-
Villupaatukaaran
Goundamani Senthil comedy
-
Mannukketha Ponnu
Senthil running tea shop - comedy
-
Neengalum Hero taan
Watch Senthil's break dance!
-
Neengalum Hero taan
Senthil-Goundamani welcome Silk Smitha!
-
kovil kaalai
dai...annen sevapu da..sattaiya pathiya
-
Nattamai
Goundamani Senthil -My son...ennada? bison...!!
-
Chinna Vaathiyar
M.A. M.A. Phlasapy? Phlasapy
-
Chinna Vaathiyar
Transistor..... No sister...only daughter
-
Rojavai Killathe
A cobra bites Senthil, dies!
-
Thaalaattu Keitkuthamma
Senthils hospitality in front of the toilet!
-
Koyil kalai
Koundamani tries begging
-
Koyil kalai
Goundamani -ayya ramaiya
-
Chokka thangam
Goundamani senthil in mandapam
-
Indian
Goundamani - RTO office
-
Goundamani as tutor
Goundamani senthil comedy
-
Karagattakaran
Goundamani -ennada vilambaram
-
Vaidehi Kathirundhal
Anne...ivanga varala?
-
Gentleman
Goundamani senthil comedy
-
En rasavin manasile
Koundamani Senthil Vadivelu
-
En rasavin manasile
Koundamani, Senthil, Vadivelu
Friday, December 11, 2009
Goundamani Senthil Comedy Videos
Tuesday, December 8, 2009
இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துவதால் மலையூர் மக்கள் விளைபொருட்களுக்கு மவுசு
Monday, December 7, 2009
பச்சைப் பாசி'யில் பவர்புல் பேட்டரிகள் : சுவீடன் விஞ்ஞானிகள் சூப்பர் கண்டுபிடிப்பு
தற்போது பயன்பாட்டில் உள்ள பேட்டரிகள் அளவில் பெரியதாகவும், எடை அதிகம் கொண்டதாகவும் உள்ளன. மேலும், இந்த பேட்டரிகளின் பயன்பாடு குறிப்பிட்ட கால அளவிற்குள் தான் உள்ளன. அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதனால், இவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பாதிக்காத, மெல்லிய, எடை குறைவான, உலோகம் இல்லாத, வளையக்கூடிய, விலை குறைந்த, எளிதாக பயன்படுத்தும் வகையிலான பேட்டரிகளை தயாரிக்கும் முயற்சியில், விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இம்முயற்சியில் விஞ்ஞானிகள் தற்போது வெற்றியும் பெற்றுள்ளனர். சாதாரணமான "கிளடோபோரா' என்ற பச்சை பாசியை கொண்டு பேட்டரி தயாரிக்கும் ஆராய்ச்சி பலன் அளித்துள்ளது.காகிதத்தை விட 100 மடங்கு செலுலோஸ் அதிகம் கொண்டதாக இந்த தாவரம் உள்ளது. மின்சாரத்தை சேமிக்கவும், வெளியேற்றவும் தேவையான ஆற்றல், பாசிக்கு உள்ளது.
"சுற்றுச்சூழல் பாதிக்காத, விலை, எடை குறைந்த, பெரிய அளவில் மின் சேமிப்பு முறையை பாசியை கொண்டு தயாரிக்க முடியும்' என, சுவீடனை சேர்ந்த உப்சாலா பல்கலைக்கழக நானோ தொழில்நுட்ப வல்லுனர் மரியா ஸ்ரோமி கூறியுள்ளார். தற்போதுள்ள பாலிமர் பேட்டரிகளை ஒப்பிடும் போது, பாசியை கொண்டு தயாரிக்கும் பேட்டரி 40 முதல் 50 நானோ மீட்டர் அளவு சிறியதாக இருக்கும். காகிதத்திற்குள் வைக்கப்படும் பச்சை பாசியின் தடிப்பு 20 முதல் 30 நானோ மீட்டர் அளவு மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிமர் பேட்டரிகளை விட 50 முதல் 200 சதவீதம் அதிகமாக இந்த புதிய பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும். சாதாரண பேட்டரிகளில் ஒரு மணி நேரத்தில் ரீசார்ஜ் செய்யும் மின்சாரத்தை புதிய பேட்டரிகள் 11 வினாடி முதல் 8 நிமிடங்களுக்குள் ரீசார்ஜ் செய்து விடும். ரீசார்ஜ் பேட்டரிகளை பயன்படுத்துபவர்களுக்கு புதிய பேட்டரிகள் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பாலிமர் பேட்டரிகளில் 60 முறை ரீசார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் செய்யும் போது 50 சதவீதம் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், புதிய பேட்டரிகளில் 100 முறை சார்ஜ் செய்தாலும், 6 சதவீத இழப்பே ஏற்படும்.
முல்லை பெரியாறு சர்வே பணிகள் நிறுத்தி வைப்பு
தொடுபுழா : முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு நடத்தி வந்த சர்வே பணிகளை வனத்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், பெரியாறு ஆற்றின் மீது முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைக்கட்டு பழமை வாய்ந்தது என்றும், அதன் உறுதித் தன்மை குறைந்து விட்டது என்றும், அணைக்கட்டு உடைந்தால் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கானோர் உயிரிழக்க நேரிடும் என்றும் மாநில அரசு கருதியது.இந்நிலையில், தமிழகத்திற்கு மேலும் நீர் கிடைக்க வசதியாக, அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்கவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காமல், அங்கு புதிய அணை கட்ட மாநில அரசு முடிவெடுத்தது. இதற்காக, அப்பகுதியில் பத்து கி.மீ.,சுற்றளவுக்கு நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.அதில், மாநில அரசுக்குச் சொந்தமான பகுதியில் ஏழு கி.மீ., நிலப்பகுதி யில் சர்வே பணிகள் முடிவடைந்து விட்டன. புதிய அணைக்காக அங்கு மத்திய அரசுக்குச் சொந்தமான பெரியார் டைகர் வனப்பகுதியில், 3 கி.மீ., சுற்றளவுக்கு 2.5 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.
