Tuesday, December 13, 2011

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!!!!!


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி
கிடைக்கிறதா?

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

 இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .

இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.

Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விடனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

 இப்போது ஆவது நாமும் விளித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்விறகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .

ஏமாறச் சொல்வது யாரோ?


புவிவெப்ப மாறுதலை நிகழ்த்த டர்பனில் நடந்து முடிந்த கூட்டத்தில், எதிர்காலத்தில் இந்த இலக்கை அடைவதற்கான ஒப்பந்தங்கள் குறித்த பயணத் திட்டம் (ரோட் மேப்) பெரும் விவாதத்துக்கு உள்ளாகியதால், இந்தக் கூட்டத்தில் சொல்லிக்கொள்ளும்படியான எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.


1997-ம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து ஆர்ப்பாட்டம் செய்தது அமெரிக்கா. இந்த முறை, வளர்ந்துவரும் நாடுகள் சார்பாக பெரும் எதிர்ப்பைத் தெரிவித்திருப்பது இந்தியா.


இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், இந்தியாவின் 120 கோடி மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், வெறும் வெற்றுக் காசோலையில் கையெழுத்திட முடியாது. பயணத் திட்டம் என்ன என்பது தெரியாமலேயே ஏற்க முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டார். இதற்காக அரங்கில் இருந்த அனைவரும் அவரைப் பாராட்டியிருக்கிறார்கள்.


இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகள்தான் முக்கியமாக இந்த டர்பன் மாநாட்டில் எதிர்ப்புத் தெரிவித்த வளரும் நாடுகள். ஐரோப்பிய ஒன்றியம் இந்த மாநாட்டின் ஒப்பந்த ஷரத்துகளில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், அவை வளரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுக்குக் குந்தகமாக அமையும் என்பதுதான் இவர்கள் சொல்லும் வாதம்.


இந்த மூன்று நாடுகளும்தான் தற்போது அதிக அளவு கரியமில வாயுவையும் மற்றும் வளிமண்டலத்தை மாசுபடுத்தும் வாயுக்களையும் வெளியேற்றி வருகின்றன என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் குற்றச்சாட்டு.


கியோட்டோ மாநாட்டுக்குப் பிறகு வளர்ந்த நாடுகள் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தங்களது மாசுபடுத்தும் அளவைக் குறைத்துக்கொண்டுள்ளன. ஆனாலும், வளரும் நாடுகள், குறிப்பாக இந்தியா, இதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மேலும் மேலும் வளிமண்டல மாசுபடும் தொழில்நுட்பத்துக்கே இலக்காகி வருகின்றது. இருக்கின்ற தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மாசு குறைந்ததாகச் செய்யவும் முழு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் அவர்களது குற்றச்சாட்டு.
இந்த நிலையில், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் நாடுகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய நடவடிக்கைகள் குறித்த அம்சத்துக்குத்தான் இந்தியாவும் சீனாவும் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. எங்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள். உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா என்பதுதான் இவர்கள் கேட்கும் கேள்வி.


டர்பன் மாநாட்டில் தற்போது வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள், சிறிய நாடுகள் என்ற பேதமே இல்லாமல், நாம் அனைவரும் ஒன்று என்று கருத்தாக்கம் உருவாகியுள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அந்த ஒப்பந்தம் அனைவருக்கும் ஒன்றாகவும், அனைவரையும் கட்டுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்பதைத்தான் தற்போது இந்தியா, சீனா வலியுறுத்துகின்றன.


வெப்பமண்டலக் காடுகளைக் காக்கவும், மாசு இல்லாத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கும் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்வதற்காக ஒரு நிதியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. இந்த நிதியின் அளவு ஒவ்வொரு நாட்டுக்கும் எவ்வாறு பிரித்து அளிக்கப்படும் அல்லது வளர்ந்து வரும் நாடுகளுக்கும், சிறிய நாடுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு என்ன வரைமுறை என்பதெல்லாம் இனிதான் விவாதிப்பார்கள்.

புவிவெப்பம் 2 டிகிரி உயர்ந்துவிடாதபடி குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மீண்டும் மீண்டும் வளிமண்டல மாசினைக் குறைக்க அனைத்து நாடுகளுக்கும் கடமை இருக்கிறது என்று வலியுறுத்தப்படுகிறது.


120 கோடி மக்களின் வாழ்க்கையோடு விளையாட முடியாது என்று இந்தியா சொல்லும்போது பெருமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்திய அரசின் எந்தவொரு கொள்கையும் உலகமயமாதலைச் சார்ந்துள்ளது. பல்வேறு நிறுவனங்களை 100 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டில் அனுமதிப்பதாக உள்ளது. அப்படியானால், பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து தொழில்வளர்ச்சி என்ற போர்வையில் இந்தியாவை மாசுபடுத்தி அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கு அயல்ஒப்பந்த அடிப்படையில் பணிகள் ஏற்று, மாசுகளை மட்டும் இங்கே ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் உலக வளிமண்டலத்தையும் மாசுபடுத்த அனுமதித்து வருவதன் மூலம் இந்த 120 கோடி மக்களில் உள்ள அதிக ஏழைகளின் நலனை எப்படிக் காப்பாற்றப் போகிறோம்?


ஏழைகளும் விவசாயிகளுமா இந்திய நதிகளையும் நீர் நிலைகளையும் தொழில் வளர்ச்சியால் மாசுபடுத்தச் சொன்னார்கள்? இவர்களா நவீன உலகத்தின் சுகங்களையெல்லாம் எங்களுக்குக் காட்டுங்கள் என்று கேட்டார்கள்? ஏழையின் பெயரைச் சொல்லி தொழில் வளர்ச்சியை, வளிமாசினை நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், தொழில் வளர்ச்சியின் பயன் ஏழைக்கு மட்டும் கிடைப்பதே இல்லை என்பதுதானே நிஜம்?


சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு தேவைக்கு அதிகமாக மோட்டார் வாகனத் தயாரிப்பை ஒருபுறம் ஊக்குவித்துக்கொண்டு மாசுக்கட்டுப்பாடு பற்றி நாம் கவலைப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. பொதுப் போக்குவரத்தைத் திறம்பட நிர்வகிக்கத் தயாராக இல்லாமல், தனிநபர் கடன் வசதிகளைப் பெருக்கி அவர்களது பொருளாதாரத்தைச் சீர்குலைத்து மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்களுக்கு உதவும் அரசு, மாசுக் கட்டுப்பாட்டை சர்வதேச அரங்கில் நியாயப்படுத்துவதை எப்படி அங்கீகரிப்பது?


ஒருபுறம் அதிக அளவு கரியமில வாயுவையும் மற்றும் வளிமண்டலத்தை மாசுபடுத்தும் வாயுக்களையும் வெளியேற்றும் தொழிற்சாலைகளைத் தங்களது நாட்டில் நிறுவாமல் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நிறுவி தங்களை யோக்கியர்கள் ஆக்கிக்கொண்டு, இன்னொருபுறம் கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுங்கள் என்று நம்மை வற்புறுத்தும் நயவஞ்சகத்தை துணிந்து தோலுரித்துக்காட்ட நாம் ஏன் தயங்குகிறோம்?


நமக்கும்தான் சரி, "மீசைக்கும் ஆசை; கூழுக்கும் ஆசை' என்றால் எப்படி?

Wednesday, November 30, 2011

பாவம் தமிழன்!

- பழ. நெடுமாறன்

கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள்.

அண்மையில் இடுக்கி மாவட்டத்தில் 2.3 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் வெடிப்புகள் தோன்றியிருப்பதாகப் பெரும் அபாயக் கூக்குரலை கேரள முதல்வர் உம்மன்சாண்டி எழுப்பி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்துள்ளார்.

தனி ஒரு மனிதன் பொய் பேசினால் அவனை சமூகம் வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகத் தொடர்ந்து பொய்மைக் கூப்பாட்டை எழுப்பி வருகிறார்கள். அவர்களுடைய பொய்யுரைக்கு ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும், ஏன், ஒரு சில நடுநிலையாளர்கள் உள்ளிட்ட பலரும்கூட செவிசாய்க்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.

உண்மைதான் என்ன? 2001-ம் ஆண்டில் இதே இடுக்கி மாவட்டத்தில் 4.8 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அப்போதும் இதேபோன்ற கூக்குரலை கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எழுப்பின. ஆனால், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் அணையை உடனடியாகப் பார்வையிட்டு, இந்த நில அதிர்வால் அணைக்கு எத்தகைய சேதமும் ஏற்படவில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், அதே ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒன்று இந்த அணையை நன்கு பரிசோதித்து, அணையில் எத்தகைய சிறு அளவு சேதம்கூட ஏற்படவில்லை என திட்டவட்டமாகக் கூறியது.

2001-ம் ஆண்டில் ஏற்பட்ட நில அதிர்வைவிடப் பாதி அளவுக்கும் குறைவான நிலஅதிர்வே இப்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கேரளத் தலைவர்களின் பொய்மைக்கூப்பாடு ஓயவில்லை.

1963-ம் ஆண்டிலிருந்து கடந்த 48 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கேரளம் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை இடித்துவிட்டு புது அணை கட்ட வேண்டும் என்ற கூப்பாட்டை இடைவிடாது எழுப்பிக்கொண்டு இருக்கிறது. அதே ஆண்டு, கேரளத்தின் புகாரை விசாரிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர், பெரியாறு அணைக்கு வந்து தமிழக-கேரளத் தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் அணையை முழுமையாகப் பரிசோதனை செய்து, அணை பலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

1978-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை இதே புகாரை கேரளம் எழுப்பி, மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் தலைவரும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு, அணை வலிமையாக இருப்பதை உறுதி செய்தார்கள். எனினும் 12.5 கோடி ரூபாய் செலவில் அணையை மேலும் பலப்படுத்துமாறும், அந்த வேலை முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு குறைக்கும்படியும் அறிவுரை கூறியது. அதை தமிழகம் ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தைக் குறைத்ததுடன் மராமத்துப் பணிகளையும் தொடங்கியது. ஆனால், அந்தப் பணிகள் முற்றுப் பெறவிடாமல் கேரளம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது.

எனவே, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அணையின் வலிமையைச் சோதிக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அந்தக் குழுவும் அணையை நேரடியாகப் பரிசோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்துவதால் அணைக்கு எத்தகைய ஆபத்தும் வராது எனக் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்தப் பிரச்னையில் கேரளம் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்துகொள்வதாகவும் வல்லுநர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரிய வருவதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் திட்டவட்டமான தீர்ப்பை மதிக்காமல் கேரளம் 31-3-2006-ம் ஆண்டு கேரள ஆறுகளின் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத் தடுத்துவிட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்குத் தொடுத்தது.

 ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயலற்றதாக்க இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கர்நாடக அரசு கொண்டு வந்தபோது, அச்சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், கேரள சட்டத்தைக் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் அதைப்போன்ற தீர்ப்பை அளித்திருக்க வேண்டியதுதான் நியாயமானது. ஆனால், அதற்குப் பதில் மீண்டும் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து அணையின் வலிமையைப் பரிசீலனை செய்ய கூறியிருக்கிறது. இதன் விளைவாக வேண்டாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 31 ஆண்டுகாலத்துக்கு மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் பெரியாறு நீரைக்கொண்டு 2 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதிபெற்றது. பாசன வசதி பற்றாக்குறையின் காரணமாக இதில் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசுநிலமாக மாறிவிட்டது. இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86 ஆயிரம் ஏக்கர் ஆகும். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்துளை கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர் ஆகும்.

இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 55.80 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின்உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடியாகும். ஆக மொத்தம் ஆண்டொன்றுக்கு ரூ.130.80 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 31 ஆண்டு காலமாக மொத்த இழப்பு 4054.80 கோடியாகும்.

அதே வேளையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டைகள், பால் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளத்தின் இறைச்சித் தேவையில் 90 விழுக்காடு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது என "தினமணி'யின் தலையங்கம் (29-10-11) குறிப்பிடுகிறது. இவை நிறுத்தப்பட்டால் கேரள மக்கள் பசியால் வாடும் நிலைமை ஏற்படும்.

