Wednesday, March 3, 2010

கண்பார்வையும் இல்லை, கால்களும் ஊனம்: தாயின் ஆசையை நிறைவேற்றி வரும் மகன்

Front page news and headlines today

ராமேஸ்வரம் : கண்பார்வை இல்லாத, கால் களும் ஊனமான தாயின் ஆசையை நிறைவேற்ற, அவரது மகன் டிரைசைக்கிளில் இந்தியாவில் உள்ள புண்ணிய ஸ்தலங் களுக்கு யாத்திரையாக அழைத்துச் சென்றப்படி, நேற்று ராமேஸ் வரம் வந்தார்.


பீகார் மாநிலம் சேக்பூரா மாவட்டம், தோய்கெட் கிரா மத்தைச் சேர்ந்தவர் ராம்பிரவேஷ் (50). இவரது தாய் சுமித்ராதேவி (86) பிறவியிலேயே கண் பார்வையற்று, இரண்டு கால் களும் ஊனமாகி, எங்கும் செல்ல முடியாத நிலையில், ராமேஸ் வரம் யாத்திரை செல்ல வேண்டும், என மகனிடம் தெரிவித்துள்ளார். விவசாயியான ராம்பிரவேஷ் அதிக பணம் செலவழிக்க முடியாததால், தாயின் ஆசையை நிறைவேற்றும் வகையில், பழைய டிரைசைக்கிள் ஒன்றில் கூண்டு அமைத்து, அதில் தாயை அமர வைத்து யாத்திரையாக ராமேஸ்வரம் வந்துள்ளார். கடந்த 2009 நவ.,7ல் சொந்த ஊரிலிருந்து புறப்பட்ட இவர் கள், அயோத்தி, காசி, பிருந்தாவன், மதுரா, ஹரித்துவார், ரிஷிகேஷ், பத்ரிநாத், ஜெகநாத்பூரி, திருப்பதி போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று விட்டு, நேற்று ராமேஸ்வரம் வந்தனர். இங்குள்ள பஜ்ரங்தாஸ் பாபா மடத்தில் தங்கி , அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரி சனம் செய்தனர். பின், கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றனர்.


கோவில்களுக்குள் தூக்கிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்து, தாயின் ஆசையை நிறைவேற்றி வரும் ராம் பிரவேஷ் கூறியதாவது: ராமேஸ்வரம் யாத்திரை செல்ல வேண்டும் என, அம்மா பல ஆண்டுகளாக கூறியதால், அவரது ஆசையை நிறைவேற்ற டிரைசைக்கிளில் அழைத்து வந் தேன். வழியில், பொதுமக்கள் தரும் உணவை சாப்பிட்டு யாத்திரையை தொடர்ந்தோம். பலர் பொருளாதார உதவியும் செய்தனர். கன்னியாகுமரி சென்று, அங்கிருந்து துவாரகா வழியாக பீகார் செல்கிறோம். அதிக தூரம் டிரைசைக்கிளில் பயணம் செய்வது கஷ்டமான காரியமாக இருந்தாலும், தாயின் ஆசையை நிறைவேற்றினோம் என்ற திருப்தி உள்ளது. இவ்வாறு ராம் பிரவேஷ் கூறினார்.