அதற்கான சர்வே பணிகளுக்கு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதை அடுத்து, அக்டோபர் மாதம் 19ம் தேதி அங்கு சர்வே பணிகள் துவங்கின. சர்வே பணிகளை மூன்று மாதத்திற்குள் முடித்து விட, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஹேமச்சந்திரன் தெரிவித்தார்.சர்வே பணிகள் அங்குள்ள வனத்துறையினரின் ஆதரவோடு துவங்கியது. இரு மாதங்களை எட்டும் நிலையில், பெரியார் டைகர் வனப்பகுதியில் சர்வே பணிகளை நிறுத்தி வைக்க, அங்குள்ள வனத்துறை துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதை அடுத்து, வனத்துறையினர் அங்கு சர்வே நடத்த அனுமதி மறுத்து பணிகளை நிறுத்தி விட்டனர்.தொடர்ந்து, மாநில நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் ராதாமணி இந்நிலையில் அங்கு சர்வே பணிகளை தொடர இயலாது என, மாநில அரசுக்கு தெரிவித்துள்ளார். இதனால், அங்கு பணிகள் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.அரசுத் துறைகளில் இரு துறைகளுக்கு இடையே நடக்கும் பனிப்போர் காரணமாக, சர்வே பணிகள் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட வெட்கக்கேட்டை களையும் வகையில், அதற்கான பரிகாரங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மறைமுக இம்சைகளால் மாரடைப்பு வரும் அபாயம்!!!
இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: இவர்களில், பெரும்பாலோனோர் 1992 லிருந்து 2003 வரையிலான காலகட்டத்தில் மாரடைப்பால் பாதிக்கப்படவில்லை. ஆனால், 47 பேர் மாரடைப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடிப்படையான காரணம், பணியிடங்களில் மேலதிகாரிகள் அல்லது உடன் பணியாற்றுவோரால் ஏளனமாகக் கருதப்படுவது அல்லது தரக்குறைவாக நடத்தப்படுவது தான். இதன் காரணமாக இவர்கள் மனதில் அளவுக்கு மிஞ்சிய கோபம் வந்துள்ளது. அதை மாற்றும் வழி தெரியாததால் அது மாரடைப்புக்கு வழிவகுத்துவிட்டது.
பணியிடங்களில் வரும் பிரச்னைகளை நேரடியாக சந்திப்பது மிக நல்லது. அதை விடுத்து அந்தப் பிரச்னைகளை மனதில் வைத்துக் கொண்டே பணியாற்றுவதாலும் மாரடைப்பு வருவதற்கு இரண்டிலிருந்து ஐந்து மடங்கு வாய்ப்பு உள்ளது. பணியிடங்களில் பிரச்னை என்று வரும்போது, யாராயிருந்தாலும் வெளிப்படையாகப் பேசுதல், நேரடியாகப் போராடுதல், குறிப்பிட்ட நபரிடம் சரியான வழியில் அணுகுதல் போன்றவற்றின் மூலம் மாரடைப்பு ஏற்படுவதைக் குறைக்க முடியும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, November 24, 2009
Wednesday, November 18, 2009
மாரடைப்பில் சுருண்ட எஜமானரை காப்பாற்றிய நாய்
பின்னர், மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் கூறுகையில்,"வேக்னருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது நாய் சமயோசிதமாக செயல்பட்டு அவரது வலியை குறைத்துள்ளது. அதனால் தான் அவரால் இங்கு வந்து சிகிச்சை பெற முடிந்தது. நாய் செய்த செயலால் அவர் உயிர் பிழைத்துள்ளார்' என்றனர். வேக்னர் தனது செல்லப்பிராணி பற்றி கூறுகையில், "எனது நாயின் செயல் கண்டு பிரமித்து போய் உள்ளேன்' என்றார்.
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு
புதுடில்லி : வரதட்சணை கொடுமை செய்வதாக, பொய்ப்புகார் கூறி பழிவாங்கும் மனைவிகளுக்காக சட்டத்தை பயன்படுத்தக்கூடாது; புகார் தந்தவுடனே, தீர விசாரிக்காமல் கணவன், அவன் குடும்பத்தினரை கைது செய்யக்கூடாது! - தங்களுக்கு சாதகமாக சட்டப் பிரிவு இருக்கிறது என்று, திட்டமிட்டு "பிளான்' போட்டு அப் பாவி கணவர்களை பழிவாங்கும் மனைவிகளுக்கு எதிராக முதல் முதலாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 ஏ. வரதட்சணை கொடுமை செய்யும் கணவன், அவர் குடும்பத்தில் உள்ள தந்தை, தாய் உட்பட யாரையும் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கிறது இந்த சட்டப் பிரிவு. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பதால், அவர்கள் புகார் தந்தாலே, இந்த சட்டத்தை பயன் படுத்தி, கணவன், அவன் குடும்பத்தாரை கைது செய்வது போலீஸ் வழக்கம். கைது செய்தபின் தான் எல்லா விசாரணையும் நடக்கும். கடந்த சில ஆண்டாக இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசுக்கு ஆயிரக்கணக்கான மனுக் கள் குவிந்தன. பழிவாங்க துடித்த மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள், அவர்களின் குடும் பத்தார், சமூக நல அமைப்புகள், ஆண்கள் நல அமைப்புகள் போன்றவற்றில் இருந்தும் அரசுக்கு மனுக்கள் குவிந்தன. "வரதட்சணை கொடுமை செய்யும் ஆண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம், திட்டமிட்டு கணவனை, அவன் குடும்பத்தினரை பழிவாங்க சில பெண்கள், வரதட்சணை கொடுமை புகார் செய்வது அதிகரித்து வருகிறது.
கடந்த காலங்களில், வரதட்சணை கொடுமைக்காக தண்டிக்கப்பட்ட கணவர்கள் எண்ணிக்கை சதவீதத்தை வைத்தே இதை புரிந்து கொள்ளலாம்; இதனால், அப்பாவி கணவர்களுக்காக மத்திய அரசு , இந்த சட்டத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்' என்று மனுக்களில் கோரப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகமும், சட்ட அமைச்சகமும் இது தொடர்பாக பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், டில்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புகள், அரசின் பரிசீலனைக்கு மேலும் வலுவூட்டின.
