Friday, November 13, 2009

இயற்கை விவசாயத்துக்கு மாறுகிறது கேரள கிராமம்















திருவனந்தபுரம்: செயற்கை உரங்களைப் பயன் படுத்திய காலம் போய், இப் போது இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டிய காலகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதை நிரூபிக்கும் வகையில், கேரளாவில் ஒரு கிராமம் முழு இயற்கை விவசாய கிராமமாக மாறப் போகிறது.

இந்தியாவின் முதுகெலும் பான விவசாயம் இயற்கை உர அடிப்படையில்தான் நடந்து வந்தது. வெளிநாட்டு மோகம் அதிகரித்த பின், குறிப்பாக இந்தியாவை வெளிநாடுகள் தங்கள் சந்தையாக மாற்றத் தொடங்கிய பின், அவை தயாரித்த செயற்கை உரங்கள் இந்தியாவில் புகுத்தப் பட்டன. இதனால், அதுவரை நடந்த இயற்கை விவசாயம், செயற்கை உர விவசாயமாக மாற்றப்பட் டது. இதனால் விளைந்த கெடுதிகள் பல. கேள்விப்படாத நோய் களை இந்த செயற்கை உரங்கள் அள்ளி அள்ளி வழங்கின. செயற்கை உர விவசாயத்தால் ஏற்படும் கெடுதிகளை உணர்ந்த வெளிநாடுகள், படிப்படியாக இப்போது இயற்கை விவசாயத் துக்கு மாறத் தொடங்கிவிட்டன. தற்போது, இந்தியாவில் இயற்கை உர விவசாயம் பற்றிய விழிப் புணர்வு பெருகி வருகிறது. இதற்கு உதாரணமாக கேரளாவின் மாங்குளம் கிராமத்தைச் சொல்லலாம்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மாங்குளம் ஊராட்சியில் ஐ.நா., உதவியோடு, இந்த மாங்குளம் பஞ்சாயத்துக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக, சிறிய அளவில் புனல்மின் நிலையம் ஒன்று 2004ல் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது, இந்தப் ஊராட் சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த சிறு புனல்மின் நிலையத்திலிருந்துதான் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. அடுத்த சாதனையாக, 2011க் குள் இந்த கிராமத்தை "முழு இயற்கை உர விவசாய' கிராமமாக மாற்றத் திட்டமிட்டுள்ளனர். "இடுக்கி இயற்கை விவசாயத் திட்டம்' என்ற பெயரில் 2005ல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப் பட்டது. இடுக்கி மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் அமைப் பான கேரள விவசாய மேம் பாட்டுக் கழகம் (கே.ஏ.டி.எஸ்.,) இதை நடத்தி வருகிறது.

மாங்குளம் ஊராட்சியைச் சேர்ந்த 32 கிராமங்களில் மொத் தம் நாலாயிரம் விவசாயிகள் உள்ளனர். இவர்களில், இரண்டாயிரத்து 200 விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஆயிரத்து ஆறு விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் சேர்ந் துள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆயிரம் விவசாயிகள் இதில் சேரப் போகின்றனர். இயற்கை உர விவசாயத்தில் காபி, டீ, ஏலக்காய், மிளகு, பழ வகைகள், காய்கறிகள் மற்றும் கிழங்குகள் உற்பத்தியாகின்றன. செயற்கை உர விவசாயத்தில் இருக்கும் நிலத்தை இயற்கைக்கு மாற்றுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும். இந்த மூன்று ஆண்டுக் காலத்தில் விளைச்சலில் ஏற்படும் நஷ்டத்தை மாநில அரசு மானியமாகக் கொடுக்கிறது. இப்படி இயற்கைக்கு மாற் றப்பட்ட நிலத்தில் விளைவிக் கப்படும் பொருட்களுக்கு மக்களிடையே நல்ல கிராக்கி உள்ளது. விலைதான் நான்கு மடங்கு அதிகம். இருப்பினும், மக்கள் ஆதரவால் இந்த இயற்கை விவசாயத்துக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உருவாகியுள்ளது.

முழு இயற்கை விவசாயியாக மாறுபவருக்குச் சான்றிதழ் வழங் குகின்றனர். இதற்கான செலவு ஆயிரம் ரூபாயில் ஒரு பகுதியைப் ஊராட்சிக்கு செலுத்துகிறது. "இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை வளைகுடா நாடுகளில் இயங்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பத் திட்டமிட் டுள்ளோம். கொச்சி விமான நிலையம் இதற்காக சரக்குப் போக்குவரத்து வசதியை தர சம்மதித்துள்ளது. விரைவில் இது சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும்' என்று கே.ஏ.டி.எஸ்.,சின் தலைவர் ஆன்டனி கந்திரிக்கல் தெரிவித்தார்.