தமிழ்நாட்டில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20 சதவீத மின்சாரம் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் வாழ்கிறார்கள். மிகப்பெரிய நகைக்கடைகள், நிதிநிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதிலும் நடத்தி ஆதாயம் பெற்று வருகிறார்கள்.

 நாள்தோறும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிபெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் ஆகும். இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் தேவை. நீர்ப் பற்றாக்குறையாக உள்ள தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரில் உற்பத்தியாகும் அரிசியை நாம் கேரளத்துக்கு வஞ்சகம் இன்றி அனுப்புகிறோம். மற்றும் இங்கிருந்து அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருள், கால்நடைகள், உண்ணும் தீவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படும் நீர் எல்லாவற்றையும் சேர்த்தால் கேரளம் தமிழ்நாட்டின் நீரை எவ்வளவோ சுரண்டுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு 1,700 கன மீட்டர் நீர் தேவையென விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மலையாளிகளுக்கு ஆண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், இவ்வளவு நீரை நம்மிடமிருந்து பயன்படுத்திக்கொள்ளும் கேரளத்திடம் நாம் பெரியாறு அணை நீரில் கேட்பது 126 மில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே. இதைவிட பல நூறு மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும் கேரளம் நமக்குச் சட்டப்படியும், உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் உரிமையான நீரை விட்டுத் தர மறுக்கிறது.

முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் நீர் பிடிப்பு பகுதியின் மொத்தப் பரப்பளவு 601 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது, பெரியாற்றில் உற்பத்தியாகி ஓடும் நீரில் 5-ல் ஒருபகுதி நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.

பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மி.க.மீ. ஆகும். 2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீ. ஆகும். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால் நமக்குத் தரவேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீ. ஆகும்.

 அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34 சதவீத நீரை மட்டுமே நமக்குத் தருமாறு நாம் கேட்கிறோம். ஆனால், கேரளம் பிடிவாதமாக அதற்கும் மறுக்கிறது. தமிழ்நாட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு 2,588 ச.கி.மீ. ஆகும். இதிலிருந்து 2,641 மி.க.மீ. நீர் பாய்ந்தோடி கேரள மாநில நதிகளான பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடியாறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அணைகட்டி நீரைத் தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு நாம் முனைந்தால் கேரளத்தால் தடுக்க முடியாது.

கடந்த காலத்தில் 1958-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த காமராசரும் கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உடன்பாட்டினை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி கேரள மாநிலத்திற்குள் பாய்ந்தோடும் பல நதிகளின் நீரை இருமாநிலங்களுக்கும் பொதுவாக பயன்படும் வகையில் வகுக்கப்பட்ட திட்டமே பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டமாகும்.

இத்திட்டத்துக்கான முழுச் செலவையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 920 மி.க.மீ. நீர் கிடைக்கிறது. கேரளத்துக்கு 2,641 மி.க.மீ. நீர் கிடைக்கிறது.

 அதைப்போல, 1952-ம் ஆண்டில் பெரியாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக தமிழகத்துக்கு வரும் நீரிலிருந்து மின்உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. அத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு தயங்கியது. அப்போது இராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தியை அழைத்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதலமைச்சரான பட்டம் தாணுபிள்ளையுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார். அவரும் இந்த மின்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று திரும்பினார்.

 காங்கிரஸ்காரர்களான காமராஜரும் இராஜாஜியும், கம்யூனிஸ்டுகளான ஈஎம்எஸ். நம்பூதிரிபாட், பி. இராமமூர்த்தி ஆகியோர் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், இன்று கேரளத்தில் இருக்கும் எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், தமிழக நலன்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றன.

 பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே, அது பயனற்றது என்ற வாதத்தை கேரளம் முன்வைக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான அணைகளான மேட்டூர் அணை, துங்கபத்திரா அணை, கிருஷ்ணராஜசாகர் அணை போன்றவை கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதைப்போல கேரள மாநிலத்தில் உள்ள பல அணைகளும் 80 ஆண்டுகளை தாண்டியவையாகும்.

 புதிய அணை கட்ட வேண்டும் என கேரளம் வற்புறுத்துவதற்கு காரணம், முதலாவதாக 999 ஆண்டுகளுக்கு நாம் பெற்றுள்ள உரிமை பறிபோகும். புதிய அணை கட்டப்பட்டால் அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீர் கிடைக்கும். அதுவே அவர்களது குறிக்கோள் ஆகும்.

 தமிழகத்துக்குத் தரவேண்டிய 126 மி.க.மீ. நீரை கேரளம் புதிய அணையிலிருந்து எதிர்காலத்தில் தருமா என்பது சந்தேகத்திற்கிடமானது. இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டப்படுமானால் ஒரு சொட்டு நீர்கூட நமக்கு வராது.

பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவார்கள் என கேரளம் கூப்பாடு போடுகிறது. இடுக்கி, எர்ணாகுளம் என இரண்டே மாவட்டங்களில் மட்டுமே பெரியாறு ஓடுகிறது. பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ. வரை காடுகளின் வழியாக ஆறு ஓடி இடுக்கி அணையை அடைகிறது. அதற்குப் பிறகு 70 கி.மீ. நீர்வழிப்பாதையாகப் பயன்பட்டு அரபிக்கடலை அடைகிறது. இதில் 35 லட்சம் பேர் எங்கே இருக்கிறார்கள்?

மேலும், பெரியாற்றில் பெரியாறு நீர்த்தேக்கத்தைத் தவிர, 16 நீர்த்தேக்கங்களை கேரள அரசு கட்டியிருக்கிறது. இந்த அணைகளில் எல்லாம் நிரம்பி வழிந்த பிறகே நீர் அரபிக்கடலுக்கு நேரடியாகச் செல்லுமே தவிர, மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது.

 புகழ்பெற்ற மலையாள இலக்கிய அறிஞரும் சாகித்திய அகாதெமி விருதுபெற்றவருமான பால் சக்காரியா இந்தப் பிரச்னை குறித்து கூறியதை கீழே தருகிறோம் (ஆனந்தவிகடன் 19-1-2003):

 தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள் கேரளத்துக்கு வருகின்றன. பணப் பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்துதான் வருகிறது.

 ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூடத் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன்.

 பெறுவதை எல்லாம் பெற்றுக்கொண்டு கொடுப்பதில் மட்டும் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று ஆங்காங்கு அணைகள் (கேரள அரசியல்வாதிகள்) கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்ததாகப் பேச்சுக்கள்.

இப்போது பவானியின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி, பெரியாறு அணை, பவானி என்று சுற்றி சுற்றித் தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பது தமிழனின் குணம். பாவம் தமிழன்.

 நன்றி - தினமணி

Wednesday, November 9, 2011

வீடு தேடி மரக்கன்று வரும் நாமக்கல்லில் விரைவில் அமல்


நாமக்கல் : ஆன்லைனில் பதிவு செய்தால் வனத்துறையினர் வீடு தேடி வந்து மரக்கன்றுகளை நட்டுக்கொடுக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஸீ30 கோடியில் 64 லட்சம் மரக்கன்று நடப்படும் என அறிவிக்கப்பட்டது. மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டத்துக்கு பெரிய அளவிலான மரக்கன்றுகள் நடும் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24ம் தேதி முதல் இத்திட்டம் தொடங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், 1 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்று நடப்பட உள்ளன. அரசு அலுவலகங்கள், தனியார் நிலங்கள், வீடுகள், தோட்டம், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ஆசிஸ்குமார் ஸ்ரீ வஸ்தவா கூறியதாவது:

பூமி வெப்பமாவதை தடுக்கவும், தமிழகத்தில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் மரக்கன்று வனத்துறையினரால் நடப்பட உள்ளது. நாமக்கல் மாவட்ட பருவநிலைக்கு ஏற்ப 36 வகையான மரக்கன்றுகள் நட்டு கொடுக்கப்படும். மரக்கன்று பெற விரும்புபவர்கள் நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

dfonamakkal@Yahoo.co.in  என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்தாலும் மரக்கன்று தரப்படும். வனத்துறை அலுவலர்கள் விண்ணப்பிக்கும் நபர்கள் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்த பின்னர் தேவையான மரக்கன்றுகள் நட்டு தரப்படும். மரக்கன்று பராமரிக்கும் காலங்களில் வனத்துறை ஊழியர்கள் அங்கு அடிக்கடி சென்று ஆய்வு செய்வார்கள்.

மரக்கன்று வேண்டுபவர்கள் வரும் 30ம் தேதிக்குள் மாவட்ட வன அலுவலர், நாமக்கல் வன கோட்டம், பழைய ஆட்சியர் பங்களா, நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இவ்வாறு ஆசிஸ்குமார் ஸ்ரீ வஸ்தவா தெரிவித்தார்.

36 வகை கன்றுகள்

இத்திட்டத்தின் கீழ் மந்தாரை, மஞ்சன்கொன்றை, ஜகரெண்டா, செண்பகம், மகிழம், இயல்வாகை, தூங்குமூஞ்சி வாகை, புளி, தபிபியா, தங்கஅரளி, வாதுமை, ஆத்துமருது, நெல்லி, நாவல், சிசு, புங்கம், வேம்பு, கடம்பம், பொரசு, தோதகத்தி, மலைபூவரசு, கிரிவிலியா, ஸ்பெத்தோடியா, பூவரசு, தேக்கு, மேபிளவர், பேரடைஸ் மரம், தகரை, டபோபியா, கேஸியா, கேஸியா ஜவானிகா, சிசால்பினியா, அரசு, ஆலமரம், பலா ஆகிய 36 வகையான மரக்கன்றுகளை வனத்துறையினர் நட்டு கொடுப்பார்கள்.

Thursday, September 15, 2011

காந்த குடை விரிக்க சூப்பர் திட்டம்!


வாஷிங்டன் : செயலிழந்த செயற்கை கோள்கள், விண்கலங்களில் இருந்து வெளியேறிய பொருட்கள், சிறிய நட், போல்ட் என்று 22 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களில் விண்வெளியில் மிதக்கின்றன. இவற்றால் செயற்கை கோள்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

விண்வெளியில் சுற்றும் செயற்கை கோள்கள், தேவையற்ற பொருட்கள் தொடர்பாக அமெரிக்காவின் தேசிய ஆய்வு கவுன்சில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டது. இதில் தெரியவந்த தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: உலகின் பல நாடுகளும் பல ஆண்டுகளாக விண்ணில் செயற்கை கோள்களை செலுத்தி வருகின்றன. இவை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு செயலிழக்கின்றன. ஆனாலும், தொடர்ந்து விண்வெளியில் மிதந்து வருகின்றன. இதுதவிர, விண்வெளியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்போதும் குப்பைகளாக பல பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.

இது மட்டுமின்றி விண்கலங்கள் மற்றும் செயற்கை கோள்களில் இருந்து எதிர்பாராதவிதமாக விலகும் நட், போல்ட், டூல்ஸ் போன்றவையும் விண்வெளியில் சுற்றி வருகின்றன. சிறிதும் பெரிதுமாக இவ்வாறு 22 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் பூமிக்கு அருகில் விண்வெளியில் சுற்றி வருகின்றன. செயலிழந்த செயற்கை கோள் ஒன்றை தகர்த்து அழிக்கும் முயற்சி 2007-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. ஏவுகணை போன்ற ஆயுதத்தால் மோதி அழிக்கப்பட்டது.

அது 1.50 லட்சம் பீஸ்களாக உடைந்து விண்வெளியில் மிதந்தது. 2009-ல் இரு செயற்கை கோள்கள் எதிர்பாராவிதமாக மோதிக் கொண்டன. அதனாலும் குப்பை எண்ணிக்கை அதிகரித்தது. இந்த விண்வெளி குப்பைகள் மணிக்கு 28 ஆயிரம் கி.மீ. வேகத்தில் சுற்றி வருகின்றன. தற்போது செயல்பாட்டில் இருக்கும் செயற்கை கோள்கள், விண்கலங்கள் ஆகியவற்றின் மீது இவை மோதினால் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் ஆபத்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விண்வெளி குப்பைகளை பத்திரமாக அகற்றுவது தொடர்பாகவும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தூண்டில், வலை போன்ற கருவிகளை வைத்து அவற்றை அகற்றலாம் என்று விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர். காந்த சக்தி கொண்ட பிரமாண்ட குடை மூலமாக அப்பொருட்களை கவர்ந்திழுக்கலாம் என்ற யோசனையும் கூறப்பட்டுள்ளது.

