Monday, July 26, 2010

1.68 கோடி டன் தானியம் ஆண்டுதோறும் வீணாகிறது


புதுடெல்லி : போதுமான சேமிப்பு வசதி இல்லாத காரணத்தால், ஆண்டுக்கு 1.68 கோடி டன் உணவுப் பொருள் வீணாவதாக இந்திய உணவு கழகம் (எப்சிஐ) தெரிவித்துள்ளது.
இந்திய உணவு கழகம், நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் உணவு தானிய வகைகளை சேமித்து வைப்பதுடன் தேவையான பகுதிகளுக்கு விநியோகம் செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. இதற்காக உள்ள சேமிப்பு கிடங்குகளில் 2.5 கோடி டன் உணவு தானியங்களை சேமிக்க முடியும். ஆனால் இப்போதைய இருப்பு 7.5 கோடி டன்களாக உள்ளது.

போதுமான கிடங்கு வசதியின்மையால் உணவுப் பொருட்களை முறையாக பாதுகாக்க முடியாத சூழல் உள்ளது. திறந்தவெளிகளில் மூட்டைகளை அடுக்கி வைப்பதால் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து ஆண்டுக்கு 1.68 கோடி டன் அழுகி அல்லது வீணாகி விடுவதாக எப்சிஐ தெரிவித்துள்ளது.
ÔÔஉணவுப் பொருட்களை சேமிக்க போதுமான வசதி இல்லை என்பது உண்மைதான். இதனால் சில இடங்களில் வீணாகிறது. சேமிப்புக் கிடங்கு வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்ÕÕ என மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.