"கணவன் குடும்பத்தாரை பழிவாங்க வேண்டும் என்ற எண் ணம் உள்ள பெண்களுக்கு வரதட்சணை கொடுமை புகார் பெரிதும் கைகொடுக்கிறது. அதற் கேற்ப, போலீசும், உடனே 498 ஏ சட்டப்பிரிவு, 406ம் பிரிவை பபயன்படுத்தி உடனே கணவன் குடும்பத்தினரை கைது செய்து விடுகின்றனர். சிறியவர்களை கூட கைது செய்வது சட்டப்படி சரியல்ல. இதுபோன்ற போக் குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டும்' என்று ஒரு வழக்கில் டில்லி ஐகோர்ட் நீதிபதி கபூர் தன் கருத்தை வலியுறுத்தியிருந்தார். இதுபோல, சுப்ரீம் கோர்ட்டில் வந்த வழக்கில்,"வரதட்சணை கொடுமை வழக்குகளில் நிரபராதியாக வெளியே வருவோர் அதிகரித்து வருகின்றனர். அதனால், இப்படிப்பட்ட வழக் குகள் ஜோடிக்கப்பட்டு, சிலரால் பயன்படுத்தப்படுவதாக அறிய முடிகிறது. இதை தடுக்க சட்டப் படி பரிசீலிக்க வேண்டும்' என்று நீதிபதி அர்ஜித் பசாயத் கூறினார்.
இந்த இரு தீர்ப்புகளும் மத்திய அரசின் கவனத்தை திசை திருப்பியது. சட்ட, உள்துறை அமைச்சகம் தீவிர பரிசீலனைக்கு பின், மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. "வரதட்சணை கொடுமை புகார் விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். புகார் தந்ததை ஆதாரமாக வைத்து உடனே, கணவன், அவர் குடும்பத்தினரை கைது செய்யவே கூடாது. தீர விசாரித்து, உயர் அதிகாரி திருப்தி பட்டாலொழிய கைது நடவடிக்கையில் இறங்கக்கூடாது. இது தொடர்பாக எல்லா போலீஸ் மண்டலங்களுக்கும் உத்தரவு அனுப்ப வேண்டும்' என்று கடிதத்தில் கூறப் பட்டுள்ளது. மத்திய உள்துறை செயலர், இந்த கடிதத்தை மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.
வரதட்சணை கொடுமை புகார் அளித்தால், இந்த சட்டத்தின் கீழ் கணவனுக்கு அதிகபட்சம் மூன்றாண்டு சிறை தண்டனை தர முடியும். கடந்த 2007ல், ஒரு லட்சத்து 60 ஆயிரம் வழக்குகள் பதிவாயின. அதில், 76 ஆயிரம் வழக்குகளில் தான் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டது. 79 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவண காப்பக சர்வேயில் தெரியவந்துள்ளது. "இந்த சட்டப்பிரிவுகளில் சில திருத்தங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டது. ஆனால், பெண்கள் அமைப்புகள் பெரும் போர்க்கொடி தூக்கியதால், இந்த முடிவில் பின்வாங்கி விட்டது. எனினும், கோர்ட்களின் கருத்துக்களுக்கு பின் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Friday, November 13, 2009
இயற்கை விவசாயத்துக்கு மாறுகிறது கேரள கிராமம்
திருவனந்தபுரம்: செயற்கை உரங்களைப் பயன் படுத்திய காலம் போய், இப் போது இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டிய காலகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதை நிரூபிக்கும் வகையில், கேரளாவில் ஒரு கிராமம் முழு இயற்கை விவசாய கிராமமாக மாறப் போகிறது.
இந்தியாவின் முதுகெலும் பான விவசாயம் இயற்கை உர அடிப்படையில்தான் நடந்து வந்தது. வெளிநாட்டு மோகம் அதிகரித்த பின், குறிப்பாக இந்தியாவை வெளிநாடுகள் தங்கள் சந்தையாக மாற்றத் தொடங்கிய பின், அவை தயாரித்த செயற்கை உரங்கள் இந்தியாவில் புகுத்தப் பட்டன. இதனால், அதுவரை நடந்த இயற்கை விவசாயம், செயற்கை உர விவசாயமாக மாற்றப்பட் டது. இதனால் விளைந்த கெடுதிகள் பல. கேள்விப்படாத நோய் களை இந்த செயற்கை உரங்கள் அள்ளி அள்ளி வழங்கின. செயற்கை உர விவசாயத்தால் ஏற்படும் கெடுதிகளை உணர்ந்த வெளிநாடுகள், படிப்படியாக இப்போது இயற்கை விவசாயத் துக்கு மாறத் தொடங்கிவிட்டன. தற்போது, இந்தியாவில் இயற்கை உர விவசாயம் பற்றிய விழிப் புணர்வு பெருகி வருகிறது. இதற்கு உதாரணமாக கேரளாவின் மாங்குளம் கிராமத்தைச் சொல்லலாம்.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மாங்குளம் ஊராட்சியில் ஐ.நா., உதவியோடு, இந்த மாங்குளம் பஞ்சாயத்துக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக, சிறிய அளவில் புனல்மின் நிலையம் ஒன்று 2004ல் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது, இந்தப் ஊராட் சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த சிறு புனல்மின் நிலையத்திலிருந்துதான் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. அடுத்த சாதனையாக, 2011க் குள் இந்த கிராமத்தை "முழு இயற்கை உர விவசாய' கிராமமாக மாற்றத் திட்டமிட்டுள்ளனர். "இடுக்கி இயற்கை விவசாயத் திட்டம்' என்ற பெயரில் 2005ல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப் பட்டது. இடுக்கி மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் அமைப் பான கேரள விவசாய மேம் பாட்டுக் கழகம் (கே.ஏ.டி.எஸ்.,) இதை நடத்தி வருகிறது.
மாங்குளம் ஊராட்சியைச் சேர்ந்த 32 கிராமங்களில் மொத் தம் நாலாயிரம் விவசாயிகள் உள்ளனர். இவர்களில், இரண்டாயிரத்து 200 விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஆயிரத்து ஆறு விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் சேர்ந் துள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆயிரம் விவசாயிகள் இதில் சேரப் போகின்றனர். இயற்கை உர விவசாயத்தில் காபி, டீ, ஏலக்காய், மிளகு, பழ வகைகள், காய்கறிகள் மற்றும் கிழங்குகள் உற்பத்தியாகின்றன. செயற்கை உர விவசாயத்தில் இருக்கும் நிலத்தை இயற்கைக்கு மாற்றுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும். இந்த மூன்று ஆண்டுக் காலத்தில் விளைச்சலில் ஏற்படும் நஷ்டத்தை மாநில அரசு மானியமாகக் கொடுக்கிறது. இப்படி இயற்கைக்கு மாற் றப்பட்ட நிலத்தில் விளைவிக் கப்படும் பொருட்களுக்கு மக்களிடையே நல்ல கிராக்கி உள்ளது. விலைதான் நான்கு மடங்கு அதிகம். இருப்பினும், மக்கள் ஆதரவால் இந்த இயற்கை விவசாயத்துக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உருவாகியுள்ளது.
