Friday, June 25, 2010

ekuts.com - Gallery

ekuts.com - Gallery

Wednesday, June 23, 2010

இனியவை நாற்பது அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு பேரணி





நிகழ்ச்சி நிரல்




ஜூன் 23,2010

  • 10:30 : காலை : தொடக்க விழா
  • 4:00 : மாலை : எழிலார் பவனி

  • 9:30 : காலை : மங்கல இசை
  • 10:30 : காலை : கலை நிகழ்ச்சிகள்
  • 12:00 : பிற்பகல் : பொதுக் கண்காட்சியைத் திறந்து வைத்தல்
  • 12:00 : பிற்பகல் : புத்தகக் காட்சியினைத் திறந்து வைத்தல்
  • 2:30 : பிற்பகல் : கவியரங்கம்
  • 4:30 : மாலை : கருத்தரங்கம்
  • 5:30 : மாலை : கலை நிகழ்ச்சிகள்
  • 6:30 : மாலை : கலை நிகழ்ச்சிகள்
  • 7:30 : இரவு : கலை நிகழ்ச்சிகள்
  • 9:00 : இரவு : கலை நிகழ்ச்சிகள்

  • 9:00 : காலை : மங்கல இசை
  • 10:00 : காலை : கவியரங்கம்
  • 11:30 : காலை : பட்டி மன்றம்
  • 4:00 : மாலை : சிறப்புக் கருத்தரங்கம்
  • 5:30 : மாலை : கலைநிகழ்ச்சிகள்
  • 6:30 : மாலை : கலைநிகழ்ச்சிகள் - தொல்காப்பியர் அரங்கம், கொடிசியா வளாகம்
  • 7:30 : இரவு : கலை நிகழ்ச்சிகள் - மாநாட்டு வளாகம்

  • 9:00 : காலை : மங்கல இசை - மாநாட்டு வளாகம்
  • 10:00 : காலை : கவியரங்கம் - மாநாட்டு வளாகம்
  • 11:30 : காலை : கருத்தரங்கம்
  • 2:30 : பிற்பகல் : கருத்தரங்கம்
  • 4:30 : மாலை : பட்டிமன்றம்
  • 5:30 : மாலை : கலை நிகழ்ச்சிகள் - தொல்காப்பியர் அரங்கம், கொடிசியா வளாகம்
  • 6:30 : மாலை : கலைநிகழ்ச்சிகள் - தொல்காப்பியர் அரங்கம், கொடிசியா வளாகம்
  • 6:30 : மாலை : கலைநிகழ்ச்சிகள் - மாநாட்டு வளாகம்
  • 7:00 : இரவு : கலைநிகழ்ச்சிகள் - மாநாட்டு வளாகம்
  • 8:30 : இரவு : கலைநிகழ்ச்சிகள் - மாநாட்டு வளாகம்

  • 9:00 : காலை : மங்கல இசை - மாநாட்டு வளாகம்
  • 10:00 : காலை : கருத்தரங்கம்
  • 2:00 : பிற்பகல் : கலை நிகழ்ச்சிகள் - மாநாட்டு வளாகம்
  • 2:30 : பிற்பகல் : கலை நிகழ்ச்சிகள் - மாநாட்டு வளாகம்
  • 4:00 : மாலை : நிறைவு விழா

ஜூன் 27,2010

ஜூன் 27,2010
மங்கல இசை
காலை 9.00 - 9.45 மணி
மங்கல இசை: திருக்குவளை சகோதரிகள்

இடம் : மாநாட்டு வளாகம்
கருத்தரங்கம்
காலை 10.00 மணி
கருத்தரங்கம்: வித்தாக விளங்கும் மொழி : நடிகர் திரு. சிவக்குமார்
தொடக்கவுரை: பேராசிரியர் சுப. வீரபாண்டியன்
- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்: கா. பீட்டர் அல்போன்ஸ்
- யாதும் ஊரே, யாவரும் கேளிர்: அருட்தந்தை. மா. ஜெகத் கஸ்பர்
- உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றே: பேராசிரியர் பர்வீன் சுல்தானா
- தீதும் நன்றும் பிறர் தர வாரா: வழக்கறிஞர். தா. ராமலிங்கம்
- போரைப்புறந்தள்ளி பொருளை பொதுவாக்கவே: வழக்கறிஞர் அ. அருள்மொழி
- ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே: கம்பம் பெ. செல்வேந்தின்
- அகமொன்றும் புறமொன்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து: திருச்சி செல்வேந்திரன்
கலை நிகழ்ச்சிகள்
பகல் 2.00 - 2.30 மணி
தமிழ்நாட்டு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம் வழங்கும் கலை நிகழ்ச்சி

