Friday, February 12, 2010

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகாரம்

கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.

இதையடுத்து, 2020 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டின் டுவென்டி 20 ஆட்டங்கள் சேர்க்கப்படுகின்றன.

வான்கோவரில் இன்று நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

இத்தகவலை அதன் செய்தித்தொடர்பு பிரிவுக்கான இயக்குநர் மார்க் ஆதம்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை நிர்வாகி ஹரூண் லோர்கத் வரவேற்றுள்ளார். இந்த முடிவு மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.