முழு இயற்கை விவசாயியாக மாறுபவருக்குச் சான்றிதழ் வழங் குகின்றனர். இதற்கான செலவு ஆயிரம் ரூபாயில் ஒரு பகுதியைப் ஊராட்சிக்கு செலுத்துகிறது. "இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை வளைகுடா நாடுகளில் இயங்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பத் திட்டமிட் டுள்ளோம். கொச்சி விமான நிலையம் இதற்காக சரக்குப் போக்குவரத்து வசதியை தர சம்மதித்துள்ளது. விரைவில் இது சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும்' என்று கே.ஏ.டி.எஸ்.,சின் தலைவர் ஆன்டனி கந்திரிக்கல் தெரிவித்தார்.Thursday, November 12, 2009
சர்க்கரை விலை அடிப்படையில் கரும்புக்கு விலை நிர்ணயம் கோரி 14-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Tuesday, November 10, 2009
சொத்து விபர பட்டியல் நாமக்கல் கலெக்டர் வெளியீடு
நாமக்கல்: பொது வாழ்வில் இருப்போர் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவர்களது சொத்து விபரப் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டனர். அவர்களை தொடர்ந்து உத்தரபிரதேச மாநில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சங்கத்தில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதையடுத்து, உத்தர பிரதேச மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயசங்கர் பாண்டே, மத்திய அரசின் கூடுதல் கேபினட் செயலாளர்களாக இருக்கும் சுனில்குமார், அவரது மனைவி ரேணுகா, டி.ஐ.ஜி., ஜஸ்பீர் சிங் ஆகியோர் சொத்து விபரப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதைதொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம் நேற்று அவரது சொத்து விபரங்களை தேசிய தகவல் மையத்தில் வெளியிட்டுள்ளார். அதுகுறித்த விபரம் பின்வருமாறு:
மதுரை மாவட்டம், மதுரை தாலுகா அரபாளையம் கிராமத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் 7,172 ரொக்கப்பணம் உள்ளது. மேலும், எல்.ஐ.சி.,யில் கடன் உள்ளது. அந்த கடனை செலுத்தி வருகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம், தமிழகத்தில் தனது சொத்து விபரப் பட்டியலை வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது
நீலகிரி மாவட்டம் முழுவதும் வரலாறு காணாத மழை : போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு; மீட்பு பணிகள் பாதிப்பு
Fyz›¥ YWXÖ¿ LÖQÖR A[° ÚNR•
100-eh• ÚU¼TyP CPjL¸¥ ŒXoN¡°
C£‹R CP• ÙR¡VÖU¥ ®|L· RÛWUyP•
U�‚¥ “ÛR‹‰ 29 ÚTŸ T¦
JÚW SÖ¸¥ 82 ÙN.—. UÛZ
Fyz›¥ ÚS¼¿ YWXÖ¿ LÖQÖR A[«¥ ŒXoN¡° H¼TyP‰. U�‚¥ “ÛR‹‰•, ÙY·[†‡¥ ™²f�• JÚW SÖ¸¥ 29 ÚTŸ T¦VÖ]ÖŸL·.
Fyz, SY.11-
UÛXL¸Á AWp GÁ¿ AÛZeL�T|• �Xf¡ UÖYyP• CÁ¿ UÛZ›Á ÚLÖW�‘z›¥ pef, pÁ]Ö‘Á]UÖf C£ef\‰.
Gjh TÖŸ†RÖ¨• ŒXoN¡°, UWjL· «µ‹‰ ÚTÖehYW†‰ TÖ‡�“ G] T¡RÖT ŒÛX›¥ LÖyp A¸ef\‰.
LP‹R 3 SÖyL¸¥ �Xf¡ UÖYyP†‡¥ ÙLÖyz† ˆŸ†R TX†R UÛZeh UÖYyP RÛXSLWUÖ] Fyz�•, ˜efV SLWUÖL «[jh• hÁÅ£• A‡L A[«¥ TÖ‡eL�Ty|·[].
ŒXoN¡°
ÚS¼¿ ˜Á‡]• LÖÛX YÛW ÙTšR TX†R UÛZVÖ¥ Fyz, hÁÅŸ E·TP �Xf¡ UÖYyP†‡¥ rUÖŸ 100-eh• ÚU¼TyP CPjL¸¥ ŒXoN¡° H¼Ty|·[‰. ÚU¨• TX CPjL¸¥ UWjL· ÚWÖyzÁ h¿eÚL «µ‹‰ fP�TRÖ¥ ÚTÖehYW†‰ ˜¼½¨• ‰�zeL�Ty|·[‰. �Xf¡ UÖYyP• ˜µY‰• ÙTšR TX†R UÛZeh ÚS¼¿ ˜Á‡]• YÛW 14 ÚTŸ T¦VÖf C£‹R]Ÿ.
C‹R ŒÛX›¥ ÚS¼¿ ˜Á‡]• UÖÛX rUÖŸ 6 U‚ A[«¥ ÙTšV ÙRÖPjfV L] UÛZ ÚS¼¿ A‡LÖÛX 5 U‚ YÛW ÙLÖyz ˆŸ†R‰. YWXÖ¿ LÖQÖR YÛL›¥ ÚS¼¿ ˜Á‡]• CW° ˜µY‰• �Xf¡ UÖYyP†‡¥ ÙTšR UÛZ›Á ÚLÖW RÖ�PY†RÖ¥ NÖÛXL· Gjh• ÙY·[• ÙT£eÙL|†‰ KzV‰. 100-eh• ÚU¼TyP CPjL¸¥ ŒXoN¡° H¼TyP‰. HWÖ[UÖ] CPjL¸¥ ÚWÖyzÁ KWjL¸¥ C£‹R UWjL· «µ‹R].
82 ÙN.—. UÛZ
�Xf¡ UÖYyP• ˜µY‰• ÚS¼¿ LÖÛX ŒXYW�Tz C‰YÛW C¥XÖR YÛL›¥ UÛZ ÙLÖyz† ˆŸ†R‰. C‡¥ A‡LTyNUÖL ÚL†‡›¥ 82 ÙN.—. UÛZ T‡YÖ]‰.
