Tuesday, December 8, 2009

இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துவதால் மலையூர் மக்கள் விளைபொருட்களுக்கு மவுசு

மதுரை மதுரை அருகே எல்.மலையூர் மக்கள் விவசாயத்தில் இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால், இங்கு விளையும் விளை பொருட்களுக்கு சந்தையில் அதிக மவுசு உள்ளது. மதுரை அருகே எல்.லிங்கவாடி ஊராட்சிக்கு உட்பட்டது எல்.மலையூர் கிராமம். இங்கு 450 குடும்பத்தினர் வசிக்கின்றனர். நத்தம் தொகுதிக்கு உட்பட்ட மலையூரில் அவரவர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்வதால் கூலிக்கு ஆட்களை நியமிப்பது கிடையாது. இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால் மண்ணின் மனம், குணம் மாறாமல் உள்ளது. மலையூரில் கடலை, சாமை, கேப்பை, கொள்ளு மற்றும் நெல் போன்ற தானியங்களும், சாமந்தி, கோழிக்கொண்டை போன்ற பூ வகைகளும் விவசாய சாகுபடியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கை உரத்தில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்கள் அதிக சுவை யுடன் இருப்பதால் மலையூர் விளை பொருட்களுக்கு நத்தம், பாலமேலு, அலங்காநல்லூர், மதுரை சந்தைகளில் மவுசு அதிகம். இதற்காக விளை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பதில்லை. நியாயமான விலைக்கு விற்கின்றனர்