Monday, November 9, 2009

மழை கோரத்தாண்டவம்: பல மாவட்டங்களில் பாதிப்பு













கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை லேசான தூரல் மட்டுமே இருந்தது. சிறிது நேரத்தில் சுட்டெரிக்கும் வெயில் காய்ந்தது. ஒரு வாரமாக, தொடர்மழையில் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த வெயில் சற்று ஆறுதலாக இருந்தது.

ஆனால், மதியம் 1.30 மணிக்கு மீண்டும் கனமழை தொடர்ந்தது.இதனால், கடலூர் நகரில் கம்மியம்பேட்டை, கே.கே.நகர், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண் ணீர் புகுந்துள்ளது. இது தவிர கடலூரில் 21, பண்ருட்டி 3, சிதம்பரம் 14, விருத்தாசலம் 5 உள்ளிட்ட 57 கிராமங்களில் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது, தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை. இந்த அணை நிரம்பினால் மட்டுமே, விழுப்புரம், கடலூர் மாவட்டத் தில் உள்ள ஏரிப்பாசன விவசாயிகள், சம்பா நெல் சாகுபடியை செய்ய முடியும்.நேற்று முன்தினம் முதல், பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அணைக்கு 1,319 கன அடி நீர் வரத் துவங்கியுள்ளது.

இதனால், 88 அடி இருந்த அணையின் நீர் மட் டம், நேற்று காலை 98.80 அடியாக உயர்ந்தது.சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து துவங்கியுள்ளதால், தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள விழுப் புரம் மாவட்ட விவசாயிகள், மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.சிதம்பரம் அடுத்த சி.முட்லூர், மண்டபம், அம்புபூட்டியபாளையம், அனுவம்பட்டு, கிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் அரும்பு, குண்டுமல்லி, கனகாம்பரம் போன்ற பூ வகைகள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இடைவிடாது பெய்து வரும் கன மழையால், பூந்தோட்டங் களில் தண்ணீர் தேங்கி செடிகள் அழுகியும், மழையில் தப்பிய பூச் செடிகளில் இரவில் வீசும் பலத்த காற்றில் முறிந்து விழுந்துள்ளதால், பூ சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தில், கடந்த 10 தினங்களாக பெய்த அடைமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. கனமழையால், 34,667 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 124 கி.மீ., தூர சாலைகள், 52 சிறிய பாலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து, மழை சற்று ஓய்ந்துள்ளதால், கடந்த 10 தினங்களாக பாதிக்கப் பட்டிருந்த இயல்பு வாழ்க்கை, மெல்ல, மெல்ல பழைய நிலைக்கு திரும்ப துவங்கியுள்ளது.திருவாரூரில், திருத்துறைப்பூண்டி அருகே பிச்சன்கோட்டகம் வடபாதி கிராமத்தில் வளவனாறு உடைப்பு ஏற் பட்டது. பொதுமக்கள் உதவியுடன் அடைப்பை சரி செய்யும் பணியை, பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடும் மழை பெய்வதால், பவானி சாகர் அணை நீர்மட்டம் இரண்டு நாட்களில் ஐந்து அடி உயர்ந்தது.திருச்சியில், திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண் டேஸ்வரி கோவில் பிரகாரத்தில் மழைநீர் சூழ்ந்து வெள்ளமாகக் காணப்பட்டது. பக்தர்கள் சிரமத்தைத் தவிர்க்க மின் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர்.கொடைக்கானல் மலையில் பெய்துவரும் மழையால், பழநியை சுற்றியுள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. தண்டோரா மூலம் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில், கடந்த சில நாட்களாக தொ டர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. படகு சேவை வழக்கம் போல் தொடங்கியது. அதன் பின் கடல் அலை வேகமாக இருந்ததால் திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது.