- தமிழகத்தில் வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
- வட்டியில்லாப் பயிர்க்கடன் தொடரும்
- கரும்பு கொள்முதல் விலை கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1550-லிருந்து ரூ. 1650 ஆக உயர்த்தப்படும்
- நெல் கொள்முதல் விலை உயர்வு: சாதாரண ரக நெல்லுக்கு ரூ.1050, சன்னரக நெல்லுக்கு ரூ.1100
- சொட்டு நீர்ப்பாசனத்திட்டம் மேலும் 75 ஆயிரம் நிலம் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும்
- இலவச மின்சாரம் வழங்க மின்வாரியத்துக்கு ரூ.295 மானியம் கோடி ஒதுக்கீடு
- இயற்கை வழி விவசாயத்தை பின்பற்றும் விவசாயிகளுக்கு பரிசுகள்.
- விவசாய சுயநிதிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
- சோற்றுக்கற்றாழையில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு வரிவிலக்கு.
- பாக்குமர இலைத் தட்டுகளுக்கு வரிவிலக்கு.
- வீடு கட்டப் பயன்படும் பனைச் சட்டங்களுக்கு வரி விலக்கு.
- பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாய் சீரமைக்க ரூ.127.5 கோடி ஒதுக்கீடு.
- தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்திக்கு ரூ.126 கோடி ஒதுக்கீடு
- காவிரி ஆற்றில் கதவணை அமைக்க ரூ.103 கோடி ஒதுக்கீடு
- தமிழக ஆறுகளில் வெள்ளத்தடுப்புத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி.
- நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கும் திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
- ஏரிகளைப் சீரமைக்க ரூ.439 கோடி
- முல்லைப் பெரியாறு ஆய்வுக் குழுவை ஏற்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை
- வரி வருவாயில் தென் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கீடு குறைப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
- சேது சமுத்திர திட்டப் பணிகளை உடனே நிறைவேற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
- கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு
- உணவு மானியத்துக்கு ரூ.3750 கோடி ஒதுக்கீடு
- இலங்கை அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
- காவல்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.2962 கோடி ஒதுக்கீடு.
- ரூ. 120 கோடி நிதியில் 2000 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்
- 200 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
- பள்ளிக்கல்விக்கு ரூ.10 ஆயிரத்து 148 கோடி ஒதுக்கீடு.
- 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச அகராதிகள் வழங்கப்படும்
- 1 லட்சத்து 27 ஆயிரம் மாணவர்களுக்கு தொழில்திறன் மேம்பாட்டுப் பயிற்சி
- மதுரையில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
- அரசுக் கல்லூரிகளில் முதுநிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து.
- வர்த்தகச் சின்னம் இடப்படாத காபித்தூளுக்கு வரிக் குறைப்பு
- பெயிண்ட் பிரஷுக்கு வரிக் குறைப்பு
- சென்னை வெளிவட்டச் சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
- கோவை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேற்கு வெளிவட்டச் சாலை ரூ. 284 கோடி செலவில் 4 வழிச் சாலையாக 26 கி.மீ.தூரத்துக்கு பொதுத்துறை சார்பில் அமைக்கப்படும்.
- கோவை - மேட்டுப் பாளையம் இடையே நான்குவழிச் சாலை அமைக்கப்படும்
- கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வரும் நிதியாண்டில் ரூ. 1800 கோடி செலவில் 3 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
- கோவை தொழில்நுட்பப் பூங்கா பணிகள் மே மாதத்தில் நிறைவடையும்.
- விழுப்புரம் மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.
- மேலும் புதிதாக 36 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.
- மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்புக் கட்டணம் ரத்து
- மீனவர்கள் பயன்படுத்தும் ஐஸ் கட்டிகளுக்கு வரிவிலக்கு
- மனநோயாளிகளைப் பராமரிக்கும் மறுவாழ்வு இல்லங்களை நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி.
- புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் புதிய அரசுக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
- திருவண்ணாமலையில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
- மாற்றுத் திறனுடையோருக்கென தனித்துறை முதல்வர் கருணாநிதி தலைமையில் செயல்படும்.
- மாற்றுத் திறனுடையோருக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.200-ல் இருந்து 450-ஆக உயர்வு.
- சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும்.
- பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க உதவி செய்வதற்காக ரூ.32 கோடி ஒதுக்கீடு
- தையல் பொருள்களுக்கு வரிக்குறைப்பு.
- தேனியில் ரூ. 10 கோடி செலவில் சிறப்பு மனநலை மருத்துவமனை அமைக்கப்படும்.
- கர்ப்பிணிகளுக்கு அயோடின் கலந்த உப்பு இலவசம்.
- தியாகி வாஞ்சிநாதனுக்கு செங்கோட்டையில் மணி மண்டபம்.
- விருப்பாச்சியில் கோபால் நாயக்கருக்கு மணி மண்டபம்.
- விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரனுக்கு நெல்லையில் மணி மண்டபம்.
- கோவையில் தகுதியுள்ள பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்
- எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.
- அரவானிகள் நலத்திட்டங்களுக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு.2010 -11 நிதிநிலை மதிப்பீடு மொத்த வருவாய் - ரூ. 63,091.74 கோடிமொத்தச் செலவு - ரூ. 66,488.19 கோடிபற்றாக்குறை - ரூ. 3,396.45 கோடி
-