இடம் : மாநாட்டு வளாகம்
கலை நிகழ்ச்சிகள்
பகல் 2.30 - 3.30 மணி
பாலசாயி குழுவினர் வழங்கும் கலந்திசை நிகழ்ச்சி

இடம் : மாநாட்டு வளாகம்
நிறைவு விழா
வரவேற்புரை: கே.எஸ். ஸ்ரீபதி, இ.ஆ.ப., தலைமைச்செயலாளர்
சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு: ஆ. ராசா, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
முன்னிலை: ப. சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சர்
தலைமை: பிரணாப் முகர்ஜி, மத்திய நிதியமைச்சர்
சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியதற்காக கணியன் பூங்குன்றனார் பரிசு வழங்கி, உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாடு, தமிழ் இணைய மாநாடு ஆகியவற்றின்நிறைவுப்பேருரை: தமிழக முதல்வர் மு. கருணாநிதி
நன்றியுரை: கா. அலாவுதீன், இ.ஆ.ப., தனி அலுவலர், உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாடு

ஜூன் 26,2010

ஜூன் 26,2010
மங்கல இசை
காலை 9.00 - 9.45 மணி
மங்கல இசை: திருப்பாம்பரம் சகோதரர்கள்

இடம் : மாநாட்டு வளாகம்
கவியரங்கம்
காலை 10.00 மணி
கவியரங்கம்: தமிழுக்கும் அமுதென்று பேர்
தலைமை: கவிஞர் வாலி
தொடக்கம்: கவிஞர் மு. மேத்தா
- இனிமையில்: கவிஞர் பா. விஜய்
- இளமையில்: கவிஞர் பழனி பாரதி
- தூய்மையில்: கவிஞர் தணிகைச் செல்வன்
- எழுச்சியில்: கவிஞர் இளம்பிறை
- சுவையில்: கவிஞர் உமா மகேஸ்வரி
- புதுமையில்: கவிஞர் தமிழ் தாசன்

இடம் : மாநாட்டு வளாகம்
தலைமை : கவிஞர் வாலி
கருத்தரங்கம்
காலை 11.30 மணி
கருத்தரங்கம்: செம்மொழித்தகுதி
தலைமை: பேராசிரியர் வா. செ. குழந்தைசாமி
தொடக்கவுரை: கவிஞர் மன்னர் மன்னன்
- தொன்மையில்: தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
- இலக்கியச் செழுமையில்: பேராசிரியர் ஆறு. அழகப்பன்
- பண்பாட்டுக்கொடையில்: பேராசிரியர் வளனரசு
- உலகப்பொதுமையில்: பேராசிரியர் இளம்பிறை மணிமாறன்
- பன்மொழிகளை ஈன்றதில்: முனைவர் ஜி. ஜான் சாமுவேல்
- இலக்கணச் செப்பத்தில்: பேராசிரியர் இலக்குவனார் மறைமலை
கருத்தரங்கம்
பிற்பகல் 2.30 மணி
கருத்தரங்கம்: கடல் கடந்த தமிழும் தமிழரும்
தலைமை: முனைவர் க.ப. அறவாணன்
- சிங்கப்பூர்: நா. ஆண்டியப்பன்
- மலேசியா: பெ. ராஜேந்திரன்
- அமெரிக்கா: பால்பாண்டியன், முனைவர் அழகப்பா ராம்மோகன்
- இங்கிலாந்து: டாக்டர். ஆர். நித்தியானந்தா, டாக்டர். என். ராம்
- சுவிட்சர்லாந்து: கல்லாறு. சத்திஷ்
- பிரான்சு: பாலகிருஷ்ணன்
- ஆஸ்திரேலியா: பாலா. எஸ். பாலேந்திரா
பட்டிமன்றம்
மாலை 4.30 மணி
பட்டிமன்றம்: தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு
வெள்ளித்திரைக்கே!
சின்னத்திரைக்கே!
அச்சுத்துறைக்கே!
நடுவர்: பேராசிரியர் சாலமன் பாப்பையா
தொடக்கவுரை: புதுச்சேரி மாநில முதல்வர் வைத்திலிங்கம்
 - வெள்ளித்திரைக்கே! : திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, வாகை. சந்திரசேகர்
- சின்னத்திரைக்கே! : ஐ. லியோனி, நடிகர் எஸ்.வி. சேகர்
- அச்சுத்துறைக்கே! : திருப்பூர் கிருஷ்ணன். நக்கீரன் ஆர். கோபால்
கலைநிகழ்ச்சிகள்
மாலை 6.30 - 7.00 மணி
பத்மபூஷன் திரு. டி.என். கிருஷ்ணன் குழுவினர் வழங்கும் வயலின் இசை

