Tuesday, July 6, 2010

பாலை​யா​கும் செம்​மொழி நிலம்


தமி​ழுக்​குச் செம்​மொழி எனும் தகு​திப்​பாடு உரு​வாக முழு​மு​தற் கார​ண​மாக இருப்​பது சங்க இலக்​கி​யம்​தான்.​ அந்​தச் சங்க இலக்​கி​யங்​கள் திணைக்​கோட்​பா​டு​களை அடிப்​ப​டை​யா​கக் கொண்​டவை.​

​ தமிழ் நிலம் குறிஞ்சி,​​ முல்லை,​​ மரு​தம்,​​ நெய்​தல்,​​ பாலை என ஐவ​கைத் திணை​க​ளா​கப் பகுக்​கப்​பட்​டுள்​ளன.​ இந்த ஐவ​கைத் திணை​க​ளுக்​கும் நிலம் என்​பது பொதுக் கூறாக உள்​ளது.​ அவற்​றோடு நீர் சேரு​கிற அள​வைப் பொறுத்தே திணை வேறு​பாடு உண​ரப்​ப​டு​கி​றது.​ ​

​ நீரே இல்​லாத வறண்ட நிலம் பாலை​யா​க​வும்,​​ நீர் வளம் நிரம்​பிய வயல் சூழ்ந்த நிலம் மரு​த​மா​க​வும்,​​ அலை​மே​வும் கடற்​கரை நிலம் நெய்​த​லா​க​வும்,​​ மழைப்​பொ​ழிவு மிகுந்த வனப்​ப​குதி முல்​லை​யா​க​வும்,​​ மழைப்​பொ​ழி​வும் பனி​யும் கொண்ட மலை நிலம் குறிஞ்​சி​யா​க​வும் கொள்​ளப்​ப​டு​கி​றது.​ இங்கு திணை​யைத் தீர்​மா​னிக்​கும் சிறப்​புக்​கூ​றாக இருப்​பது நீர்​தான்.​

தமி​ழைச் செம்​மொ​ழி​யா​கக் கொண்​டா​டு​கிற அரசு,​​ தமிழ் நிலத்​தை​யும் அதன் நீர்​வள ஆதா​ரங்​க​ளை​யும் பாது​காக்க என்ன செய்​தி​ருக்​கி​றது என்​பது விடை​யற்ற கேள்​வி​யாக நம்​முன் விரி​கி​றது.​

​ இரண்​டா​யி​ரம் ஆண்​டு​க​ளுக்கு முந்​தைய தமி​ழ​ரின் நீர்​வள மேலாண்​மைத் திறனை வியந்து போற்​றிய தமி​ழக முதல்​வர்,​​ தமது ஆட்​சி​யில் நிகழ்த்​தப்​ப​டும் நீர்​வள ஆதா​ரங்​க​ளின் மீதான வன்​முறை எத்​த​கைய வர​லாற்று எதிர்​வி​ளை​வு​களை ஏற்​ப​டுத்​தும் என்​ப​தைக் கவ​னிக்​கத் தவ​றி​விட்​டார்.​ இப்​பொ​ழுது அரசு மேற்​கொண்​டு​வ​ரும் நீர்​வள ஆதா​ரப் பரா​ம​ரிப்​புத் திட்​டங்​க​ளெல்​லாம் கைப்​புண்​ணுக்கு மருந்து போடும் தாற்​கா​லிக வேலையே தவிர,​​ புரை​யோ​டிப்​போன புற்​று​நோ​யைக் குணப்​ப​டுத்​தக் கூடி​ய​தல்ல.​

​ தமி​ழ​கத்​தின் முக்​கி​ய​மான நீர்​வள ஆதா​ரங்​க​ளான நதி​கள் அனைத்​தும் மிகக் கடு​மை​யான சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​புக்கு ஆட்​பட்​டுள்​ளன.​ அவற்றி​லி​ருந்து நதி​களை மீட்​டெ​டுக்​கக்​கூ​டிய தொலை நோக்​குத்​திட்​டம் எது​வும் அர​சி​டம் இல்லை என்​பது மிக​வும் வருத்​தத்​துக்​கு​ரி​யது.​ ​