Sunday, August 28, 2011

தூக்குத் தண்டனை நிறைவேற்றம் எப்படி?


கோர்ட் உத்தரவுப்படி, கைதியை தூக்கிலிடும் நடைமுறைகள் சிறையில் எவ்வாறு கடைபிடிக்கப்படுகின்றன, என்பது குறித்த தகவலை, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது கருணை மனுவை, ஜனாதிபதி நிராகரித்து விட்டதால், மூவரையும் செப். 9ம் தேதி தூக்கிலிட, சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி கைதிகள் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கான பணிகள் துவங்கியுள்ளன. தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், கைதிகளை தூக்கிலிடுவதற்கான முன்னேற்பாடுகளை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் நடைமுறைகள் குறித்து, சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட கைதிகள், சிறையில் தனித்தனி "செல்'லுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முன்பிருந்ததை விட மிக தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்புக்கு கூடுதல் எண்ணிக்கையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

"வெயிட்' பார்த்து ஒத்திகை:தண்டனையை நிறைவேற்றுவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை துவங்கும். கைதிகள் ஒவ்வொருவரின் உடல் எடை, உயரம் பரிசோதிக்கப்படும். கைதியின் உயரம் மற்றும் எடைக்கு ஏற்ப தூக்குக் கயிறு தயார் செய்யப்படும். பின்னர், கைதியின் எடைக்கு நிகரான பொருளை கயிறுடன் இணைத்து, தூக்கு மேடையில் தூக்கிட்டு ஒத்திகை நடத்தப்படும். கயிற்றின் தாங்கும் திறன், தொங்கும் இழுவை நீளம் பரிசோதிக்கப்பட்ட பின், அதே போன்ற உறுதி, நீளத்துடன் கயிறுகள் தயார் நிலையில் வைக்கப்படும்.

மருத்துவப் பரிசோதனை:தூக்குத் தண்டனை பெரும்பாலும் அதிகாலை நேரத்திலேயே நிறைவேற்றப்படும். தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, கைதிகளின் உடல் ஆரோக்கியத்தை டாக்டர்கள் பரிசோதிப்பர். மனநிலையும், உடல் நிலையும் சரியாக இருப்பதாக, டாக்டர்கள் சான்று அளித்ததும், அடுத்த நடவடிக்கை அமல்படுத்தப்படும்.

கடைசி ஆசை என்ன:தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பாக கைதியின் கடைசி ஆசை குறித்து, சிறை அதிகாரிகள் வினா எழுப்புவர். சம்பந்தப்பட்ட கைதி, தனது கடைசி ஆசை, எதிர்பார்ப்பை தெரிவிக்கலாம். அவை சட்டப்படியாக ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பின், ஆசையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தூக்குக்கு அழைத்து வருதல்:கைதியை தூக்கிலிடுவதற்கான நேரம் முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். காவலர்களின் பாதுகாப்பில் தூக்கு மேடைக்கு அழைத்து வரப்படும் கைதி, இரு கைகளும் பின்புறமாக கட்டப்பட்டு மேடையில் நிறுத்தப்படுவார். அவருக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவை, சிறை கண்காணிப்பாளர் வாசிப்பார்; உடன், டாக்டர்கள் இருப்பர். அதன் பின், கைதியின் முகம், தலை கறுப்பு நிற துணியால் மறைக்கப்படும். தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், "லிவர்' இயக்கப்படும். தூக்கு மேடையின் கீழ் கைதியின் காலடியில் இருக்கும் விசை நகர்ந்ததும், உடல் தொங்கி தண்டனை நிறைவேறும்.

13 நிமிடம் வரை தொங்கும்:தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதும் கைதியின் உடல், மேடையின் மீது 13 நிமிடம் வரை தொங்கியவாறு இருக்கும்; அதுவரை, அருகில் யாரும் செல்லமாட்டார்கள்.அதன் பின், டாக்டர்கள் பரிசோதித்து மரணம் சம்பவித்ததை அறிவிப்பர். பிறகு, உடல் இறக்கப்பட்டு தனி அறைக்கு கொண்டு செல்லப்படும். தண்டனை நிறைவேற்றத்தின் போது, சிறையிலுள்ள பிற கைதிகள் அவரவர் "செல்'லில் அடைக்கப்பட்டிருப்பர்.

தனித்தனியாக நிறைவேற்றம்:ஒன்றுக்கும் மேற்பட்ட கைதிகளை ஒரே நாளில் தூக்கிலிட வேண்டியிருந்தால், தனித்தனியாகவே தண்டனை நிறைவேற்றப்படும். ஒரு கைதியை தூக்கிலிடுவதற்கான நடைமுறை கால அவகாசம் முடிந்ததும், அடுத்தடுத்த கைதிகளுக்கு நிறைவேற்றப்படும். தண்டனை நிறைவேற்றப்பட்ட பின், உறவினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு, சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

லோக்பால் வார்த்தையை அறிமுகப்படுத்தியது யார்?

லோக்பால் மசோதா குறித்து ஆய்வு செய்து வரும் நிலைக்குழுவின் தலைவரான அபிஷேக் சிங்வியின் தந்தை தான், லோக்பால் என்ற வார்த்தையை, முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் என்ற தகவல், தற்போது தெரிய வந்துள்ளது.

எல்.எம்.சிங்வி என்பவர் தான், 1960ம் ஆண்டுகளில் லோக்பால் என்ற வார்த்தையை, முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர். இவர், 1962ல், லோக்சபாவில் சுயேச்சை எம்.பி.,யாக இருந்தார். "ஊழல் செய்வோரை தண்டிக்கும் வகையிலான ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்' என, இவர், அடிக்கடி லோக்சபாவில் வலியுறுத்தி வந்தார்.ஆனால், இவர் கூறிய வார்த்தை, அப்போது பிரதமராக இருந்த நேருவுக்கு சரியாக புரியவில்லை. "இந்த விலங்கு, எந்த மிருகக் காட்சி சாலையைச் சேர்ந்தது' என்பதை, நீங்கள் தான் கூற வேண்டும்' என வேடிக்கையாக, சிங்வியிடம் நேரு கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான அமைப்பு என்பதற்கு, சமஸ்கிருதத்தில் இருந்து, வார்த்தையை கண்டறிந்து, இதன் பின், லோக்பால் என்ற இந்தி வார்த்தையை, முதல் முதலில் சிங்வி அறிமுகப்படுத்தினார்."லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்த இவர், சுயேச்சை எம்.பி.,யாகவும் இருந்தார். தற்போது இவரது மகனும், காங்கிரசைச் சேர்ந்தவருமான அபிஷேக் மனு சிங்வி தான், நிலைக்குழு தலைவராக இருந்து, லோக்பால் மசோதாவை ஆய்வு செய்து வருகிறார்.

இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, நேற்று முன்தினம் ராஜ்யசபாவில் பேசுகையில், "லோக்பால் மசோதாவுக்கு, இறுதி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலைக்குழுவின் தலைவர் அபிஷேக் சிங்வியின் தந்தை தான், லோக்பால் என்ற வார்த்தையை முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர். இது, அபிஷேக் சிங்விக்கு பெருமை அளிக்கும் விஷயம். எனவே, அபிஷேக் சிங்வி, லோக்பால் மசோதா விவகாரத்தில், இந்த பெருமையையும், பாரம்பரியத்தையும் மனதில் வைத்து, செயலாற்ற வேண்டும்' என்றார்.


Thanks
Dinamalar.

Thursday, August 25, 2011

பிறக்கும் குழந்தைக்கும், எரிக்கும் சடலத்திற்கும் லஞ்சம்


"எங்கும் ஊழல், எதிலும் ஊழல்,' என, இந்தியராய் நாம் சந்தித்த சங்கடங்கள் ஏராளம். இழந்தால் தான் இந்தியாவில் எதையும் பெற முடியும் என்ற கருத்தை வேரறுக்க தொடங்கிய அமைதி யுத்தம் தான் ஹசாரே. நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள், நம்மை பணையம் வைத்து, சொத்து குவிப்பதற்கு கடிவாளம் போட, சரியான கயிறு கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் வளர்ந்து வரும் நாடாக நாம் இருந்தோமே தவிர, வளர்ந்த நாடாக மாறவில்லை. ஊழலும், லஞ்சமும் வளர்ச்சியின் தலையை தட்டின. காக்க வேண்டியவர் கடமை தவறுவதும், கேட்பவர் கேலிகூத்தாவதும் இனி தொடரக்கூடாது. பிறக்கும் குழந்தைக்கும், எரிக்கும் சடலத்திற்கும் லஞ்சம் வாங்குது தான் இன்றைய லட்சணம். இந்நிலை மாற வேண்டும் என்பதற்கு தான், ஊழல் எதிர்ப்பு அலை ஆர்ப்பரித்து அடிக்கிறது. டில்லியில் தொடங்கிய போராட்டம், கன்னியாகுமரி வரை ஒலிக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியனின் உரத்த குரலாக மாறியுள்ள ஜன் லோக்பால் அமலுக்கு, மதுரையிலிருந்து கிளம்பிய தொழிலதிபர்களின் ஆதரவுக்குரல்கள்:

சோமசுந்தரம்(மதுரை பேக்கேஜிங் பிரைவேட் லிட்., உரிமையாளர்): அரசியல் வாழ்க்கையில் தூய்மை வர, ஹசாரே போராட்டம் மட்டுமே தீர்வு. முழுமையான லோக்பால் மசோதா நிறைவேறினால், நாட்டில் அரசியல் ஒழுக்கம் வரும். நேர்மையான தேர்தல் நடக்கும். இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள். சிறந்த சேவையாளர்கள் கிடைப்பர். வீட்டுக்கும், நாட்டுக்கும் ஆரோக்கியம் தரும் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.

வேல் சங்கர்(எஸ்.பி.எஸ்., கடலைமாவு உற்பத்தியாளர், மதுரை):தடம் மாறிச்சென்ற இந்தியாவின் பாதையை முறைப்படுத்த ஒருவர் போராடுகிறார். கோடிக்கணக்கானோர் ஆதரிக்கின்றனர். விமர்சிப்போருக்கு, பலன் இப்போது தெரியாது. வருங்கால இந்தியா வளமுடன் வாழ, "ஜன் லோக்பால்' சரியான தீர்வு. வளர்ந்த நாடாக இந்தியா மாற, இதுவே நல்ல தருணம்.

எம்.வாசுதேவன் (ஈஸ்வரி ஸ்டோர்ஸ் உரிமையாளர், திண்டுக்கல்): இந்தியாவின் ஊழல் நோய்க்கு, ஹசாரே போராட்டம் தக்க மருந்து. நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு நன்மை செய்யாமல், சொத்து சேர்க்கின்றனர். ஹசாரே லோக்பால் இதற்கு கடிவாளமாக இருக்கும். லஞ்சம், ஊழலில் இருந்து விடுபடுவதே உண்மையான சுதந்திரம்.

என்.ராஜேந்திரன்(பிரிஸ்டினோ மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளர்,தேனி): சுயநலம் கருதி அரசியல் வாதிகள் மறைத்த, "லோக்பால்' சட்டம், அன்னாவால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தியா அரசியல் அமைப்புச்சட்டத்தில் இடம்பெற்றதாகும். இதை முழுமையாக நிறைவேற்றினால் மட்டுமே நாடு வளர்ச்சியடையும்.

கண்ணப்பன்(பாரத் அக்ரோ உரிமையாளர், பரமக்குடி): ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்துவதை எந்த குடிமகனும் எதிர்க்க மாட்டான். ஏதோ ஒருவகையில் அனைவருக்கும் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது.