R–²SÖyz¥ C‰YÛW G‹R CP†‡¨• C‹R A[°eh UÛZ T‡YÖ]‰ C¥ÛX GÁT‰ h½�‘P†ReL‰.
Fyz›¥ 17 ÙN.—. UÛZ�•, hÁÅ¡¥ 39 ÙN.—. UÛZ�•, ÚLÖ†Rf¡›¥ 27 ÙN.—. UÛZ�• ÙTšR‰.
JÚW SÖ¸¥ 29 ÚTŸ T¦
�Xf¡ UÖYyP• ˜µY‰• «zV, «zV ÙLÖyz† ˆŸ†R UÛZVÖ¥ C‰YÛW C¥XÖR A[°eh ŒXoN¡° H¼TyP‰.
U�N¡‹‰ ®|L¸Á —‰ «µ‹R‰. A�ÚTÖ‰ CW° ÚSW• GÁTRÖ¥ ®|Lºeh· Šjfe ÙLÖ�| C£‹RYŸL· ŠeL†‡ÚXÚV U�‚¥ “ÛR‹‰ NUÖ‡ B]ÖŸL·. N†R• ÚTÖy| AX¿YR¼h iP AYŸLºeh YÖš�“ fÛPeL«¥ÛX.
ÚS¼¿ LÖÛX «z�• ÚTÖ‰, TX ®|L· C£‹R CP• ÙR¡VÖU¥ UÛ\‹‰ «yP‰. ®|L· C£‹R CP†‡¥ U� h«V¥ RÖÁ LÖQ�TyP‰.
C‹R ŒXoN¡° U¼¿• ÙY·[†‡¥ pef JÚW SÖ¸¥ Uy|• 29 ÚTŸ E›Ÿ CZ‹R]Ÿ. CR]Ö¥ Fyz, hÁÅŸ UÛZ NÖ° G�‚eÛL 43 BL EVŸ‹‰·[‰.
ÚS¼¿ T¦VÖ]YŸL· T¼½V «YW• Y£UÖ¿:-
JÚW h|•T†‡¥ 7 ÚTŸ NÖ°
Fyz A£ÚL AoN]eL¥ Th‡›¥ H¼TyP ŒXoN¡«¥ J£ ®| ˜µY‰• U�‚¥ “ÛR‹R‰. C‡¥ ®yz¥ ŠjfeÙLÖ�| C£‹R AWr ÚTÖehYW†‰ LZL zÛWYŸ ©›Í (55), AYW‰ UÛ]« ÙcŸ– (50), CYŸL[‰ UL·L· «ÈRÖ (28), SÂRÖ (26), U£ULÁ TÖefVWÖÇ GÁf\ hUÖŸ (37), ÚTWe hZ‹ÛRL· RŸpRÖ (5), ptr (4) BfV 7 ÚTŸ h|•T†ÚRÖ| U�‚¥ “ÛR‹‰ T¦VÖ]ÖŸL·.
AÚRÚTÖ¥ Fyz ÚLÖP�TU‹‰ Th‡›¥ ®| Cz‹R‡¥ WÖÚ^ÍY¡ (28), AYW‰ hZ‹ÛRL· N†VÖ (31/2), U¼¿• 6 UÖR hZ‹ÛR C\‹R]Ÿ.
ÙSÖ�|ÚU| Th‡›¥ U�N¡‹R‡¥ ®| Cz‹‰, f£ÐQ•UÖ· (50), AYW‰ ÚTWÁ ‘W®Á hUÖŸ (13) BfÚVÖŸ U�‚¥ “ÛR‹‰ T¡RÖTUÖL ÙN†R]Ÿ. C|ayz›¥ ‰ÛW GÁTYŸ UÛZeh T¦VÖ]ÖŸ.
Fyz fWÖ�y a°Í ÚWÖyz¥ H¼TyP ŒXoN¡«]Ö¥ A‹R Th‡›¥ Yp†‰ Y‹R ¦¥¦ (55), AYW‰ UL· NjgRÖ (24), ULÁ ŒŸU¥ (20) BfÚVÖŸ C\‹R]Ÿ.
RÖš-UL·-hZ‹ÛRL·
hÁÅŸ A£ÚL E·[ Y�zÚNÖÛX FWÖypehyP StN�“WÖ N†‡W• Th‡›¥ ®yzÄ· ŠjfeÙLÖ�z£‹R q†RÖ Xyr– (YV‰ 57), CYW‰ UL· SÖLWÖ‚ (23) U¼¿• SÖLWÖ‚›Á UL· ‡Ú]ÐY¡ (4), ULÁ UÚL‹‡WÁ (11/2) BfÚVÖŸ U�„eh· “ÛR‹‰ N•TY CP†‡ÚXÚV C\‹R]Ÿ.
ÙY¦jPÁ L�ÚPÖÁÙU�y Th‡ehyTyP g²h¤ÍÚTyÛP Th‡›¥ Yp†R Ù^VTÖ¥ (52) GÁTY£•, TÖW† SL¡¥ A‹ÚRÖ‚V•UÖ· (70) GÁTY£•, hÁÅŸ A£ÚL f¸tNPÖÛY ÚNŸ‹R TÖŸ†‡TÁ (32) GÁTY£• UÛZeh T¦VÖ]ÖŸL·.
ŠŠŸ UyP†‡¥ WÖ‚ (32), AYW‰ UL· É«RÖ (6) BfÚVÖŸ ÙY·[†‡¥ pef C\‹R]Ÿ.
S|ayz›¥ ÙY·[•
ÚLÖ†Rf¡ S|ayz F£eh· ÙY·[• “h‹R‰. C‡¥ pef LUX• (50) GÁTYŸ C\‹RÖŸ. ÚU¨• KWÚNÖÛX›¥ pYLÖ– (35), ÙLÖQYeLÛWÛV ÚNŸ‹R AÁ]ef¸ (45) BfÚVÖŸ UÛZeh T¦VÖ]ÖŸL·. ÚU¨• ÚLÖ†Rf¡›¥ AÛPVÖ[• ÙR¡VÖR 45 YV‰ U‡eL†ReL STŸ J£Y£• C\‹‰·[ÖŸ.