​ தொழிற்​சா​லைக் கழி​வு​க​ளால் நதி​கள் நஞ்​சாக்​கப்​ப​டு​வது ஒரு​பு​ற​மென்​றால் மறு​பு​றம் மணற்​கொள்ளை தொட​ரு​வ​தால் நதி​கள் தமது அடை​யா​ளத்தை இழந்து நிற்​கின்​றன.​ ​

​ முல்​லைப் பெரி​யாறு பிரச்​னை​யில் கேரள அர​சும்,​​ காவிரி நதி​நீர்ப் பங்​கீட்​டில் கர்​நா​டக அர​சும் உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை அவ​ம​தித்​து​விட்​ட​தா​கக் கூறி​வ​ரும் தமி​ழக முதல்​வர் ​ மட்​டும் என்ன உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை மதிக்​கவா செய்​கி​றார்?​ கடந்த ஜன​வரி 6-ம் தேதி முதல் நொய்​ய​லாற்​றில் திருப்​பூர் சாயக்​க​ழிவை வெளி​யேற்​றா​வண்​ணம் தடுக்க ​(ழங்ழ்ர்​ ஈண்ள்​ஸ்ரீட்​ஹழ்ஞ்ங்)​​ முறையை அமல்​ப​டுத்த உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பு​ரைத்​தது.​ அந்​தத் தீர்ப்பு சாக்​க​டை​யில் கரைத்த சந்​த​ன​மாக மாறி​விட்​டது.​ இன்​ற​ள​வும் நொய்​ய​லாற்​றில் திருப்​பூர் சாயக்​க​ழிவு நீர் வெளி​யேற்​றப்​ப​டு​வது உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை அலட்​சி​யப்​ப​டுத்​து​கிற மாநில அர​சின் மெüன சம்​ம​தத்​தோ​டு​தான் என்​றால் அது மிகை​யா​காது.அண்​மை​யில் மத்​திய ஜவு​ளித்​துறை அமைச்​சர் தயா​நிதி மாறன் தென்​னிந்​திய நதி​களை இணைக்க வேண்​டி​ய​தன் அவ​சி​யம் குறித்​துப் பேசி​னார்.​ நதி​களை இணைப்​ப​தற்கு முன்​னர் நதி​க​ளில் கலக்​கப்​பட்​டு​வ​ரும் தொழிற்​சா​லைக் கழி​வு​க​ளைத் தடுக்க வேண்​டி​யது அவ​சி​யம் என்​ப​தனை தயா​நிதி புரிந்​து​கொள்ள வேண்​டும்.​ இப்​போ​தைய சூழ​லில் தமி​ழ​கத்​தின் எந்த நதி​யும் இணைப்​புக்கு ஏற்​ற​தாக இல்லை.​ அந்த அள​வுக்கு நதி​க​ளின் சுற்​றுச்​சூ​ழல் கடு​மை​யா​கப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.​ பவானி-​நொய்​யல் இணைப்பு தோல்​வி​ய​டைந்​த​தன் பின்​னணி இதற்​குத் தக்க சான்​றாக உள்​ளது.​