எம்.எம். குணசேகரன் (அண்ணாமலையார் டிரேடர்ஸ் உரிமையாளர், காரைக்குடி): நாட்டின் நலனுக்கான உண்ணாவிரதத்தை, ஒவ்வொரு குடிமகனும் ஆதரிக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. மக்களுக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்ற, அரசியல் வாதிகள் தயங்கவேண்டியதும் இல்லை.

சசி(வனிதா பயர் ஒர்க்ஸ் உரிமையாளர், சிவகாசி): ஒட்டுமொத்த இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கும் நபராக அன்னா ஹசாரே மாறியுள்ளார். லஞ்சம் கொடுத்தால் தான் தொழில் நடத்த முடியும் என்ற கட்டாயம் வந்துவிட்டது. இதற்கு இந்த போராட்டம் முற்றுப்புள்ளி வைக்கும்.

- நமது சிறப்பு நிருபர் - 



Thanks
Dinamalar

Sunday, August 7, 2011

அமெரிக்காவுக்கு நேரம் சரியில்லை... உலகத்துக்கும் தான்.!



-ஏ.கே.கான்

எது நடக்கக் கூடாது என்று உலகம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததோ அது கடந்த சனிக்கிழமை நடந்தேவிட்டது.

அமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டான்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது. கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டுகளாக அமெரி்க்காவின கடன் தர வரிசை 'AAA' என்ற அதி உயர் தரத்தில் இருந்தது. அதாவது, கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, வாங்கிய கடனுக்கு மிகச் சிறந்த வட்டியைத் தருவது, கடனை மிகச் சரியான திட்டங்களுக்கு பயன்படுத்துவது என அமெரிக்கா எல்லா விதத்திலும் AAA என்ற அதி உச்ச நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இதனால் உலக நாடுகளும், சர்வதேச வங்கிகளும், சர்வதேச நிதி அமைப்புகளும், பெரும் நிறுவனங்களும் தங்களது பணத்தை அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்வதையே மிகவும் பாதுகாப்பானதாகக் கருதி பணத்தை முதலீடு செய்து வந்தனர். குறிப்பாக சீனா போன்ற நாடுகள், கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் வரை அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன.

ஆனால், கடந்த ஒரு மாதமாகவே அமெரிக்கா புதிய நெருக்கடியில் சிக்கியது. அதாவது அந்த நாடு எவ்வளவு கடன் வாங்கலாம் என அந் நாட்டு நாடாளுமன்றம் நிர்ணயித்த அளவை, எதிர்பார்த்ததை விட வேகமாகவே தொட்டுவிட்டது.

அமெரிக்காவின் கடன் சுமை 14.3 டிரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது அமெரிக்காவின் மொத்த உற்பத்தியில் (GDP) 95 சதவீதம். ஆனால், இந்த அளவை கடந்த 2ம் தேதியே அமெரிக்கா தொட்டுவிட்டது.

இதனால் கடன் அளவை உடனடியாக உயர்த்தி நி்ர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பராக் ஒபாமா தள்ளப்பட்டார். ஆனால், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் (House of representatives) எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்கே பெரும்பான்மை இருந்ததால், அங்கு அதற்கான தீர்மானத்தை ஒபாவால் நிறைவேற்ற முடியவில்லை.

இது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால், அரசு தனது பொருளாதார ஊக்குவிப்பு செலவுகளைக் குறைக்க வேண்டும் என குடியரசுக் கட்சியினர் நிபந்தனை விதி்க்க, அதை ஏற்றால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால், ஒபாமா அதை ஏற்க மறுக்க, அமெரிக்கா இன்னொரு மாபெரும் நிதிச் சிக்கலை நோக்கி சென்றது.

2ம் தேதிக்குள் கடன் அளவை உயர்த்தாவிட்டால், எந்த அமைப்பிடமிருந்தும் அமெரிக்காவால் நிதி திரட்ட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது, மருத்துவமனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.

இந்த விஷயத்தை நான் முந்தைய கட்டுரையில் விவரித்திருந்தேன். (உலகை மிரட்டிய அமெரிக்காவின் கடன் பிரச்சனை...!)

ஒருவழியாக ஆகஸ்ட் 1ம் தேதி குடியரசுக் கட்சியினர் விட்டுக் கொடுக்க அமெரிக்கா தனது கடன் வாங்கும் அளவை மேலும் 2.5 டிரில்லியன் வரை உயர்த்தியது. இதையடுத்து இந்த மாதம் அரசு ஊழியர்களுக்கும், ராணுவத்தினருக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் போட முடிந்தது அமெரிக்க அரசால்.

சம்பளம் தான் போட்டாச்சே.. பிரச்சனை தான் தீர்ந்துவிட்டதே.. என்று நினைத்துவிடாதீர்கள். இங்கு தான் சிக்கலே ஆரம்பித்தது.

உலகப் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் ஒரு வல்லரசு நாடு, தனது செலவுத் திட்டங்களையும் கடன் திட்டங்களையும் கூட முறைப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதை சர்வதேச நிதி அமைப்புகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.

மேலும் ஒருவேளை குடியரசுக் கட்சியினர் விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால்.. கடந்த 3ம் தேதி முதல் அமெரிக்கா, பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கும். அதாவது அந்த நாட்டில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை அங்கிருந்து எடுக்க ஆரம்பித்திருப்பர். அது நடந்திருந்தால், அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீர்குலைந்திருக்கும்.

ஆக, அமெரிக்கா உண்மையிலேயே AAA தரம் கொண்ட ஒரு நாடு தானா என்ற கேள்விகளை சர்வதேச நிதி அமைப்புகள் கிளப்பின. இதில், ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் நிதி அமைப்பு கொஞ்சம் முந்திக் கொண்டு, அமெரிக்காவின் தரத்தை AAAவில் இருந்து AA என்ற நிலைக்கு தரம் குறைத்துவிட்டது.

அதாவது, நாம் ஒரு 'பர்சனல் லோனுக்கு' அப்ளை செய்தால், நமது வருமானம், நமது கடன்கள், நமது மாத செலவுகள், கடனை திருப்பிச் செலுத்தும் பலம் ஆகிய பல விஷயங்களை பார்த்துவிட்டே நமக்கு வங்கிகள் கடன் தருகின்றன. இதில் ஏதாவது ஒன்றில் பிரச்சனை இருந்தாலும் கடனைத் தருவதில்லை அல்லது கேட்ட அளவுக்கு கடனைத் தராமல், கேட்டதில் பாதியைத் தருகி்ன்றன.

கிட்டத்தட்ட இதே நிலைமைக்குப் போய்விட்டது அமெரிக்கா. AAA என்பது, அமெரிக்கா கேட்காமலேயே வங்கிகளும் நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஓடிப் போய் பணத்தை அந்த நாட்டில் முதலீடு செய்யும் நிலைமை. AA என்பது அமெரி்க்காவே கெஞ்சிக் கேட்டாலும்.. யோசித்துவிட்டு, ஆராய்ந்து பார்த்துவிட்டு தருகிறோம் என்று கூறும் நிலைமை.

''எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்'' என்பது தான் இதற்கான லோக்கல் விளக்கம்.

அமெரிக்காவின் பொருளாதார நிலைமையை இந்த தர வரிசை இறக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டதையடுத்து, உலக நாடுகள் முழுவதுமே முதுகுத்தண்டில் 'ஜில்' என்ற ஒரு பயம் பரவிவிட்டது. இரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது ஏற்பட்ட கஷ்டங்களை உலகம் இன்னும் மறக்கவில்லை. பல நாடுகளும் நிறுவனங்களும் இன்னும் அந்த வீழ்ச்சியின் தாக்கத்திலிருந்தே மீளவில்லை. இந் நிலையில் மீண்டும் ஒரு பொருளாதாரத் தேக்கமோ அல்லது பொருளாதார சறுக்கலோ ஏற்பட்டால்.. என்ன செய்வது என்ற பயம் உலகம் முழுவதுமே பரவியுள்ளது.

இந்த பயத்துக்கு எண்ணெய் ஊற்றும் வகையில், சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் பெரும் சறுக்கல்கள் ஆரம்பித்துவிட்டன. இந்திய பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் கடந்த வெள்ளிக்கிழமை பெரும் சறுக்கு சறுக்கின. இன்றும் வர்த்தகம் ஆரம்பித்தவுடன் 'ரத்தக் களறி' தொடர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் கிட்டத்தட்ட 500 புள்ளிகள் சறுக்கிவிட்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிப்டி 130 புள்ளிகள் சறுக்கி, ஒரு வருடத்துக்கு முன் இருந்த நிலைமைக்குப் போய்விட்டது.

தங்களது வருமானத்துக்கு அமெரிக்கா, ஐரோப்பாவை சார்ந்திருக்கும் சாப்ட்வேர் நிறுவனங்களின் பங்குகள் தான் பெரும் அடி வாங்கியுள்ளன. அதே போல நிதி சிக்கலால், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படலாம் என்பதால் இரும்பு நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

இதனால் லட்சுமி மிட்டல்கள், அம்பானிகள், டாடாக்கள், ஆசிம் பிரேம்ஜிகளுக்கு இரண்டே நாளில் பல பில்லியன் டாலர்கள் இழப்பு என்றால், 'கடன ஒடன' வாங்கி முதலீடு செய்த சிறிய முதலீட்டாளர்களுக்கும் ஏராளமான இழப்பு.

இந்த இழப்புகள் தனி நபர்கள், நிறுவனங்களோடு நின்றுவிடுவதில்லை. இவற்றின் தாக்கம் தேசத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மீதும் இருக்கும் என்பதால், அடுத்தது என்ன நடக்குமோ என வானத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்துள்ளனர் நிதியமைச்சக அதிகாரிகள்.

இதே நிலைமை தான் உலகம் எங்கும்..

ஐரோப்பாவிலும் நிலைமை சரியில்லை. கிரீஸ், போர்சுகல் ஆகிய நாடுகள் கடனில் மூழ்கிக் கிடக்க, அவற்றை மீட்க ஐரோப்பிய மத்திய வங்கி உலகம் முழுவதும் நிதி திரட்டிக் கொண்டுள்ளது. தனது கஷ்டத்துக்கு இடையிலும் அமெரிக்கா 100 பில்லியன் டாலர்களை தந்துள்ளது. இந்தியாவும் 2 பில்லியன் டாலர்களைத் தர உள்ளது.

இப்படி எல்லா பக்கமும் நிலைமை சரியில்லாததால், அடுத்து என்ன நடக்கப் போகிறதோ இல்லையோ.. தங்கத்தின் விலை மட்டும் நிச்சயம் பல மடங்கு உயரப் போகிறது.

இதுவரை அமெரிக்கப் பங்குகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் முதலீடு செய்து வைத்திருந்த நிறுவனங்கள், இந்த நாடுகளில் நிலவும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, அதை வேறு பாதுகாப்பான 'இடங்களுக்கு' திருப்பலாம். அந்த பாதுகாப்பான இடங்களில் மிக முக்கியமான இடம் தங்கம் தான் என்கிறார்கள். இதனால் உலகம் முழுவதுமே தங்கத்தின் விலை தாறுமாறாக உயரப் போகிறது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

அமெரிக்கா அதிகளவில் கடன் வாங்கியது இப்போது தான் வெளி உலகுக்குத் தெரியுமா.. இத்தனை நாட்களாக விட்டுவிட்டு இப்போது ஏன் திடீரென அதை AAAவிலிருந்து AA என்று தரம் குறைத்தார்கள் என்று நீங்கள் கேட்கலாம்.

இப்போது, அமெரிக்காவின் கடன் வாங்கும் தரத்தைக் குறைக்கக் காரணமாக இருந்தது அதன் பொருளாதார நிலைமை மட்டும் அல்ல. அந் நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தான் முக்கியக் காரணம் என்கிறார்கள்.

கடன் வாங்கும் அளவை கடைசி நாள் வரை உயர்த்த முடியாமல் நாடாளுமன்றத்தில் ஒபாமா பட்ட பாட்டை வைத்துத் தான், அந் நாட்டின் தரத்தை ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது என்கிறார்கள்.

