Friday, February 26, 2010

மத்திய பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2010-11 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

  • ஒருநாளைக்கு 20 கிலோமீட்டர் தூரம் என்கிற வீதத்தில் சாலை அமைக்க இலக்கு நிர்ணயம்
  • பாரிக் கமிட்டி அறிக்கை குறித்து பெட்ரோலிய அமைச்சகம் விரைவில் தீர்மானிக்கும்
  • 400 கோடி சிறப்பு நிதி மூலம் 2010-11 ஆம் ஆண்டில் கிழக்குப் பகுதி மாநிலங்களில் பசுமைப் புரட்சி வலுப்படுத்தப்படும்
  • ஆறு மாதங்களில் பொதுத்துறைகளின் நிலை பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும்
  • சாலைகளை இணைக்கும் பணிக்கு ரூ 19.800 கோடி ஒதுக்கீடு
  • திருப்பூர் சாயக்கழிவு சுத்திகரிப்பு திட்டத்துக்கு ரூ 200 கோடி ஒதுக்கீடு
  • மின்துறைக்கு ரூ 5000 கோடி ஒதுக்கீடு
  • கோவா கடற்கரையை மேம்படுத்த ரூ 200 கோடி ஒதுக்கீடு
  • ரயில்வே துறைக்கு ரூ 16,752 கோடி ஒதுக்கீடு; கடந்த நிதி ஆண்டைவிட ரூ 950 கோடி அதிகம்
  • கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ 173552 கோடி ஒதுக்கீடு
  • பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு ரூ 26,800 கோடியிலிருந்து ரூ 31,036 கோடியாக உயர்வு
  • சுகாதாரத் துறைக்கு ரூ 22,300 கோடி ஒதுக்கீடு
  • லடாக் பகுதியில் சோலார் மற்றும் ஹைட்ரோ திட்டங்களுக்காக ரூ 500 கோடி ஒதுக்கீடு
  • ஊரக வளர்ச்சிக்கு ரூ 66100 கோடி ஒதுக்கீடு
  • பாரத் நிர்மாண் திட்டத்துக்கு ரூ 48,000 கோடி ஒதுக்கீடு
  • ஊட்டச்சத்து சார்ந்த உரமானியக் கொள்கைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அக்கொள்கை ஏப்ரல் 1, 2010 முதல் அமலுக்கு வரும். இதனால் வேளாண் உற்பத்தி அதிகரிக்கும். மேலும் விவசாயிகளுக்கு அதிக வேலைப்பளுவைக் குறைக்கும்.
  • சிறு மற்றும் குறுந்தொழில் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு ரூ 1794 கோடியிலிருந்து ரூ 2,400 கோடியாக உயர்வு
  • கங்கை நதிநீர்ப் படுகை ஆணையத்துக்கு ரூ கோடி ஒதுக்கீடு
  • பாதுகாப்புத் துறைக்கு 147000 கோடி ஒதுக்கீடு
  • சிறுபான்மை விவகார அமைச்சகத்துக்கான திட்ட ஒதுக்கீடு ரூ 1740 கோடியிலிருந்து ரூ 2600 கோடியாக உயர்வு
  • சமூக நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ 4500 கோடியாக உயர்வு
  • புதிய பென்ஷன் திட்டத்தின்கீழ் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ 1000 அரசின் பங்களிப்பாக வழங்கப்படும்
  • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு 80 சதவீதம் உயர்வு
  • நகர்ப்புற மேம்பாட்டுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ 3060 கோடியிலிருந்து ரூ 5400 கோடியாக அதிகரிப்பு
  • பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ 16,500 கோடி ஒதுக்கீடு
  • மாநகர்களை குடிசைகள் இல்லாததாக மாற்ற மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.
  • பொருளாதார நெருக்கடியை இந்தியா திறமையாகக் கையாண்டது.
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை 9 சதவீத்துக்கு கொண்டுவருவதுதான் அரசின் முன் உள்ள முதல் சவாலாகும்.
  • மோசமான பருவநிலை மற்றும் வறட்சி போன்றவை காரணமாக உணவுப் பணவீக்கம் கடந்த ஆண்டு இரட்டை இலக்கத்தில் இருந்தது.