​ 1953-ம் ஆண்டு கட்​டப்​பட்ட கீழ்​ப​வானி அணை​யின் நீர்,​​ பாச​னத்​துக்​குப் பயன்​ப​டுத்​தி​யது போக உப​ரி​யாக உள்ள நீர் நொய்​ய​லாற்​றுக்​குத் திருப்​பி​வி​டப்​பட்​டது.​ இவ்​வாறு நொய்​ய​லாற்​றில் திருப்​பி​வி​டப்​பட்ட நீரின் அளவு 2.76 டிஎம்சி ஆகும்.​ இந்த 2.76 டிஎம்சி நீரை​யும் சின்​ன​முத்​தூர் அருகே கட்​டப்​பட்​டுள்ள தடுப்​ப​ணை​யில் தடுத்து ஒன்​பது கி.மீ.​ நீள​முள்ள இணைப்​புக் கால்​வா​யின் மூல​மாக ஆத்​துப்​பா​ளை​யம் நீர்த்​தேக்​கத்​தில் சேமிக்​கப்​பட்டு,​​ கரூர் மாவட்​டத்​தி​லுள்ள அஞ்​சூர்,​​ துக்​காட்சி,​​ அத்​திப்​பா​ளை​யம்,​​ தென்​னிலை,​​ மண்​மங்​க​ளம்,​​ புஞ்​சைப்​பு​க​ழூர்,​​ மின்​னம்​பள்ளி,​​ குப்​பச்​சி​பா​ளை​யம் முத​லிய இரு​ப​துக்​கும் மேற்​பட்ட வரு​வாய் கிரா​மங்​க​ளி​லுள்ள 19,406 ஏக்​கர் நிலங்​கள் பாசன வசதி பெற்​று​வந்​தன.​

​ ஆனால் திருப்​பூர் சாயக்​க​ழிவு நீர் தொடர்ந்து நொய்​ய​லாற்​றில் வெளி​யேற்​றப்​ப​டு​வ​த​னால் கீழ்​ப​வா​னி​யின் உபரி நீர் நொய்​ய​லாற்​றில் திருப்​பி​வி​டப்​ப​டு​வது நிறுத்​தப்​பட்​டுள்​ளது.​ மேலும் ஆத்​துப்​பா​ளை​யம் நீர்த்​தேக்​கத்​தின் பய​னா​ளி​க​ளான விவ​சா​யி​களே கழிவு நீர் கலந்​துள்ள நொய்​ய​லாற்று நீரை ஆத்​துப்​பா​ளை​யம் அணைக்கு வரு​வ​தைத் தடுத்து வைத்​தி​ருக்​கிற அவ​லம் நிகழ்ந்​துள்​ளது.​ ஆத்​துப்​பா​ளை​யம் நீர்த்​தேக்​கம் எந்த நோக்​கத்​துக்​கா​கக் கட்​டப்​பட்​டதோ,​​ அந்த நோக்​கம் நிறை​வே​றா​ம​லேயே சீமைக் கரு​வே​லன் புதர்​கள் மண்​டிப்​போ​யுள்​ளன.​

​ புவி அமைப்​பி​யல்​படி பூமி​யின் மேற்​ப​ரப்​பில் ஒரு செ.மீ.​ மணல் உரு​வா​வ​தற்கு 100 முதல் 200 ஆண்​டு​க​ளா​கும்.​ இவ்​வாறு ஆயி​ரக்​க​ணக்​கான ஆண்​டு​க​ளாக உரு​வான மணற்​ப​ரப்பு தொடர்ந்து அள்​ளப்​பட்டு வரு​கி​றது.​ இன்​னும் ஒரு சில ஆண்​டு​க​ளில் அள்ளி முடிக்​கப்​பட்​டு​வி​டும் என்​ப​தில் எவ்​வித சந்​தே​க​மு​மில்லை.​ மேட்​டூர் அணையி​லி​ருந்து கல்​லணை வரை காவி​ரி​யின் நீர்​வ​ழித்​த​டம் கடந்த இரு​பது ஆண்​டு​க​ளுக்கு முன்​பி​ருந்​ததை விட இப்​பொ​ழுது சரா​ச​ரி​யாக 12 அடி பள்​ள​மா​கி​விட்​டது.​ இதன்​கா​ர​ண​மாக காவி​ரி​யாற்​றின் இரு​க​ரை​க​ளி​லு​முள்ள பல்​வேறு பாச​னக் கால்​வாய்​க​ளுக்கு நதி​யின் நீர் செல்​வது தடை​பட்​டுள்​ளது.​