இது அமெரிக்காவுக்கு ஏற்பட்ட சரிவு என்பதை விட தனிப்பட்ட முறையில் ஒபாமாவுக்கு விழுந்த அடி தான். ஆனால், அந்த வலியை அனுபவிக்கப் போவது ஒட்டு மொத்த உலகமும் தான்.

இந்த விவகாரம் போதாது என்று அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனைக் கொன்ற படையினரை ஆப்கானிஸ்தானில் நடந்த சண்டையில் ஒட்டுமொத்தமாக பலி கொடுத்துவிட்டு நிற்கிறது அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு. அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி 31 சீல் படையினரை கொன்றுள்ளனர் தலிபான்கள்.

இந் நிலையில், அமெரிக்கா தனது 'பொருளாதார ஒழுக்கத்தை' சரி செய்து கொள்ளாவிட்டால், அதன் தரத்தை மேலும் குறைப்போம் என்று அறிவித்துள்ளது ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்..

ஒபாமாவுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது... உலகத்துக்கும் தான்.!

Monday, July 11, 2011

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்

சென்னை, ஜூலை 11- தமிழகத்தில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் சுகாதாரத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யத்தக்க வகையில் இல்லை. மேலும், இந்த காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சி அடையவே வழிவகுத்தது. எனவே தான், “அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்” என்று 2011-12 ஆம் ஆண்டுக்கான ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் முழுமையான புதிய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன்.

தற்போதைய காப்பீட்டுத் திட்டம் 2011, ஜுலை மாதம் 5 ஆம் நாள் உடன் முடிவடைந்தது.
எனது அரசால் புதிதாக தொடங்கப்பட இருக்கும் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் வரவேற்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக அமையும் :-

1. முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச மருத்துவச் செலவு, இந்த புதியத் திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரையிலும் அனுமதிக்கப்படும். அதாவது, நான்கு வருடங்களில் ஒரு குடும்பம் அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய்க்கான மருத்துவச் செலவினை பெற இயலும்.

2. முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டிருந்த 642 வகையான சிகிச்சை முறைகள் மாற்றி அமைக்கப்பட்டு, தற்போது மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளையும் சேர்த்து இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 950 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்படும்.

3. சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். மேலும் அரசு மருத்துவமனைகளின் மூலமாகவோ, மருத்துவ முகாம்களின் மூலமாகவோ பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு பரிசோதனைக்காக செலவிடப்பட்ட தொகை, அறுவை சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் காப்பீட்டுத் தொகையில் அடங்கும் வகையில் வழிவகை செய்யப்படும். இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாத இனங்களில், ஏற்கெனவே இருந்த காப்பீட்டுத் திட்டத்தில், பரிசோதனைச் செலவு வழங்குவதற்கு வழிவகை செய்யப்படவில்லை.

4. நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இந்த வகையிலான கட்டணங்களை பெறுவதற்கு முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.

5. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர் சிகிச்சை தேவைப்படும் சில வகை நோய்களுக்கு, வரையறுக்கப்பட்ட தொகை தனியாக நிர்ணயித்து வழங்கப்படும். இதுவும் முந்தைய திட்டத்தில் வழிவகை செய்யப்படாத ஒன்றாகும்.

6. அரசு மருத்துவமனைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், தற்போதுள்ள முறைகளை மாற்றி, சிகிச்சைக்காக வரையறுக்கப்பட்ட தொகையை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவது போல் அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும். மேலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

7. இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்திற்கென அனைத்து வசதிகளுடன் கூடிய தனி / சிறப்புப் பகுதிகள் அமைக்கப்படும். இதனால் இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் நாடி வருவதற்குரிய சூழ்நிலை உருவாகும்.
இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்குவதற்கு முன் இடைப்பட்ட காலத்தில், உடனடியாக உயிர் காப்பதற்கான சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவச் செலவில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கான மருத்துவக் கட்டணத்தை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அரசே நேரடியாக வழங்கும்.
இவ்வாறு, இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைப்பதை எனது அரசு உறுதி செய்யும்.

Tuesday, July 5, 2011

படித்ததில் பிடித்தது



படித்ததில் பிடித்தது…………….
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை

*********************************************


எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….

*********************************************


உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…

*********************************************


எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…

*********************************************
ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்…

*********************************************


நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு
ஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது?…..

*********************************************


நீ ஒன்றுமே
செய்ய வேண்டாம்
சம்மதம் மட்டும்
சொல்
உனக்கும்
சேர்த்து நானே
காதலிக்கிறேன்….

*********************************************


அழவைப்பேன்
உன்னை
அன்பே
என்னை கிள்ளி…

*********************************************


நமக்கு பிடித்த பாடல்
தேநீர் கடையில்
ஓடி கொண்டிருக்கிறது
கடைசி பேருந்ததையும்
விட்டு விட்டு
கேட்டு கொண்டிருக்கிறது
காதல்…

*********************************************


என்னை கொல்ல
வாள் வேண்டாம்
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…

*********************************************


எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும் உன்னை
மறக்க…

*********************************************


எனக்கு மட்டுமல்ல
கடைசியில் உனக்கும்
கிடைக்காமலே போய்விடும்
உன் காதல்….

*********************************************


வெறுக்க விரும்புகிறேன்
உன்னை நான்
விரும்பி வெறுக்கிறாய்
என்னை நீ….

*********************************************


மன்னித்து விடு
நான் உன்னை
மறக்க மறந்துவிட்டேன்….

*********************************************


உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……



Sunday, July 3, 2011

Actor Karthi And Ranjani Wedding Gallery

Actor Karthi And Ranjani Wedding Gallery

Tuesday, June 14, 2011

Courtallam
பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். அகத்தியர் கால் பதித்த திருத்தலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை அன்னையின் சீதனம். குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்நகருக்கு வந்து செல்கின்றனர். தென் தமிழ்நாட்டில் உள்ள புகழ்மிக்க அருவி நகரான குற்றாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

குற்றால சீசன் காலம்

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நீர் உடலையும், மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம்.

தென்மேற்குப் பருவ மழை உச்சத்தில் இருக்கும் பொழுது ஓயாத சாரலுடனும், பெருத்த காற்றுடனும், மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெள்ளியை உருக்கி விட்ட அருவிகளாகக் கொட்டுகிறது. அந்த உச்ச கட்ட பருவ காலத்தில் குற்றாலத்தில் தங்கியிருந்து அந்த இதமான சாரலை அனுபவிப்பது பொன்னான அனுபவம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் வரை அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலமே "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

மூலிகைகளும், பழவகைகளும்

இந்த அருவி நீர் பல்வேறு மூலிகை குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.

ஒன்பது அருவிகள்

குற்றாலத்தில் மொத்தம் சிறிதும் பெரிதுமாக 9 அருவிகள் உள்ளன. பழைய அருவி, மெயின் பால்ஸ் என்று இனிய தமிழில் அழைக்கப் படும் பேரருவி, புலி யருவி, ஐந்தருவி, சிற்றருவி, புது அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி என்று ஏழு அருவிகள் மலையைச் சுற்றி மலையடிவாரங்களிலும், தேனருவி, செண்பகதேவி என்று இரு அருவிகள் என்று மலையின் மேலேயும் அமைந்துள்ளன.

பேரருவியும், குற்றாலநாதரும்

மெயின் ஃபால்ஸ் எனப்படும் பேரருவி குற்றாலம் நகருக்குள் இருக்கிறது இந்த அருவி 91 அடி உயரத்தில் இருந்து மலையில் பாய்ந்து முதலில் பொங்குமாங்கடல் என்ற பள்ளத்தில் விழுந்து அதை நிரப்பி வழிந்து கீழே இறங்குகிறது. வெகு தூரத்தில் இருந்தே கண்களைக் கவரும் பேரருவி இது. தூரத்தில் இருந்து பார்க்க கண்களை அகலவெட்டாமல் லயிக்கச் செய்யும் எழில் மிகு அருவி இது. தண்ணீர் நிரம்பி விழும் காலங்களில் அந்த அருவி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தென்காசியிலிருந்தே காட்சியளிக்கும். பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருவிக்கரையில் அமைந்துள்ள குற்றாலநாதர் ஆலயம் சிவபெருமானின் பஞ்ச சபைகளில் சித்திர சபையாக திகழ்கிறது. இங்கு அகத்திய முனிவர் நிறுவிய பராசக்தி பீடமும் அமைந்துள்ளது.

சிற்றருவி- இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

செண்பகாதேவி அருவி

பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தேனருவி

செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஐந்தருவி
குற்றாலம் நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ஐந்தருவி. அழகிய மலைச்சாரல், சிறு சிறு ஆறுகள், பழத்தோட்டங்கள், தங்குமிடங்கள், ஒரு சிறிய ஏரி எல்லாம் தாண்டி வருகிறது ஐந்தருவி. இங்கு அருவி ஐந்து பிரிவாக வந்து விழுவதால் ஐந்தருவி என்று பெயர். திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது. அடர்ந்த கானகங்கள் நிறைந்த மலைத்தொடர். மலையின் மேலே, உயரத்தில் எங்கேயோ, எங்கிருந்தோ பல நூறடிகளுக்கு வெள்ளிக் கம்பியாக ஒரு அருவி விழுந்து மீண்டும் கானகத்திற்குள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)

ஐந்தருவிக்கு போகும் முன்பாக ஒரு கிளைப் பாதை பிரிந்து மலையின் மேல் செல்கிறது. கொஞ்ச தூரம் சென்றதும் அரசாங்கத்தின் பழத்தோட்டத் துறை நடத்தும் ஒரு பழப்பண்ணை வருகிறது. அந்த பண்ணையின் உள்ளே நுழைந்தால் அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இரு அருவிகள் அங்கே உள்ளன. அதற்குப் பழத்தோட்ட அருவி என்று பெயர். ஆனால் இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்க முடியாது. வி ஐ பிக்கள் மட்டுமே குளிக்க முடியும்.

புலியருவி

குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது.

பழைய குற்றாலம் அருவி

குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.

பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.

சுற்றுலா மையங்கள்

குற்றாலத்தை சுற்றிலும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் பல பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. தென்காசி கோவில் அதில் முக்கியமானது. திருமலைக் குமரன் கோவில் என்று ஒரு அழகிய குன்றத்துக் குமரன் கோவில் தவற விடக் கூடாத இடமாகும். குன்றின் மேல் உள்ள கோவிலில் நின்று பார்த்தால் சுற்றி பச்சை பசலேன வயற்பரப்பும் சுற்றிலும் மேகம் கவிந்த குற்றால மலைத்தொடருமாக இயற்கை அன்னையின் எழில் நமது கண்களையும் மனதையும் ஒருங்கே கொள்ளை கொள்ளும். அருகில் உள்ள இலஞ்சி என்ற கிராமத்தில் ஒரு அழகிய முருகன் கோவில் உள்ளது.

கேரளா எல்லை அருவிகள்

குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையைத் தாண்டினால் ஆரியங்காவுக் கணவாயும், கேரளாவும், அச்சன் கோவிலும் வந்து விடும். கேரள எல்லையிலும் சில அருவிகள் உள்ளன. ஆளரவமில்லாத அற்புதமான அருவிகள் அவை. இன்னும் கொஞ்சம் தூரம் சென்றால் குற்றாலத்தின் நெரிசலைத் தவிர்த்தப் பச்சைப் பசேல் என்று போர்த்திக் கொண்ட அற்புதமான பாலருவி இருக்கிறது. தமிழ்நாட்டுப் பகுதிகளில் பாபநாசம் அகத்தியர் அருவியும், பாபநாசம் அணையும், பரிசலில் சென்றால் வரும் பாண தீர்த்தத்தையும் கண்டு குளித்து அனுபவிக்கலாம். ஒரு வாரம் தங்கி, கண்டு, ரசித்து அனுவவிக்க எண்ணற்ற இடங்கள் குற்றாலத்தைச் சுற்றி அமைந்துள்ளன.