CRÁTz �Xf¡ UÖYyP†‡¥ ÚS¼¿ JÚW SÖ¸¥ UÛZeh 29 ÚTŸ T¦VÖ]ÖŸL·. CRÁ ™X• LP‹R 2 SÖyL¸¥ �Xf¡ UÖYyP†‡¥ UÛZeh ÙUÖ†R• 43 ÚTŸ C\‹‰ E·[]Ÿ.
ÚLÖ†Rf¡ NÖÛX ‰�z�“
TX†R UÛZ›Á LÖWQUÖL Fyz›¥ C£‹‰ ÚLÖ†Rf¡eh ÙN¥¨• NÖÛX ‰�zeL�Ty|·[‰. ÚU¨• A‹R NÖÛX›¥ BjLÖjÚL UWjL· «µ‹‰·[]. ÚU¨• U�N¡°• H¼Ty|·[‰. ÚLÖ†Rf¡ NÖÛX›¥ ÚTWÖŸ GÁ\ CP†‡¥ NÖÛX ‰�zeL�Ty| E·[‰.
ÚLÖ†Rf¡ NÖÛX›¥ E·[ ÚR›ÛX ÙRÖ³¼NÖÛX›Á îÛZ° YÖ›¨•, Ajh·[ J£ GÛP TÖŸeh• ÛUV˜• C£eh• CP• ÙR¡VÖR A[°eh ŒXoN¡° H¼Ty|, “ÛR‹‰·[]. ÚLÖ†Rf¡ TÍ ŒÛXV†‡¥ ŒÁ½£‹R J£ TÍpÁ —‰ UWjL· «µ‹R].
ÚU¨• ÚLÖ†Rf¡ A£ÚL E·[ AWÚYÄ Th‡›¥ NÖÛXL¸¥ ‘[° H¼Ty|·[‰. CR]Ö¥ ÚLÖ†Rf¡›¥ C£‹‰ ÚUy|�TÖÛ[V• ÙN¥¨• NÖÛX�• ‰�zeL�TyP‰. UtsŸ Th‡›¨• TX†R UÛZ›]Ö¥ TX CPjL¸¥ ŒXoN¡° H¼Ty|·[‰.
ÙRÖPŸ‹‰ ÙTšR TX†R UÛZ›Á LÖWQUÖL �Xf¡ UÖYyP UeL¸Á CV¥“ YÖ²eÛL ÙT¡‰• TÖ‡eL�Ty|·[‰. UÛZ›]Ö¥ H¼TyP TÖ‡�“LÛ[ ˆVÛQ�“ ‰Û\›]Ÿ, —y“ hµ«]Ÿ, –ÁYÖ¡V ‰Û\›]Ÿ, ÙS|tNÖÛX ‰Û\›]Ÿ AL¼½ Y£f\ÖŸL·. —y“ T‚L· ÚTÖŸeLÖX Az�TÛP›¥ ÚU¼ÙLÖ·[�Ty| Y£f\‰.
Monday, November 9, 2009
இவர், இப்படி... : ஏழைகளை சூப்பர்மென் ஆக்கும் ஆனந்தகுமார்
வறுமையில் வாடும் சமுதாயத்தை சேர்ந்த திறமையான மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை முன்னேற்றமடைய வைக்கும் திட்டத்தின் பெயர் தான் "சூப்பர் -30'. இந்த திட்டத்தை உருவாக்கியவர், கணித வல்லுனர் ஆனந்த் குமார்.
பீகாரை சேர்ந்த இவர், தன் சூப்பர்-30 திட்டத்தின் மூலம் கடந்த ஏழு ஆண்டுகளில், துப்புரவு தொழிலாளி, ரிக்ஷா ஓட்டுபவர், நிலமற்ற தொழிலாளி உட்பட பலரின் பிள்ளைகளை, இந்தியாவின் முதன் மையான கல்வி மையங்களில் படிக்க வைத்து, சிறந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாக உருவாக்கி வருகிறார்.ஒவ்வொரு ஆண்டும் திறமை வாய்ந்த 30 மாணவர்களை தேர்ந் தெடுத்து பயிற்சி கொடுப்பதாலேயே இந்த திட்டத்திற்கு சூப்பர் -30 என பெயரிடப்பட்டுள்ளது. இவர், இத்திட்டத்தை துவங்கிய போது, 30 மாணவர்களின் தேவை யை பூர்த்தி செய்வது என்பது சிறிது கடினமானதாக இருந்தது. ஆனால், அவரது குடும்பத்தினர் ஆதரவு கரம் நீட்டினர். ஆனந்த் குமார், மற்ற பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பது போன்ற வேலைகளை செய்து பணம் ஈட்டினார். அவரின் தாயார் ஜெயந்தி தேவி, மாணவர்களுக்கான உணவுகளை தயார் செய்து கொடுத்தார்."சூப்பர்-30' திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே இலக்கு கடுமையாக படிக்க வேண் டும் என்பதே . மாணவர்களுக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பலன் முதலாம் ஆண்டே கிடைத்தது. தன் குழுவில் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்களுடன் இணைந்து, ஆனந்த் கடுமையாக உழைத்தார். கடந்த ஏழு ஆண்டுகளில், இவரிடம் பயிற்சி பெற்ற 182 மாணவர்கள், நாட்டின் பல்வேறு ஐ.ஐ.டி., மையங்களில் இடம் பெற் றுள்ளனர். கடந்த 2003ம் ஆண்டு "சூப்பர்-30' திட்டம் துவங்கப் பட்டது. அப்போது 30 மாணவர்களில், 18 பேர் ஐ.ஐ.டி.,களில் படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத் தாண்டு 22 பேரும், 2005ம் ஆண்டு, 26 பேரும், கடந்த 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில், தலா 28 பேர் தேர்ச்சி பெற்றனர்.
