-
Sunday, August 28, 2011
தூக்குத் தண்டனை நிறைவேற்றம் எப்படி?
கோர்ட் உத்தரவுப்படி, கைதியை தூக்கிலிடும் நடைமுறைகள் சிறையில் எவ்வாறு கடைபிடிக்கப்படுகின்றன, என்பது குறித்த தகவலை, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது கருணை மனுவை, ஜனாதிபதி நிராகரித்து விட்டதால், மூவரையும் செப். 9ம் தேதி தூக்கிலிட, சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி கைதிகள் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கான பணிகள் துவங்கியுள்ளன. தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், கைதிகளை தூக்கிலிடுவதற்கான முன்னேற்பாடுகளை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் நடைமுறைகள் குறித்து, சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட கைதிகள், சிறையில் தனித்தனி "செல்'லுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முன்பிருந்ததை விட மிக தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்புக்கு கூடுதல் எண்ணிக்கையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
"வெயிட்' பார்த்து ஒத்திகை:தண்டனையை நிறைவேற்றுவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை துவங்கும். கைதிகள் ஒவ்வொருவரின் உடல் எடை, உயரம் பரிசோதிக்கப்படும். கைதியின் உயரம் மற்றும் எடைக்கு ஏற்ப தூக்குக் கயிறு தயார் செய்யப்படும். பின்னர், கைதியின் எடைக்கு நிகரான பொருளை கயிறுடன் இணைத்து, தூக்கு மேடையில் தூக்கிட்டு ஒத்திகை நடத்தப்படும். கயிற்றின் தாங்கும் திறன், தொங்கும் இழுவை நீளம் பரிசோதிக்கப்பட்ட பின், அதே போன்ற உறுதி, நீளத்துடன் கயிறுகள் தயார் நிலையில் வைக்கப்படும்.
மருத்துவப் பரிசோதனை:தூக்குத் தண்டனை பெரும்பாலும் அதிகாலை நேரத்திலேயே நிறைவேற்றப்படும். தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, கைதிகளின் உடல் ஆரோக்கியத்தை டாக்டர்கள் பரிசோதிப்பர். மனநிலையும், உடல் நிலையும் சரியாக இருப்பதாக, டாக்டர்கள் சான்று அளித்ததும், அடுத்த நடவடிக்கை அமல்படுத்தப்படும்.
கடைசி ஆசை என்ன:தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பாக கைதியின் கடைசி ஆசை குறித்து, சிறை அதிகாரிகள் வினா எழுப்புவர். சம்பந்தப்பட்ட கைதி, தனது கடைசி ஆசை, எதிர்பார்ப்பை தெரிவிக்கலாம். அவை சட்டப்படியாக ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பின், ஆசையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தூக்குக்கு அழைத்து வருதல்:கைதியை தூக்கிலிடுவதற்கான நேரம் முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். காவலர்களின் பாதுகாப்பில் தூக்கு மேடைக்கு அழைத்து வரப்படும் கைதி, இரு கைகளும் பின்புறமாக கட்டப்பட்டு மேடையில் நிறுத்தப்படுவார். அவருக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவை, சிறை கண்காணிப்பாளர் வாசிப்பார்; உடன், டாக்டர்கள் இருப்பர். அதன் பின், கைதியின் முகம், தலை கறுப்பு நிற துணியால் மறைக்கப்படும். தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், "லிவர்' இயக்கப்படும். தூக்கு மேடையின் கீழ் கைதியின் காலடியில் இருக்கும் விசை நகர்ந்ததும், உடல் தொங்கி தண்டனை நிறைவேறும்.
13 நிமிடம் வரை தொங்கும்:தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதும் கைதியின் உடல், மேடையின் மீது 13 நிமிடம் வரை தொங்கியவாறு இருக்கும்; அதுவரை, அருகில் யாரும் செல்லமாட்டார்கள்.அதன் பின், டாக்டர்கள் பரிசோதித்து மரணம் சம்பவித்ததை அறிவிப்பர். பிறகு, உடல் இறக்கப்பட்டு தனி அறைக்கு கொண்டு செல்லப்படும். தண்டனை நிறைவேற்றத்தின் போது, சிறையிலுள்ள பிற கைதிகள் அவரவர் "செல்'லில் அடைக்கப்பட்டிருப்பர்.
தனித்தனியாக நிறைவேற்றம்:ஒன்றுக்கும் மேற்பட்ட கைதிகளை ஒரே நாளில் தூக்கிலிட வேண்டியிருந்தால், தனித்தனியாகவே தண்டனை நிறைவேற்றப்படும். ஒரு கைதியை தூக்கிலிடுவதற்கான நடைமுறை கால அவகாசம் முடிந்ததும், அடுத்தடுத்த கைதிகளுக்கு நிறைவேற்றப்படும். தண்டனை நிறைவேற்றப்பட்ட பின், உறவினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு, சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
லோக்பால் வார்த்தையை அறிமுகப்படுத்தியது யார்?
லோக்பால் மசோதா குறித்து ஆய்வு செய்து வரும் நிலைக்குழுவின் தலைவரான அபிஷேக் சிங்வியின் தந்தை தான், லோக்பால் என்ற வார்த்தையை, முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் என்ற தகவல், தற்போது தெரிய வந்துள்ளது.
எல்.எம்.சிங்வி என்பவர் தான், 1960ம் ஆண்டுகளில் லோக்பால் என்ற வார்த்தையை, முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர். இவர், 1962ல், லோக்சபாவில் சுயேச்சை எம்.பி.,யாக இருந்தார். "ஊழல் செய்வோரை தண்டிக்கும் வகையிலான ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்' என, இவர், அடிக்கடி லோக்சபாவில் வலியுறுத்தி வந்தார்.ஆனால், இவர் கூறிய வார்த்தை, அப்போது பிரதமராக இருந்த நேருவுக்கு சரியாக புரியவில்லை. "இந்த விலங்கு, எந்த மிருகக் காட்சி சாலையைச் சேர்ந்தது' என்பதை, நீங்கள் தான் கூற வேண்டும்' என வேடிக்கையாக, சிங்வியிடம் நேரு கூறினார்.
இதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான அமைப்பு என்பதற்கு, சமஸ்கிருதத்தில் இருந்து, வார்த்தையை கண்டறிந்து, இதன் பின், லோக்பால் என்ற இந்தி வார்த்தையை, முதல் முதலில் சிங்வி அறிமுகப்படுத்தினார்."லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்த இவர், சுயேச்சை எம்.பி.,யாகவும் இருந்தார். தற்போது இவரது மகனும், காங்கிரசைச் சேர்ந்தவருமான அபிஷேக் மனு சிங்வி தான், நிலைக்குழு தலைவராக இருந்து, லோக்பால் மசோதாவை ஆய்வு செய்து வருகிறார்.
இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, நேற்று முன்தினம் ராஜ்யசபாவில் பேசுகையில், "லோக்பால் மசோதாவுக்கு, இறுதி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலைக்குழுவின் தலைவர் அபிஷேக் சிங்வியின் தந்தை தான், லோக்பால் என்ற வார்த்தையை முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர். இது, அபிஷேக் சிங்விக்கு பெருமை அளிக்கும் விஷயம். எனவே, அபிஷேக் சிங்வி, லோக்பால் மசோதா விவகாரத்தில், இந்த பெருமையையும், பாரம்பரியத்தையும் மனதில் வைத்து, செயலாற்ற வேண்டும்' என்றார்.
Thanks
Dinamalar.

Subscribe to:
Posts (Atom)