Thursday, November 12, 2009

சர்க்கரை விலை அடிப்படையில் கரும்புக்கு விலை நிர்ணயம் கோரி 14-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ. 11: சர்க்கரை விலை அடிப்படையில் கரும்புக்கு விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஈரோட்டில் வரும் 14-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.வெங்கடாசலம் தெரிவித்தது: சர்க்கரை விலை அடிப்படையில் கரும்புக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2,500, நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.25, பால் லிட்டருக்கு ரூ.30 என நிர்ணயிக்க வேண்டும். கள் இறக்க அனுமதி அல்லது தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு ரூ.100 வழங்கவேண்டும். வன விலங்குகளினால் பாதிப்படையும் விளை நிலங்களுக்கு இழப்பீடு, பவானி, நொய்யல் மற்றும் காலிங்கராயன் கால்வாய்களில் சாய மற்றும் தோல் ஆலை கழிவுகள் கலக்காமல் தடுக்க நிரந்தர திட்டத்தை உருவாக்க வேண்டும். நீண்டகால பயிருக்கு ரூ.50 ஆயிரம், குறுகியகால பயிருக்கு ரூ.25 ஆயிரம் சாகுபடி மானியம் வழங்கவேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். நதிகளை தேசியமயமாக்குதல், தமிழக நதிகள் இணைப்பு, விவசாய விளைபொருட்கள் இறக்குமதி, பிடி ரக விதைகள் விற்பனைக்கு தடை, தடையின்றி மின்சாரம், வங்கி கடன் முழுமையாக தள்ளுபடி, வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் சத்தி, பண்ணாரி, பொன்னி, புகழூர், அமராவதி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஈரோடு, சூரம்பட்டி சாலை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக சென்று மின்வா