கடந் தாண்டு மற்றும் இந்தாண்டும் "சூப்பர்-30' மூலம் பயற்சி பெற்ற 30 மாணவர்களும், தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, ஆனந்த் குமார் கூறுகையில், "அடுத்தாண்டு முதல், இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 60 ஆக அதிகரிக்க உள்ளேன். அப்போது, தான் பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் வாய்ப்பு பெறுவர்' என்றார்.ஆனந்த் குமார் மாணவ பருவத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர். தபால் துறை ஊழியராக இருந்த அவரது தந்தை இறந்த பின், ஆனந்த் குமாருக்கு, கருணை அடிப் படையில், கிளார்க் வேலை வழங்கப்பட்டது.ஆனால், ஆனந்த் குமார் அதை ஏற்க மறுத்து, தன் படிப்பை தொடர்ந்தார். அப்போது பல தடைகளை எதிர்கொண்டார்.அவரது தாய் அப்பளங்கள் மற்றும் பிற உணவுப் பொருட் களை தயாரித்து ஆனந்த் பெயரில் விற்றார். ஆனந்த் குமாரும் அந்த பொருட்களை, வீடு வீடாக சென்று விற்று வருவார். அப்போது அவர் அனுபவித்த துன்பங்கள் தான், அவரை போன்ற மற்றவர்களின் துன்பத்தை உணர வைத்தன. அது தான் "ராமானுஜம் கணக்கு பள்ளி' மற்றும் "சூப்பர் -30' ஆகியவை துவங்க வழி வகுத்தன. இவை இரண்டும் பிரபலமடைய துவங்கிய போது, இவற்றை நிறுத்த கோரி, பல்வேறு தரப்பினரின் மிரட் டல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஆனந்திற்கு ஏற்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு, ஆனந்த் கொலை தாக்குதலில் இருந்து தப்பி உள்ளார். இவரது பயிற்சி மையத்தையும், சிலர் தாக்கினர். ஆனால், இதற்கெல்லாம் அஞ்சாமல், ஆனந்த் தன் குறிக்கோளை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.
மழை கோரத்தாண்டவம்: பல மாவட்டங்களில் பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை லேசான தூரல் மட்டுமே இருந்தது. சிறிது நேரத்தில் சுட்டெரிக்கும் வெயில் காய்ந்தது. ஒரு வாரமாக, தொடர்மழையில் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த வெயில் சற்று ஆறுதலாக இருந்தது.
ஆனால், மதியம் 1.30 மணிக்கு மீண்டும் கனமழை தொடர்ந்தது.இதனால், கடலூர் நகரில் கம்மியம்பேட்டை, கே.கே.நகர், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண் ணீர் புகுந்துள்ளது. இது தவிர கடலூரில் 21, பண்ருட்டி 3, சிதம்பரம் 14, விருத்தாசலம் 5 உள்ளிட்ட 57 கிராமங்களில் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது, தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை. இந்த அணை நிரம்பினால் மட்டுமே, விழுப்புரம், கடலூர் மாவட்டத் தில் உள்ள ஏரிப்பாசன விவசாயிகள், சம்பா நெல் சாகுபடியை செய்ய முடியும்.நேற்று முன்தினம் முதல், பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அணைக்கு 1,319 கன அடி நீர் வரத் துவங்கியுள்ளது.இதனால், 88 அடி இருந்த அணையின் நீர் மட் டம், நேற்று காலை 98.80 அடியாக உயர்ந்தது.சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து துவங்கியுள்ளதால், தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள விழுப் புரம் மாவட்ட விவசாயிகள், மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.சிதம்பரம் அடுத்த சி.முட்லூர், மண்டபம், அம்புபூட்டியபாளையம், அனுவம்பட்டு, கிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் அரும்பு, குண்டுமல்லி, கனகாம்பரம் போன்ற பூ வகைகள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இடைவிடாது பெய்து வரும் கன மழையால், பூந்தோட்டங் களில் தண்ணீர் தேங்கி செடிகள் அழுகியும், மழையில் தப்பிய பூச் செடிகளில் இரவில் வீசும் பலத்த காற்றில் முறிந்து விழுந்துள்ளதால், பூ சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில், கடந்த 10 தினங்களாக பெய்த அடைமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. கனமழையால், 34,667 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 124 கி.மீ., தூர சாலைகள், 52 சிறிய பாலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து, மழை சற்று ஓய்ந்துள்ளதால், கடந்த 10 தினங்களாக பாதிக்கப் பட்டிருந்த இயல்பு வாழ்க்கை, மெல்ல, மெல்ல பழைய நிலைக்கு திரும்ப துவங்கியுள்ளது.திருவாரூரில், திருத்துறைப்பூண்டி அருகே பிச்சன்கோட்டகம் வடபாதி கிராமத்தில் வளவனாறு உடைப்பு ஏற் பட்டது. பொதுமக்கள் உதவியுடன் அடைப்பை சரி செய்யும் பணியை, பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் கடும் மழை பெய்வதால், பவானி சாகர் அணை நீர்மட்டம் இரண்டு நாட்களில் ஐந்து அடி உயர்ந்தது.திருச்சியில், திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண் டேஸ்வரி கோவில் பிரகாரத்தில் மழைநீர் சூழ்ந்து வெள்ளமாகக் காணப்பட்டது. பக்தர்கள் சிரமத்தைத் தவிர்க்க மின் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர்.கொடைக்கானல் மலையில் பெய்துவரும் மழையால், பழநியை சுற்றியுள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. தண்டோரா மூலம் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில், கடந்த சில நாட்களாக தொ டர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. படகு சேவை வழக்கம் போல் தொடங்கியது. அதன் பின் கடல் அலை வேகமாக இருந்ததால் திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது.பி.எட். படிப்பும் 4 ஆண்டு 2010 முதல் அமல்
இன்னமும் 27 ஆயிரம் கல்லூரிகள் ; நாட்டை 'சூப்பர் பவர்' ஆக்க புதிய திட்டம்
புதுடில்லி: அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படும் தரமான கல்வி வளர்ச்சிக்கு இன்னமும் 27 ஆயிரம் புதிய கல்லூரிகள் தேவை என்று டில்லியில் நடந்த பார்லிமென்டரி ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் தலைமையில் அமைச்சக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு உறுப்பினர்களாக டாக்டர் கபில் வாத்யாசனா, டாக்டர் ரஞ்சன் பிரசாத் யாதவ், ரமாதேவி, வசந்தி ஸ்டான்லி, தம்பித்துரை உட்பட பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அரசு வெளியிட்ட கருத்து: அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மேல்நிலைக் கல்வி வசதிக்கு 14 ஆயிரம் கல்லூரிகள், 12 ஆயிரத்து 775 தொழில்நுட்பக் கல்லூரிகள், மற்றும் 269 பல்கலைக் கழகங்கள் தேவை. அப்படி இருந்தால் தான் மேற்கல்வி பயிலத் தகுதி படைத்த மாணவ மாணவியர்க்கு கல்வி வசதி கிடைக்கும். அக்கல்வி வசதி கிடைத்தால் தான் வரும் 2020 ல் இந்தியா "சூப்பர் பவர்' அந்தஸ்து பெறும்.