​ கரூர்,​​ திருச்சி,​​ புதுக்​கோட்டை ஆகிய மாவட்​டங்​க​ளின் பல்​லா​யி​ரம் ஏக்​கர் விளை நிலங்​க​ளின் பாச​னத் தேவையை நிறைவு செய்த கட்​ட​ளைத் தென்​கரை கால்​வா​யைக் காட்​டி​லும் காவிரி ஆறு இப்​பொ​ழுது பள்​ள​மா​கி​விட்​டது.​ இப்​பி​ரச்​னை​யைச் சமா​ளிக்க தமி​ழக அரசு,​​ கரூர் மாவட்​டம் மாய​னூர் அருகே 180 கோடி ரூபாய் செல​வில் கத​வணை அமைத்து வரு​கி​றது.​

​ "ஆற்​றுப் பெருக்​கற்று அடி​சு​டும் அந்​நா​ளும் ஊற்​றுப் பெருக்​கால் உல​கூட்​டும்' என்று ஆற்று மண​லின் நீர் பிடிப்​புத்​தன்​மை​யைப் போற்​று​கி​றது செம்​மொ​ழித் தமிழ் இலக்​கி​ய​மான மூதுரை.​ இத்​த​கைய அருமை வாய்ந்த ஆற்று மணல் தொடர்ந்து அள்​ளப்​ப​டு​வ​த​னால் காவி​ரிப் படு​கை​யின் நிலத்​தடி நீர் மட்​டம் வெகு​வா​கக் குறைந்து கொண்டே வரு​கி​றது.​ ​ ​ ​ ​ இந்​நி​லை​யில் மதுரை,​​ திண்​டுக்​கல்,​​ சிவ​கங்கை,​​ ராம​நா​த​பு​ரம் முத​லிய பல்​வேறு மாவட்​டங்​க​ளுக்​கான கூட்​டுக் குடி​நீர்த் திட்​டங்​கள் காவி​ரி​யின் கரையி​லி​ருந்து செயல்​ப​டுத்​தப்​பட்டு வரு​கின்​றன.​ மணல் அள்​ளப்​ப​டு​வது உட​ன​டி​யாக நிறுத்​தப்​பட்டு நிலத்​தடி நீர்​மட்​டம் பாது​காக்​கப்​ப​டா​விட்​டால் பல நூறு கோடி ரூபாய் செல​வில் தொடங்​கப்​பட்​டுள்ள கூட்​டுக் குடி​நீர்த் திட்​டங்​க​ளெல்​லாம் பய​னற்​றுப் போகும்.​ ​

​ பல்​வேறு மாநி​லங்​க​ளில் மண​லுக்கு மாற்​றான கட்​டு​மா​னப் பொரு​ளாக பாறைத் துக​ளைப் பயன்​ப​டுத்​து​வது அதி​க​ரித்​துள்​ளது.​ ஆனால்,​​ தமி​ழ​கத்​தில் மட்​டும் மணல் விற்​ப​னை​யைத் தொட​ரும் அர​சின் கொள்கை நிலைப்​பாடு நீர்​வள ஆதா​ரங்​க​ளைப் பாது​காக்க வேண்​டி​யது பற்​றிய தொலை நோக்​கின்​மை​யையே காட்​டு​கி​றது.​ ​ நாக​ரி​கம் வளர்த்த நம் நதி​க​ளை​யெல்​லாம் வெறும் மணற் குவா​ரி​க​ளாக மாற்​றிய பெருமை திரா​விட ஆட்​சி​யா​ளர்​க​ளையே சாரும்.​

