Thursday, February 25, 2010

லோக்சபாவில் விவாதத்தை துவக்கி வைத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது

லோக்சபாவில் விவாதத்தை துவக்கி வைத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: கோதுமை, அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரையில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. இந்த மோசடிக்கு காரணமான மத்திய அரசின் முடிவுகள் என்ன என்பதை கண்டறிய வேண்டும். அதற்கு பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அரசே ஒரு நேரத்தில் சர்க்கரையை இறக்குமதி, ஏற்றுமதி செய்கிறது. சர்க்கரை கிலோ 12.50 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில், கிலோ 36 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படுகிறது. சரத் பவாரை "சர்க்கரை கிங்' என்று அழைக்கலாம். இதனால், 2008 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில், பட்டியலிடப்பட்ட 33 சர்க்கரை ஆலைகளின் லாபம், முந்தைய ஆண்டில் இருந்த 30 கோடி ரூபாயில் இருந்து 901 கோடி ரூபாயாகக் கூடியுள்ளது. இது 2,900 சதவீதம் அதிகம். இது, மோசடியே அன்றி வேறில்லை. இது பற்றி விசாரணை நடத்த வேண்டும். உணவுப் பாதுகாப்பு சட்ட வரம்பிற்குள் வருவோர் யார் என்பதை மத்திய அரசு தெரிவிக்காவிட்டால், அந்த மசோதாவால் பலன் இல்லை. இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாடி): அரசு தொடர்ந்து உறுதி மொழி அளித்துக் கொண்டிருந்தும், விலைகள் உயர்வது ஏன்? தொழிலதிபர்கள் மற்றும் பண முதலைகளின் கைப்பாவையாக மத்திய அரசு மாறி விட்டது. எப்போது, எந்த அளவுக்கு விலைகள் குறையும் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு மத்திய அரசுக்கு என்ன ஒத்துழைப்பு தேவை என்றாலும், அதை அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். இதேபோல், ராஜ்ய சபாவிலும் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது தலைவர்கள் பேசியதாவது:

அருண் ஜெட்லி (பா.ஜ.,): விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுகளே காரணம் என, மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. பதுக்கல்காரர்களுக்கு எதிராக மாநில அரசுகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், சமீபத்தில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில், மத்திய அரசு சமர்ப்பித்த அறிக்கைகளை பார்க்கும் போது, பதுக்கல்காரர்களுக்கு எதிராக, காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளே 83 சதவீத அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளன. காங்கிரஸ் ஆளும் அரசுகள் 17 சதவீத அளவுக்குத்தான் நடவடிக்கை எடுத்துள்ளன.

பிருந்தா கராத் (மார்க்சிஸ்ட்): ஆன்-லைன் வர்த்தகத்தினால் பல பொருட்கள் விலை அதிகரித்திருக்கிறது. அதைத் தடுக்கவேண்டும்.

மலைச்சாமி (அ.தி.மு.க.,): சில பொருட்களின் விலைகள் 200 முதல் 300 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளன. இதனால், ஒருவரின் வருவாயில் 42 சதவீதத்தை உணவுப் பொருட்களுக்காக செலவிட வேண்டிய நிலை உள்ளது.

சிவானந்த் திவாரி (ஐக்கிய ஜனதா தளம்): நாட்டு மக்களில் நான்கில் மூன்று பங்கினர் ஏழைகள். அவர்களுக்கான கடமையை நிறைவேற்றாத இந்த அரசு பதவி விலக வேண்டும். முடிவில் விவாதத்திற்கு பதிலளித்த சரத் பவார், "விலைவாசி குறைந்து வருகிறது. விலை உயர்வைக் குறைப்பதில் அரசு தீவிரமாக செயல்படுகிறது' என்றார். இதில் திருப்தியடையாத எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

"விலை வேறுபாடு இருக்கிறது': ""அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலை மற்றும் சில்லரை விலைக்கு இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. அந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு ஆராயும்,'' என மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். விலைவாசி உயர்வு தொடர்பாக, லோக்சபாவில் நடந்த சிறப்பு விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: பண்ணையில் பொருட்கள் உற்பத்தியாகும் போது இருக்கும் விலைக்கும், சமையலறைக்கு அது வரும் போது இருக்கும் விலைக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. இந்தப் பிரச்னையை தீர்க்க, விவாதிக்க வேண்டியது அவசியம். எம்.பி.,க்களும், மாநில முதல்வர்களும் இது தொடர்பாக, யோசனைகளைத் தெரிவிக்க வேண்டும்.

உணவு பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. வறட்சி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அது தள்ளிக் கொண்டே போகிறது. மேலும், அந்தச் சட்டத்தை நிறைவேற்ற இது சரியாண தருணம் அல்ல. மத்திய அரசு நடவடிக்கையால் பணவீக்கம் குறைந்துள்ளது என்றார். முன்னதாக ஆளும் தரப்பிற்கு ஆதரவாகப் பேசிய சஞ்சய் நிருபம், "உலகம் முழுவதும் இருக்கும் விலைவாசி உயர்வு இங்கும் எதிரொலிக்கிறது' என்றார். தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், "ரேஷன் வினியோக முறை சீராக இருக்க வேண்டும்'