இடம் : மாநாட்டு வளாகம்
கலைநிகழ்ச்சிகள்
இரவு 7.00 - 8.30 மணி
திருமதி கிருஷ்ண குமாரி நரேந்திரன் குழுவினரின் முத்தமிழ் முழக்கம் நாட்டிய நாடகம்

இடம் : மாநாட்டு வளாகம்
கலைநிகழ்ச்சிகள்
இரவு 8.30 மணி
டிரம்ஸ் சிவமணி வழங்கும் இசை நிகழ்ச்சி

இடம் : மாநாட்டு வளாகம்
கலை நிகழ்ச்சிகள்
மாலை 5.30 - 6.15 மணி
நடிகை ரோகிணி பங்கேற்கும் பிரசன்னா ராமசாமியின் பாஞ்சாலி சபதம்

இடம் : தொல்காப்பியர் அரங்கம், கொடிசியா வளாகம்
தலைமை : நடிகை ரோகிணி
கலைநிகழ்ச்சிகள்
மாலை 6.30 - 7.30 மணி
ஆ. மங்கை வழங்கும் பனித்தீ - நாடகம்

இடம் : தொல்காப்பியர் அரங்கம், கொடிசியா வளாகம்

ஜூன் 25,2010

ஜூன் 25,2010
மங்கல இசை
காலை 9.00 - 9.45 மணி வரை
மங்கல இசை: இஞ்சிக்குடி சுப்பிரமணியம் குழுவினர்
கவியரங்கம்
காலை 10.00
கவியரங்கம்: கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்கக்கூட்டம்
தலைமை: கவிப்பேரரசு வைரமுத்து
தொடக்கம்: கவிஞர் ஈரோடு தமிழன்பன்
- தன்மானம் காக்க: கவிஞர் நெல்லை ஜெயந்தா
- தாய்த்தமிழ் வளர்க்க: முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன்
- அடையாளம் மீட்க: கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா
- ஆதிக்கம் அகற்றிட: பேராசிரியர் கருணாநிதி
- சமத்துவம் பூக்க: கவிஞர் விவேகா
- பகுத்தறிவு தழைக்க: கவிஞர் நா. முத்துக்குமார்
பட்டி மன்றம்
காலை 11.30 மணி
பட்டி மன்றம்: தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே! இடைக்கால இலக்கியமே! இன்றைய இலக்கியமே!
நடுவர்: பேராசிரியர் சோ. சத்திய சீலன்
தொடக்கவுரை: குமரி அனந்தன்
- சங்க இலக்கியமே: இலங்கை ஜெயராஜ், முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
- இடைக்கால இலக்கியமே: அ. அறிவொளி, தேச மங்கையர்க்கரசி
- இன்றைய இலக்கியமே: பேராசிரியர் அரங்க மல்லிகா, தென்னவன்
சிறப்புக் கருத்தரங்கம்
மாலை 4.00 மணி
சிறப்புக் கருத்தரங்கம்: எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
தலைமை: முதல்வர் கருணாநிதி
கருத்துரை வழங்குவோர்
கே.வி. தங்கபாலு
சீத்தாராம் யெச்சூரி, எம்.பி.,
கி. வீரமணி
மருத்துவர் ச. ராமதாசு
இல. கணேசன்
டி. ராஜா, எம்.பி.,
ராம. வீரப்பன்
தொல். திருமாவளவன், எம்.பி.,
ஸ்ரீதர் வாண்டையார்
கே.எம். காதர் மொகிதீன்
பூவை ஜெகன் மூர்த்தி, எம்.எல்.ஏ.,
செல்லமுத்து
எல். சந்தானர்
எம். பஷீர் அகமது

கலை நிகழ்ச்சிகள்
மாலை 7.30 - 9.00 மணி
பிரசன்னா ராமசாமி இயக்கும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கிராமியக் கலை நிகழ்ச்சி

இடம் : மாநாட்டு வளாகம்
கலைநிகழ்ச்சிகள்
மாலை 5.30 - 6.30 மணி
கூத்துப்பட்டரை முத்துச்சாமி வழங்கும் ஆற்றாமை நாடகம்
கலைநிகழ்ச்சிகள்
மாலை 6.30 - 7.30 மணி
பூலவாடி முத்து மீனாட்சி வழங்கும் அண்ணன்மார் கதை