அரசு நடத்​தும் டாஸ்​மாக் நிறு​வ​னத்​துக்​காக தமிழ்​நாட்​டி​லுள்ள ஒன்​பது மது​பா​னத் ​ தொழிற்​சா​லை​கள் தயா​ரித்​த​ளிக்​கும் மது​பா​னங்​கள் போதா​மல் பத்​தா​வ​தா​கத் தஞ்சை வட​சே​ரி​யில் மது​பா​னத் தொழிற்​சாலை அமைக்​கத் தீவிர முயற்சி நடை​பெற்று வரு​கி​றது.​ விவ​சா​யத்​தையே வாழ்​வா​தா​ர​மா​கக் கொண்​டுள்ள வட​சேரி கிரா​மத்​தி​ன​ரின் கடு​மை​யான எதிர்ப்​பை​யும் பொருள்​ப​டுத்​தா​மல் அதற்கு அரசு நிர்​வா​கம் அனு​ம​தி​ய​ளித்​தி​ருப்​ப​தன் பின்​னணி மக்​கள் ​ நலமா?​ சுய நலமா?​

​ உள்​ளூர் மக்​களை காவல்​து​றையை ஏவி விரட்​டி​ய​டித்​து​விட்டு வெளி​யூர் மக்​க​ளைக் கொண்டு ஆலை வளா​கத்​துக்​குள்​ளேயே தமக்கு ஆத​ர​வான ஒரு கருத்​துக்​கேட்பு நாட​கத்தை அரங்​கேற்​றி​யுள்​ள​னர்.​ முப்​போ​கம் நெல் விளை​கிற வட​சேரி கிரா​மத்​தின் சிறப்பே ஐந்​தடி ஆழத்​தில் நிலத்​தடி நீர்​மட்​டம் இருப்​ப​து​தான்.​ சரா​ச​ரி​யாக இரண்டு ஏக்​க​ருக்கு ஓர் ஆழ்​து​ளைக் கிணறு அமைத்து விவ​சா​யத்​துக்கு நிலத்​தடி நீரைப் பயன்​ப​டுத்​து​வ​தைக் காட்​டி​லும் நாற்​பது ஏக்​கர் பரப்​ப​ள​வில் அமைந்​துள்ள மது​பா​னத் தொழிற்​சா​லைக்கு மூன்று ஆழ்​து​ளைக்​கி​ண​று​கள் மட்​டுமே அமைத்து நாளொன்​றுக்கு 17 லட்​சம் லிட்​டர் நீரைப் பயன்​ப​டுத்​து​வ​தா​கக் கூறும் ஆலை நிர்​வா​க​மும் அதற்கு ஒப்​பு​தல் அளித்​துள்ள தமிழ்​நாடு நிலத்​தடி நீர் வாரி​ய​மும் ஓர் உண்​மையை மறைத்​து​விட்​டன.​

​ விவ​சா​யி​கள் எவ்​வ​ளவு நீரைப் பாச​னத்​துக்​காக நிலத்​தின் அடியி​லி​ருந்து எடுத்​தா​லும் பயி​ருக்​குத் தேவை​யா​னது போக மீத​முள்ள நீர் மீண்​டும் நிலத்​துக்​க​டி​யில் செல்​வ​தால் நிலத்​தடி நீர்​மட்​டம் குறை​வு​ப​டா​மல் பாது​காக்​கப்​ப​டும்.​ இது சாதா​ரண அறி​வுக்​கும் எட்​டக்​கூ​டிய அறி​வி​யல் உண்மை.​ ஆனால்,​​ மது​பா​னத் தொழிற்​சாலை உறிஞ்சி எடுக்​கும் 17 லட்​சம் லிட்​டர் நீரும் மது​பா​ன​மாக மாற்​றப்​பட்டு,​​ பாட்​டில்​க​ளில் அடைக்​கப்​பட்டு செந்​த​மி​ழர் நாடு முழு​வ​தும் விற்​ப​னைக்கு அனுப்​பப்​ப​டும்.​ இத​னால் இப்​ப​கு​தி​யின் நிலத்​தடி நீர்​மட்​டம் ஒரு​சில ஆண்​டு​க​ளில் பல நூறு அடி கீழே சென்​று​வி​டும் என்​ப​தில் ஐய​மில்லை.​