-
Monday, November 9, 2009
பி.எட். படிப்பும் 4 ஆண்டு 2010 முதல் அமல்
புதுடெல்லி: மருத்துவம், பொறியியல் போல பிஎட் படிப்பும் இனிமேல் 4 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது. பொறியியல் மற்றும் மருத்துவ கல்வியைப் போலவே பிளஸ்-2 முடித்த பின் படிக்கும் வகையில் 4 ஆண்டு பிஎட் படிப்பை அறிமுகம் செய்ய தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. எனவே பிளஸ்-2 படித்த பின்னர் சேரும் வகையில் 4 ஆண்டு பிஎட் கல்விமுறையை தொடங்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் முகமது அக்தர்சித்திக் தெரிவித்துள்ளார்.