இடம் : தொல்காப்பியர் அரங்கம், கொடிசியா வளாகம்

ஜூன் 24,2010

ஜூன் 24,2010
மங்கல இசை
காலை 9.30 - 10.30 மணி வரை
மங்கல இசை:  செம்பனார் கோவில் சகோதரர்கள்
கலை நிகழ்ச்சிகள்
காலை 10.30 - 11.30 மணி வரை
* லாரன்ஸ் குழுவினரின் மாற்றத்திறனாளிகள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள்
* பாலு குழுவினர் வழங்கும் சலங்கை ஆட்டம்
* சின்னப்பொண்ணு குமார் மற்றும் பலர் வழங்கும் கிராமியப்பாடல்கள்
பொதுக் கண்காட்சியைத் திறந்து வைத்தல்
பகல் 12.00 மணி
பொதுக் கண்காட்சியைத் திறந்து வைத்தல்
முன்னிலை: மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரி
சிறப்பு விருந்தினர்: மலேசிய அரசின் மனிதவளத்துறை அமைச்சர் டாக்டர். சுப்பிரமணியம்
புத்தகக் காட்சியினைத் திறந்து வைத்தல்
புத்தகக் காட்சியினைத் திறந்து வைத்தல்
முன்னிலை: மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன்
சிறப்பு விருந்தினர்: மாலத்தீவு அரசின் சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத்துறை இணையமைச்சர் அகமது நசீர்
கவியரங்கம்
பிற்பகல் 2.30 மணி கவியரங்கம்: புதியதோர் உலகம் செய்வோம்
தலைமை: கவிக்கோ அப்துல் ரஹ்மான்
தொடக்கம்: பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
- கலையில்: பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம்
- பண்பாட்டில்: பேராசிரியர் அப்துல் காதர்
- கல்வியில்: கவிஞர் பொன்னடியான்
- அறிவியலில்: கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி
- இலக்கியத்தில்: அருட்திரு. வின்சென்ட் சின்னதுரை
- அரசியலில்: கவிஞர் கவிதைப்பித்தன்
கருத்தரங்கம்
மாலை 4.30 மணி
கருத்தரங்கம்: சமயம் வளர்த்த தமிழ்
தலைமை: சாந்தலிங்க ராமசாமியடிகளார்
தொடக்கவுரை: பேராயர் சின்னப்பா
- சைவம்: திருமதி சாரதா நம்பி ஆரூரான்
- சமணம்: சு. ஸ்ரீபால், இ.கா.ப., (ஓய்வு)
- வைணவம்: பேராசிரியர் தெ. ஞானசுந்தரம்
- கிறிஸ்துவம்: அமுதன் அடிகள்
- இஸ்லாம்: பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
கலை நிகழ்ச்சிகள்
மாலை 5.30 - 6.30 மணி வரை
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கும் வலியறுப்பு - நாடகம்
கலை நிகழ்ச்சிகள்
மாலை 6.30 - 7.30 மணி வரை
எழிலரசி ஜோதிமணியின் வீணை இசை
கலை நிகழ்ச்சிகள்
இரவு 7.30 - 9.00 மணி வரை
பத்மபூஷன் டாக்டர் பத்மா சுப்ரமணியம் நிருத்யோதயா குழுவினர் வழங்கும் கலைஞர் அவர்களின் போர்வாளும் பூவிதழும் நாட்டிய நாடக நிகழ்ச்சி
கலை நிகழ்ச்சிகள்
இரவு 9.00 - 10.00 மணி வரை
இலங்கை நாட்டிய கலாமந்திர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் குழுவினரின் இந்திய வம்சாவளி மரபு நடன நிகழ்ச்சி

முந்தய மாநாடுகள்

எண்மாநாடு பெயர்வருடம்ஊர்மாநிலம் /நாடு
1.முதல் உலக தமிழ் மாநாடு1966கோலாலம்பூர்மலேசியா
2.இரண்டாம் உலக தமிழ் மாநாடு1968சென்னைதமிழ் நாடு, இந்தியா
3.மூன்றாம் உலக தமிழ் மாநாடு1970பாரிஸ்பிரான்ஸ்
4.நான்காம் உலக தமிழ் மாநாடு1974யாழ்ப்பாணம்இலங்கை
5.ஐந்தாம் உலக தமிழ் மாநாடு1981மதுரைதமிழ் நாடு, இந்தியா
6.ஆறாம் உலக தமிழ் மாநாடு1987கோலாலம்பூர்மலேசியா
7.ஏழாவது உலக தமிழ் மாநாடு1989மொரிசியஸ்
8.எட்டாவது உலக தமிழ் மாநாடு1995தஞ்சாவூர்தமிழ் நாடு, இந்தியா
9.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு2010கோயம்புத்தூர் தமிழ் நாடு, இந்தியா