அமைவிடம்

தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது. தென்காசி ரயில் நிலையம் இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து குற்றாலத்திற்கு பேருந்து வசதி உண்டு. மதுரையிலிருந்து நிறைய பேருந்துகள் குற்றாலம் வரை செல்கிறது.

Friday, June 3, 2011

கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து- மேலவை இல்லை சூரியஒளிமின்சாரத்தில் கவனம்;கவர்னர் உரை விவரம்


சென்னை: தமிழக சட்டசபை முதல் கூட்டம் இன்று கவர்னர் உரையுடன் துவங்கியது. இன்றைய உரையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த இந்த கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகையில் பல்வேறு அம்சங்கள் அடங்கி இருந்தது. அதே நேரத்தில் தி.மு.க., கொண்டுவந்த திட்டங்கள் மாற்றம் கொண்டு வருவதும் சிலவற்றை ரத்து செய்வதும் , தொழில்துறை ஊக்கம் அளிப்பதும் என பல்வேறு திட்டங்கள் இருந்தன.

கூட்டம் துவங்கியதும் புதிய எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் ஜெ., தமிழக மக்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது உரையை துவக்கினார்.

இலவச அரிசி வழங்கும் திட்டம், கேபிள் டி.வி., அரசுடைமையாக்குவது தொடர்பாக உடனடி நடவடிக்கை, கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து , மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, வரும் செப் 15 ம் தேதி முதல் அமல்படுத்தப்படும், சூரியஒளி மூலம் மின்சாரத்திற்கு முக்கியத்துவம், மேலவை ‌கொண்டுவரப்படாது, ஓமந்தூரார் தோட்டத்தில் தி.மு.க., அரசின் காலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலக பணிகள் நிறுத்தி வைப்பது, இது தொடர்பான கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி உள்ளிட்டவை கவர்னர் உரையில் முக்கியஅம்சங்கள் ஆகும்.

 * சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் மோனா ரயில் திட்டமாக மாற்றப்படும்.

* ஏனைய பகுதிகளில் உள்ள சென்னை அண்ணா பல்கலை., கலைக்கப்பட்டு, சென்னையில் மட்டும், அண்ணா பல்கலை., இணைந்து ஒரே மையமாக செயல்பபடும்.

* மக்கள் நலத்திட்டம் அங்க அடையாளத்துடன் கூடிய புதிய திட்டம்

* முதியோர் உதவித்தொகை வங்கி மூலம் வழங்க ஏற்பாடு.

* பொது விநியோக திட்டத்தை வலுப்படுத்த கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை

*ரூ.50 கோடி செலவில் விலைக்கட்டுப்பாடு நிதியம்

*உற்பத்தி குறைவாக உள்ள அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி அதிகரிக்க திட்டம்

* மீனவர்கள் நலன் பேணிக்காக்கப்படும்

* வேலைவாய்ப்பை பெருக்கிட ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டம்

*வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல திட்டம்

*முதன்மை துறையான வேளாண்மை ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்துள்ளது. இதனை சீர்செய்ய சிறப்பு கவனம்

*கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து செய்யப்படும்.இது மக்களின் தேவையை நிறைவேற்றும்படியா முழுமையா இல்லை எனவே அனைவருக்கும் தரமான மருத்துவம் பெற புதிய மருத்துவ திட்டம் கொண்டுவரப்படும்.

*சமச்சீர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்குழு.சமச்சீர் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் எதிர்காலம் பாழாவதை இந்த அரசு விரும்பவில்லை. தற்போதுள்ள புது பாடத்திட்டத்தில் தரமானதாக இல்லை.

*விவசாயிகள் நலன் கருத்தில் கொண்டு பண்ணைசார் சிறப்பு திட்டம்

*துல்லிய பண்ணை முறை பெரிய அளவில் கொண்டு வரப்படும் அதிகவருவாய் தரும் பயிர்கள் பயிரிட தேவையான உதவிகள் செய்யப்படும்

* வேளாண்மையில் நீடித்த வளர்ச்சிக்கு பாசன நதி முக்கியம், நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

* மேட்டூரில் முன்கூட்டிய தண்ணீர் திறக்க உத்தரவு

* வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டம் ஒருங்கிணைத்து ஏழை குடும்ப நல திட்டம் கண்காணிக்கப்படும்

*வரீ சீர்திருத்தம், விற்பனை வரி, சரக்கு, சேவைவரியை பின்பற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.

*முல்லை பெரியாறு உள்ளிட்ட நதி நீர் பிரச்னையில் சட்டப்படியான நடவடிக்கை எதிர்கொள்வது

*தொழில் துறையில் மோட்டார்வாகனதுறை தகவல் தொழில் நுட்பம், கணனி துறையில் பெரும் தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.

* நானோ தொழில் நுட்பம் ஊக்குவிக்கப்படும்

*தகவல் தொழில்நுட்பம் தொழில்பூங்கா மூலம் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்

*மின்சாரம், சாலை வசதி குறைவு போக்கிட திட்டம் , மாநில அரசின் நிதியுடன் தனியார் தொழில் நிறுவனங்களுடன்

* மின் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆட்சியில் தொழில் துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பாதிப்பு உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக உருவாக்கப்படும், தொழில்துறைக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். மின் வழங்கிகள் மூலம் மின்சாரம், காற்றாலை மின் உற்பத்தி முழுமையாக செயல்படுத்துதல், மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்திக்கு முழுக்கவனம்.

* தொடர்பு துறைகள் பழைய செயல்பட்டு வருகிறது. அமைச்சர் ஒருபுறமும், செயலகம் ஒரு புறமும் இருப்பது நல்லதல்ல, கூடுதலான செலவு, தரமற்ற கட்டுமானம் இவைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிட்டி.

*சட்ட ஒழுங்கு பேணிகாத்திட முழு நடவடிக்கை எடுக்கப்படும், ஜெ., ஆட்சி பொறுப்பேற்ற கடந்த காலத்தில் அமைதிப்பூங்காவாக நடத்தியுள்ளார். போலீஸ் துறை நவீனப்படுத்தப்படும், குற்றவாளிகள், கண்காணிக்கும் மின் திட்டம் விரைவில் செயலாற்றப்படும்.

*சென்னை நகரில் ஆற்றோரம் வாழும் நபர்களுக்கு பாதுகாப்பான வீடு வழங்கப்படும்.

* கடற்கரையோரங்களில் சிறு துறைமுகங்கள் தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும்

*பெண்கள் நலன் நிறைவேற்றுவது இந்த அரசின் முக்கிய தலையாய பணி ஆகும். சுய உதவிக்குழு மூலம் தொடர்ந்து வங்கிகக்கடன் வழங்கப்படும்

* மகளிருக்கு மின்விசிறி, கிரைண்டர் ,மிக்ஸி, செப் 15 ம் தேதி முதல் வழங்கப்படும்

* சூரிய எரிசக்தி ஆரம்பகட்ட செலவு அதிகமாக இருந்தாலும் , தெருவிளக்கு, மற்றும் சமுதாய மாற்றங்களுக்கு தேவையான ஒன்றாக இந்த அரசு கருதுகிறது. எனவே இது ஊக்குவிக்கப்படும்.

*சுற்றுச்சூழல் பாதுகாத்திட சிறப்பு முயற்சிகள் , மக்கிப்போகாத பிளாஸ்டிக் தொடர்பான சிறப்பு கவனம் எழுப்பிட புதிய திட்டம், பாலித்தின் பைகளுக்கு தடை

*தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும், பள்ளிச்சேர்ப்பு அதிகரிக்க நடவடிக்கை.

*மேலவை தேவையில்லை என முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முடிவு எடுத்திருந்ததால் அதன் அடிப்படையில் மீண்டும் மேலவை ஏற்படுத்த மாட்டாது.

* வீட்டு வசதி திட்டத்தினால் பயனாளிகளுக்கு உரிய பயன் கிடைக்காததாலும், அரசு வழங்கிய நிதிஉதவி மிக குறைவு என்பதாலும், அந்த திட்டம் கைவிடப்ட்டு, அரசே வீடுகள் கட்டத்திர ஏற்பாடுகள் செய்யப்படும்.

* மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி இணைக்கும் தனி இயக்குனரகம் உருவாக்கப்படும்.

* அரசு ஊழியர் பெண்களுக்கான பேறுகால விடுப்பு 6 மாதமாக உயர்த்தப்படும்.


 மீண்டும் சட்டசபை 6ம் தேதி கூடுகிறது: கவர்னர் உரை முடிந்ததும் சபாநாயகர் தலைமையில் கூடி சட்டசபை அலுவல் குழு ஆய்வ செய்தது. பின்னர் நிருபர்களிடம் தெரிவித்த சபாநாயகர் வரும் 6ம் தேதி சட்டசபை கூடுகிறது. அந்நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒத்தி வைக்கப்படும், 7, 8, 9 தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிப்பது, மற்றும் விவாதம் நடக்கும், 10 ம் தேதி பதிலுரையுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.

Friday, May 27, 2011

பத்தாம் வகுப்பு தேர்வு: 5 பேர் முதலிடம், 11 பேர் 2-வது இடம், 24 பேர் 3-வது இடம்


சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் 5 பேர் முதலிடத்தையும், 11 பேர் இரண்டாவது இடத்தையும், 24 பேர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 85.30 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வழக்கம் போல மாணவியரை விடக் குறைவாகும்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணாக்கர்களின் முழுப் பட்டியல்

முதலிடம்

5 மாணவிகள் 500-க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
Nithya, Bagyashree and Shini
 
அவர்கள் பெயர் விவரம்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி நித்யா, கோபிச்செட்டிபாளையம் மாணவி ரம்யா, தலைவாசல் எஸ்.ஆர்.எம். முத்தமிழ் பள்ளி மாணவி சங்கீதா, செய்யாறு மாணவி மின்னலாதேவி, சென்னை திருவொற்றியூர் மாணவி ஹரிணி ஆகியோர் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளவர்கள் ஆவர்.

இரண்டாவது இடம்

11 மாணவ-மாணவியர் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாவதாக வந்துள்ளனர்.

அவர்கள் விவரம்,

1. ஏ.சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம்
2. வி.பாக்யஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி
3. பி.அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராம், பரமக்குடி
4. ஜெ.ஜெயப்பிரியா, எஸ்.எச்.என். இதெல்ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர்
5. டி.ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்
6. எம்.பொன்மணி, எஸ்.ஆர்.பகத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்
7. என்.எம்.கார்த்திக், புனிதமேரி மேல்நிலைப்பள்ளி, மதுரை
8. ஏ.சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்ல பெருமாள்பேட்டை, புதுச்சேரி
9. வி.சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை, சென்னை
10. எம்.புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி, சென்னை
11. ஆர்.சுஷ்மிதா, பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி, சென்னை

மூன்றாவது இடம்

24 மாணவ-மாணயர் 500-க்கு 494 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

அவர்கள் பெயர் விவரம்,

1. நிம்ருதா (494), செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோயில்
2. கே.லட்சுமி பிரியா (494), எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி, நாகர்கோயில்
3. ஜே. உமா (494), எஸ்.எச்.என். எதேல் ஹார்வி மேல்நிலைப்பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை
4. லலித் செல்லப்பா கார்ப்பென்டர்(494), பி.ஏ.சி.எம்., மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்
5. குங்குமால்யா (494), எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை
6. பி.எம்.இந்து (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கவிந்தாபாடி, கோபிச்செட்டிப்பாளையம்
7. எஸ்.ஹரிபிரபா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்
8. ஏ.ஷோபனா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்
9. எஸ்.அசோக்குமார் (494), எஸ்.வி.வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, தாசம்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம்
10. என்.லோகேஷ்குமார் (494), ஜி.வி. மேல்நிலைப் பல்ளி, மாசிலாபாளையம், சங்ககிரி
11. கே.விக்னேஸ்வரி (494), வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூர், நாமக்கல்
12. கே.காவ்யா (494), அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி
13. என்.செந்தில்குமார் (494), சேரன் மேல்நிலைப் பள்ளி, புன்னம்சத்திரம், கரூர்
14. எஸ்.ஜெயப்பிரகாஷ் (494), ஈ.ஆர். மேல்நிலைப் பள்ளி, திருச்சி
15. எம்.ஜோதீஸ்வரன் (494), ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி
16. எஸ்.காயத்ரி (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை
17. ஏ.பவித்ரா தேவி (494), ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்
18. சி.அபிநயா (494), கலைமகள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர்
19. ஜே.ஷைனி (494), மௌன்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி, தியாகதுர்கம், விழுப்புரம்
20. எம்.ஷபனா பேகம் (494), செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்
21. இ.தனசேகர் (494), டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்
22. எச்.சங்கீதா (494), செயின்ட் ஆன்டனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்
23. ஜே.தாமோதரன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை
24. எஸ்.ஐயப்பன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை

Monday, May 23, 2011

தலையங்கம்:தயாராகிறது ஓர் எரிமலை...


பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. உலகத் தரத்திலான பொருள்கள் அனைத்தும் இந்தியாவில் கிடைக்கிறது என்கிற திருப்தியும், சர்வதேச அளவில் நமது இந்திய நிறுவனங்கள் போட்டிபோடும் தகுதி பெற்றிருக்கின்றன என்கிற பெருமையும், நமது நகரங்கள் மேலைநாடுகளைப்போல நுகர்வோர் கலாசாரத்தை வரிந்து கொண்டிருக்கின்றன என்கிற யதார்த்தமும் இனிக்கிறது. குறிப்பாக, தகவல் தொலைத்தொடர்புத் துறை நமது இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய சொர்க்கவாசலையே திறந்துவிட்டிருக்கிறது என்பதும் உண்மை.


ஆனால், இவையெல்லாம் மேம்போக்கான முன்னேற்றங்கள்தானே தவிர, ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரமும் சமச்சீர் முன்னேற்றம் கண்டு, எல்லா தரப்பினருக்கும் உலகமயமாக்கல், பொருளாதாரச் சீர்திருத்தம் போன்ற கொள்கைகளின் பயன்கள் சென்றடைந்திருக்கின்றனவா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் ஏற்பட்டிருக்கும் கலாசாரச் சீரழிவுகளைப் பற்றி நாம் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. எந்தவொரு சமுதாயத்தையும் நாம் அந்தச் சமுதாயம் விரும்பும் மாற்றங்களிலிருந்து தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதுதான் காரணம்.

சமீபத்தில் 2009-10-க்கான தொழிலாளர் ஆணையத்தின் வேலைவாய்ப்பு மற்றும் வேலையில்லாமைக்கான கணக்கெடுப்பின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள் தவிர, இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் எல்லாம் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களும், அறிக்கையும், இந்தியாவை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக இப்போதும் தொடர்வது வேலைவாய்ப்புதான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

காஷ்மீரையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தங்க நாற்கரச் சாலையால் சரக்குப் போக்குவரத்து சுலபமாகி, கணிசமாக நமது ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற கருத்தையும் பொய்யாக்கி இருக்கிறது இந்த அறிக்கை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நமது இறக்குமதி அதிகரித்து வருவதுடன், உற்பத்தி பல துறைகளில் குறைந்திருப்பதும், அதனால் வேலை இழப்பு ஏற்பட்டிருப்பதும் இந்த அறிக்கையிலிருந்து தெரிய வந்திருக்கிறது. போதாக்குறைக்கு, கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு இதுபோன்ற திட்டங்கள் எந்தவிதப் பயனும் அளிக்கவில்லை என்கிறது அந்த அறிக்கை.

தொழில் துறை வளர்ச்சி பற்றி நாம் என்னதான் பேசினாலும், இப்போதும் இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்புக் களமாகத் தொடர்வது என்னவோ நமது கிராமப்புறங்கள்தான். கடந்த இருபதாண்டு பொருளாதாரச் சீர்திருத்தத்தால் இந்த நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரமாக இருக்கிறது.

இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 23.80 கோடிக் குடும்பங்களில் 72.26% குடும்பங்கள் இப்போதும் கிராமப்புறங்களில்தான் வசிக்கின்றன. இவர்களில் 10.1% பேர் வேலையில்லாமல் திண்டாடுபவர்கள் என்று தெரிவிக்கிறது அந்தப் புள்ளிவிவரம். அதனால்தான் அரசுகள் அறிவிக்கும் இலவசத் திட்டங்கள் கிராமப்புற ஏழை மக்களை இந்த அளவுக்குக் கவர்கின்றன என்று கருத இடமிருக்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பின்மைக்கான முக்கிய காரணி, விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுதான்.
கிராமப்புறங்களில், விவசாயம்தான் 57% வேலைவாய்ப்பு வழங்குகிறது. கட்டுமானத் தொழில் 7.2%, சிறு தொழில் உற்பத்தி 6.7%, ஏனைய சில்லறை வியாபாரங்கள், கைவினைப் பொருள்கள், சேவைத்துறை போன்றவை 6.3% வேலைவாய்ப்பை வழங்குகின்றன. விவசாயம் செழிப்பாகவும், லாபகரமாகவும் நடைபெறாமல் போனால் ஒட்டுமொத்த கிராமப்புற வேலைவாய்ப்புகளும் சுருங்கி விடுகின்றன. விவசாயத்தில் ஏற்படும் பின்னடைவை ஈடுகட்ட கிராமப்புற மக்களுக்கு மாற்று வேலைவாய்ப்புக்கான பயிற்சியும் தரப்படுவதில்லை.

கிராமப்புறத் தொழிலாளிகளுக்கு மாற்றுத் தொழிற்பயிற்சி வழங்குவதன் மூலமும், விவசாயம் பொய்த்தாலும் அவர்களது பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க வழிகோலுவதன் மூலமும்தான் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் மிகப்பெரிய அளவில், விவசாயத் தேக்கத்தை ஈடுகட்டி வந்த கால்நடை வளர்ப்பு இப்போது இல்லாமல் போனதுகூட, கிராமப்புற வேலைவாய்ப்பின்மைக்குக் காரணம் என்கிறது அந்த அறிக்கை.

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்பது கிராமப்புறப் பொருளாதாரத்தை ஆரோக்கியமான வகையில் வளர்க்க உதவாமல், ஊழலுக்கும், ஆக்கபூர்வமான விவசாய மற்றும் கிராமப்புறத் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் அமைந்திருக்கிறது என்கிற உண்மையும் இந்தப் புள்ளிவிவரங்களின் மூலம் தெளிவாகிறது. விவசாயம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதுடன், கிராமப்புறத் தொழிலாளர்களிடம் சேவைத் துறைக்கான திறமைகள் வளர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்தும், பொருளாதாரச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளாகியும் இன்றும் இந்தியாவில் அரசு வேலைவாய்ப்புக்கான முக்கியத்துவம் குறையவில்லை என்பதிலிருந்தே, திறமைகள் வளர்க்கப்பட்டு, தன்னம்பிக்கையுடன் போட்டிபோடத் தயாரான தலைமுறை உருவாக்கப்படவில்லை என்பதுதான் தெளிவாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், விவசாயமும் ஆதரிக்கப்படாமல், கிராமப்புற வளர்ச்சியும் போதிய கவனத்தைப் பெறாமல், தொழில் வளர்ச்சி என்பதும் நகர்ப்புற வளர்ச்சியாக இருப்பது, வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய அளவில் பூதாகரமாக வெடித்து, சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகக்கூடும் என்பதைத்தான் உணர்த்துகிறது.

சமூகப் பாதுகாப்பு என்பது தனியார்வசம் ஒப்படைக்கப்படுவதால் இந்தப் பிரச்னை மேலும் கடுமையாகி மிகப்பெரிய எதிர்விளைவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்றுமதி, இறக்குமதி, பொருளாதார வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருக்கட்டும். நமது ஆட்சியாளர்களின் முழுமுதல் கவனமும் கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்குவதில் முனைப்புடன் செலுத்தப்படாவிட்டால், ஓர் எரிமலை வெடிக்கத் தயாராகிறது...!

Tuesday, May 17, 2011

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னையிலிருந்து கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்கள் தப்புவதற்கு சில வழிமுறைகள்:


பெட்ரோல் விலை உயர்வு பிரச்னையிலிருந்து கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்கள் தப்புவதற்கு சில வழிமுறைகள்:
1.குறைந்த தூரம் செல்வதற்கு கார், பைக்குகளை பயன்படுத்தாமல் நடந்து செல்வதே சால சிறந்தது. பெட்ரோலும் மிச்சம், வாக்கிங் செய்த பலனும் கிட்டும்.

2.தரமான பெட்ரோல் பங்குகளில் மட்டுமே பெட்ரோல் போடுங்கள். சில பங்குகளில் போடப்படும் கலப்பட பெட்ரோல் உங்கள் வாகனத்தின் எஞ்சினை சுவாகா செய்துவிடும்.

3.குறிப்பிட்ட இடைவெளிகளில் வாகனத்தை சர்வீஸ் செய்ய மறக்க வேண்டாம். இதனால், வாகனத்தின் மைலேஜ் குறையாது.

4.டிரைவிங்கை பொறுத்து வாகனத்தின் மைலேஜ் கொடுக்கும் திறன் மாறுபடும். எனவே, வாகனத்தை சீராக ஓட்டுவதற்கு பழகிக் கொள்ளுங்கள்.

5.சிக்னல்களில் நிற்கும்போது, ஆக்சிலேட்டரை அழுத்தி எஞ்சினை உறுமவிடாதீர்கள். இதனால், அதிக எரிபொருள் செலவாகும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

6.எஞ்சினில் சரியான அளவு ஆயில் இருக்கிறதா என்பதை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள்.

7.டயர்களில் சரியான அளவு காற்றின் அழுத்தம் இருக்கிறதா என்பதை பார்த்துகொள்வது நல்லது. டயர்களில் சரியான அளவு காற்று இல்லாவிட்டால் அதிக எரிபொருளை எஞ்சின் வி்ழுங்கும்.

Monday, May 16, 2011

ஜெயலலிதாவின் முதல் உத்தரவு


தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா இன்று திங்கள்கிழமை மாலை சென்றார். அங்கு முதல்வர் பொறுப்பை முறைப்படி ஏற்றார். பின்னர் கோப்புகளில் கையெழுதிட்டார்.

7 திட்டங்கள்:

அதில் முதல் உத்தரவு, 



படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ 25000 மற்றும் 4 கிராம் இலவச தங்கம் வழங்கப்படும் என்பதுதான்.

பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம்

மேலும் ரேஷனில் கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்திற்கு பதிலாக 20 கிலோ அரிசி இலவசம், பரம ஏழைகளுக்கு இது 35 கிலோவாக வழங்கப்படும்.

முதியோர் உதவிபெறும் பெண்களின் ஓய்வு ஊதியம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு

மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால உதவி பணம் ரூ.1,000-ல் இருந்து இரண்டாயிரம் ஆக உயர்வு

அரசு பெண் ஊழியரின் மகப்பேறு கால விடுப்பு சலுகை 6 மாதமாக உயர்வு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை


-என மொத்தம் ஏழு கோப்புகளில் கையெழுத்திட்டார்.

Sunday, May 15, 2011

ஜெயலலிதா அமைச்சரவையில் 33 அமைச்சர்கள்

அமைச்சரவைப் பட்டியல்:

1. ஜெயலலிதா - முதல்வர்
2. ஓ.பி.பன்னீர்செல்வம் -நிதி
3. கே.ஏ.செங்கோட்டையன் - வேளாண்மைத்துறை
4. நத்தம் ஆர்.விஸ்வநாதன் - மின்துறை, மதுவிலக்கு கலால்
5. கே.பி. முனுசாமி - உள்ளாச்சித்துறை ஊராக வளர்ச்சி
6. சி.சண்முக வேலு - தொழில்துறை
7. கே..வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை
8. ஆர்.வைத்திலிங்கம் - வீட்டு வசதி
9. அக்ரி கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை
10. சி.கருப்பசாமி - கால்நடைத்துறை
11. பி.பழனியப்பன் - உயர்கல்வித்துறை
12. சி.வி.சண்முகம் - பள்ளி கல்வித்துறை
13. செல்லூர் ராஜூ - கூட்டுறவுத்துறை
14. எடப்பாடி பழனிச்சாமி - நெடுஞ்சாலைத்துறை சிறு துறைமுகங்கள்
15. பி.தங்கமணி - வருவாய்துறை
16. கே.டி.பச்சமால் - வனத்துறை
17. வி.செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை
18. எஸ்.வி.சண்முகநாதன் - இந்து அறநிலையத்துறை
19. எஸ்.வி. வேலுமணி - சிறப்புத்திட்ட அமலாக்கம்
20. டி.கே.எம்.சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
21. இசக்கி சுப்பையா - சட்டத்துறை
22. எம்.சி.சம்பத் - ஊரகத்தொழில்துறை
23. ஜி.செந்தமிழன் - செய்தித்துறை
24. கோகுலஇந்திரா - வணிகவரித்துறை
25. ராமஜெயம் - சமூக நலத்துறை
26. பி.வி.ரமணா - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை
27. ஆர்.வி.உதயகுமார் - தகவல் தொழில்நுட்பம்
28. என்.சுப்பிரமணியன் - ஆதிதிராவிட நலத்துறை
29. என்.மரியம் பிச்சை - சுற்றுச்சூழல்துறை
30. கே.ஏ.ஜெயபால் - மீன்வளத்துறை
31. புத்தி சந்திரன் - சுற்றுலாத்துறை
32. எஸ்.டி.செல்லப்பாண்டியன் - தொழிலாளர் நலத்துறை
33. டாக்டர் வி.எஸ்.விஜய் - மக்கள் நல்வாழ்வுத்துறை
34. என்.ஆர். சிவபதி - விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை

Tuesday, April 26, 2011

Election_Cartoon_2011

Dinamalar cartoon

Dinamalar cartoon













Monday, April 25, 2011

சாய்பாபாவின் சரித்திரம்


பகவான் சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு அதிசய நிகழ்வு என்று ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் சாய்பாபா திறமையாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் இருக்கும் போது, தேள் ஒன்று சாய்பாபாவை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் அவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பா பாவின் உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்த வர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். (ஷீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர்.

இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்). சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தி யாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப் பட்டு 1950ல் நிறை வடைந்தது. 1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்து வமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர் களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்ய படுத்தினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்தார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா, நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான், சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், எம்.எஸ். சுப்புலட்சுமி, நானி பல்கி வாலா, டி.என். சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும் இவரது பக்தர்களாக உள்ளனர்.1993 ஜூன் 6ல் சாய்பா பாவை கொல்ல நடந்த ¬முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தின. ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் இவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவரது தரிசனத்தை பெறுகின்றனர்.

சமூகத் தொண்டு:ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடை கின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங் களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது. சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங் களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்."அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.

சாய்பாபாவின் சேவைகள் : * சத்ய சாய் தனது பக்தர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 136 நாடுகளில் இவை இயங்கி வருகின்றன.
* சமூகம், கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட பல துறைகளில் இவரது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
* பெங்களூருவில் உள்ள பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் முதியோருக்காக "விருத்தாஸ்ரமம்' என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* பாபா குறித்த நூல்கள், "சிடி'க்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகிறது.
* ஆந்திராவில் உள்ள அனந்தபூர், வடக்கு கோதாவரி மற்றும் கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரே ஆண்டில் அம்மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.
* ஒயிட்பீல்டு ஆசிரமம் அருகே சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்øகாக வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
* சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தெலுங்கு கங்கை திட்டத்தை சரி செய்து தீர்வு வழங்கியது சாய் பாபாவின் சாயி மத்திய அறக்கட்டளை.
* நாட்டில் இயற்கை பேரழிவு ஏற்படும் சமயங்களில் அப்பகுதியில் உள்ள சாயி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உதவிகள் செய்கின்றனர்.

""எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடு'' : 1976ல் நடந்த நிகழ்ச்சி இது. சாய்பாபா பிருந்தாவனத்தில்(சாய்பாபாவின் இருப்பிடம்) இருந்தார். இன்ஜினியர்கள் சில கட்டடத் திட்டங்களை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். சாய்பாபா அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, ""டியர் பா#ஸ், உங்களுக்காக ஒரு ஹாஸ்டலை கட்ட ஏற்பாடு செய்திருக்கிறேன். அது வசதியான அறைகள் கொண்டதாக இருக்கும்,'' என்றார்.

ஒரு மாணவர் பாபாவை நோக்கி, ""சுவாமி! நாங்கள் இங்கு சுகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். புதிய ஹாஸ்டல் எங்களுக்குத் தேவையில்லை. இந்த பிருந்தாவனமே எங்களது இல்லம்'' என்றார். ""அன்புள்ள குழந்தைகளே! பிருந்தாவன் உங்களது என்று சொல்வது சரியே. அதே சமயத்தில் சிறுவர்களாகிய நீங்கள் இடம் போதாமல் முடங்கிக் கிடப்பதைப் பார்த்து என் மனம் பொறுக்கவில்லை. உங்களுக்கு வசதி செய்து தருவது தான் என் கடமை. வரும் வியாழன் அன்று புதிய ஹாஸ்டலுக்கான அடித்தளம் போடப்படும்'' என்று சொல்லிவிட்டு தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்கு ஆசி அளிக்க கிளம்பினார்.
அடுத்த இரண்டுநாட்களுக்குள் அடித்தளமிடும் பூமிபூஜை நடக்க இருந்தது. இன்ஜினியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள். மாணவர்களுக்கு இச்செயல் பிடிக்கவில்லை. அடுத்தநாள் ஹாஸ்டலுக்கு பாபா வந்தபோது, வயதில் சிறிய மாணவன் ஒருவன், பாபாவின் கையில் ஒரு கடிதத்தைத் தந்தான். அவர் அதைப் படித்து விட்டு சிரித்து விட்டார். வார்டனை வரச் சொல்லி அதை உரக்கப் படிக்குமாறு கூறினார். அதில் கீழ்க்கண்டவாறு இருந்தது.

""அன்பு மிக்க சாயி அம்மா! தங்களின் மலர்ப்பாதங்களுக்கு எங்கள் பணிவான வணக்கம். தங்களுக்கு எங்களிடம் வருத்தமா? தங்களின் அமைதியை நாங்கள் கெடுக்கிறோமா? ஒழுக்கவிதிகளை மீறி கட்டுப்பாடின்றி நடக்கிறோமா? அவ்வாறு இல்லாவிட்டால் பிருந்தாவனத்தின் எல்லையை விட்டு எங்களை ஏன் அனுப்ப முயற்சி செய்ய வேண்டும்? மிகவும் ரம்மியமான இந்த பிருந்தாவனத்தில் தான் நாங்கள் இனிமையையும், அன்பையும், பாதுகாப்பையும் நெருக்கமாக நாங்கள் உணர்கிறோம். வானுலக தேவர்கள் கூட இந்த அன்பை, ஆனந்தத்தை அனுபவிக்க ஆசைப்படுவார்கள்.''
இதயம் நிறைந்த பாசத்துடன் தங்கள் குழந்தை

பின்குறிப்பு: பிருந்தாவனத்தில் இருந்து வெகு தூரத்தில் புதிய ஹாஸ்டல் கட்டவேண்டும் என்று தாங்கள் உறுதியாக இருந்தால், தயவு செய்து தங்களுக்கும் ஒரு புதிய இல்லம் அமைத்துக் கொண்டு எங்களுக்கு மிக அருகிலேயே இருக்க வேண்டுகிறோம். வார்டன் இக்கடிதத்தைப் படித்து முடித்ததும், கண்ணீர் விடாத மாணவர்கள் யாருமே இல்லை. ஒரே குரலில் அனைவரும், ""சுவாமி! தயவு செய்து எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சினர். இதைக் கண்டு பாபாவின் உள்ளம் உருகியது. அவர் உடனே தலைமை இன்ஜினியரை அழைத்து, வரைபடங்களை வேறு மாதிரி வரையும்படி கேட்டுக் கொண்டார்.
பிருந்தாவன பகுதிக்குள்ளேயே புதிய ஹாஸ்டலைக் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த பரபரப்பான செய்தியைக் கேட்டதும் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். பூமிபூஜை நாளன்று ஆரத்திக்கான விளக்கை ஏற்றும்போது மாணவன் ஒருவன், ""சுவாமி! நீங்கள் எங்களுக்காக எவ்வளவோ செய்கிறீர்கள். தங்களுக்குக் கொடுக்க எங்களிடம் ஒன்றும் இல்லையே!'' என்ற சொல்லி கண்ணீர் விட்டான். அதற்கு பாபா""ஆனந்தக் கண்ணீர், உன் மிருதுவான கன்னத்தில் வழிகிறதே! அது போதாதா? எனக்கு வேண்டியது அதுவே! எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்து! நான் மிகவும் விரும்புவது உன் மகிழ்ச்சி மட்டுமே!'' என்றார். பிருந்தாவன் அமைப்பில் உள்ள உயர்ந்த கட்டிடம் பாபா மாணவர்கள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்புக்கு ஒரு இனிய நினைவுச் சின்னம்.

பிறப்பும் இறப்பும் எனக்கில்லை : ஒருமுறை பிறந்த நாள் விழாவில் சத்யசாய்பாபா சார்பில் ஒரு செய்தியை சாய்பக்தர் ஒருவர் வாசித்தார். அதில், ""இந்த உடலுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஆனால், நீங்கள் எனக்கு அன்பின் காரணமாக விழா எடுக்கிறீர்கள். ஆம்...அன்பே உலகில் மிக உயர்ந்த சக்தி. இங்கே அனைவரும் ஒன்று கூடி சகோதர, சகோதரிகளாக அமர்ந்துள்ளீர்கள். உலகத்தில் சாந்தி ஏற்பட நாம் முயற்சிக்க வேண்டும். குறுகிய உணர்வைக் கொன்றுவிட்டு ஒற்றுமையையும், கூட்டுறவையும் வளரச் செய்தால் அதுவே உண்மையான மனிதத்தன்மையாகும்,'' என்று கூறப்பட்டிருந்தது.

""துயரத்தைத் தாங்கும் சக்தியைத் தருகிறேன்'' அன்றே சொன்னார் சத்யசாய்பாபா : ராமபிரானைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதிய ராமசரண் என்ற பண்டிதர் பாபாவின் பக்தர். அவர் உடல் உபாதைகளால் அவதிப்பட்டார். ராமசரணின் நண்பர்கள் பாபாவிடம் சென்று நிவாரணம் பெற்றுவரும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், "வினைப்பயனை அனுபவித்துக் கழிப்பதே நல்லது' என்றார் ராமசரண். ராமசரண் படும் இந்த துன்பம் குறித்து பாபா ஒருமுறை குறிப்பிட்டார். ""கடவுள் எப்போதும் காப்பாற்ற மாட்டார் மற்றும் தண்டனையும் அளிக்கமாட்டார். நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நான் உங்களுக்கு அளித்த பரிசுகள். அவைகள் என்னால் உண்டாக்கப்பட்டவையல்ல. அவைகளை உருவாக்குபவர்கள் நீங்களே,'' என்றார். ""அப்படியானால் துன்பங்களை நீக்க கடவுளின் பங்குதான் என்ன? என்றார் ஒரு பக்தர்.அதற்கு பதிலளித்த பாபா ""நான் உங்களுக்கு துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை அளிக்கிறேன். தூக்கமுடியாமல் சில்லரைக் காசு மூடையைச் சுமந்து வருபவனிடம் ரூபாய் தாளாக மாற்றித் தந்தால் சுமை எப்படி குறையுமோ, அதுபோல துயரங்களைச் சுமந்து வருபவனின் சுமையை குறைத்து லேசாக்கிவிடுகிறேன். அப்போது துயரச்சுமை உன்னை அழுத்துவதில்லை'' என்றார்.

Sunday, April 24, 2011

சாய்பாபாவுக்கு மக்கள் அஞ்சலி-வீடியோ



Tuesday, April 19, 2011

கவிதைகள்