சில ஆண்டுக்கு முன்பு குடியேறியவர்கள் இந்திய அமெரிக்கர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த இரண்டாமவரே இப்போது 25 லட்சம் பேர் வரை உள்ளனர். 

இதுபோல பிரிட்டனிலும் பல தலைமுறைகளுக்கு முன் சென்று செட்டில் ஆனவர்கள் பிரிட்டிஷ் இண்டியன்; சமீப ஆண்டுகளில் போய் செட்டில் ஆனவர்கள் இண்டியன் பிரிட்டிஷ். இவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டும் என்று தகவல் சொல்கிறது.

இந்தியாவுக்கு போயிடலாம்!

சமீபகாலமாக வெளிநாட்டு மக்கள் அதிக அளவில் இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். வரலாற்று, கலாசார, பாரம்பரிய இடங்கள், கோவா போன்ற பீச்
பகுதிகள், மகாபலிபுரம் போன்ற மகத்தான இடங்களைப் பார்க்கிறவர்கள், நமது வாழ்க்கை முறையையும் பார்த்து வியந்து போகின்றனர். காலை எழுந்ததும் காபி, டீ குடிப்பது முதல் இரவு படுப்பது வரை இந்தியர்களின் பழக்க வழக்கங்கள், விழாக்கள், சடங்குகள், சமுதாய அமைப்புகள் எல்லாம் வெளிநாட்டவரை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்று விடுகிறது. இந்தியா என்றாலே முகத்தை சுளித்தவர்கள், இப்போது மலைத்துப்போய் நிற்கின்றனர். செயற்கையான மேற்கத்திய வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்குகள் ஆகியவை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதை அவர்கள் உணர்கின்றனர். இப்போது பல தலைமுறைகளுக்கு முன் போய் செட்டில் ஆன அமெரிக்க இந்தியர், பிரிட்டிஷ் இந்தியர்களுக்கும் அதே நினைப்பு வந்து விட்டது. கடந்த இரண்டாண்டுகளில் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் வீடு வாங்கிக் குடியேறியவர்களில் இவர்களின் எண்ணிக்கையும் அடங்கும் என்றால் வியப்பில்லை.

வேலைக்கு இங்கே வர்றாங்க!

மாநகராட்சி பள்ளியில் படித்து, அரசு கல்லூரியில் பட்டம் முடித்து, வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்று பலரும் அலையும் நிலையில், அமெரிக்க இந்தியர்கள் பலரும் இப்போது தங்கள் பிள்ளைகளுக்கு இந்தியாவில் வேலை கிடைத்தால் போதும்; இங்கே அளவு அதிக சம்பளம் அங்கும் கிடைக்கிறதே என்று நினைக்கின்றனர். இந்தியாவில் உள்ள பல வெளிநாட்டு நிறுவனங்களில் இவர்கள் கணிசமாக உள்ளனர். மும்பை, டெல்லி, பெங்களூரு தெருக்களில் இவர்களை பார்க்கலாம். இந்தியோ, தமிழோ சரிவர வராவிட்டாலும், பல தலைமுறைக்கு முன் இவர்கள் மூதாதையர் இந்த மொழி பேசியவர்கள்தான். தடுக்கியாவது பேசி பழகி வருகின்றனர்.

அமெரிக்காவில், அமெரிக்கனாக பிறந்த அமெரிக்க இந்தியர் நிலை மட்டுமல்ல... பத்து, இருபது ஆண்டுக்கு முன் போய் செட்டில் ஆன இந்திய குடும்பத்தினருக்கும்கூட இதே நினைப்புதான்! சம்பாதித்தது போதும் என்று அவர்களில் பலரும் சென்னை, பெங்களூரு என்று நகரங்களிலும், மதுரையை தாண்டிய கிராமங்களிலும் வீடு, நிலங்களை வாங்க ஆரம்பித்து விட்டனர். இவர்கள் திரும்பி வர காரணம் வேறு; இனியும் தங்கள் பிள்ளைகள் அமெரிக்காவில், பிரிட்டனில் வளர்ந்தால், அவர்களின் பழக்கவழக்கம்தான் வரும்; அப்புறம் சந்ததியே மாறி விடும் என்ற பயம்தான் காரணம்.

ஐயோடா, இங்கேயுமா பர்கர்

கிழக்கு கடற்கரை சாலையில் போய்ப் பார்த்தால் சில அமெரிக்க, பிரிட்டிஷ் முகங்களை பார்க்கலாம். ஆனால், உண்மையில் அவர்கள் இந்தியர்கள். இங்கே வீடு வாங்கி குடியேறி இருப்பர். இவர்கள் தேடித் தேடி கீரை, காய்கறி என்று வாங்கி சாப்பிடுகின்றனர். பீட்ஸா, பர்கர் பக்கமே போக மாட்டார்கள். ‘‘அங்கேதான் பர்கர், பீட்ஸா என்று பிரிட்ஜ், மைக்ரோ ஓவன் சமாசாரங்களை சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது. இங்கே பார்த்தால் இவற்றை நம்மாட்கள் கொண்டாடுகின்றனர்; ஒரு தமாஷ் தெரியுமா? அமெரிக்கர்கள் கூட, காலையில் கேரட் போன்ற காய்கறிகளைத்தான் பச்சையாக சாப்பிடுகின்றனர்’’ என்கிறார் அவர்களில் ஒருவர்.

ஃபாரின் கனவு தேவைதான்; ஆனால் நாம் பலவற்றை இழப்போம் என்பது மட்டும் உறுதி என்று இவர்கள் சொல்லித்தான் நமக்குத் தெரிய வேண்டியிருக்கிறது.