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோலாகலமாக தொடங்கியது


கோவை:கோவையில் ஐந்து நாள் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோலாகலமாக தொடங்கியது . முதல்வர் கருணாநிதி தலைமையில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைக்கிறார். மாநாட்டில் பங்கேற்க ஏராளமான வெளிநாட்டினர் உட்பட லட்சக்கணக்கான மக்கள் கோவை நகரில் குவிந்துள்ளனர்.தமிழ் மொழியை, செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முதலில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் இன்று முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, பணிகள் அனைத்தும் சிறப்பாக முடிவடைந்துள்ளன. ரூ.300 கோடியில் மாநகரில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு பணிகளும் செய்யப்பட்டுள்ளன.மாநாடு நடக்கும் கொடிசியா வளாகத்தில் 4.4 லட்சம் சதுர அடி பரப்பில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலில் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை அமர்ந்து துவக்க விழாவை பார்க்கலாம். பல்வேறு தலைப்புகளில் நடக்கும் ஆய்வரங்கத்திற்கு 21 தனி அரங்குகள் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

துவக்க விழா, மாநாட்டு பொது அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடக்கும் இவ்விழாவில் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் கலந்து கொண்ட மாநாட்டை துவக்கி வைக்கிறார். தமிழக ஆளுநர் பர்னாலா, வெளிநாட்டு தமிழறிஞர்கள் ஜார்ஜ் ஹார்ட்(அமெரிக்கா), சிவத்தம்பி(இலங்கை), கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.விழாவில், பின்லாந்து தமிழ் மொழி அறிஞர் அஸ்கோ பர்போலாவுக்கு ‘கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை’ பிரதிபா பாட்டீல் வழங்குகிறார். பின்னர், மாலை 4 மணிக்கு இனியவை&40 என்ற பெயரில் தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடக்கிறது. இதில் 40 அலங்கார ஊர்திகளும், 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. இதை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.அவிநாசி ரோட்டில் அரசு மருத்துவ கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத மேடையில் இருந்து குடியரசு தலைவரும், முதல்வரும் பேரணியை பார்வையிடுகின்றனர். மத்திய மாநில அமைச்சர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் ஊர்வலத்தை பார்ப்பதற்கு ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு அவிநாசி ரோட்டில் தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கு மலேசிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சுப்ரமணியம் தலைமையில் அந்நாட்டு குழுவினர், மாலத்தீவு சுற்றுலாத் துறை இணையமைச்சர் அகமது நசீர் தலைமையில் 200 பேர் அடங்கிய குழுவினர், இலங்கையில் இருந்து 40 பேர் அடங்கிய குழுவினர் உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவை வந்துள்ளனர்.இதேபோல், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பை, டில்லி, கொல்கத்தாவில் இருந்து பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் கோவையில் குவிந்துள்ளனர். மாநாட்டை ஒட்டி, கோவை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஊர்வல பாதை முழுவதும் அலங்கார விளக்குகளாலும், மாநாட்டு இலச்சினை தாங்கிய கொடிகளாலும் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. ஊர்வலப்பாதை நெடுக ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மாநாட்டு பந்தலை சுற்றிலும் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் நடக்கும் நிகழ்வுகளை கூட துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் ராட்சத பலூனில் நவீன கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. தமிழக டிஜிபி லத்திகாசரண் தலைமையில் கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், இரண்டு ஐ.ஜி.க்கள், 8 டிஐஜிக்கள் உட்பட பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The 10 Most Amazing Flowers in the World

Check out this SlideShare Presentation:

Monday, June 21, 2010

சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் : அறிவியலாளர்கள் எச்சரிக்கை

கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.

வாசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8 ஆம் நாளன்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.

“நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்,” என நாசாவின் ஈலியோஇயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் ஃபிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை எற்படுத்தும். இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தொழிநுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும்.

இருந்தாலும் "பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்" (coronal mass ejections, CMEs) மனித இனத்தைப் பாதிக்கும் எனக்கூறப்படுகிறது. இது 2012 ஆம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும்.

அதிதொழிநுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை எற்ற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.