இக்கருத்துக் குறித்து ஆலோசனைக் கமிட்டியில் பங்கேற்ற பலரும் தெரிவித்த கருத்துக்கள்:தற்போது மாநில அரசுகள் நடத்தும் கல்லூரிகள் உட்பட சிலவற்றில் போதிய வசதி வாய்ப்புகள் இல்லை, தனியார் கல்லூரிகள் அமைப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் இன்னமும் தகுதி, திறமை அதிகரிக்கப்பட ஒழுங்குமுறை நடைமுறைகள் உருவாக்க வேண்டும். தனியார் முதலீடு உயர்கல்வியில் அதிகரிக்கும் போது, அதன் தகுதி அதிகரிப்பதில் கவனம் தேவை . இவ்வாறு கூறினர்.
அமைச்சர் கபில்சிபல் கூறியதாவது:
மேற்கல்விப் படிப்புக்கான ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்குவது என்பது ,கல்வித்துறையில் அதிக தரம் உருவாக்கும் எண்ணத்தில் அமைந்தது. இது தொடர்பாக ஏற்கனவே "அறிவுசார் கமிஷன்' மற்றும் யாஷ்பால் கமிட்டி அளித்த சிபாரிசுகளின் படி இவை உருப்பெறும். மிகவும் பின்தங்கிய பகுதிகளில் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் கலை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்க மத்திய அரசு உதவும். இதற்கு நிதி ஒரு பிரச்னை அல்ல.
வெளிநாட்டு கல்லூரிகளை அனுமதிக்கும் போது, அவை கட்டணம் என்ற பெயரில் பணத்தைச் சேகரித்து, அள்ளிச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. வெளிநாட்டு கல்லூரிகளில் பிரபலமானவை கூட , அறக்கட்டளை மூலம் தன் நிதி ஆதாரங்களை பெருக்குகின்றன. அதே போல பல்கலைக் கழக ஆசிரியர் பணிக்கு அதிக சம்பளம் தந்து , இப்பணி மிகுந்த கவர்ச்சி உள்ளதாக ஆக்கப்படும்.இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
திருவாரூர்: 4 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் அதிக அளவில் மழை பதிவானது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவுகள் வருமாறு (அளவு மில்லி மீட்டரில்): நன்னிலம் -120, திருவாரூர் -118, குடவாசல் -105.4, வலங்கைமான் -84.4, நீடாமங்கலம் -70, மன்னார்குடி -52, திருத்துறைப்பூண்டி -36, முத்துப்பேட்டை -27.8.
இந்த மழை காரணமாக திருத்துறைப்பூண்டி வட்டத்தில் கட்டிமேடு, பாண்டி, நுனாக்காடு, பாமணி, சிங்களாந்தி உள்ளிட்ட ஏறத்தாழ 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த ஏறத்தாழ 4,000 ஹெக்டேர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன
இவை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மழை நீரில் மூழ்கியிருப்பதால், பயிர்கள் அழுகி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மாவட்டம் முழுவதும் நீரில் மூழ்கிய பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வளவனாற்றுத் தலைப்பில் ஆகாயத் தாமரை செடிகள் ஆற்றை அடைத்துக் கொண்டிருப்பதால் தேங்கிய நீர் வெளியேற முடியாததுதான் வயல்களில் வெள்ள நீர் வடியாமல் இருப்பதற்குக் காரணம் என்கின்றனர் விவசாயிகள்.
திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மழை பெய்தது. பின்னர் பரவலாக அனைத்து இடங்களில் வெயில் அடித்தது.
Sunday, November 8, 2009
உடையும் நிலையில் நெல்லை திருக்குறுங்குடி குளம் : அதிகாரிகள் ஆய்வு
தமிழகத்தில் மழைக்கு 27 பேர் பலி : ஊட்டியில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை : தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழைக்கு, இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் முக்கிய அணைகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலில் கிழக்கிலிருந்து மணிக்கு 45 - 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் ரமணன் கூறுகையில், "கடந்த நான்கு நாட்களாக குமரி கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது அரபிக் கடலில் உள்ள லட்சத்தீவில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கிறது. இதனால், தமிழகத்தில் மழை குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்குக்கு மழை நீடிக்கும்' என்றார்.
நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் சீர்காழி, சிவகிரியில் அதிகபட்சமாக 24 செ.மீ., கேத்தி 21, குன்னூர், கூடலூர் 19, பரங்கிப்பேட்டை, கொள்ளிடம் 18, சிதம்பரம் 17, கடலூர், காரைக்கால், மயிலாடுதுறை, செம்பரம்பாக்கம், காட்டுமன்னார்கோவில், கொடைக்கானல் 15, உத்தமபாளையம், ராஜபாளையம் 14, பொன்னேரி 13, சென்னை, தாம்பரம், புதுச்சேரி, நன்னிலம், திருவாரூர் 12 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில் 11 செ.மீ., மழை பெய்திருக்கிறது.
குடவாசல், சங்கரன்கோவில், பெரியார் அணை, ஸ்ரீபெரும்புதூர், விருதுநகர், ஊட்டி ஆகிய இடங்களில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தின் இதர பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.தேனி மாவட்டத்தில் உள்ள பெரியார் அணை வேகமாக நிரம்பி வருகிறது. வைகை அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.
பலி 27: தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை மழையால் 13 பேர் உயிரிழந்தனர். தற்போது, இந்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கனமழைக்கு திருநெல்வேலி, விழுப்புரத்தில் தலா ஆறு பேரும், கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் தலா இருவரும், மதுரை, திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், விருதுநகரில் தலா ஒருவரும் என 27 பேர் பலியாகியுள்ளனர்.
ஊட்டி- குன்னூர் ரோட்டில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பபட்டுள்ளது. நீலகிரி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவில் சிக்கி ஒருவர் பலியானார். 19 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி இரண்டாவது நாளாக நேற்றும், மாநிலத்தில் மழை நிலவரம் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, பல்வேறு துறைகளின் செயலர்கள், சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியம், மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் கருணாநிதி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது . சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில், நேற்று சிறிது இடைவெளி காணப்பட்டது.